கூடல் | Tamil Koodal https://koodal.com/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 28 Aug 2025 10:35:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 கூடல் | Tamil Koodal https://koodal.com/ 32 32 201197430 திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்! https://koodal.com/news/2025/08/28/there-is-no-substance-or-substance-in-the-slanders-against-the-dmk-regime-chief-minister-stalin/ Thu, 28 Aug 2025 10:35:32 +0000 https://koodal.com/?p=93341 தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக…

The post திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

அமித் ஷா முதல் பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பாஜக அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ.

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாக்கி இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இந்திய அரசின் 2023–24 ஆம் ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில், தமிழகத்தில் 15.24% பேர் உள்ளனர். இது நாட்டின் 6 தொழிற்சாலை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட ஒருவர் ஆகும்.

40,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு மீண்டும் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது, இது தேசிய அளவிலான பங்கில் 15.43% ஆகும். எதிர்க்கட்சிகளால் அரசியல் ரீதியாக தூண்டப்படும் பொய்க்கும், அவர்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த மறுப்பு. இது எங்கள் தரவுகள் அல்ல, மத்திய அரசின் தரவுகள் ஆகும்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. மற்ற மாநிலங்கள் முதலீட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த திராவிட மாடல் அரசு வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு தொடர்ந்து திறமையின் தலைநகராகவும், இந்தியாவின் உற்பத்தித் தலைநகராகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93341
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்.10-க்கு ஒத்திவைப்பு! https://koodal.com/news/2025/08/28/the-hearing-of-the-fraud-case-against-rajendra-balaji-has-been-postponed-to-october-10/ Thu, 28 Aug 2025 10:34:21 +0000 https://koodal.com/?p=93338 முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை…

The post ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்.10-க்கு ஒத்திவைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் அளித்த புகாரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 8 பேர் மீது கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

அதே நாளில் விஜய்நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணிகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அதன்பின் நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. இன்று வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இரு வழக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயகுமார் உத்தரவிட்டார்.

The post ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்.10-க்கு ஒத்திவைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93338
மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! https://koodal.com/news/2025/08/28/brain-amoeba-infection-is-not-a-contagious-disease-minister-m-subramanian/ Thu, 28 Aug 2025 10:31:43 +0000 https://koodal.com/?p=93335 “மூளை அமீபா பாதிப்பு, தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த…

The post மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“மூளை அமீபா பாதிப்பு, தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான நீர், மாசுபட்ட நீர் நிரம்பிய குளம், குட்டைகள், நீர்நிலைகளில் தேங்கிய சேறுகளில் தான் அமீபா உருவாவதாக சொல்லப்படுகிறது.

அத்தகைய குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியே அமீபா சென்று மூளையை பாதித்து, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கிறது. இது தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை.

அசுத்தமான குளம் குட்டைகளில் குளித்ததால்தான் நேக்லேரியா ஃபோவ்லேரி (Naegeleria Fowleri) என்ற அமீபா ஏற்பட்டு, அரிதான மூளைக் காய்ச்சல் நோயான, முதன்மை அமீபிக் மெனிங்- என்சஃபலிட்டிஸ் (Primary Amoebic Meningo-Encephalitis (PAM) நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மன குழப்பநிலை, கழுத்து வலி, மயக்கங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. கேரள மாநில சுகாதாரத்துறை நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்கி நோய் பாதிப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் குளம் மற்றும் குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் தெருநாய்க்கடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கருத்துகள் மாறுபட்டு உள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்து அதனை பிடித்த பகுதிகளில் விட்டுவிடுவது மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையாகும். முதல்வர் தெருநாய்க்கடி சம்பவங்கள் குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் தெருநாய்கள் பராமரிப்பதற்காக குடில்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வட்டார அரசு மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த அரசு அமைந்த பிறகு தான் தமிழ்நாட்டு மருத்துவத்துறை வரலாற்றில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்பற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்கடிக்கு ARV மருந்துகள், பாம்புக்கடிக்கு ASV மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93335
அமெரிக்க வரி விதிப்பால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி: அன்புமணி! https://koodal.com/news/2025/08/28/rs-5000-assistance-for-workers-who-lose-their-jobs-due-to-us-tax-measures-anbumani/ Thu, 28 Aug 2025 10:29:04 +0000 https://koodal.com/?p=93333 அமெரிக்காவின் வர்த்தகப் போர் காரணமாக ஏற்படும் தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5000 உதவி வழங்க வேண்டும் என…

