24 மே, 2013. வெள்ளிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 25 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

பாகிஸ்தான் சிமென்ட் நிறுவனங்களால் வற்றுகிறது சிவன் கோவில் குளம்

இஸ்லாமாபாத், ஏப். 25-
Pond revered by Hindus drying up in Pakistan - World News Headlines in Tamil

பாகிஸ்தானில் பிரபல கட்டாஸ்ராஜ் சிவன் கோவில் குளம் வற்றி வருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கட்டாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது. தட்சன், யாகத்திற்கு பிறகு தனது மகள் தாட்சாயணியை எரித்ததால் சிவபெருமான் கண்ணீர் விட்டு அழுததாகவும், அந்த கண்ணீர் தான், கட்டாஸ்ராஜ் சிவன் கோவில் குளமாக உள்ளதாக, புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கட்டாஸ்ராஜ் கோவில் குளம் பெரியது என்பதால், இந்த குளத்தின் நீர் சைடன் ஷா மற்றும் வாலா கிராமங்களின் குடிநீருக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது மூன்று சிமென்ட் தொழிற்சாலைகளும் இந்த குளத்தில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி வருகின்றன. இதனால், குளத்தின் தண்ணீர் வேகமாக குறைந்து வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு தண்ணீர் தான் இந்த குளத்திலிருந்து எடுக்க வேண்டும். பற்றாக்குறை நீரை, ஜீலம் நதியில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை, இந்த சிமென்ட் தொழிற்சாலைகள் மீறுவதால் தான், குளத்தின் தண்ணீர் வேகமாக வற்றி வருவதாக, கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Site Meter