உங்கள் நலம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Wed, 22 Jan 2025 15:07:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 உங்கள் நலம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/ 32 32 201197430 ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா? https://koodal.com/health/2025/01/22/do-you-know-why-men-should-eat-drumstick-seeds/ Wed, 22 Jan 2025 15:07:43 +0000 https://koodal.com/?p=75840 முன்னூறு நோய்களை தீர்க்கக்கூடியது முருங்கைக்கீரை என்பார்கள்.. அந்தவகையில் ஆண்களுக்கு உதவும் முருங்கைக்கீரை பொடியை எப்படி சாப்பிடலாம்? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்வது என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம். பெண்களுக்கு எந்த அளவுக்கு முருங்கைக்கீரை உதவுகிறதோ, அதுபோலவே ஆண்களுக்கும்…

The post ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முன்னூறு நோய்களை தீர்க்கக்கூடியது முருங்கைக்கீரை என்பார்கள்.. அந்தவகையில் ஆண்களுக்கு உதவும் முருங்கைக்கீரை பொடியை எப்படி சாப்பிடலாம்? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்வது என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

பெண்களுக்கு எந்த அளவுக்கு முருங்கைக்கீரை உதவுகிறதோ, அதுபோலவே ஆண்களுக்கும் அபரிமிதமான நன்மையை தரக்கூடியது இந்த முருங்கையிலைகள்.. ஆண்களின் புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை கட்டுப்படுத்த இந்த முருங்கைதான் உதவுகிறது.. புராஸ்டேட் என்பது ஆண்களுக்கான பாலியல் சுரப்பியாகும்.. ஆண்களுக்கு சுரக்க வேண்டிய டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் சுரப்பு குறையும்போது, இந்த புராஸ்டேட் சுரப்பி வீங்கிவிடும்.. அப்படி புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் இருந்தால், சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுவிடும்..

அதேபோல, ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தில் சிக்கல் இருந்தால், விறைப்பு தன்மையிலும் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.. அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்கடங்காத சர்க்கரை நோய் இருந்தாலும், விறைப்புதன்மையிலும் குறைபாடு வரலாம். இதுபோன்ற குறைகளை தீர்க்கவே முருங்கை விதைகள் உதவுகின்றன. ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, முருங்கை விதைகளை எப்படி பயன்படுத்துவது? முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதற்குள்ளிருக்கும் விதைகளை எடுத்து நிழலில் நன்றாக காயும் வரை உலர்த்த வேண்டும். பிறகு, இந்த விதையை மிக்ஸியில் தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை பசும்பாலில் தினமும் 21 நாட்கள் இரவு குடித்து வந்தால் பலன் கிடைக்கும். அல்லது முருங்கை விதைகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டு, தேவைப்படும்போது, நெய்யில் வதக்கி தூள் செய்து பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம்.

எனினும் மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும். முருங்கைக்கீரையையும் ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.. அல்லது சூப் போல சாப்பிடலாம்.. இந்த முருங்கை சூப் சாப்பிடுவதால், மலட்டுத்தன்மை மட்டுமல்லாமல், ரத்தசோகை, உடல் சூடு, மலச்சிக்கல், தலைமுடி உதிர்வு, அல்சர், வாய் புண் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.

சிலர் இந்த கீரையில் கஞ்சி போல செய்து சாப்பிடுவார்கள்.. அதாவது, பச்சரிசியை நொய்யாக உடைத்து, அதில் கடலை பருப்பு, வெந்தயம், பூண்டு பற்கள், ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து, நொய்யரசி வெந்ததுமே அதில் கொட்டி, உப்பு சேர்த்து கிளறவேண்டும்.. இந்த கஞ்சி ஆண்களுக்கு சோர்வை போற்றி, உடல் பலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது. இதனை பெண்களும், குழந்தைகளும் சாப்பிடலாம்.

