முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

கேன்ஸ்-ல் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'!

 (

Cannes honour for Muppozhudhum Un Karpanaigal!

)
Cannes honour for Muppozhudhum Un Karpanaigal!

பிரான்ஸில் நடக்கும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் திரையிடப்படுகிறது. வரும் மே 16-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில், கேன்ஸ் நகரில் நடைபெற இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்பு திரையிடல் பிரிவில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் திரையிடப்படுகிறது. சர்வதேச அளவில் புதிய திறமைகள் மற்றும் சினிமா போக்குகள் பற்றி தெரிவிக்கும் விதத்தில் 2004-ம் ஆண்டு, இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு படங்களை திரையிட்டு வருகிறார்கள். உலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளனர். வரும் மே மாதம் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த திரைப்பட விழாவில், தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் துவக்க நாளில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படக்குழுவினருக்கு சிறப்பு செய்யப்படுகிறது. மே 22-ம் தேதியன்று படம் திரையிடப்படுகிறது. இதற்காக 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'கோ' ஆகியப் படங்களை தயாரித்த எல்ரெட் குமார், முதன் முறையாக 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தை தயாரித்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்க ஓடாததெல்லாம் விருது விழாக்கள்-ல நல்லா ஓடுது.....

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter