முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

ஆழிப் பேரலை

யுகபாரதி
அலைகடலென அனைவரும்
எழுத முடியுமா இனிமேல்
பொதுக்கூட்ட சுவரொட்டியில்

கிளிஞ்சல் பொறுக்கிய
கடற்கரையில்
ஏன் பொறுக்க வைத்தார்
குழந்தைகளை?

எமனாய் வந்த கடலை
எதிர்கொண்ட பிறகு
எவனைப் புகழ்வது
கருணைக் கடலென்று?

எங்கு போய்க்
கரைப்பது கடலால் இறந்தவர்களின்
அஸ்தியை....

நன்றி: செம்பருத்தி இதழின் தமிழினி கட்டுரை.

புதுக் கவிதை

Site Meter