The post ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
75840
மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க! https://koodal.com/health/2025/01/22/eat-these-fruits-often-to-prevent-heart-attacks/ Wed, 22 Jan 2025 15:05:52 +0000 https://koodal.com/?p=75837 சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவது தான். இவ்வாறு கெட்ட கொழுப்புக்கள் தேங்க நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற…

The post மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவது தான். இவ்வாறு கெட்ட கொழுப்புக்கள் தேங்க நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம். ஆனால் எப்படி உணவுகளால் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிகிறதோ, அதேப் போல் உணவுகளைக் கொண்டே இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை அகற்றலாம். அதுவும் ஒருசில பழங்களை தினமும் சிறிது உட்கொண்டு வந்தாலே, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக்குழாய்களை சுத்தமாக வைத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

இப்போது எந்த பழங்களை உட்கொண்டால் மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம் என்பதைக் காண்போம். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட ஒரு பழம் தான் கொய்யாப்பழம். இந்த பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளாக்குகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மாரடைப்பு வரக்கூடாதெனில் கொய்யாப்பழத்தை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள். பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்தக்குழாய்களில் ப்ளாக்குகள் உருவாவதைத் தடுக்கிறது. ஆகவே பெர்ரிப் பழங்களை முடிந்தால் அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸின்ட்டுகள் உள்ளன. இவை தமனிகளில் ப்ளாக்குகள் உருவாக்கத்தைத் தடுப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. எனவே அடிக்கடி ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிட முயற்சி செய்யுங்கள். மாதுளம் பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்க உதவுகின்றன. எனவே மாரடைப்பு ஏற்படக்கூடாதெனில் தினமும் ஒரு மாதுளையை சாப்பிட முயற்சித்து வாருங்கள்.

திராட்சையிலும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இதுவரை திராட்சையை உட்கொள்ளாமல் இருந்தால், இனிமேல் திராட்சையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இப்படி உட்கொண்டு வந்தால் மாரடைப்பில் அபாயத்தைத் தடுக்கலாம். அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளிப் பழத்தில் பாப்பைன் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுவதோடு, ப்ளாக்குகளின் உருவாக்கத்தையும் தடுக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதுவும் ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம். குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.

The post மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
75837
கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! https://koodal.com/health/2024/09/01/sweet-potato-prevent-from-cholesterol-to-cancer/ Sun, 01 Sep 2024 05:19:31 +0000 https://koodal.com/?p=64622 சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் தவிர்க்கவே கூடாது என்று உணவு நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் தெரியுமா? இந்த கிழங்கின் 2 தலையாய கடமை என்னென்ன தெரியுமா? சர்க்கரை வள்ளிக்கிழங்கில் A, D, C, வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இதில் வரப்பிரசாதமாக…

The post கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் தவிர்க்கவே கூடாது என்று உணவு நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் தெரியுமா? இந்த கிழங்கின் 2 தலையாய கடமை என்னென்ன தெரியுமா? சர்க்கரை வள்ளிக்கிழங்கில் A, D, C, வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இதில் வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்துள்ளது B6 வைட்டமின்தான். இந்த B6 வைட்டமின்கள்தான், செரிமான கோளாறுகளை சீர்செய்கிறது. B-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.

தித்திப்பு கிழங்காக இருந்தாலும், உடல் எடையை குறைப்பதில் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பேருதவி தருகிறது. காரணம், நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இதிலிருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை.. மேலும், கொழுப்பை எரிக்கும் செயல்முறையையும் வேகப்படுத்துகிறது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், இந்த கிழங்கில் குறைவாக உள்ளது.. இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.. எனவேதான், “சர்க்கரை கொல்லிக்கிழங்கு” என்றும் இதனை சொல்வார்கள். அதனால், சர்க்கரைநோயாளிகள், மருத்துவர்களின் அனுமதியோடு இந்த கிழங்கை சாப்பிடலாம்.

