21 மே, 2013. செவ்வாய்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 27 ஏப்ரல் 2012

இந்தியச்செய்திகள் : Latest India News

ப.சிதம்பரம் பதவி விலகக்கோரி பாராளுமன்றத்தில் பா.ஜனதா அமளி

புதுடெல்லி, ஏப். 27-
LS adjourned after Oppn uproar over Chidambaram - India News Headlines in Tamil

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி புகார் கூறினார். அதில் ஏர்செல் மேக்சிங் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பான பணி பரிமாற்றத்தில் தன் மகன் கார்த்தி சிதம்பரம் பயன் அடையும் விதத்தில் செயல்பட்டார். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் தயாநிதி மாறன் பெயர் மட்டும் உள்ளது. அதில் ப.சிதம்பரம், அவரது மகன் பெயரையும் சி.பி.ஐ. சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் இன்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கிளப்பினார்கள். குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்று ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும், இது தொடர்பாக தங்கள் கட்சி எம்.பி. ஜஸ்வந்த் சின்கா கொடுத்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றனர்.

இதற்கு சபாநாயகர் மீராகுமார் அனுமதி மறுத்தார். மேலும் குற்றச்சாட்டை மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் மறுத்து பேசியதால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.


Site Meter