21 மே, 2013. செவ்வாய்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 25 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களுக்கு விரைவில் தேசிய அடையாள அட்டை

இஸ்லாமாபாத், ஏப். 25-
Pakistan authorities to soon provide identity cards to all Hindus - World News Headlines in Tamil

பாகிஸ்தானில் வசிக்கும் அனைத்து இந்துக்களுக்கும் விரைவில் தேசிய அடையாள அட்டை வழங்கும்படி அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சுமார் 30 லட்சம் இந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகிறார்கள். ஆனால் 18 லட்சம் பேர் இருப்பதாக அரசாங்க புள்ளி விவரம் கூறுகிறது. அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாததால் பல்வேறு தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

இதனை அடுத்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சுமோ மோடா வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், "தேசிய அடையாள அட்டை பெற முடியாததால் திருமணம் ஆன இந்து பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. தற்போதுள்ள சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை. இந்தியா செல்ல பாஸ்போர்ட் பெற பெரும் தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. இந்து பெண் ஒருவர் விண்ணப்பம் செய்து விட்டு பல்வேறு தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இப்திகார் சவுத்திரி தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 30-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "இந்துக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக சில ஒழுங்குபடுத்தும் நெறிமுறைகளை கடைபிடித்து அதிகாரிகளுக்கு தேசிய புள்ளிவிவரம் தொகுப்பு மற்றும் ரிஜிஸ்திரார் அலுவலகம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என

இதனை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேசிய புள்ளி விவரம் தொகுப்பு துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் அதிகாரிகளின் கூட்டத்தை விரைவில் கூட்டி இந்துக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது பற்றி முடிவு எடுக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்துக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் எடுக்கப்படும் அந்த சட்ட திருத்தம் குறித்த உத்தரவின் நகலை கோர்ட் ரிஜிஸ்தாரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுபற்றி விழிப்புணர்வை ஏற்பத்த பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே இந்த உத்தரவின் மூலம் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களுக்கு விரைவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்த தேசிய அடையாள அட்டை கிடைக்க இருக்கிறது.


Site Meter