எனினும், 2 பிரதான நோக்கத்திற்காக இந்த கிழங்கை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள் நிபுணர்கள்.. அதாவது நம்முடைய உடலில் பழுதடைந்த செல்களை, இந்த கிழங்கு சரிசெய்கிறதாம்.. அத்துடன், புதிய செல்களை சேதாரம் அடைந்துவிடாமலும் பாதுகாக்கிறதாம். இந்த கிழங்கிலுள்ள வைட்டமின் A, மிகச்சிறந்த ஆகிஸிஜனேற்றியாக வினைபுரிவதால், ஆபத்தான புற்றுநோய்களின் செல்களும் அழிக்கப்படுகின்றன. உடலிலுள்ள உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனால் நரம்புகளின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இதிலிருக்கும் வைட்டமின் A சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. இந்த கிழங்கிலிருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் போன்றவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி, எலும்பு, பற்களுக்கு வலுவை தருகிறது.. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்பதே இந்த D வைட்டமின்தான்.. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை காக்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வெள்ளை, மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. புற ஊதா கதிர்களின் பாதிப்பிலிருந்து நம்முடைய சருமத்தை காக்கக்கூடிய பண்புகள் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு உண்டு.. அதனால்தான், குளிர்காலங்களில் இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட சொல்வார்கள். மன அழுத்தம் பிரச்சனையிலிருந்து மீட்டுவரும் சக்தி இந்த சர்க்கரைவள்ளி கிழங்குக்கு உண்டு..

அதேபோல, இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் B, அதிரோஸ்கிளிரோசிஸ் என சொல்லப்படும் பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது. பெருந்தமனி தடிப்பு என்பது, சிகரெட் பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மது அருந்துதல், அதிக எடை ஆகியவை காரணமாக ஏற்படுகிறது. இதற்கெல்லாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த மருந்தாகிறது. வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இதய பாதிப்புகள் வரலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் வரலாம். வைட்டமின் A அதிகமாக உள்ளதால், தலைமுடி உதிர்தல், வறண்ட சருமம், கல்லீரல் பாதிப்பு வரலாம். எனவே, 700 மைக்ரோ கிராம் பெண்களும், 900 மைக்ரோ கிராம் ஆண்களும், தினசரி அளவாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

The post கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
64622
சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை! https://koodal.com/health/2024/09/01/the-glory-of-turmeric-that-protects-from-kidney-to-liver/ Sun, 01 Sep 2024 05:18:09 +0000 https://koodal.com/?p=64619 ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அப்படியென்ன நன்மை தருகிறது மஞ்சள்? சீன மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பலவிதமான நோய்களை மஞ்சள் குணப்படுத்துகிறது என்றால் அதற்கு காரணம்,…

The post சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அப்படியென்ன நன்மை தருகிறது மஞ்சள்? சீன மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பலவிதமான நோய்களை மஞ்சள் குணப்படுத்துகிறது என்றால் அதற்கு காரணம், மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள்தான்.. முக்கியமாக இதயத்தை பாதுகாப்பதே, குர்குமின் என்ற பொருள்தானாம். இந்த குர்குமினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே, ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும், தமனிகள் குறுகுவதை தடுக்கவும் இந்த குர்குமின்தான் மூலக்காரணமாக உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, தொடர்ந்து மஞ்சளை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறதாம்.

எந்தவிதமான புற்றுநோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்துவிடும் இந்த மஞ்சள்.. புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக செயல்படுவது இந்த குர்குமின்.. புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு, கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்துவது பற்றி ஆய்வாளர்கள் இன்னமும் இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.. புற்றுநோய் மட்டுமல்லாமல், இந்த மஞ்சளை பற்றி 7 ஆயிரம் விஞ்ஞான ஆய்வுகள் இருக்கின்றனவாம். வெறுமனே ஒரு கிளாஸ் டம்ளர் வெந்நீரில், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அப்படியே வைத்துவிட வேண்டும். 5 நிமிடம் கழித்து, அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு, தேன், எலுமிச்சை சாறு, மிளகு பொடி சேர்த்து குடிக்க வேண்டும். இந்த ஒரு பானம் மட்டுமே உடலிலுள்ள பல கோளாறுகளை தீர்க்கிறதாம். அல்லது மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு இந்த மூன்றையும் சேர்த்து டீ தயாரித்து குடித்தாலே போதும்.. நம்முடைய ஆரோக்கியம் தழைக்கும் என்கிறார்கள்..

புற்று நோய், இருதய நோய் தாக்குதல், மனச்சோர்வு, மறதி, மனநிலை சீராய் இருத்தல், மன அழுத்தம், மூட்டுவலி, டைப் 2 நீரிழிவு போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவருகிறது இந்த மஞ்சள். மஞ்சளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், நம்முடைய உடல் எடையை குறைக்க பேருதவி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பித்தத்தையும், உப்புசத்தையும் மஞ்சள் குறைக்கிறது.. காயங்களையும் வலிகளையும் போக்கக்கூடியது மஞ்சள்.. குறிப்பாக, கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் சிகிச்சையின் ஒரு பகுதியாகவே இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரலுக்கும், சிறுநீரகங்களுக்கும் பாதுகாப்பு கவசமாய் உள்ளது.. உடலுள்ள நச்சுக்களை வெளியேறி, கொழுப்பையும் குறைக்கின்றது. முதுமையை தள்ளி நிறுத்தும் சக்தி கொண்டது மஞ்சள். அதிலும் பச்சை மஞ்சளில் குர்குமின் நிறையவே உள்ளது, பித்த உற்பத்தியை தூண்டி, ஜீரணத்துக்கும் உதவுகிறது.. இத்தனை நன்மைகள் இருந்தாலும், மஞ்சளை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. காரணம், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள், மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.. அனீமியா பாதிப்பில் உள்ளவர்களுக்கு உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்.. மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, இரும்புச்சத்து உலரதுவங்கிவிடும்.. இதன் காரணமாகவும், உடலில் சில பிரச்சனைகள் வரலாம். அதேபோல, ஆபரேஷன் செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.. ஏனென்றால், மஞ்சள் சிகிச்சையின்போது ரத்த உறைதலை தாமதப்படுத்தலாம். அதேபோல, ரத்த உறைதல் அல்லது ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கலாம் என்பதால், குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், டாக்டரின் ஆலோசனை பெறாமல், மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடக்கூடாது.

The post சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
64619
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்! https://koodal.com/health/2024/09/01/benefits-of-taking-oil-bath/ Sun, 01 Sep 2024 05:16:07 +0000 https://koodal.com/?p=64616 எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றுவரை நம்மிடம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. நம்முடைய உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும்.. இந்த தோலை முறையாக பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.. சித்தமருத்துவத்தில், தலைக்கு எண்ணெய்…

The post தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றுவரை நம்மிடம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. நம்முடைய உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும்.. இந்த தோலை முறையாக பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.. சித்தமருத்துவத்தில், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது முறையாக சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும்போது, சருமத்திலுள்ள அழுக்குகள் வெளியேறும்.. சருமத்துவாரங்களில் அழுக்குகள் இருந்தாலும், அதை போக்கும் தன்மை எண்ணெய் குளியலுக்கு உண்டு.. தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளித்து வருபவர்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை.

எண்ணெய் தேய்த்து குளித்தால், உடலிலுள்ள உஷ்ணம் தணியும்.. நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.. தலைமுடி வலுவாகும்.. உடல் வலி அதிகமாக இருந்தாலும், அதனை எண்ணெய் குளியல் போக்கிவிடும்.. மூட்டு வலி, முழங்கால் வலி இருப்பவர்களுக்கும், எண்ணெய் குளியல் கை கொடுத்து உதவும். வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளிலுந்தும் தீர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் தோலில் பளபளப்பும் கிடைக்கிறது.. அதிலும் வறண்ட தோல் உள்ளவர்கள், கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.. உடல் சூடு உள்ளவர்களும் எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் உடல் குளிர்ச்சியாகும். அதுவும், காலையில் எண்ணெய் தேய்ப்பதே சிறந்தது. காரணம், சூரியனிலிருந்து வரும் வைட்டமின் D சத்துக்கள் நமக்கு மிகவும் நல்லது..

ஆன்மீக ரீதியாக பார்த்தால், எந்தெந்த கிழமைகளில் குளிக்க வேண்டும் என்று வகைப்படுத்தி, அதற்கான நேரமும் குறிக்கப்பட்டுள்ளது.. அதாவது, ஆண்கள் புதன், சனி கிழமைகளில் குளிக்க வேண்டுமாம்.. காரணம், சனி பகவான் அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. அதனால், எண்ணெய் குளியல் மனிதர்களுக்கு அவசியம் என்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.. அத்துடன், செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள் என்பதால், இந்த நாட்களில் கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதன்படி எண்ணெய் குளியல் என்றாலே, காலை 8 மணிக்கு முன்பு, அல்லது மாலை 5 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதன், சனிக்கிழமையில் குளிப்பதையே வழக்கப்படுத்தி கொள்ள வேண்டுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும் என்பார்கள்.

