முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

இன்னும் வேண்டும்

R. தீபா

நட்புக்குப் பலமாய்
இன்னும் நண்பர்கள் வேண்டும்

உழைப்பிற்குப் பலமாய்
இன்னும் ஊழியர்கள் வேண்டும்

மனதுக்குச் சுகமாய்
இன்னும் ஆறுதல்கள் வேண்டும்

அறிவுக்குப் பலமாய்
இன்னும் அனுபவங்கள் வேண்டும்

ஆறுதலுக்கு இதமாய்
இன்னும் அம்மாவின் மடி வேண்டும்

வக்கிரங்களுக்கு உருவாய்
இன்னும் கவிதைகள் வேண்டும்

பூமிக்கு மழை பொழிய
இன்னும் மரங்கள் வேண்டும்

இலட்சங்களை நோக்காது சாதனை புரிய
இன்னும் இலட்சியவாதிகள் உருவாக வேண்டும்

மானுடம் செழிப்புற
இன்னும் இன்னும் ஒற்றுமை வேண்டும்.

புதுக் கவிதை

Site Meter