குடமிளகாய் பனீர் ஃப்ரை

கூடல் - 21 June, 2010
Capsicum Paneer Fry - Cooking Recipe in Tamil

பனீரை பயன்படுத்தி நிறைய ரெசிபி செய்தவங்களுக்கு இந்த குடமிளகாய் பனீர் ஃப்ரையை சுலபமாய் செய்து சுவையாய் சாப்பிடலாம்...

 

தேவையான பொருட்கள்:

பனீர் - 2 கப்
பெரிய குடமிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்
சோயாசாஸ் - சிறிதளவு
பூண்டு - 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சோயா சாஸ், பூண்டு - மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான குடமிளகாய் பனீர் ஃப்ரை தயார்.

 

 

 



சமையல்