22 மே, 2013. புதன்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 26 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம்

வாஷிங்டன், ஏப். 26-

அமெரிக்காவில் குடியேற 1 கோடி இந்தியர்கள் விரும்புகின்றனர். சீனா, இந்தியா, வங்காள தேசம், நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் இளைஞர்களிடம் 'நீங்கள் எந்தநாட்டில் குடியேற விரும்புகிறீர்கள்' என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
 
உலகம் முழுவதும் வாழும் 6 கோடியே 40 லட்சம் இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 1 1/2 கோடி பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், நைஜர், வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.
 
இவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் 1 கோடி பேர் அமெரிக்காவில் குடியேற மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும், இங்கிலாந்தில் 4 1/2 லட்சம் பேரும், கனடாவில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேரும், பிரான்சில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரும், சவுதி அரேபியாவில் 3 லட்சம் பேரும் குடியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.


Site Meter