முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

பெண்

சென்னை சங்கமம்

கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.

நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..

புதுக் கவிதை

Site Meter