ஏமன் நாட்டில் அல் கொய்தா இயக்கத்துடன் இணைந்த தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க ராணுவத்தினர் தீவிர வேட்டை நடத்துகிறார்கள். இந்நிலையில் நேற்று லாடார் என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை. இது பற்றி ராணுவ செய்தி குறிப்பில் கூறுகையில், 'கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சோமாலியாவை சேர்ந்த அன்சார் அல்-ஷாரியா என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அல் கொய்தா இயக்குத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.