நிரம்பியிருக்கிறது நீர்
அழுத்தி மூடியதில்
சுவாசக் காற்று தீர்ந்து விடும் நிலையில்
நீச்சலில் நான்
எனை மூழ்கடித்திருக்கும்
நீரைக் கண்டு மகிழ முடியாத
தாகத்துள் எப்போதும்
மூச்சுத் திணறும் போதெல்லாம்
விதானம் வெடித்துத் திறக்க
ஏங்கும் மனம்
எனக்கான காற்றின் தேவை
உணராத நீ
உணர்த்தும் முயற்சியில்
திமிங்கலமாய் நான்
பெருமூச்சின் ஓசை
அலைகடல் கிழித்துக் கேட்கும்
தொலைந்து போன
தொட்டி வாழ்வு பற்றி நீ
மகிழ்ச்சி கொண்டதாய்
கவலையோடு பேச
சப்தமின்றி நீல வானம்
கிழிபட்டுக் கொண்டிருந்தது