முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

யார் இவர்கள்?

எம். அப்துல் கரீம்

அரசியல் வேட்டையர்
அன்புடன் அழைக்கும்
அடிமாடுகள்

தேர்தல் தூண்டில் புழுவுக்காக
மரணத்தைத் தேடும் மீன்கள்

தாகத்தை தீர்த்து விட
கானல் நீரை நம்பும் மான்கள்

கல்லில் நார் உரிக்க
காலமாய் காத்திருக்கும் கணவான்கள்

வட்ட வான்மதியே வந்திறங்குமென
வாய்கிளிய பேசியதை

வாழ்க்கையில் நிஜமென நினைத்தவர்கள்
யார் இவர்கள்
வாக்களிக்க பிறந்தவர்கள்

புதுக் கவிதை

Site Meter