முதல் பக்கம் » ராசிபலன் » வார ராசிபலன்
வார ராசிபலன் -

Tamil Weekly Horoscope

வார ராசிபலன் 7/29/2014 முதல் 8/4/2014 வரை

 
Mesham | Aries - 2014 Tamil Horoscope
21/Mar - 19/Apr
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்கு 7-ல் செவ்வாயும் சனியும் சேர்ந்து ராசியைப் பார்ப்பது ஒருவகையில் கெடுதல்தான் சிலருக்கு திருமணத்தடை, தொழிலில் போட்டி, பொறாமை இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை, என்றாலும் ராசிநாதனே செவ்வாய் என்பதால் விதிவிலக்குண்டு. பொதுவாக செவ்வாயும் சனியும் எந்த இடத்தில் சேர்ந்தாலும் பார்த்துக் கொண்டாலும் பிரச்சினைதான். பாக்கியாதிபதி குரு 4-ல் உச்சம்பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், வாழ்க்கையில் சங்கடங்களும் சஞ்சலங்களும் இருந்தாலும் நீந்திக் கரை சேரலாம். நேரங்காலம் அனுகூலமாக இல்லையென்பதே காரணம். நேரம் காலம் சாதகமாக அமைந்துவிட்டால் குறுக்கீடுகளும் தடைகளும் விடைபெற்று ஓடிவிடும்.Go Top
 
Rishabam | Taurus - 2014 Tamil Horoscope
20/Apr - 20/May
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 5-க்குடைய புதன் அஸ்தமனம். 11-க்குடைய குருவும் அஸ்தமனம் 5-ல் ராகு 11-ல் கேது, எனவே உங்கள் எண்ணங்களும், திட்டங்களும் நியாயமானவைதான் முறையானதுதான். ஜாதகம் பொய், தெய்வம் இல்லை என்றெல்லாம் சொல்லுகிறவர்கள்கூட, குடும்பத்தில் வேதனைகளை சந்தித்த பிறகு, அதற்கு நிவர்த்தி தேட ஏதாவது ஒரு பரிகார பூஜையை ரகசியமாகச் செய்வதுண்டு. அந்த நம்பிக்கையை 5-ஆம் இடத்து ராகு கேதுவும் சனியும் அல்லது 7-ஆம் இடத்து சனி, ராகு கேதுவும் ஏற்படுத்துவார்கள். எந்த ஒரு கிரக சோதனையும் வேதனையும் இருந்தால் தெய்வ நம்பிக்கையோடு ஆன்மார்த்த பூஜை செய்தால் சரியாகிவிடும். ஒரு ஹோமம் செய்யும்போது நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்களும் சம்பந்தப்படும்.Go Top
 
Mithunam | Gemini - 2014 Tamil Horoscope
21/May - 21/Jun
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 2-ல் குருவோடும் சூரியனோடும் சம்பந்தம். அதனால் பொருளாதார நெருக்கடி இருக்காது. அதேசமயம் 5, 12-க்குடைய சுக்கிரன் ஜென்மத்தில் நிற்பதால் எவ்வளவு வரவு வந்தாலும் செலவாகிவிடும், மிச்சப்படுத்தமுடியாது. இந்த வாரக்கடைசியில் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவார். ஆவணி 5-ல் புதன் அஸ்தமனம் நீங்கி உதயமாவார். ஆக, இந்த இரண்டு கட்டங்களாக உங்களைச் சுற்றிப்போடப்பட்ட வேலி விலகும். தடைகள் உடைபடும். குரு உதயமானதுமே உங்கள் வாழ்க்கை, தொழில் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம்.Go Top
 
