சினிமா கூடல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/movie-stories/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 28 Aug 2025 10:22:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 சினிமா கூடல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/movie-stories/ 32 32 201197430 இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் வெளியீடு! https://koodal.com/movie-stories/2025/08/28/the-song-enjaami-thandhaane-from-the-movie-idli-kadai-is-released/ Thu, 28 Aug 2025 10:22:48 +0000 https://koodal.com/?p=93323 நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும்…

The post இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை தனுஷ் எழுதி, பாடியுள்ளார். பாடல் வரிகளும் இசையும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

The post இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடல் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93323
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை! https://koodal.com/movies/2025/08/28/interim-stay-on-arrest-of-actress-lakshmi-menon/ Thu, 28 Aug 2025 02:55:57 +0000 https://koodal.com/?p=93308 ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது…

The post நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது இரு கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கும்பல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளது. அவர்களை பின்தொடர்ந்த மற்றொரு கும்பல் அந்த காரை மறித்து, அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

நடிகை லட்சுமி மேனன் தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93308
காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை நிவேதா பெத்துராஜ்! https://koodal.com/movies/2025/08/28/actress-nivetha-pethuraj-introduced-her-lover/ Thu, 28 Aug 2025 02:54:22 +0000 https://koodal.com/?p=93305 தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘’டிக் டிக் டிக்’, ‘திமுரு…

The post காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை நிவேதா பெத்துராஜ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘’டிக் டிக் டிக்’, ‘திமுரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு தவிர்த்து விளையாட்டிலும் நிவேதா பெத்துராஜ் ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதே போல ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா. மேலும் அதில் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிவேதாவின் காதலரின் பெயர் ரஜித் இப்ராம். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இருவரும் அது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

The post காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை நிவேதா பெத்துராஜ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93305
மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி! https://koodal.com/movies/2025/08/27/ravi-mohan-is-someone-who-never-thinks-of-harming-anyone-even-mentally-karthi/ Wed, 27 Aug 2025 05:12:48 +0000 https://koodal.com/?p=93280 மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன்…

The post மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்துவரும் ரவி மோகன், சமீபத்தில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் தொடக்க பூஜை நேற்று தொடங்கியது. இதில் ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக்கப்படும் முதல் படத்தில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தானே நடிக்கப்போவதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார். இரண்டாவது படமாக யோகி பாபுவை வைத்து இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக ரவி தெரிவித்துள்ளார்.

‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் தொடக்க நிகழ்வில் நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஜெனிலியா, சிவராஜ் குமார் போன்ற திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ திறப்பு விழாவில் பங்குபெற்ற ரவி மோகனின் நண்பரும், சக நடிகருமான கார்த்தி, ரவிமோகனிடம் இருக்கும் பல திறமைகள் குறித்து புகழ்ந்து பேசினார். ரவி மோகன் குறித்து பேசியிருக்கும் கார்த்தி, “ரவி கிட்ட எனக்கு பிடிச்ச விசயம் மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு ஆள், அவனால நினைக்கவும் முடியாது அப்படியான ஒருநபர் அவன். இன்னைக்கு அவன் வந்திருக்க தூரம், அவன்கிட்ட பல திறமைகள் இருக்கு, அதபத்தி யாரும் பெருசா சொல்லிருக்க மாட்டாங்க. என்கிட்ட ஒரு படத்திற்கான கதையை விளக்கினார், சிரிச்சிட்டே இருக்கவன்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கானு ஆச்சரியப்பட்டேன். அவன் படத்தை டைரக்ட் பண்ணி நாங்க ரெண்டு பேரும் நடிக்கிறதா இருந்தது.

இன்னும் அவன்கிட்ட இருக்க திறமையை அவர் அண்ணன் கூட படத்துல முழுசா காட்டல. யோகி பாபுவ வச்சி ஒரு டைரக்டரா ரவிமோகன் திறமையை நாம பார்ப்போம்னு நினைக்கிறன். சினிமா அவனுக்கு நல்லா தெரியும், நிறைய உலக சினிமாக்கள கவனிச்சிட்டே இருக்க ஒரு ஆளு, எடிட்டிங்கும் அவனுக்கு நல்லா தெரியும். ஆனா அது வெளில தெரியாது, படிக்கவே இல்லனு சொல்லிட்டு நல்ல மார்க் வாங்குவாங்கல அப்படியான ஒரு நபர் ரவி மோகன்” என புகழ்ந்து பேசினார்.

The post மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93280
எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்! https://koodal.com/movies/2025/08/27/kenisha-is-a-gift-from-god-to-me-ravi-mohan/ Wed, 27 Aug 2025 05:10:34 +0000 https://koodal.com/?p=93277 வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா,…

The post எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவி மோகன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, தனது தோழி கெனிஷா குறித்து நெகிழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த விழா நடைபெறுவதற்கு முழு காரணம் கெனிஷா மட்டுமே. இதை முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே அவர் செய்தார். எனக்கு யாரும் அப்படி செய்ததே கிடையாது. இவ்வளவு பேர் வருவார்கள் என்றும் எனக்கு தெரியாது.

ரவிமோகன் ஸ்டூடியாஸ் நிறுவனத்தின் பார்ட்னராகவும் அவர் இருக்கிறார். ஒரு மனிதன் வாழ்க்கையில் ஓரிடத்தில் தடுமாறி நிற்கும்போது கடவுள் அப்போது ஒரு விஷயத்தை அவனுக்கு அனுப்புவார். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வாகனமாக இருக்கலாம். அப்படி எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா. நான் யார் என்று என்னை உணரவைத்தது அவர்தான். இதுபோன்ற ஒருவர் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இவ்வாறு ரவி மோகன் கூறினார்.

The post எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93277
‘தண்டகாரண்யம்’ டீசர் வெளியானது! https://koodal.com/movies/2025/08/26/the-teaser-of-thandakaaranyam-has-been-released/ Tue, 26 Aug 2025 02:51:55 +0000 https://koodal.com/?p=93259 தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. அதியன் ஆதிரையின் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்தையும் தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இப்படத்தில் தினேஷ், கலையரசன்…

The post ‘தண்டகாரண்யம்’ டீசர் வெளியானது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. அதியன் ஆதிரையின் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்தையும் தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இப்படத்தில் தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

நாயகியின் வாய்ஸ் ஓவரிலேயே டீசர் முழுவதும் சொல்லப்படுகிறது. வின்சு சாம், கலையரசன் இடையிலான காதல் காட்சிகள் தான் படத்தின் அடிநாதம் என்பதை டீசரில் அறிய முடிகிறது. அதைத் தாண்டி மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராணுவப் படைகளின் தேடுதல் வேட்டை போன்றவையும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. டீசர் முழுக்க வரும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை மனதை ