ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28.
இந்தப் புத்தாண்டு புதனின் அருளோடு ஆரம்பம் ஆகிறது. 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 6ம் வீட்டில் இருக்கும் புதன் நண்பர்கள் மூலம் சில சலுகைகளைப் பெற்றுத் தருவதோடு, உங்கள் சொல்லுக்கென்று தனி மதிப்பையும் உருவாக்குவார். பிறகு புதன் 7, 8 வீடுகளில் நிற்பதால், எதிலும் வரம்பு மீறாமல் இருந்தால், மாணவ வாழ்க்கை இனிமையாய் இருக்கும். சூரியனும் 7, 8 வீடுகளில் நிற்பதால், பெற்றோர்கள் பிள்ளைகளை பாதை மாறி நடக்காத வண்ணம், இதமான அறிவுரை சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது. செவ்வாய் முதல் வாரம் முதல் 8ம் வீட்டில். பெண்கள், கோபத்தைக் குறைத்து, சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொண்டால், லாபம் உங்களுக்கே! பொது வாழ்வில் இருப்பவர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்க வேண்டாம். சுக்ரன் 6, 7 வீடுகளில் நிற்பதால், கலைஞர்கள் ஏட்டிக்கு போட்டி என்று செயல்படாமல், பொறுமையை கடைபிடித்து வந்தால், காரியங்கள் பலிதமாகும். மாணவர்கள் வம்பிழுப்பவர்களின் வலையில் விழாதவாறு விலகியே இருப்பது அவசியம்.
பிப்ரவரி
அதிருஷ்ட நாட்கள்: 6, 10, 11, 15. 19. 20. 24. 28.
சூரியன் 8, 9 வீடுகளில் நிற்பதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் கடன் வாங்கி செய்யும் செலவுகளை சுருக்குவது உத்தமம். செவ்வாய் 15ம் தேதி முதல் 9ம் வீட்டுக்குப் போவதால், பணியில் இருப்பவர்கள் யாரிடம் ஆவணங்கள் தந்தாலும், அதற்குரிய குறிப்புகளை பத்திரமாக வைத்துக்கொண்டால், வீண் தலைவலிகளைத் தவிர்த்து விடலாம். வீடு, மனை வாங்குகையில் ஆவணங்களை சரி பார்ப்பதுடன், நம்பிக்கைக்குரியவர்களை அணுகுதல் நல்லது. புதன் 17ம் தேதி வரை அஷ்டம வீட்டில். உயர்கல்வியில் இருந்த சிக்கல்கள் விலகி, மாணவர்கள் சிலர் விரும்பிய பாடம் கிடைக்கப்பெற்று மகிழ்வர். பிறகு புதன் 9ம் வீட்டுக்குப் போகிறார். வியாபாரிகள் காரியங்கள் நல்ல விதமாக முடிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுக்ரன் 23ம் தேதி வரை 7ம் இடத்தில் உள்ளதால், வரவுகள் இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்திச் சிக்கனமாக இருந்தால், கலைஞர்களின் சேமிப்பு கணிசமாக உயரும். பிறகு சுக்ரன் 8ம் இடம் செல்வதால், சுபகாரிய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
மார்ச்
அதிருஷ்ட நாட்கள்: 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.
சூரியன் முன் பாதியில் 9ம் இடத்தில் நிற்கிறார். கர்ப்பிணிப் பெண்கள் வெளியிடங்களில் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது அவசியம். பிறகு சூரியன் 10ம் வீட்டிற்கு மாறுவதால், பதவியில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி, அவர்கள் எடுக்கும் முடிவுகள் அனுகூலமாக அமையும். 25ம் தேதி முதல் செவ்வாய் 10ம் வீட்டுக்குப் போகிறார். மாணவர்கள் வெளி வட்டாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. புதன் 6ம் தேதி முதல் நன்மை தரும் 10, 11 வீடுகளுக்கு சொந்தம் கொண்டாடுவதால், குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுக்ரன் 22ம் தேதி முதல் 9ம் வீட்டுக்குப் போவதால், பணிகளில் இருந்த தேக்க நிலை மாறி, கலைஞர்கள் சிட்டாகப் பறந்து பணியை முடிப்பார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள், அதற்கேற்ற வரவு ஆகியவை தாராளமாக இருக்கும்.
ஏப்ரல்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 27, 28.
