Tips Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/tips/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Mon, 10 Jan 2022 05:17:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Tips Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/tips/ 32 32 201197430 டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு! https://koodal.com/health/life-style/2022/01/10/vacation-planning-tips/ Mon, 10 Jan 2022 05:09:43 +0000 https://koodal.com/?p=417 கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு எப்படி தயாராவது? வழிகாட்டுகிறார்கள் மருத்துவர்கள் நாகராஜன், சிவராமன் இருவரும். இடத்தைத் தேர்ந்தெடுங்கள் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கான…

The post டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு எப்படி தயாராவது? வழிகாட்டுகிறார்கள் மருத்துவர்கள் நாகராஜன், சிவராமன் இருவரும்.

இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கான முதல் படி. பெரும்பாலும் கூட்டம் குவியும் இடங்களைத் தவிர்த்து, அதிகம் அடையாளம் காணப்படாத இடங்களைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக கொடைக்கானல் போவதற்குப் பதிலாக தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலைக்குப் போகலாம். சுற்றுலாத் துறையிலோ, வனத் துறையிலோ விசாரித்தால் இப்படிப்பட்ட அதிகம் அறியப்படாத அற்புதமான இடங்களை உங்களுக்குச் சொல்வார்கள். இத்தகைய இடங்கள் சுற்றுலாவை நீங்கள் முழுமையாக அனுபவிக்க உதவுவதுடன் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல், நெருக்கடி, நோய்த்தொற்று ஆகியவற்றில் இருந்தும் உங்களைக் காக்கும்.

சூரியனை எதிர்கொள்ளுங்கள்

அலுவலகத்துக்குள்ளும் வீட்டுக்குள்ளுமே இருந்து பழகிய உடல், திடீரென நாள் முழுவதும் வெயிலில் சுற்றும்போது தடுமாறும். வெப்பத்தை எதிர்கொள்ள பருத்தி ஆடையை அணியுங்கள். கண்ணுக்குத் தரமான கூலிங் கிளாஸை அணியுங்கள். தொப்பி அல்லது குடையை எடுத்துக்கொள்ளுங்கள். கைகளிலும் உதடுகளிலும் தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் வெந்தயம் விழுங்குவதும் உடல் சூட்டை வெகுவாகத் தணிக்கும்.

நிறைய தண்ணீர், கொஞ்சம் உணவு

பாதுகாப்பான குடிநீர் அவசியம். பயணங்களின்போது பரவும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகத்தான் பரவுகின்றன. குறிப்பாக, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு மூலக் காரணமே சுகாதாரமற்ற தண்ணீர்தான். அதனால், சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவசியம் தண்ணீர் குடியுங்கள் (வெப்பச் சூழலில் மட்டும் அல்ல் குளிர் சூழலிலும் டிஹைட்ரேஜன் ஏற்படலாம்). குளிர்பானங்களைத் தவிருங்கள். இளநீர் அருந்துங்கள். தர்பூசணியும் நல்லது.

வெளியூர்ப் பயணங்களின்போது வீட்டுச் சாப்பாடு கிடைப்பது அரிது. நல்ல உணவகங்கள் கிடைப்பதோ பெரும் சவால். என்ன செய்யலாம்? கூடுமானவரை பழங்களையும் உலர் பழங்களையும் சாப்பிடுங்கள். மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும்.

பழங்களில் மிளகாய்த் தூள் தூவி சாப்பிடுவதைத் தவிருங்கள். சமைக்காமல் மிளகாய்த்தூளை உட்கொள்வது வயிற்றுப்புண்ணில் இருந்து புற்றுநோய் வரை கொண்டுபோகும். ஒருவேளை உணவகங்களில் சாப்பிட வேண்டிய சூழல் உருவானால், அதிக காரம் அற்ற, எளிதில் செரிமானமாகும் உணவாகச் சாப்பிடுங்கள்.

மஞ்சள் மகிமை

அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது நல்லது. அதில் மருந்துகளோடு துளசி இலைகள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றுக்கும் இடம் கொடுங்கள். நீர்நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் ஒவ்வாமையைத் தவிர்க்க நான்கைந்து துளசி இலைகளைச் சாப்பிடலாம். வைரஸ் ஒவ்வாமை கிருமிகளை இவை அழித்துவிடும். மிளகுத் தூளையும், மஞ்சள் தூளையும் பாலில் கலந்து குடிப்பதன் மூலம் சின்னம்மை உள்ளிட்ட பல தொற்று நோய்களைத் தவிர்க்க முடியும். பூச்சிகள் கடிக்காமல் இருப்பதற்கும் பூச்சி கடித்தால் போடுவதற்கும் என கிரீம்கள் இருக்கின்றன. வனப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதாக இருந்தால் அவசியம் இவற்றையும் வாங்கிச் செல்லுங்கள்.

