GST Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/gst/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Fri, 31 Dec 2021 19:57:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 GST Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/gst/ 32 32 201197430 முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு கட்டாயம் 18% ஜிஎஸ்டி – அண்ணா பல்கலைக்கழகம் https://koodal.com/news/tamilnadu/2021/12/31/anna-university-announced-18-percent-gst-for-consultation-for-mtech-courses/ Fri, 31 Dec 2021 16:28:27 +0000 https://koodal.com/?p=276 எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளில் கலந்தாய்விற்கும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 3 ந் தேதி முதல்…

The post முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு கட்டாயம் 18% ஜிஎஸ்டி – அண்ணா பல்கலைக்கழகம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளில் கலந்தாய்விற்கும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 3 ந் தேதி முதல் பிப்ரவரி 1 ந் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2021-22ம் கல்வியாண்டில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்பட்டது. மேலும் கேட் நுழைவுத்தேர்வு எழுதி தகுதிப்பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக் கழகம் பெற்றது.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், சான்றிதழ்கள் தொலைந்து போனாலும், மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கும்,விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கும், எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்குச் சான்று அளிக்கும் சான்றிதழ்கள் ஆகிய சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது.

The post முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு கட்டாயம் 18% ஜிஎஸ்டி – அண்ணா பல்கலைக்கழகம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
276
ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! https://koodal.com/news/india/2021/12/30/new-gst-rates-on-textile/ Thu, 30 Dec 2021 18:47:33 +0000 https://koodal.com/?p=178 ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவே இதனை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து மாநில நிதியமைச்சர் கூட்டத்தில் தமிழக…

The post ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவே இதனை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து மாநில நிதியமைச்சர் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்.

லக்னோவில் செப்டம்பர் 17ஆம் தேதி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரியை மறு சீரமைப்புச் செய்து 5% இருந்து 12% உயர்த்தப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு தொழிற்சங்கங்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தின.

இதன் மூலம் இப்புதிய ஜிஎஸ்டி வரி வருகிற 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதால், ஜிஎஸ்டியை 5% லிருந்து 12% ஆக உயர்த்துவது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வீரர்களை மறைமுகமாக நுகர்வோர் மீது சுமத்தத் தூண்டும். புதிய ஆடை மற்றும் காலணிகள் வாங்குவோர் ஜிஎஸ்டி வரி உயர்வின் காரணமாக அதிகப்படியான தொகையைச் செலுத்த வேண்டி நிலை உருவாக உள்ளது. இதனால் கைத்தறி சங்கங்கள், நெசவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என்று ஜவுளி துறையில் இருந்திடும் அனைவரையும் இந்த அறிவிப்பு கலக்கமடைய செய்திருக்கிறது.

The post ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
178