சூரியன் நன்மை தரும் 10, 11 வீடுகளில் உலா வருவதால், பெண்களின் ஆரோக்கியம் அவர்களின் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக சிறப்பாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு கிடப்பில் இருந்த சலுகைகள் வந்து சேரும். செவ்வாய் இந்த மாதமும் 10ம் வீட்டில் உள்ளதால், பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் உயர்மட்ட விவாதங்களில், சர்ச்சைக்கு இடம் தராதவாறு பேசுவது புத்திசாலித்தனம். 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை வக்ரம் பெறும் புதனும் மாதம் முழுவதும் 11ம் வீட்டில் நிற்பதால், மாணவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அவர்களின் திறமைக்கு சான்றாக அமையும். சுக்ரன் 16ம் தேதி முதல் 10ம் வீட்டுக்குப் போவதால், கலைஞர்கள் நண்பர்களிடம் உரிமை எடுத்துக்கொள்வதிலும் ஒரு வரையறையுடன் செயல்பட்டால், உறவுகள் என்றும் இனிமையாகத் திகழும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் புறம் கூறுபவர்களின் பேச்சிற்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். வேலையில் இருப்பவர்கள் சக அலுவலர்களுடன் உல்லாசப் பயணங்கள் சென்று மகிழ்வார்கள்.
மே
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 19, 28, 31.
11, 12 ஆகிய இடங்களில் உலா வரும் சூரியன் மாத முன்பகுதியில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களை அவர்கள் ஆற்றலுக்கேற்ற துறையில் நல்ல பதவியில் அமர்த்திடுவார். பிறகு அவர் 12ம் இடம் போவதால், பெண்கள், உள்ளத்தில் உள்ளதை இங்கிதமாகச் சொன்னால், குடும்ப உறவுகளின் இனிமை கெடாமல் இருக்கும். 3ம் தேதி முதல் செவ்வாய் 11ல், தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள் உயர்வான நிலைக்கு அடித்தளமாக அமையும். வியாபாரிகள் கடன்களை தீர்க்க ஈடுபடும் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரும். 7ம் தேதி முதல் குரு 11ம் வீட்டுக்குப் போகிறார். குருவுடன் 11ம் தேதி முதல் புதனும், சுக்ரனும் இணைவதால், மாணவர்களுக்கு சிறப்பான பலன்களோடு, திறமைக்குரிய பாராட்டும், அங்கீகாரமும் வந்து சேர்வதால் மகிழ்வுடன் செயலாற்றுவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, அரசு விருதுகளை பெற்று மகிழும் வாய்ப்புகள் தானே வந்து சேரும். உங்களின் புத்திசாலித்தனத்தால், சேமிப்பு அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் பெண்களால் அனுகூலமான உதவிகளைப் பெறுவார்கள்.
ஜூன்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 24, 25, 28.
சூரியன் 12, 1 வீடுகளில் வாசம் செய்வதால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சில சங்கடங்களை சகித்துக்கொள்ள வேண்டி வரும். செவ்வாயும் 12ம் தேதி முதல் 12ம் இடம் போவதால், வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்பட்டால் லாபத்தின் அளவு குறையாமலிருக்கும். புதன் 12, 1 வீடுகளில் 27ம் தேதி வரை தங்குவதால், கணினி மற்றும் கணக்கு வழக்குகள் சம்பந்தமான பயன்பாட்டில், தகுந்த வழிகாட்டுதலுடன் பணியை மேற்கொண்டால், தவறுகளைத் தவிர்த்து விடலாம். பிறகு புதன் 2ம் வீடு போகிறார். ஆசிரியர்-மாணவர் உறவு அனுகூலமாக இருக்கும். கலைஞர்களின் மங்கிக் கிடந்த புகழ், திறமை அனைத்தும் மீண்டும் பிறரால் பாராட்டப்படும் சூழலை 4ம் தேதி முதல் 12ம் வீட்டிற்கு மாறும் சுக்ரன் உருவாக்குவார். 6ம் தேதி முதல் கேது 12ம் வீட்டுக்கு மாறுகிறார். பெண்கள் பித்த சம்பந்தமான உபாதைகளை உடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் உங்களுக்கு அனுசரணையாக இருக்கும். ராகு 6ம் வீட்டுக்கும் மாறுவதால், பொதுவாழ்வில் இருப்பவர்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உறவு கொண்டாடி வருவார்கள்.
ஜூலை
அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 23, 28, 30.
