23 மே, 2013. வியாழக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 19 ஏப்ரல் 2012

இந்தியச்செய்திகள் : Latest India News

கற்பழிப்பு வழக்கில் சாமியாருக்கு 7 வருடம் ஜெயில்

புதுடெல்லி, ஏப். 19-

டெல்லியைச் சேர்ந்த சாமியார் பவானி பாபா. 41 வயதான இவர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி, 28 வயது இளம் விதவை பெண்ணிடம் அவரது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ஆசிரமத்திற்கு வரவழைத்தார். குழந்தையுடன் வந்த அந்த பெண்ணிடம் பூஜை செய்ய உள்ளதால் குழந்தையை வெளியே விட்டு வருமாறு சாமியார் கூறினார்.

அதன்படியே குழந்தையை வெளியே விட்டு விட்டு வந்த பெண்ணிடம் மயக்க பொடியை முகர வைத்து வசியப்படுத்தி கற்பழித்தார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சாமியார் கைது செய்யப்பட்டு, டெல்லி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில், சாமியார் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும், பலவந்தப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், ஆகிய குற்றங்களுக்கு 1 வருட தண்டனையும், மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக அறிவித்தார்.


Site Meter