தனுசு -

Sagittarius Guru Peyarchi Tamil Predictions

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

தனுசு ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 9-வதாக வரும் ஆண் ராசியான தனுசில் அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் உருவம் மிருக சரீரத்துடன் கூடிய மனிதன் வில்லேந்தி அம்பு தொடுப்பது போன்ற உருவ அமைப்புடன் காணப்படும். தனுசை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் மிகுந்த தர்மவானாகவும், யோகியாகவும் இருப்பார்கள். தன் சுய சாமர்த்தியத்தால் எல்லா சிறப்புக்களையும் பெறுவார்கள். தனுசிற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-குரு. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அதிர்ஷ்டக் கல்-புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-மஞ்சள். அதிர்ஷ்ட திசை-வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-3. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-பிரம்மா.

தனுசு ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மூலம் 1, 2, 3, 4 பாதங்கள், பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை கேது ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சங்கீத வித்துவான்களாகவும், கவிஞராகவும், ஓவியராகவும் விளங்குவார்கள். பந்துக்களிடம் என்றும் மாறாத அன்பு செலுத்துபவர்கள். செய்த உபகாரத்தை மறக்காதவர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-ஆயில்யம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்-செவ்வல்லி. அனுகூல தெய்வம்-இந்திரன். அதிர்ஷ்டக் கல்-வைடூரியம். அதிர்ஷ்ட நிறம்-கரும் பச்சை. அதிர்ஷ்ட எண்-1, 19. மூலம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பெண்களிடத்தில் நயமாகப் பேசி அவர்களுடைய அன்பிற்குப் பாத்திரமாவார்கள். இவருடைய முடிவும், தீர்ப்பும் பாரபட்சமற்றதாக விளங்கும். நீதிக்கு விரோதமாக எந்தக் காரியத்தையும் செய்யத் துணியமாட்டார்கள். மூலம் 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவுக்கூர்மை உண்டு. விரிந்த அனுபவமுடையவர்கள். இதனால் இவர்கள் சாமர்த்தியமாக தன் வாழ்க்கையை நடத்திக்கொள்வார்கள். அதிக பொறுப்பைத் தாமாகவே ஏற்றுக்கொள்வார்கள். மூலம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிறிய விஷயங்களை இவர் ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். பெருந்தன்மையும் மன்னிக்கும் கண்ணியமும் இவரிடத்தில் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலையை நன்குணர்ந்து, தக்கபடி பயன்படுத்தி கொள்வார்கள். மூலம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறர் காரியங்களில் தலையிட மாட்டார்கள். ஆனால், வந்த வம்பு வழக்குகளை விட மாட்டார்கள். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர். அதேபோல, பிறரிடத்தில் இவர் ஒப்படைத்த காரியங்களை இவர் கருதியபடி செய்து முடிக்காவிட்டால் žறி விழும் குணமும் உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமை. வžகரத் தோற்றம், ஆடம்பரத் தோற்றம் ஆகியவற்றை உடையவர்களாக இருப்பார்கள். வசதியாக வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களாகவும் இருப்பார்கள். பூராடம் நட்சத்திரர்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-வெண் தாமரை. அனுகூல தெய்வம்-லட்சுமி. அதிர்ஷ்டக் கல்-வைரம். அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்-2, 20. பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எடுத்துக்கொண்ட காரியத்திலுள்ள சிரமத்தைப் பொருட்படுத்தாது வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். பொதுநலத் தொண்டு, சமூக சேவை ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் ஆத்ம திருப்தி அடையவார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சுற்றுப்பிரயாணத்தில் ஈடுபடும் பணிகள் உகந்தவையாக அமையும். லாபம் இருக்கும் காரியங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். இவரை நன்கறிந்தவர்கள் எப்பொழுதும் இவருக்குத் துணையாய் இருப்பார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் எவரையும் எளிதில் நம்பமாட்டார்கள். அப்படி நம்பிவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள். இவர்கள் சொந்தமாகத் தொழில் செய்வதைவிட மற்றையோரின் பிரதிநிதியாகப் பணியாற்றின், அதிகப் பலன் கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொது மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பணி, செய்திகளை சேகரித்தல் போன்ற பணிகளை ஆற்றும் வாய்ப்பு உங்களுக்கு அமையும். இவர்கள் எத்தொழிலிலும் சேவை மனப்பான்மையோடு ஈடுபடுவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுதந்திர உணர்வும், žர்திருத்தக் கொள்கையும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அனைவரிடமும் எளிதில் பழகி நட்பு பாராட்டுவார்கள். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-பூசம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-தாமரை. அனுகூல தெய்வம்-சிவன். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட எண்-3. உத்திராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உயர்ந்த மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் கிடைக்கும். விளைவுகளை முன் கூட்டியே சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொதுப்பலன்கள்: இதுநாள் வரை 3ம் வீட்டில் இருந்தாலும், தன் பார்வையால் பல நல்லதைத் தந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 4ம் வீட்டுக்கு செல்வதால், நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்படும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு துணை போகாமலிருந்தால், புகழேணியில் உங்கள் நிலை மேலும் உயரும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காட்டி வாருங்கள். இல்லத்தில் இனிமை குறையாமலிருக்கும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்து நடந்தால், பங்காளிகளின் முணு முணுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. வெற்றிப்படிகளில் ஏறும் போது கை கொடுத்து உதவியவர்களுக்கு உரிய நன்றியை செலுத்துவன் மூலம் உங்கள் நல்ல பெயரை நிலை நாட்டிக் கொள்ளலாம். பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதிக தடவைகள் அலைந்தபின், உங்களுக்கு வர வேண்டிய தொகை கையில் கிடைக்கும். செலவுகள் அதிகம் என்பதால், சேமிப்புக்கு அதிக தொகை ஒதுக்க இயலாத நிலை இருக்கும். நேரான பாதையில் சிந்தனையைத் திருப்பினால், நிறைவான வாழ்க்கை நிலைத்திருக்கும். வழக்கு, விவகாரங்களில் அனுகூலமான போக்கு வரும் வரை அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு: துணைவருடன் இணக்கமாக இருந்தால் வாழ்வு இனிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்றவைகளுக்காக மருந்துண்ண வேண்டியிருக்கும். எனவே அவ்வப்போது ஆரோக்கியத்தை கவனித்து வருவது அவசியம். சில சமயம் நட்பின் பொருட்டு, தர்ம சங்கடமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். வண்டி வாகனம், குடும்ப அட்டை போன்றவற்றை பிறருக்கு இரவல் தருவதை இதமாக மறுத்துவிடுங்கள். பலப் பிரச்சினைகள் புதிதாக தோன்றாமல் இருக்கும்.