The post அமெரிக்க வரி விதிப்பால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி: அன்புமணி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அமெரிக்காவின் வர்த்தகப் போர் காரணமாக ஏற்படும் தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5000 உதவி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அறிவித்துள்ள 50% வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் பாதகங்கள் அப்பட்டமாக தெரியவந்துள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு, பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு என அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதன் தாக்கத்தை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

உலகின் பல நாடுகளுடன் வர்த்தகப் போரை நடத்தி வரும் அமெரிக்கா, முதலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதித்தது. இந்த வரி விதிப்பு கடந்த 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த அளவுக்கான வரி விதிப்பே இந்திய ஏற்றுமதித் துறையை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று தொழில்துறையினர் அஞ்சிய நிலையில், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தண்டம் விதிக்கும் வகையில் மேலும் 25% இறக்குமதி வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படுவதால், இயல்பாக இந்தியப் பொருள்களின் விலை 50%க்கும் கூடுதலாக அதிகரிக்கும். அதே நேரத்தில் வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற பிற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடை, காலணிகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு 20%க்கும் குறைவான வரியே விதிக்கப்படுவதால் அவற்றின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். இந்தியப் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையங்களில் அமெரிக்க மிகவும் முக்கியமானது ஆகும். 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ.7.56 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 2 லட்சம் ஏற்றுமதியாளர்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவுக்கு மட்டும் தான் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அமெரிக்க ஏற்றுமதி அடியோடு நின்று விட்ட நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி செய்யப்படும் பொருள் சார்ந்த தொழில் துறைகளும் கடுமையாக பாதிக்கப்படும். பாதிப்புகள் அளவிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும்.

அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரின் காரணமாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிக்கு ஆடை வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ரூ.15,000 கோடிக்கு பின்னலாடைகள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இவை அனைத்தும் முற்றிலுமாக முடங்கி விட்டன. அதுமட்டுமின்றி, அமெரிக்க பயன்பாட்டிற்காக தனியாக தயாரிக்கப்பட்ட ஆடைகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால், அவற்றை வந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் பகுதியில் மட்டும் 2 லட்சத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தோல்பொருள்களில் 30% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியில் 60% பொருள்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகின்றன. அமெரிக்க நடவடிக்கையால் அங்கு 75,000 பேர் வேலை இழப்பர்.

அமெரிக்க நடவடிக்கையால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் இன்னொரு துறை கடல் உணவு ஏற்றுமதித் துறை ஆகும். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் சென்னாக்கூனி இறால் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா அதிக வரியை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. அதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் போர் காரணமாக நேரடியாக ஏற்படும் பாதிப்புகளை விட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும். அதிக எண்ணிக்கையில் வேலை இழப்புகள் ஏற்படுவதால் வறுமையும், அதன் காரணமாக குற்றச் செயல்கள் பெருகும் ஆபத்தும் உள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த பாதிப்புகளின் தாக்கத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் கூட, இந்தியத் தொழில்துறையினரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5000 உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அமெரிக்க வரி விதிப்பால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி: அன்புமணி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93333
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என தீர்ப்பு! https://koodal.com/news/2025/08/28/22-people-convicted-in-ambur-riot-case/ Thu, 28 Aug 2025 10:27:48 +0000 https://koodal.com/?p=93330 ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் கைது செய்யப்பட்டு, 12 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,…

The post ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என தீர்ப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் கைது செய்யப்பட்டு, 12 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 22 பேர் குற்றவாளிகள் என்றும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் அவரது கணவா் பழனி ஆட்கொணா்வு மனுதாக்கல் செய்தாா்.