குடும்ப உறவுகளுக்கும், எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும்கூட நிறைய தொடர்பு இருக்கிறதாம்.. தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபடக்கூடாது.. அதேபோல, குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. பெண்கள், தலையில் எண்ணெய் வைத்துவிட்டால் உடனே தலைமுடியை முடிந்து கொள்ள வேண்டும். தலைவிரி கோலமாக வீட்டில் நடமாட கூடாது.. அதேபோல பெண்கள் எண்ணெய் வைத்து தலைவிரி கோலத்தில் இருந்தால், வீட்டை விட்டு யாரும் வெளியே பயணிக்க கூடாது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து தலைமுதல் கால் வரை ஊறவைத்து குளிக்கலாம்.. எண்ணெய் வைத்து குளிக்கும்போது, நம்மை பிடித்த தோஷங்களும் விலகும் என்பார்கள்.. அதேபோல, எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டால் அன்றைய தினம் வெளியில் அவ்வளவாக அலையக்கூடாதாம்.. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், இன்னும் சூடு சேர்ந்து உடல்நல தொந்தரவை தந்துவிடுமாம்.

The post தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
64616
தினமும் மீன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்! https://koodal.com/health/2024/05/28/eating-fish-every-day-can-do-wonders/ Tue, 28 May 2024 10:58:22 +0000 https://koodal.com/?p=56701 அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளை சாப்பிடும்படி, நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா? மீனை தினமும் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? மற்ற அசைவு உணவுகளில் இல்லாத அளவுக்கு, கடல் மீன்களில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளதாம்.. ஒவ்வொரு வகையான…

The post தினமும் மீன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளை சாப்பிடும்படி, நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா? மீனை தினமும் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? மற்ற அசைவு உணவுகளில் இல்லாத அளவுக்கு, கடல் மீன்களில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளதாம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன..

மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் குறைகின்றன.. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள்தான், இருதயம், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். அதுமட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.. தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறதாம்.. வைட்டமின் D சத்துக்களும் நிறைவாக கிடைக்கிறது. எலும்புகளும், பற்களும் வலுவாக வைத்து கொள்ள முடியும்.. கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்புக்கள் உடலில் சேர்வதையும் இந்த மீன்கள் தடுக்கின்றன.

மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, சர்க்கரை நோய், முடக்குவாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.. உணவில் மீன்களை அதிகமாக சேர்த்து வந்தால், முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கத்தையும், அதன் வலியையும் வெகுவாக குறைக்கலாம்.. சருமத்துக்கும் கசவமாக திகழ்கிறது. தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால், சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை தேர்ந்தெடுக்கலாம்.. பொதுவாக, 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. எனவே, எடை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகமுள்ள சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி எனும் அயிலை, முரல் மீன், சங்கரா மீன், மத்தி, சாளை, நெத்திலி, சூரை மீன்களை தேர்ந்தெடுக்கலாம். முள் அதிகமாக இருப்பதால் இதை நிறைய பேர் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது இந்த மீன்கள்தான். மொத்தத்தில், மீன்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒரே ஒரு மூலமாக இருப்பதால்தான், மனித ஆயுளை கூட்டுகிறது.

The post தினமும் மீன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56701
முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? https://koodal.com/health/2024/05/28/the-hearts-companion-cashews/ Tue, 28 May 2024 10:56:57 +0000 https://koodal.com/?p=56698 முந்திரிக்கொட்டைகள் அளவுக்கு முந்திரிப்பழங்கள் நன்மை தருகிறதா? முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? முந்திரிப்பருப்புகளை பொறுத்தவரை, புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும்…

The post முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முந்திரிக்கொட்டைகள் அளவுக்கு முந்திரிப்பழங்கள் நன்மை தருகிறதா? முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? முந்திரிப்பருப்புகளை பொறுத்தவரை, புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும் அடங்கியிருப்பதால்தான், இதனை “இதயத்தின் தோழன்” என்கிறார்கள்.

