முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

வெங்கடேஷின் 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி'

 (

A. Venkatesh's Enakku Vaitha Nanbargal Ippadi Movie

)
A. Venkatesh's Enakku Vaitha Nanbargal Ippadi Movie

கமர்ஷியல் இயக்குநர் என்ற பெயர் எடுத்த ஏ.வெங்கடேஷ், புதுமுகங்களை வைத்து இயக்கும் படம் 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி!'. வெங்கடேஷ் இயக்கும் படத்திற்கு இது தலைப்பா! என்று அனைவரும் ஆச்சரியப்படதான் செய்வார்கள். காரணம், இதுவரை இவர் இயக்கிய படங்களுக்கு 'ஏய்', 'மலை மலை', 'தம்', 'பகவதி' என தனது படத்தைப் போலவே தலைப்பையும் கமர்ஷியலாக வைத்தவர் முதன் முறையாக இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது தான். மவுண்ட் மூவிஸ் மேக்கர்ஸ் சார்பில், ஆர்.மது தயாரிக்கும் இப்படத்தில் தேஜஸ் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பிரபல மலையாள வில்லன் நடிகர் அலெக்ஸின் மகன் ஆவார். ஹீரோயினாக உத்ரா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, சிங்கம் புலி, மயில்சாமி, ஸ்ரீரஞ்சனி, கூத்துப்பட்டறை ஜார்ஜ், ஒ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். "கழட்டி விடவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல் மூன்று நண்பர்களோடு சேர்ந்து அவஸ்தைப்படுகிற ஒரு இளைஞனின் வாழ்க்கையில், காதலியாக ஒரு பெண் குறுக்கே வருகிறாள். பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி நிறைந்த கலகலப்பான படமாக சொல்லியிருக்கிறேன். இது தவிர படத்தின் முதல் பாதியில், ஹீரோவும், ஹீரோயினும் பேசும் வசனங்கள் நான்கே வரிகள் மட்டும்தான். அந்த வரிகள்தான் முழு படத்தையும் நகர்த்தி செல்லும்", என்று படத்தைப் பற்றி கூறிய ஏ.வெங்கடேஷ், இப்படத்தில் முதன் முறையாக காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துகுமார், யுகபாரதி, விவேகா ஆகியோர் எழுதுகிறார்கள். வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவு ஏ.வெங்கடேஷ், டி.எப்.டி மே மாதம் துவங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, பழனி ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. படத்தை வரும் ஆகஸ்ட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். கோலிவுட்டுக்கு வாய்த்தவர்கள்... எப்படியோ?!

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter