நான் யாருடனும் சுற்றவில்லை. யாருடனும் சேர்ந்து வாழவில்லை. தனியாகவே இருக்கிறேன் என்று நடிகை கேத்ரினா கைப் கூறியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகை கேத்ரினா கைப், சல்மான்கானுடன் நட்பு வைத்திருக்கிறார். அவருடன் சுற்றுகிறார். அவருடன் வாழ்ந்து வருகிறார் என்று மும்பை பத்திரிகைகள் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அரபு நாடுகளின் விமான நிறுவனம் ஒன்றின் சர்வதேச தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் கேத்ரினா மும்பையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பங்கேற்றார். பத்திரிகையாளர்கள் தொடுத்த சரமாரியான கேள்விகளுக்கு அவர் சளைக்காமல் பதில் சொன்னார். அப்போது, நான் தனி ஆள்தான். யாருடனும் சுற்றவில்லை. சேர்ந்து வாழவும் இல்லை. இதற்குமேல் இந்த விஷயத்துக்குள் புகுந்து விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றார் கேத்ரினா கைப். சொல்லலைனா சும்மா விடுவாங்களா.......!
அனில்கபூரை வைத்து அதிரடி, ஆக்ஷன் திரைப்படம் எடுக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். காதல், சென்டிமென்ட் என படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் அனில்கபூர், அஜய்தேவ்கானை வைத்து 'புல்லட் டிரைன்' எனும் இந்தி ஆக்ஷன் படத்தினை இயக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. முழுப்படப்பிடிப்பும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சமீரா ரெட்டி, போன் ராணி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த புது புல்லட் குறிபார்த்து செல்லுமா...?
திருவனந்தபுரத்தில் அரசு சார்பில் நடந்த ஓணம் கலை விழாவில் நடிகர் கமலஹாசனின் 50 ஆண்டு கால சினிமா சாதனையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. இதில் மலையாள நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இவ்விழாவில் முதல்- மந்திரி அச்சுதானந்தன் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசனுக்கு விருது வழங்கினார். அப்போது மலையாள நடிகர்கள் விழாவைப் புறக்கணித்ததால் அவர்களை கடுமையாக சாடினார். மலையாள நடிகர்கள் விளம்பர கலையை விரும்புகிறார்கள் என்றும் உண்மை கலையை மதிக்கத் தெரியதவர்கள் என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல்- மந்திரி அச்சுதானந்தன் பேச்சு தற்போது கமலஹாசன் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமலஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல்- மந்திரி தனது பேச்சை கடுமையாக்கி கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் கமலஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமலஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு செய்யப்பட்டது, என்று கூறியுள்ளனர். பாராட்டு விழா நடப்பதற்கு முன் அம்மா சார்பில் வெளியான அறிக்கையில், கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், விழாவில் மலையாள நடிகர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்தவொரு நடிகரும் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இப்போது பிரச்சினை பெரிதாகி வருவதால் அந்தர்பல்டி அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுக்கு பேர்தான் கூப்பிட்டு குனியவச்சு குத்துறது போல........!
தற்போது மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக கொடைக்கானலில் இருக்கிறார் த்ரிஷா. கொடைக்கானலில் இருந்தாலும் மனசெல்லாம் ஐதராபாத்திலேயே இருக்கிறது அவருக்கு. போதை மருந்து வழக்கில் சிக்கிய நைஜீரிய வாலிபரின் அட்ரஸ் புக்கில் த்ரிஷாவின் பெயரும் இருப்பதாக ஐதராபாத் எங்கும் ஒரே பேச்சு. பொதுவாகவே அங்குள்ள சினிமா பத்திரிகைகள் நடிகர்களை நடிகைகளை 'வாசித்தே' பழக்கப்பட்டவை. அங்கு அதிகம் விற்பனையாவதும் சினிமா பத்திரிகைகள்தான். இந்த பத்திரிகையாளர்களிடம் நெருக்கமான தொடர்பும் வைத்திருப்பார்கள் ஸ்டார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அத்தனை பத்திரிகைகளும் த்ரிஷாவையும், இதில் தொடர்பு கொண்ட பிற நடிகர் நடிகைகளை பற்றியும் கன்னா பின்னாவென்று கிசுகிசு எழுதி வருவதால் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் அத்தனை பேரும். இவர்களை காப்பாற்ற ஆந்திராவின் நடிகர் சங்கமும் முயற்சித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க நேற்று கொடைக்கானலில் பத்திரிகையாளர்களை சந்தித்து குமுறி தீர்த்துவிட்டார் த்ரிஷா. போதை மருந்து விவகாரத்தில் கைதானவர்களின் செல்போனில் என் நம்பர் இல்லை. போலீஸ் விசாரணையில் அது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. இதில் எனக்குத் தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். இந்தத் தகவலை பரப்பியவர்களுக்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். இது தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடமும் பேசியிருக்கிறேன். என்னை போலீசார் விசாரிக்கப் போவதாக சொல்வதில் உண்மை இல்லை. போதை மருந்து விவகாரத்தில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றார் பத்திரிகையாளர்களிடம். உடன் இருந்த அவரது அம்மா உமா, போதை மருந்து விவகாரத்தில் என் மகள் த்ரிஷாவின் பெயர் அனாவசியமாக சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்கள் வக்கீலை நான் கலந்தாலோசித்து இருக்கிறேன். த்ரிஷாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இந்த வதந்தியை பரப்பிய சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வோம் என்றார். இந்த குளிர்ல கூட மனசெல்லாம் போதை தீ பத்திக்கிடுச்சா......!
ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில் உலா வரத்துவங்கியுள்ளன. ஆனால் இது ஏதோ வில்லங்கமான விவகாரமில்லையாம். ஸ்ரேயா நடித்துள்ள ஒரு படத்தின் விளம்பரத்துக்காக அதன் இயக்குநரே செய்துள்ள வேலை இது என்று தெரியவந்துள்ளது. 'ஃபயர்', 'வாட்டர்' என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய தீபா மேத்தாவின் தயாரிப்பு- இயக்கத்தில் ஸ்ரேயா நடித்துள்ள படம் 'வாட்ஸ் குக்கிங் வித் ஸ்டெல்லா'. ஆனால் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்தில் லெஸ்பியன் போன்ற சர்ச்சைக்குரிய களமோ, கவர்ச்சிக் காட்சிகளோ இல்லாததால் படத்தை விற்க முடியாமல் தடுமாறுகிறாராம் தீபா. படத்தில் ஸ்ரேயாவுக்கும், கதாநாயகனுக்கும் உதட்டோடு உதடு பதிக்கும் ஒரு காட்சி உள்ளதாம். இதனை விளம்பரத்துக்காகப் பயன்படுத்த நினைத்தவர்கள், அதனை அப்படியே இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள். இப்போது, ஸ்ரேயாவின் படு சூடான முத்தக் காட்சிகள் என்ற பெயரில் அந்த க்ளிப்பிங்குகள் இணையத்தில் உலா வருகின்றன! நல்ல வியாபார யுக்திப்பா......