இந்த மாதம் சூரியன் 1, 2 வீடுகளில் நிற்பதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் முக்கியமான பணியை முடிக்கும் பொருட்டு நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் குடும்பத்தில் விவாதங்களை வளரவிடாமல் செயல்படுவது அவசியம். 25ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசியில் அமர்வதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் புறம் பேசுபவர்களை பதமாய் விலக்கி வைத்தால், பிரச்சினைகள் தானே அமுங்கி விடும். 2ம் வீட்டில் இருந்துகொண்டு, மாணவர்களுக்கு நன்மை தந்த புதன், 20ம் தேதி முதல் 3ம் இடம் போவதால், கணக்கு வழக்கு துறைகளில் உள்ளவர்கள், சில சங்கடங்களை சமாளிக்க நேரிடும். வியாபாரிகள், குடும்ப அமைதிக்கு குந்தகம் இன்றி தங்கள் பணிகளை žரமைத்துக்கொள்வது அவசியம். சுக்ரன் இந்த மாதம் 1, 2 வீடுகளில் நிற்பதால், சுயதொழில் புரிபவர்கள் தீட்டிய திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்தி, பலரது பாராட்டுகளைப்பெற ஏதுவான காலமிது! அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும்.
ஆகஸ்ட்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 24, 28.
சூரியன் 16ம் தேதி வரை 2ம் இடத்தில். அதிக நேரம் கண்விழித்துப் படிக்கும் மாணவர்களுக்கு கண் சம்பந்தமான உபாதைகள் தலைக்காட்டும். பிறகு சூரியன் 3ம் இடம் போவதால், வராமலிருந்த வியாபாரச்சலுகை தக்க சமயம் வியாபாரியின் கைகளில் வந்து சேரும். செவ்வாயும் உங்கள் ராசியில் இருப்பதால் மாணவர்கள் நண்பர்களிடையே அவ்வப்போது உருவாகும் பூசல்களை பெரிதாக்காமலிருப்பது நல்லது. மேலும் சிறிய அலைக்கழிப்பிற்குப் பிறகு எதிர்பார்த்த உதவித் தொகை கிடைக்கும். முதியவர்களின் தேக நலனில் சிறு சிரமங்கள் உண்டாகலாம். 4ம் தேதியிலிருந்கு 26ம் தேதி வரை வக்ரகதியில் இருக்கும் புதன் 2ம் வீட்டில் நிற்பதால், அலுவலக விழாக்களில், வேலையில் இருப்பவர்களின் திறமை கொடி கட்டிப் பறப்பதோடு, பரபரப்புக்கும், கலகலப்பிற்கும் பஞ்சமிராது. சுக்ரன் 17ம் தேதி முதல் 3ம் இடத்திற்கு போவதால் சுய தொழில் புரிபவர்களுக்கு கதவைத்தட்டும் வாய்ப்புகளை வைத்து வளமான வாழ்கை அமையும். குடும்ப உறவில் மகிழ்ச்சியும், நெருக்கமும் கூடும்.
செப்டம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 24, 28.
சூரியன் 3, 4 வீடுகளில் ஜொலிப்பதால், முன் பகுதியில், பணியில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் வெளியூர் பயணங்கள் இனிமையான நினைவுகளை இணைக்கும் பாலமாக அமையும். பின் சூரியன் 4ம் வீட்டிற்கு நகர்வதால், எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் சிறிது தொய்வு உண்டாகலாம். செவ்வாய் 2ம் வீட்டில், மனை வாங்கும் விஷயத்தில் நம்பிக்கைக்கு உகந்த நிறுவனங்களை நாடிச் சென்றால் மனக் கஷ்டமும், பண நஷ்டமும் ஏற்படாமலிருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பழக்கமில்லாத உணவு வகைகளை உண்ணாதிருந்தால், žரணக் கோளாறுகள் இன்றி ஆரோக்கியம் žராக இருக்கும். புதன் இந்த மாதம் 4ம் தேதி முதல் 3, 4 வீடுகளைக் கடந்து செல்வதால், உடன் பிறப்புகளால், மனவருத்தம் உண்டாகும் சூழல் உருவாகும். சுக்ரன் 10ம் தேதி முதல் நலம் நல்கும் 4ம் இடத்திற்கு மாறுவதால், கருத்தைக் கவரும் கலை நிகழ்ச்சி மூலம் கலைஞர்கள் மக்கள் மனதில் இடம் பெற்றுவிடுவார்கள். வியாபாரிகளுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் வரும் லாபம் திருப்திகரமாய் இருக்கும்.
அக்டோபர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28.
