Virudhunagar Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/virudhunagar/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sun, 02 Jan 2022 07:55:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Virudhunagar Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/virudhunagar/ 32 32 201197430 விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு https://koodal.com/news/tamilnadu/2022/01/02/cm-announces-relief-for-victims-killed-in-virudhunagar/ Sun, 02 Jan 2022 07:54:09 +0000 https://koodal.com/?p=290 விருதுநகர் களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரு குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் நேற்று ஜனவரி 1 சனிக்கிழமையன்று காலை ஏற்பட்ட…

The post விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
விருதுநகர் களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரு குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் நேற்று ஜனவரி 1 சனிக்கிழமையன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

விருதுநகரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 30 பேர் பணிபுரியும் பிரிவு உள்ளது. தொழிலாளர்கள் மருந்துக் கலவை செய்தபோது எதிர்பாராத விதமான உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்துக் கலவை அறை மற்றும் அருகில் இருந்த அறைகள் இடிந்து தரைமட்டமாயின.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 3 இலட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா 1 இலட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
290