Kadagam | Cancer - 2014 Tamil Horoscope
22/Jun - 22/Jul
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் குரு உச்சம்பெற்று 5-ஆம் இடம் 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்ப்பது பலம்தான். ஆனால் குரு இந்த வராக்கடைசி வரை அஸ்தமனமாக இருக்கிறார். அத்துடன் 8-க்குடைய சனி 6-க்குடைய குருவைப் பார்ப்பது கெடுதல்தான் அதேசமயம் சனி 7-க்குடையவர், குரு 9-க்குடையவர் என்பதையும் மறுக்கமுடியாது. ஒரு கேந்திராதிபதி இன்னொரு திரிகோணாதிபதியைப் பார்ப்பது யோகம். ஜாதகத்திலேயே கேந்திராதிபத்தியமும் ஒரே கிரகத்துக்குக் கிடைக்குமானால் அந்த கிரகம் ராஜயோகாதிபதி எனப்படுவார். உதாரணமாக ரிஷபத்துக்கும் துலாத்துக்கும் சனி 9, 10-4, 5 என்ற ஆதிபத்தியம் பெறுவதால் சனி இந்த இரு ராசிகளுக்கும் ராஜயோகாதிபதி நல்லது செய்வார்.Go Top
 
Simmam | Leo - 2014 Tamil Horoscope
23/Jul - 22/Aug
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்கு 12-ல் குரு உச்சம்! அவர் 8-க்குடையவர். அவரை உச்சம் வெற்ற சனி பார்க்கிறார். சனி 6-க்குடையவர். இங்கு உச்சனை உச்சன் பார்ப்பது தோஷம்தான். அதேசமயம் குரு 5-க்குடையவர் திரிகோணாதிபதி சனி 7-க்குடையவர் கேந்திராதிபதி. இவர்கள் பார்த்துக்கொள்வதால் கேந்திராதிபதி திரிகோணாதிபதி சம்பந்தம் பெறுவது ராஜயோகம். சிம்மத்துக்கும் கும்பத்துக்கும் செவ்வாயும் சுக்கிரனும் தர்மகர்மாதிபதி. இந்த தர்மகர்மாதிபதிகள் சேர்ந்தாலும் பார்த்துக்கொண்டாலும் நல்லது. ஆனால் மேஷத்துக்கும் மிதுனத்துக்கும் குரு, சனி சேர்ந்தால் தோஷம்.Go Top
 
Kanni | Virgo - 2014 Tamil Horoscope
23/Aug - 22/Sep
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 11-ல் அஸ்தமனம். 11-ல் குரு உச்சம். விரயாதிபதி சூரியனுடன் சம்பந்தம். குருவும் அஸ்தமனம். குரு வாரக்கடைசியில் உதயமாவார். 1, 10-க்குடையவர் 11-ல் உச்ச குருவோடு சம்பந்தம். எனவே உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து இவற்றுக்கு பாதிப்பில்லை. அதேபோல தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்கலாம். சிலருக்கு லாபம் வரும், ஆனால் மிச்சப்படுத்த முடியாது. ஏதாவது ஒருவகையில் விரயம் உண்டாகும். 12-க்குடைய சூரியன் 11-ல் இருப்பதே காரணம்.Go Top
 
Thulam | Libra - 2014 Tamil Horoscope
23/Sep - 22/Oct
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இரக்கிறார். தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சாரம். சாகு 12-ல் குரு 10-ல். எனவே வார மத்திவரை தொழில்துறையில், வாழ்க்கை அமைப்பில் தவிர்க்கமுடியாத செலவுகள் உண்டாகும். இதெல்லாம் ஏழரைச் சனியுடன் ஜென்மச் சனியுடன் செவ்வாய் சேர்ந்த தோஷம்! அதேசமயம் மனசாட்சிக்கும் தர்மத்துக்கும் கட்டுப்பட்டு நன்றியுடன் நடப்பவர்களுக்கு காலம் கை கொடுக்கிறது காப்பாற்றுகிறது. தேவைகள் நிறைவேறுகிறது.Go Top
 
Virushigam | Scorpio - 2014 Tamil Horoscope
23/Oct - 21/Nov
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் சனியுடன் சம்பந்தம்! சனியும் 12-ல் உச்சம்! 9-ல் குருவும் உச்சம்! செவ்வாய், சனி சேர்க்கை 12-ல் இருப்பதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருசிலரின் அனுபவம் 7-ஆம் இடத்துக்கு 6-ல் செவ்வாய், சனி சேர்க்கை என்பதால் குடும்பத்தில் ஒத்துழைப்பு இல்லையென்ற வருத்தம்! ஒருசிலர் குடும்பத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் தன் சுகமே பிரதானமாகக் கருதி சுகபோகமாகத் திரிகிறார்கள். அது குரு ராசியைப் பார்த்த பலன் என்றும் சொல்லலாம்; குரு போட்ட பிச்சையென்றும் கூறலாம்.Go Top
 