சூரியன் 4, 5 வீடுகளில் நகர்வதால், பெண்கள் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு பணிகள் வந்துகொண்டே இருக்கும். பணியில் இருப்பவர்கள் அதிக நேரம் வெளியில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. 29ம் தேதி வரை செவ்வாய் 2ம் வீட்டில் சுழல்வதால், மாணவர்கள் சிறிய விஷயங்களுக்கு சட்டென்று கோபப்படுவதைக் குறைத்துக்கொள்ளுதல் அவசியம். பிறகு செவ்வாய் 3ம் வீட்டுக்கு செல்வதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிராளியின் பலம், பலவீனம் இரண்டையும் மனதில் கொண்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். புதன் 29ம் தேதி வரை பஞ்சம வீட்டில். பெற்றோர்கள் பிள்ளைகளின் பணப்புழக்கத்தின் மீது கவனமாக இருப்பது நல்லது. பின் புதன் 6ம் வீடு செல்கிறார். கலைஞர்கள் தங்கள் அறிவுத் திறமையால் அனைவரையும் அசத்தி விடுவார். 4ம் தேதி வரை சுக்ரன் பஞ்சம வீட்டில். சுயதொழில் புரிபவர்களுக்கு தள்ளிப்போன காரியங்கள் மளமளவென்று நடக்கும். பின் சுக்ரன் 6ம் இடத்தை அடைந்து விடுவதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது முக்கியம். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், இழப்புகள் குறையும்.
நவம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 11, 15, 19, 29, 24, 28, 29.
சூரியன் 16ம் தேதி வரை 5ம் வீட்டில் நிற்பதால், மாணவர்கள் தவறான கண்ணோட்டம் உடையவரிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம். பணியில் இருப்பவர்களுக்கு தளவாடங்களில் கணக்கு வழக்கில் சிறு தொல்லைகள் உண்டாகும். பின் சூரியன் 6ம் இடத்திற்கு மாறுவதால், தொழிலாளர்களிடையே நிலவி வந்த மோதல் நீங்கும். 3ம் இட செவ்வாயால், சிறிய வியாபாரிகளுக்கு பெரிய வியாபாரிகளின் ஆதரவும், அனுசரணையும் தக்க சமயத்தில் கிட்டும். சனி 14ம் தேதி முதல் 5ம் இடத்திற்கு செல்கிறார். பணியில் இருப்பவர்கள் தங்கள் கீழ் வேலை செய்யும் ஊழியரிடம் ரகசியங்களை சொல்லாமலிருப்பது நல்லது. சுக்ரன் இந்த மாதம் 6, 7 வீடுகளில் அடைபட்டுக்கிடப்பதால், கலைஞர்கள் தன்மானத்திற்கு இழுக்கு வரும் காரியங்களில் ஈடுபடாமலிருந்தால், நற்பெயர் கெடாமலிருக்கும். 6ம் வீட்டில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் பெறுவதால், ஏளனம் செய்தவர்கள் எட்டி நிற்கும் அளவிற்கு சுய தொழில் புரிபவர்களின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
டிசம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.
சூரியன் முன் பாதியில் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால், வியாபாரிகளுக்கு, முன்பிருந்த நிலையை விட வியாபாரத்தில் விறுவிறுப்பு கூடும். பங்குச்சந்தையில் போடப்படும் பணமும் ஓரளவு லாபத்தைக் கொண்டு வரும். பின் பகுதியில் சூரியன் 7ம் இடத்தில். பூர்வீகச் சொத்து பிரச்சினைகளில் நிதானம் தேவை. பெண்கள் மறைமுகத் தொல்லைகளை மதியூகத்தால் சமாளிக்க வேண்டி இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின், தவறான பழக்கவழக்கங்களை முளையிலேயே கிள்ளிவிட்டால், சஞ்சலங்கள் அருகே வராது. செவ்வாய் இந்த மாதமும் 3ல் இருப்பதால், பணியிடத்தில் இருந்த சுணக்கம் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தையும் செவ்வாய் உண்டாக்குவார். 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெறும் புதன் 6ம் வீட்டில் இருப்பதால், சுய தொழில் புரிபவர்கள் மனதில் இருந்த கலக்கமும், கவலையும் நீங்கி உற்சாகத்துடன் விளங்குவார்கள். 16ம் தேதி முதல் சுக்ரனும் அஷ்டம வீட்டுக்கு செல்வதால், கலை நயம் மிகுந்த பொருட்களை தயாரிப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தொழில் துறையில் கவனத்துடன் செயல்படுத்தினால் வளமான வாழ்வு அமையும்.