
சிரியாவில் நிலவும் வன்முறை, கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை மூலம் 12-ந் தேதி முதல் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது முறையாக நடைமுறைக்கு வரவில்லை. ராணுவம் தாக்குதலும், வன்முறையும் நீடிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் ஹோமஸ் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு மற்றும் வன்முறைகளில் ஒரே நாளில் 30 பேர் உயிர் இழந்தனர்.
இந்நிலையில் சிரியாவுக்கு 300 பேர் கொண்ட ஆய்வு குழுவினரை அனுப்ப ஐ.நா.சபை தீர்மானித்தது. எனவே இக்குழுவை விரைவில் சிரியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா நிலவரம் குறித்து சிறப்பு தூதர் கோபி அனான் வருகிற 5-ந் தேதி அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.