முந்திரி பருப்பை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.. குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்.. இதனால், ரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறதாம்.. பச்சை முந்திரியைவிட, ஊறவைத்த முந்திரி சாப்பிட்டால், ஜீரணமாகும். ஆனால், முந்திரி பழங்களை சாப்பிடலாமா? முந்திரி பருப்புடன் ஒப்பிடும்போது, இந்த பழத்தில், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் நிறைய அடங்கியிருக்கின்றன..

வழக்கமாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் என்றால், ஆரஞ்சு, எலுமிச்சையை சொல்வோம்.. ஆனால், இவைகளைவிட, 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் வைட்டமின் சி நிரம்பியிருக்கிறாம். இந்த பழங்களிலுள்ள ப்ரோஆந்தோசயனின்கள் என்ற சேர்மமானது, பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்து, உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் தடுக்கிறது. இதனால், நோயெதிர்ப்பு மண்டலமும் வலுப்படுகிறது.. அனீமியா பிரச்சனை இருப்பவர்கள், இரும்புச்சத்து நிறைந்த இந்த முந்திரி பழங்களை சாப்பிடலாம்.. இதனால், ரத்த சோகை வெகுவாக குறையும். ஆனால், இந்த பழத்தை மரத்திலிருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டுமாம்.. இல்லாவிட்டால் அழுகிவிடும்.

பெரும்பாலும் இந்த பழத்தை அப்படியே சாப்பிட முடியாது.. வேக வைத்து சாப்பிடலாம் அல்லது உப்பு நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாது. முந்திரிப்பழத்தை வைத்து நிறைய சமையல் செய்வார்கள்.. முந்திரிப்பழத்தில் சட்னி செய்வார்கள்.. ஜாம் செய்வார்கள்.. ஆஸ்துமா பிரச்சனைக்கும் இந்த பழம் நிவாரணத்தை தருகிறது.. ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்சனைகளை சரிசெய்து நகங்களை ஆரோக்கியமானாக வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிட்டவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேண விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம். கல்லீரல் உட்பட உடலின் பாகங்களிலுள்ள நச்சுக்களை நீக்கி, அவைகளை சுத்தப்படுத்துவதில் முந்திரி பழங்களுக்கு பெரும் பங்கு உண்டு.. உடலிலுள்ள கொழுப்பை எரிக்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதற்கு பிறகு, உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறதாம்..

ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழம் பேருதவி செய்கிறது.. இதன்மூலம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்களும் தடுக்கப்படுகின்றன. இந்த முந்திரி பழத்திலிருந்து சாறு எடுத்து, தலைமுடிக்கு பயன்படுத்தினால், பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் நீங்கும்.. வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இரண்டுமே இந்த முந்திரி பழத்தில் உள்ளதால், சருமத்துக்கும், தலைமுடிக்கும் மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது.. அதனால்தான், முகத்துக்கு பயன்படத்தப்படும் லோஷன்கள், கிரீம்களிலும், தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் ஷாம்புகளிலும் இந்த சாறு மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.

The post முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56698
வறட்டு இருமலைப்போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்! https://koodal.com/health/2024/05/28/home-remedies-for-dry-cough/ Tue, 28 May 2024 10:52:10 +0000 https://koodal.com/?p=56695 குளிர் காலத்தில் இருந்து கோடைக் காலத்திற்கு மாறும்போது நம்மில் பலருக்கு வறட்டு இருமல் உருவாகிறது. இந்த வறட்டு இருமல் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது. பூவில் இருக்கும் மகரந்தம் நாசியில் புகும்போது வறட்டு இருமல் ஏற்படலாம். தூசியால் உண்டாகும் ஒவ்வாமையால் சிலருக்கு வறட்டு…

The post வறட்டு இருமலைப்போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குளிர் காலத்தில் இருந்து கோடைக் காலத்திற்கு மாறும்போது நம்மில் பலருக்கு வறட்டு இருமல் உருவாகிறது. இந்த வறட்டு இருமல் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது.

பூவில் இருக்கும் மகரந்தம் நாசியில் புகும்போது வறட்டு இருமல் ஏற்படலாம். தூசியால் உண்டாகும் ஒவ்வாமையால் சிலருக்கு வறட்டு இருமல் உண்டாகலாம். புகைப்பிடிக்கும்போது வறட்டு இருமல் வரலாம். சளி மற்றும் காய்ச்சலின்போது ஜலதோஷம் உண்டாகலாம். காசநோயின்போது வறட்டு இருமல் உண்டாகலாம்.

