காலை கருவறையில்
மாலை வகுப்பறையில்
நாளை மருத்துவமனையில்
- பெற்றோர் மனதில்
- குழந்தைகள் பயத்தில்
நுனி நாக்கில் ஆங்கிலம்
பணியில் வேகம்
கணினியின் மோகம்
- இளைஞனின் தாகம்
தேகம் மெழுகேற்றி
அரை ஆடை ஆலங்கேற்றி
ரத்த சாயம் உதட்டில் ஏற்றி
- இளம்பெண்களின் வெற்றி
சமையல் வேலை
சாமிக்கு பூமாலை
சாமுத்ரிகா சேலை
- இல்லத்தரசியின் தேவை
இரத்தத்தின் வேகம்
யுத்தத்தின் சோகம்
சத்தத்தின் பாகம்
- இராணுவ வீரரின் கானம்
உலகத் தேவைகளுக்கு வாழாமல்
உள்ளத் தேவைகளுக்கு வாழ்வோம்!
சேவை செய்வோம்!
தேசம் காப்போம்!
ஜெய்ஹிந்த்!