முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

ஆக்ஷன் நாயகி வேடத்தை விரும்பும் சமீரா!

 (

Sameera Reddy wants to action role

)
Sameera Reddy wants to action role

ஆக்ஷன் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிறார் சமீரா ரெட்டி. இதுகுறித்து அவர் கூறியது: வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து அசல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். இதில் அஜித்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அடுத்து, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இப்படம் பற்றி அதிகம் பேசக்கூடாது என்பது கௌதமின் உத்தரவு. இந்தியைவிட தென்னிந்திய படங்களில் இப்போது அதிக கவனம் செலுத்துகிறேன். இங்குதான் எனக்கு விதவிதமான வேடங்கள் கிடைக்கின்றன. மலையாளத்தில் கேசினோவா படத்தில் மோகன்லாலுடன் நடிக்கிறேன். இது ஆக்ஷன் கதையை கொண்ட படம். ஹாலிவுட்டில் கதாநாயகிகளை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைத்து படம் எடுப்பார்கள். இந்திய சினிமாவில் அந்த மாதிரியான பாணி இன்னும் வரவில்லை. அத்தகு பாணியில் யாராவது படம் எடுத்தால் ஆக்ஷன் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்
Site Meter