இதுதொடா்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளா் மாா்டின் பிரேம்ராஜ், பவித்ராவுடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆம்பூரை சோ்ந்த ஷமீல் அஹமத் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையின்போது, ஷமீர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினா்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனா். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இது பற்றி அறிந்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் 500-க்கும் மேற்பட்டோா், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி ஆம்பூா் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். ஷமில் அகமதுவை தாக்கிய காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் மீது கொலை வழக்குப்பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் ஊா்வலமாக சென்று சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டம் கலவரமாக மாறியது, காவல் துறை வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்துகள், லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 54 காவலா்கள் பலத்த காயமடைந்தனா். அதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆம்பூா் கலவரத்தில் தொடா்புடைய 191 போ் மீது காவல் துறையினா் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்து வேலூா், கடலூா், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் தீா்ப்பு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆக. 26 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தீர்ப்பு 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

The post ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என தீர்ப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93330
திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்! https://koodal.com/news/2025/08/28/tiruppur-textile-centre-suffers-export-loss-of-rs-3000-crore-chief-minister-stalin/ Thu, 28 Aug 2025 10:25:03 +0000 https://koodal.com/?p=93328 இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட…

The post திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சமூகவலைதளப் பதிவொன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93328
உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு 2 கோடி வழங்க வேண்டும்: சீமான்! https://koodal.com/news/2025/08/28/2-crore-should-be-given-to-the-family-of-the-deceased-government-doctor-seeman/ Thu, 28 Aug 2025 10:23:55 +0000 https://koodal.com/?p=93326 அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- கட்டுப்பாடிழந்த அரசுப்…

The post உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு 2 கோடி வழங்க வேண்டும்: சீமான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் திமுக அரசின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தம்பி மணிக்குமார் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை பணியின் போது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று மோதிய விபத்தில் சிக்குண்டு உடல் நசுங்கி, அதே இடத்திலேயே உயிரிழந்தார் எனும் துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மருத்துவர் தம்பி மணிக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய மருத்துவத்துறையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். இதே விபத்தில் சிக்குண்டு படுகாயத்துடன் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் தம்பி பிரவீன் அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இது யார் குற்றம்? சாலையில் நடந்து சென்றது குற்றமா? தரமற்ற பழுதடைந்த அரசுப் பேருந்துகளை சாலையில் பயணிக்க விட்டு, மக்களின் உயிர்களைப் பறிக்கும் அரசின் குற்றமா? அரசின் அனைத்து துறைகளிலும் மலிந்துபோயுள்ள ஊழலால் அரசு நிர்வாகம் முற்று முழுதாகச் சீர்கெட்டு நிகழும் இதுபோன்ற விபத்துகளுக்குக் கூட தார்மீகப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய துயர்துடைப்பு உதவிகள் வழங்க மறுக்கும் திமுக அரசின் செயல் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் அருகே சுரங்கப் பாதையில், மழை வெள்ளம் தேங்கியது குறித்து எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் தடுப்பும் வைக்கப்படாத நிலையில், மகிழுந்தில் சென்ற அரசு பெண் மருத்துவர் தங்கை சத்யா அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேஆண்டு, டிசம்பர் மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றிவந்த மருத்துவர் தம்பி கார்த்திகேயன் அவர்களின் மகிழுந்தை பரம்புபட்டி அருகே திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி மிக மிஞ்சிய வேகத்தில் சென்ற அரசுப் பேருந்து ஒன்று வேகமாக உரசி ஒதுக்கித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற காரணத்தினால், விபத்து ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே மருத்துவர் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்த இரண்டு அரசு மருத்துவர்களுக்கும் உரிய துயர்துடைப்புத் தொகையை இன்றளவும் வழங்காது காலந்தாழ்த்தி வருகின்றது திமுக அரசு.

