எதிர்மறைக்குள் ஒளியாதே
எதிர்கொள்.
சாத்திய கதவு தாண்டி
தென்றல் வந்து தழுவுவது
சாத்தியமில்லை மகனே
எதிர்கொள்
புயல் என்றாலும் எதிர்கொள்
எதிர்மறைக்குள் ஒளியாதே
எதிர்மறைகள் தீர்வாகாது.
புயலுக்குத் தென்றல் தீர்வாகாது;
இறப்புக்குப் பிறப்பு தீர்வாகாது;
பாவத்திற்குப் புண்ணியம் தீர்வாகாது;
இது ஒரு விதம்!
அது ஒரு விதம்!!
விசத்திற்கு
அமுதம் தீர்வாகாது;
எதிர்த்துப் போராடும்
மருந்தே தீர்வாகும்.
எதிர்மறைக்குள் ஒளியாதே
எதிர்கொள்
விசத்தை எதிர்க்கும் மருந்து போல!