Thanusu | Sagittarius - 2014 Tamil Horoscope
22/Nov - 21/Dec
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் 8-ல் உச்சம். அவருக்கு 11-ல் உச்சம்பெற்ற சனி பார்வை. உச்சனை உச்சன் பார்ப்பது இப்போதுதான். குருப்பெயர்ச்சிக்கு முன்னால் 7-ல் குரு நின்று சனியைப் பார்த்தார். ஆக கடந்த ஓராண்டுக்குமேல் தனுசு ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவு குறையேதும் இல்லையென்றாலும் வாழ்க்கையில் தொழில் துறையில் உத்தியோகத்தில் நிறைவு இல்லை, நிம்மதி இல்லை. இந்த வாரக்கடைசியில் குரு உதயமாகிவிடுவார். உங்கள் முயற்சிகளும் உதயமாகிவிடும்.Go Top
 
Magaram | Capricorn - 2014 Tamil Horoscope
22/Dec - 19/Jan
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 10-ல் உச்சம். செவ்வாய் சம்பந்தம். கடந்த ஒன்றரை வருடங்களாக உங்கள் வாழ்க்கை, தொழில் வியாபாரம் எல்லாவற்றிலும் பிரச்சினைதான். ஆகஸ்டு 4-ல் குரு அஸ்தமனம் நீங்கி உதயமானதும் 7-ல் குரு உச்சம்பெற்ற பலமும் பலனும் உங்களுக்குக் கிடைத்துவிடும். 10-ல் செவ்வாய், சனி ஒருவகையில் கெடுதல் என்றாலும் இன்னொரு வகையில் நல்லதே! குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணமும் அதனால் நன்மையும் எதிர்பார்க்கலாம்.Go Top
 
Kumbam | Aquarius - 2014 Tamil Horoscope
20/Jan - 18/Feb
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு 9-ல் செவ்வாய், சனி சேர்க்கை. 2-ல் கேது, 8-ல் ராகு, 2-க்குடைய குரு 6-ல் மறைவு. அடிப்படை செலவினங்களுக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் குறைவில்லை. எதுவும் திட்டமிட்டபடியோ திடடம் போட்டோ செய்லபடாது. உங்கள் கடமைகளில் காரியங்களில் கருத்தாக இருப்பீர்கள். அது வெற்றியடைகிறதா தோல்வி அடைகிறதா என்றெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அந்த கடமையும் நம்பிக்கையும் உங்களை வாழவைக்கும். உங்கள் கிரகங்களும் ஜாதகங்களும் அனுகூலமாக இல்லாவிட்‘லும் உங்கள் நம்பிக்கையும் முயற்சிகளும் வீண்போகாது.Go Top
 
Meenam | Pisces - 2014 Tamil Horoscope
19/Feb - 20/Mar
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிக்கு குரு உச்சம். இதுவரை அஸ்தமனமாக இருக்கிறார். இந்த வாராக் கடைசியில் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். ஆகவே இந்த ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். குரு உதயமானதும் தடைகளும் தாமதங்களும் விலகியோடிவிடும். இந்தத் தாமதத்துக்கு காரணம் குரு அல்ல அட்டமத்துச் சனிதான்! அவரும் இன்னும் ஐந்து மாதத்தில் மாறிவிடுவார். உங்கள் தொழில், வாழ்க்கை எல்லாம் வேகம் விறுவிறுப்பாகச் செயல்படும். நினைத்தவை நிறைவேறும். எண்ணியது ஈடேறும். கருதியது கைகூடும். அட்டமத்துச் சனி விலகி, 5-ஆம் இடத்து உச்ச குரு உங்கள் ராசியைப் பார்க்கும் பலன் 100-க்கு 100 என்பதைவிட 100-க்கு 120 மடங்கு வேலை செய்யும் எனலாம்.Go Top
Site Meter