20 மே, 2013. திங்கட்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 27 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

ஒபாமா, மனைவியுடன் சேர்ந்து 5-ந் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்

வாஷிங்டன், ஏப். 27-
Obama starts his campaign to keep the White House - World News Headlines in Tamil

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒபாமா தனது மனைவியுடன் சேர்ந்து வருகிற 5-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். ஒபாமாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அவருடைய பிரசார மேலாளர் ஜிம் மெச்சினா வெளியிட்டார்.

அதன்படி ஒபாமா, தனது மனைவி மிச்செலியுடன் இணைந்து மே 5-ந் தேதி பிரசாரத்தை தொடங்குகிறது. அன்றைய தினம் ஒஹியோ, வெர்ஜினியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பேரணி-பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள். என்றாலும் ஜனாதிபதி என்ற முறையில் அதிகாரபூர்வ ஒபாமாவின் பிரசார பயணம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மெச்சினா கூறினார்.

ஒபாமா தனது முதல் பிரசாரத்தை ஒஹியோ மற்றும் வெர்ஜினியாவில் தொடங்குவதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. இதில் ஒன்று மனைவியை அழைத்து சென்று பிரசாரம் செய்வதால் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்பதாகும். மேலும் இரு மாநிலமும் வெற்றிக்கு உதவியாக அமையும் முக்கிய மாநிலமாக இருப்பதாலும் இந்த முடிவை ஒபாமா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வெர்ஜினியா மாநில கவர்னராக குடியரசு கட்சியை சேர்ந்த பாப் மெக்டோனில் பதவி வகித்து வருகிறார். ஒபாமாவின் தேர்தல் பிரசாரம் குறித்து அவர் கூறுகையில், "ஒபாமா வெர்ஜினியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவருடைய கொள்கைகள் நாட்டிற்கு எதிராக இருக்கிறது. எனவே வெர்ஜினியா மக்களும், ஏனைய பகுதியும் அவரை மேலும் 4 ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என குறிப்பிட்டார்.

ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் யார்? என்பது இன்னும் அதிகாரபூர்வமாக முடிவாகவில்லை. என்றாலும் வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. சமீபத்தில் நடந்த 5 மாகாணங்களிலும் அவருக்கே அமோக ஆதரவு கிடைத்தது.

இவரை எதிர்த்து நின்ற ஜின்கிரிச் வேட்பாளர் தேர்வு போட்டியில் இருந்து விலகினார். தற்போது மற்றொருவரான டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரியும், மிட் ரோம்னிக்கு தனது ஆதரவை தெரிவித்து விட்டார். பெர்ரியின் இந்த முடிவை மனதார வரவேற்பதாக மிட் ரோம்னி கருத்து தெரிவித்தார். எனவே குடியரசு கட்சி வேட்பாளராக அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் மிட் ரோம்னியும் தனது தீவிர பிரசாரத்தை மேற்கொள்வார்.


Site Meter