முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

உறவுகளுக்காக தயாரிப்பாளரான நடிகைகள்

 (

Heroines turn as Producers

)
Heroines turn as Producers

அந்த காலத்தில் இருந்தே பல கதாநாயகிகள் சொந்த படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் குறைவானவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கிடைத்தது தோல்விதான். அப்படி இருந்தும் இப்போது சில நடிகைகள் சொந்த படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், தங்கள் சொந்தங்களை சினிமாவில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம்தான். தன் மகன் அம்ரேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் நானே என்னுள் இல்லை என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் ஜெயசித்ரா. விரைவில் சென்னையில் குடியேற உள்ள சிம்ரன், சொந்த படம் தயாரிக்கிறார். இதில் தனது கணவர் தீபக் பகாவை கதாநாயகனாக்க திட்டமிட்டுள்ளாராம். திருமதி தமிழ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ராஜகுமாரன். இதை தயாரிப்பது அவர் மனைவி தேவயானி. திருமணத்துக்குப் பின் மும்பையில் வசித்து வரும் நவ்யா நாயரும் மலையாள பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இவரும் தனது கணவருக்கு இதில் முக்கிய பொறுப்பை தர உள்ளதாக கூறப்படுகிறது. பாடகர் கிரிஷை கதாநாயகனாக்க சங்கீதா முயற்சித்து வந்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் சங்கீதாவும் தயாரிப்பாளராக முயற்சித்து வருகிறாராம். சம்பாதிச்சத குதிர மேல கட்டி அழகுகுகுகு...... பாக்குறாங்களாம்....

மேலும் செய்திகள்
Site Meter