மாணவர்களுக்கு: நண்பர்களில் சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்வர். பின் தங்கியிருந்த பாடங்களில் நல்ல தேர்ச்சி பெற, அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வெளி வட்டார பழக்கத்தில் ஓர் எல்லைக்குள் இருந்தால், தொல்லை ஏதும் தோன்றாது. சில நேரம் தேவையற்ற விஷயங்களுக்காக அதிக பணம் செலவழியும். பொது இடங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்லும் போது சஞ்சலங்களும், சபலங்களும் உங்களை வீழ்த்த இடம் கொடுக்காதிருப்பது அவசியம்.

வியாபாரிகளுக்கு: தொழிலில் நம்பகத் தன்மை இல்லாதவர்களை அருகில் சேர்க்காதீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பதில் தனிக் கவனம் செலுத்தி வந்தால், பங்குதாரர்களின் அனுமதியோடு புதிய செயல்களில் இறங்குவது நல்லது. அவர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிட்டும். வியாபார ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் விதண்டாவாதத்தை தவிர்த்தால், நினைத்த வண்ணம் செயல்கள் நடைபெறுவதில் எந்தத் தடையும் இராது.

உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலக அளவில் கருத்துப் பரிமாற்றத்தில் கடுமை கூடாமல் பார்த்துக்கொண்டால் உங்கள் சொல்லுக்கு நல்ல மதிப்பிருக்கும். கோப்புகளைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம். உங்களின் பலவீனத்தை பிறர் சாதகமாக்கிக் கொள்ள இடமளிக்காதீர்கள். ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகாமல் பார்த்துக் கொண்டல், வேலைகள் தேங்காமலிருக்கும். சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் அதிக அவசரம் வேண்டாம்.

கலைஞர்களுக்கு: பொது விழாக்களில் படாடோபத்தைத் தவிர்க்கவும். உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை உண்டு வாருங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் சக கலைஞர்களின் தனிப்பட்ட குண நலன்களை விமர்சனம் செய்ய வேண்டாம். சிக்கலான தருணங்களில் சமயோசிதமாக நடந்து கொண்டால் பழிக்கும், அவப்பெயருக்கும் ஆளாக வேண்டியிராது. நண்பர்களுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருந்தால், நட்பு நிலை நன்றாக இருக்கும்.

விவசாயிகளுக்கு: வாழை, தென்னை முதலியவற்றை வளர்ப்பவர்கள், பயிர்கள் வாடல் நோய் மற்றும் வண்டுகளிலிருந்து காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், பொருள் நஷ்டத்தை தவிர்த்து விடலாம். அவ்வப்போது மண் பரிசோதனை மேற்கொண்டு, நிலத்திற்குத் தேவையான நீர் வளம் மற்றும் தழைச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். கடன்களை உரிய காலத்தில் செலுத்துவதில் கவனமாக இருந்தால், அபராத வட்டி செலுத்துவதைத் தவிர்த்துவிடலாம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பண வரவிற்காக முறையற்ற வழிகளை நாடாதீர்கள். அது உங்கள் கௌரவத்தையும், நல்ல பெயரையும் குலைத்து விடும். பணியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்பை பெற இயலாத சூழல் நிலவும். அதனால் முக்கிய பொறுப்புக்களில் நேரடி கவனம் செலுத்துவது அவசியம். நிர்ப்பந்தத்தின் பேரில் சிலர் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களிடமிருந்து விலகி இருந்தால் வீண் தொல்லை வராது.

பரிகாரங்கள்: சனிக்கிழமை தோறும் சனி பகவானை வலம் வந்தால், துன்பங்கள் தானே விலகுவதுடன் மன தைரியமும் கூடும். இல்லத்திலும், உள்ளத்திலும் நிலவும் வேதனைகள் விலக, வேலவன் வழிபாடு கை கொடுக்கும். உங்கள் ராசிநாதனான குருவையும் முறைப்படி ஆராதித்து வர, வளம் பல வந்து சேரும்.

Site Meter