ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகžரிடம் 1, 2 பாதங்கள் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்
ரிஷப ராசியின் சிறப்பு: ராசிக்கட்டத்தில் இரண்டாவதாக வரும் பெண் ராசி ரிஷபம் ஆகும். காளை மாட்டின் தோற்றம் இதன் உருவமாகும். ரிஷபத்தைத் தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள். கலைகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எந்தத் துறையானாலும் திறம்படச் செய்து முன்னேறி, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுவார்கள். இரக்க சுபாவமும், பிறர்க்கு உதவும் குணமும் கொண்டவர்கள். பொன், பொருள், புகழைக் குவிப்பதில் இவர்களுக்கு எந்த சிரமமும் இராது. இவர்களிடம் சற்று முரட்டுத்தனமும் பிடிவாதமும் காணப்படும். தைரியசாலியான இவர்கள் எதையும் துணிந்து செய்வார்கள். எடுத்துக்கொண்ட காரியத்திலுள்ள சிரமத்தைப் பொருட்படுத்தாது வெற்றிகரமாகச் செய்து முடிப்பர். வேலையை முடிக்கும் வரை பசியோ, தூக்கமோ இவரது கவனத்தைக் கலைத்துவிட முடியாது. ஒழுக்கம், நாணயம் இவையிரண்டையும் இரு கண்களாகக் கொண்டவர். மற்றவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும். அரசியல், அரசு, நிறுவனம் போன்றவற்றில் முக்கியப் பொறுப்பு வகிப்பதால் மக்களிடமும், சக ஊழியர்களிடமும் எளிதில் பழகும் சுமூக வாய்ப்பு கிடைக்கும். தாய், தந்தை மீது அதிக அன்பும் பக்தியும் கொண்டிருக்கும் நீங்கள் குடும்ப உயர்வுக்காகவும் நலனுக்காகவும் பாதுகாப்பாக நடந்து கொள்வீர்கள். ரிஷபத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சுக்கிரன். அதிர்ஷ்ட மலர்-வெண்தாமரை. அதிர்ஷ்ட திசை-தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண்-6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-லட்சுமி.
ரிஷப ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள். மிருகžரிடம் 1, 2, பாதங்கள். கார்த்திகை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர் பாராட்டும்படி வாழ்வை அமைத்துக்கொள்வார்கள். கவர்ச்சியாகப் பேசி அடுத்தவரைக் கவர்ந்து விடுவார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். கார்த்திகை 3ம் பாதத்தில் பிறந்தவர்களின் வாழ்வின் முன் பகுதியில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும். எதையும் நிதானத்துடன் செய்யும் குணம் இவர்களிடம் உண்டு. முன் கோபியாக இருப்பர். கால்நடை மற்றும் பால் பாக்கியம் உள்ளவர்களாக இருப்பார்கள். கார்த்திகை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் திட புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள். அரசியலில் செல்வாக்கும் அதனால் ஆதாயமும் பெறுவார்கள். நன்றாக உழைத்து தன் பொருளாதாரத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சந்திரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்கும் குணமுடையவர்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர்-அல்லி. அனுகூல தெய்வம்-பார்வதி. அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட எண்-4. ரோகிணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அழகும், கவர்ச்சியும் உடையவர்கள். உயர்ந்தவர்களின் நட்பு உண்டு. சில சமயங்களில் பொறுமை இல்லாமல் காரியங்களை அவசரமாக முடித்து விட்டு பின்பு அதற்காகக் கவலைப்படுவார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் அன்பு, அடக்கமும் உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த ஆச்சாரம் உடையவர்கள். சொன்ன சொல் தவறாதவர். நீண்ட தூரம் நடக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சுடு சொல் பொறுத்துக் கொள்ளாதவர்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுகவாசியாக காலம் கழிப்பவர்கள். கணிதத் துறையில் தேர்ச்சியும், நல்ல புலமையும் உடையவர்களாக இருப்பார்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் சாஸ்திர ஞானம் உடையவர்களாக இருப்பதோடு எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் பாடுபடுவார்கள். ஜாதகர் அரண்மனை போன்ற வீட்டில் வசிக்கும் பாக்கியம் உடையவர்கள். மிருகžரிடம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்பத் தொகை செவ்வாய் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு ஆற்றல் மிக்கவராகவும், தான் நினைத்ததை முடிக்கும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். மிருக žரிட நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-மிருகžரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது. (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள். ஆகாதவைகளாக வரும் போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் ஆகாதவை என்பது சிறப்புதானே! அதிர்ஷ்ட மலர்-செண்பகப்பூ, பாரிஜாதம். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அனுகூலத் தெய்வம்-சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, செம்மை. அதிர்ஷ்ட எண்-5. மிருக žரிடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் வலிமையான தேகம் உடையவர்கள். இவர்களிடம் சிறிது முரட்டுத் தனமும், படபடப்பாகப் பேசும் சுபாவமும் உண்டு. நல்ல உணவு மற்றும் ஆடம்பரமான ஆடைகளை அணியும் பாக்கியம் உடையவர்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் எதையும் சிந்தித்து முன் யோசனையுடன் செய்வார்கள். இவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடப்பவர்களாக இருப்பார்கள். அளவுக்கு மீறிய தைரியம் உடைய இவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.
பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலிருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். பெண்களுக்கு தைரியத்துடன் முடிவெடுக்கும் திறன் கூடும். உறவுகளிடையே இருந்த நெருக்கத்தை அதிகமாக்குவதுடன் மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் செய்வார். தொட்ட காரியம் யாவும் வெற்றி பெறுவதால், புதுத் தெம்புடன் திகழ்வீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். நல்ல பணவரவு இருந்துகொண்டே இருக்கும். எடுத்த காரியத்தில் எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள்.
பெண்களுக்கு: குடும்பத்தில் இதற்கு முன்பு இருந்த பின்தங்கிய நிலை மாறுவதால் வீட்டில் நிலவிய குழப்பங்கள் மறையும். புதிய இடம், வீடு மனை வாங்கலாம். உறவினர்கள் வகையில் நற்பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒன்று சேருவர். விருந்து, விழா என சென்று வரலாம். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதிதாக மணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவு இனி இருக்காது.
மாணவர்களுக்கு: உங்கள் பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். குரு உங்களின் திறமையை பிறர் அறியும்படியான சந்தர்ப்பங்களை உருவாக்குவார். அலை பாயும் மனத்தை கட்டுக்குள் வைத்தால், ஆழ்ந்து படிக்க இயலும். தேவைப்படும் நேரங்களில் தைரியமாக நின்று உங்கள் உரிமையை நிலை நாட்டிக்கொள்வீர்கள். நண்பர்கள் இடையே நிலவிய கருத்து வேறுபாடும் மறையும். பெற்றோர்கள் உங்களுக்கு உதவ ஆர்வத்துடன் முன் வருவார்கள். வெளி இடங்களிலும், சிறப்பான நிறுவனங்களிலும் கல்வி பயில வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவும் நிறைவேறும்.
வியாபாரிகளுக்கு: கடந்த காலத்தைவிட முன்னேற்றங்கள் பல காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த காரியத்தை நேர்த்தியாக செய்து முடிக்கும் மனப்பாங்கு எதிலும் வெற்றியைப் பெற கை கொடுக்கும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகி இருந்த பங்குதாரர்கள் உங்கள் மேன்மையை அறிந்து மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வார்கள். அரசு வகையில் உள்ள அனுகூலமான போக்கால், இதுவரை ஏற்பட்ட பொருள் விரயம், மனக்கஷ்டம் ஆகியவை தானே மறையும். வியாபார உயர்வுக்கு சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். தொல்லை கொடுத்த எதிரிகள் அடங்கிக் கிடப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோக வகையில் அலுவலகத்தில் ஒற்றுமை, புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கும். ஒரு சிலருக்கு தாமதம் அடைந்து வந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேரும். மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகநிலை ஏற்படும். வேலையில் இருந்துகொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அனுகூல தகவல் வந்து சேர்வதால் புதுத்தெம்புடன் திகழ்வார்கள்.
கலைஞர்களுக்கு: குருவின் அருளால் வளமான வாழ்க்கைக்கு உயர்வான இடத்திலிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும். நண்பர்களிடையே நீண்ட நாளாய் நிலவி வந்த பகை விலகி உறவுகள் மீண்டும் சுமூகமாகும். நினைத்ததை சாதித்துக் கொள்வது சிறந்த வழியாகும். நூதனமான கலைப்பொருள்களால் உங்கள் இல்லத்தை அலங்கரித்து மகிழ்வீர்கள்.
விவசாயிகளுக்கு: விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி நிறைவான வாழ்க்கையும், கையில் சரளமான பணப் புழக்கமும் இருக்கும். அரசு மற்றும் வங்கிகளின் மூலம் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தக்க சமயத்தில் கைக்கு வந்து சேரும். ஒரு சிலர் விவசாயத்திற்கான புதிய உபகரணங்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். கரும்பு, மற்றும் காய்கனி வகைகள் மூலமாக கூடுதல் மகசூல் கிடைக்கப்பெற்று நல்ல லாபத்தை அடைவீர்கள். நவீன முயற்சிகளை பயன்படுத்தி அதிக லாபம் காணும் வழி வகைகளைப் போதிக்கும் பயிற்சிகளில் சேரும் வாய்ப்புக்களும் கிட்டும்.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பொதுச்சேவையில் உள்ளவர்கள் மக்களிடையே பெயரும், புகழும் பெறுவார்கள். வெளிவட்டாரத்தில் நீங்கள் பெறும் புகழ் மூலம் முக்கியமான பொறுப்புகளை ஏற்கும்படியான சந்தர்ப்பங்கள் தானே உருவாகும். உயர் பதவிகளுக்கான போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். மறைமுக எதிரிகள், எதிர்ப்புகளால் ஏற்பட்டிருந்த மனக்கிலேசம் யாவும் விலகுவதால், புதுத் தெம்புடன் மீண்டும் களம் இறங்கலாம். சிக்கலான காரியங்களில் உங்கள் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கும் திறன் கூடும். உடல் ஆரோக்கியம் žரான நிலையில் இருந்து வரும்.
பரிகாரங்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் திருமகளை துதித்து வர, பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வருவதோடு கடன் தொல்லைகளும் குறையும். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை மலர் சார்த்தி வழிபட்டு வர, தொழில் தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.