வறட்டு இருமலைப்போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்:

வறட்டு இருமலைப் போக்க வீட்டில் செய்யவேண்டிய வீட்டு வைத்தியங்கள் குறித்துப் பார்க்கலாம்.

– எலுமிச்சை சாறு கலந்த தேநீரைக் குடிப்பதால் வறட்டு இருமல் மட்டுப்படும். தொண்டை வறட்சி நீங்கும்.

– வெந்தயம், சியா விதை, சீரகம் போன்ற பொருட்கள் மூன்றையும் ஒன்று சேர்த்து, பொடியாக்கி சூடான நீரில் கலந்து குடிக்க வறட்டு இருமல் தொல்லை குறையும்.

– வறட்டு இருமலை மட்டுப்படுத்த வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய்க் கொப்பளிக்கவும்.

– தேன் கலந்து எலுமிச்சை தேநீரைக் குடிக்க, வறட்டு இருமல் குறையும்.

– சூடான நீரில் இஞ்சித்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து, அதில் தேன் கலந்துகுடித்து வர வறட்டு இருமல் நீங்கும்.

– அதிமதுர வேரிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர், தொண்டையில் உண்டாகும் இருமலைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

– ஓமம், ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்தது. வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணம் தரும் பொருளாக ஓமம் இருக்கிறது. ஓம இலைகளுடன் தேன் சேர்த்து எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்க வறட்டு இருமல் குறையும்.

– புதினா இலைகளை, நீரில் வேக வைத்து அதில் இருந்து வரும் புகையை சுவாசித்தால் வறட்டு இருமலுக்கு நல்ல பலன் தரும்.

– புதினா இலைகளைப் பயன்படுத்தி சூடான நீரை உட்கொண்டால், வறட்டு இருமல் குறையும்.

– கிராம்பு, ஏலக்காய், துருவிய இஞ்சி, இலவங்கப்பட்டை, அரை கப் நீர், தேயிலை சிறிதளவு, சர்க்கரை , இரண்டு கப் பால் சேர்த்து மசாலா தேநீர் தயார் செய்துகுடித்தால், வறட்டு இருமல் குணம் அடையும்.

The post வறட்டு இருமலைப்போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56695
உடல்நலக் குறிப்புகள் https://koodal.com/health/2022/08/03/health-tips/ Wed, 03 Aug 2022 12:31:05 +0000 https://koodal.com/?p=10165 * கையில் மருதாணி நிலைத்து நிற்க.. மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும். * முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல்…

The post உடல்நலக் குறிப்புகள் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
* கையில் மருதாணி நிலைத்து நிற்க..

மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.

* முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும்.

* உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.

* உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும்.

மருத்துவக் குறிப்புகள்

* எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.

* சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

* தினசரி உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தினமும் பச்சை வெங்காயத்தை கொடுத்து வந்தால் ஜலதோஷம், காய்ச்சல் வராது.

The post உடல்நலக் குறிப்புகள் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
10165
அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? https://koodal.com/health/2022/05/25/are-you-ready-to-beat-the-heat/ Wed, 25 May 2022 10:34:34 +0000 https://koodal.com/?p=4268 அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்: ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி,…

The post அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:

ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக் கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் “காஸ்ட்லி ஸ்கிரப்பர்”களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.

வைட்டமின் “டி” குறைபாட்டை சரிகட்டுங்களேன்!

காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி, மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு வாருங்கள்.

வைட்டமின் “டி” சத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். சூரியன் நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் “டி” சத்து கிடைக்கும்; உணவு வகைகள் மூலம் வைட்டமின் “டி” சத்து கிடைப்பது மிக மிகக் கடினம். காசு செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்!

கண்கள் சோர்வடையாமல் இருக்க:

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.

கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.

ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல் இருக்கும். இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும்.

கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில் தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.

The post அழகு குறிப்புகள்:வெயிலுக்கு தயாராயிட்டீங்களா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
4268