முதல் தகவல் முதல் உதவி

நீங்கள் செல்லும் ஊரில் உள்ள மருத்துவமனைகளைப் பற்றிய விவரத்தையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அவசரம் என்றால் எங்கே செல்வது என்று அல்லாட வேண்டிய இக்கட்டை இது தவிர்க்கும். உங்கள் பெயர், முகவரி, ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய தகவல்கள் அடங்கிய அடையாள அட்டையையும் வைத்திருங்கள். மருத்துவக் காப்பீடு செய்து இருந்தால் அதற்கான அடையாள அட்டையையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.

ஹேப்பி ஜர்னி… டேக் கேர்!

The post டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
417
வீட்டுக் குறிப்புகள் https://koodal.com/women/home-garden/2022/01/04/helpful-tips/ Tue, 04 Jan 2022 00:10:54 +0000 https://koodal.com/?p=333 ஸ்டீல் டப்பாக்களின் மூடி லூசாகி விட்டதா? ஸ்டீல் டப்பாவின் மீது ஏதாவது ஒரு தாளைப் பிரித்துப் போட்டு மூடியை அழுத்தி மூடுங்கள். மீதம் உள்ள தாளை நீக்கி விடுங்கள் இப்போது டப்பா இறுக்கமாகிவிடும். எறும்புகள், சிறுபூச்சிகள் புகாது. கையாள்வதும் எளிது. சிறிது…

The post வீட்டுக் குறிப்புகள் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
  • ஸ்டீல் டப்பாக்களின் மூடி லூசாகி விட்டதா? ஸ்டீல் டப்பாவின் மீது ஏதாவது ஒரு தாளைப் பிரித்துப் போட்டு மூடியை அழுத்தி மூடுங்கள். மீதம் உள்ள தாளை நீக்கி விடுங்கள் இப்போது டப்பா இறுக்கமாகிவிடும். எறும்புகள், சிறுபூச்சிகள் புகாது. கையாள்வதும் எளிது.
  • சிறிது செலவு செய்து ” வாட்டர் லெவல் கண்ட்ரோலர்’ வைத்துக் கொண்டால் தண்ணீர் மோட்டாரை ஆன், ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எப்போதும் தொட்டியில், குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். நமக்கும் நோ டென்ஷன்.
  • சாதாரண பூட்டு, கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டுத் துவாரம் போன்றவை திறந்து மூடாமல் மக்கர் செய்தால் கொஞ்சம் பெர்ஃப்பூமை துவாரங்களில் ஸ்பிரே செய்யுங்கள். இனி சுலபமாக திறக்கலாம்.
  • வாய் குறுகிய கண்ணாடி பாட்டில்கள், ஜாடிகள் இவற்றில் அழுக்கு சேர்ந்துவிட்டால் சிறிது அரிசியை அவற்றில் போட்டு அரைக் கோப்பை வினிகர் விட்டு நன்கு குலுக்கி குளிர்ந்த நீரில் கழுவ அழுக்கு விரைவில் நீங்கிவிடும்.
  • எப்பொழுது காஸ் அடுப்பை அணைப்பதானாலும் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். ஒவ்வொரு தடவையும் டியூபில் இருக்கும் காஸ் வீணாகாமல் இருக்கும். காஸýம் ஒரு வாரம் கூடுதலாக வரும்.
  • இஞ்சியை ஃப்ரீசரில் வைத்தால் ரொம்பப் புதியதாக இருக்கும். துருவிப் போடுவதும் சுலபமாக இருக்கும்.
  • சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பர் நார்களை கட்டாயம் மாதம் ஒருமுறை மாற்றிவிட்டு புதியதாக உபயோகிக்க வேண்டும்.
  • துணிகள் வைக்கும் பீரோவில் ஒன்றிரண்டு தாழம்பூ இதழ்களைப் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாமல் இருப்பதோடு நல்ல வாசனையாகவும் இருக்கும்.
  • பழைய நைலான் சாக்ஸýகளை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்களில் கீறல் விழாமலும், பளிச்சென்றும் இருக்கும்.
  • பெருங்காய பவுடர் வரும் டப்பாக்கள் காலியானதும் அதில் சோப்பு தூள் போட்டு ஸிங்க் அருகில் வைத்துக் கொண்டால், சாப்பிட்ட தட்டுகளை அவசரத்திற்கு தேய்க்க சுலபமாக இருக்கும்.
  • வீடு கட்டும்போது மீந்த டைல்ஸ்களை சமையலறையில் எண்ணெய், நெய், ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்க பயன்படுத்தலாம். சமையல் மேடையும் சுத்தமாக இருக்கும்.
  • பால், நெய் காய்ச்சிய பாத்திரங்கள், எண்ணெய்ப் பாத்திரங்கள் ஆகியவற்றில் கோதுமை மாவைப் போட்டு புரட்டி சப்பாத்தி தயாரித்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். அந்தப் பாத்திரங்களைக் கழுவுவதும் சுலபம்.

The post வீட்டுக் குறிப்புகள் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
333