முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Sandhya, Tamil Movie Actor, Actress Interview

என்னுடைய நீண்டநாள் ஆசை... - சந்தியா

Sandhya Tamil Celebrity MY DESIRE - SANDHYA
பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார் சந்தியா. காரணம், "மஞ்சள் வெயில்" படத்தில் "கோல்டு கோட்டட் பூ நீயா..." என்று இவர் பாடிய பாடலைக் கேட்டு "நீ நல்லா பாடுற"ன்னு நிறைய போன்கால்ஸ் வருதாம்... அதான் இந்த சந்தோஷம்...

மஞ்சள் வெயில் டைரக்டர் ராஜா என்னை எப்படியும் இந்தப் படத்தில் பாட வைக்கவேண்டும் என்று நினைத்தார். அவர் இது விஷயமாகக் கேட்டபோது, சும்மா ஜோக் அடிக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் சிரியஸாக கேட்கப்போய், இதோ இப்போது பாடி முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் பரத்வாஜ் பின்னணி வாத்தியங்களுக்கேற்ப நான் எப்படிப் பாடுவது என்று சொல்லிக் கொடுத்ததால் ரொம்ப சுலபமாகப் பாடிவிட்டேன். முறைப்படி நான் பாட்டுக் கற்றுக்கொண்டதால்தான் அது சாத்தியமானது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. பாடத்தான் நேரம் கிடைக்கவில்லை.

ஒரு பெரிய வீடு கட்டவேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை. சென்னையில் நாளுக்கு நாள் இடத்தின் விலையும், ஃபிளாட்டின் விலையும் சும்மா ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால், கேரளா, எர்ணாகுளத்தில் ஒரு மிகப்பெரிய இடத்தை வாங்கி, நான் ஆசைப்பட்டபடி அந்த வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். வீட்டைச் சுற்றி தோட்டம், ஊஞ்சல், உட்கார்ந்து காற்று வாங்க மேடை என்று ரொம்பவும் அனுபவித்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நாளில் அதற்கு கிரஹப்பிரவேசம் நடந்துவிடும்.

நட்பைப்பற்றி உயர்வாகச் சொல்லும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, அட, இப்படி கூட நட்பு உண்டா? என்று ஃபீல் பண்ணினேன். நான், பிரசன்னா சம்பந்தப்பட்ட பாடலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஷூட் பண்ணினோம். பாங்காக் பகல் பூராவும் ஏனோதானோ என்று இருக்கிறது. ராத்திரியானால் களைகட்டுகிறது. இரவு வாழ்க்கைதான் அங்குள்ள மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அங்குள்ள கோயிலில் புத்தர் சிலையிலிருந்து ஒளி தோன்றுவதாகப் போய்ப் பார்த்தோம். அங்கிருந்து சூரியனைப் பார்த்தால், சூரியனைச் சுற்றி ஒரு பெரிய வளையம் தெரிந்தது. அதைப்பார்த்து நாம் மனதிற்குள் எதை நினைக்கிறோமோ அது நடக்கும் என்றார்கள். நானும் ஒன்றை நினைத்துக்கொண்டேன். அது என்ன என்று டைரக்டர் ராஜா உட்பட எல்லோரும் கேட்டார்கள். சொல்லமாட்டேன். அது பரமரகசியம். இதுதவிர, ஊட்டியில் நான் பாலா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி. "ஆசை ஓவியம்..." என்று துவங்கும் பிரமாதமான ஒரு கான்சப்டைக் கொண்டது. அதாவது, பாலா என்னை ஓவியமாக வரைவதற்கு தேவைப்படும் வர்ணங்களை என் உடம்பிலிருந்து எடுப்பார். அதை பாடல் வரிகளாகப் பாடும்போது ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது.

என்னைப் பற்றி சமீபகாலமாக நிறைய கிசுகிசு வருகிறது. அதாவது, நான் பிருத்விராஜைக் காதலிக்கிறேன் என்று எழுதுகிறார்கள். அதுவும் எப்படி? எங்களுக்குள் பயங்கர லவ்வாம். இன்னொரு முறை எனக்கும் பிரசன்னாவுக்கும் காதல். இருவரும் எஸ்.எம்.எஸ்.சில் நிறைய செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறோம் என்று எழுதுகிறார்கள். நான் என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை. அம்மாதான் எனக்கு அவற்றைப் படித்துக் காண்பிப்பார். வாழ்க்கையில் இன்னும் சாதிக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதனால் கிசுகிசு பற்றி எனக்குக் கவலையில்லை.

மேலும் திரைக்குப்பின்
Site Meter