முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

ஒற்றை இறகு - வண்ணங்களின் ஓசை...

வசந்த்
மலிவாகக் கிடைத்ததென்று
ஓவியம் ஒன்றை
வாங்கி வந்தேன்.

பணக்காரன் வீட்டில்
படங்கள் இருக்கவேண்டுமென்ற
பாவனைக்கு.

வண்ணங்கள் வாசனை வீச
ஓவியத்தின் நிறைவில் அமிழ்ந்தது என் அறை.

அன்றிலிருந்து
கண்ணாடியைப் பார்க்க முடியாமல்
பறையடிப்பவனின் முகத்தில்
விழிக்கிறேன் தினமும்.

ஆழ்ந்த நிசிகளில்
அவன் கொட்டுகிற ஒலியில்
அதிர்கிறது என் செவிப்பறை.

விரல்கள் நடுங்குகின்றன

தூக்கத்தை கெடுக்கிறதென்று
தூக்கியெறியப் போனால்.

கவிதை தொகுப்பு

Site Meter