மதுபோதை மீதான வெறியில் சட்டத்திற்குப் புறம்பாகக் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு தொகையாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூபாய் 10 இலட்சத்தை அள்ளித் தந்து, அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்கும் இந்த ‘திராவிட மாடல்’ திமுக அரசு, மக்களின் உயிர்க் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்கள், அரசின் அலட்சியத்தால் நிகழும் விபத்துகளில் சிக்குண்டு உயிரிழந்தால் கூட அவர்களின் குடும்பத்திற்கு எவ்வித துயர்துடைப்பு உதவிகளையும் வழங்கமறுப்பது வெட்கக்கேடு.

அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், அரசு மருத்துவர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எப்போது?

மக்களுக்கு நோயற்ற வாழ்வளிக்க அரும்பணியாற்றும் அரசு மருத்துவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டியதும், பேரிழப்புகளின் போது அவர்களின் குடும்பத்திற்கு உற்ற துணையாக நிற்க வேண்டியதும் ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாடு அரசு உயிரிழந்த மூன்று அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வீதம் துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், படுகாயமடைந்த மருத்துவர் தம்பி பிரவீனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு 2 கோடி வழங்க வேண்டும்: சீமான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93326
இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் வெளியீடு! https://koodal.com/movie-stories/2025/08/28/the-song-enjaami-thandhaane-from-the-movie-idli-kadai-is-released/ Thu, 28 Aug 2025 10:22:48 +0000 https://koodal.com/?p=93323 நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும்…

The post இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை தனுஷ் எழுதி, பாடியுள்ளார். பாடல் வரிகளும் இசையும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

The post இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93323
மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன்! https://koodal.com/news/2025/08/28/train-accidents-are-caused-by-employees-who-do-not-know-the-state-language-su-venkatesan/ Thu, 28 Aug 2025 03:01:38 +0000 https://koodal.com/?p=93321 சமீபகாலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு முக்கியக் காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத் திட்டத்தில்…

The post மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சமீபகாலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு முக்கியக் காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத் திட்டத்தில் உள்ள நிறைகுறைகள் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது விநியோக திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், பொது விநியோகத் துறை அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கடந்த வாரம் தெற்கு ரயில்வேயில் ஊழியர்கள் பதவி உயர்வுக்கான ஒரு தேர்வு நடைபெற்றது. அதில் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விதி. ஆனால் தெற்கு ரயில்வே நடத்திய அந்த பதவி உயர்வுக்கான தேர்வின் வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது. தமிழ் மொழி இல்லை. தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

இந்த தேர்வுக்கு எதிராக ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள் தயாரித்து தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரியிருக்கிறேன். எனவே அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முடிவு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கின்றேன்.

தொடர்ந்து நேற்று தெற்கு ரயில்வேயில் அடுத்த சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. இந்தியில் பயிற்சி மற்றும் ஆளுமையை வளர்த்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மொழி பிரச்சினை என்பது அலுவலக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சமீப காலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கான முக்கிய காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93321
அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?: எல்.முருகன்! https://koodal.com/news/2025/08/28/whats-wrong-with-rss-leading-the-aiadmk-l-murugan/ Thu, 28 Aug 2025 03:00:47 +0000 https://koodal.com/?p=93318 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் வழிபாடு நடத்தி கட்சியினருக்கு பிரசாதங்கள் வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-…

The post அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?: எல்.முருகன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் வழிபாடு நடத்தி கட்சியினருக்கு பிரசாதங்கள் வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் கொரோனா காலகட்டத்திலும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் முன்கள பணியாளர்களாக நின்று பணி செய்தவர்கள். அப்படிப்பட்ட இயக்கத்தினரின் கருத்தை அ.தி.மு.க. கேட்பது மிகவும் வரவேற்கத்தக்கதுதான்.

ஆர்.எஸ்.எஸ். என்பது சுதந்திரமான அமைப்பு. நூறு ஆண்டுகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அமைப்பு. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அ.தி.மு.க.வை வழிநடத்துவதில் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பார்த்து த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

The post அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?: எல்.முருகன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93318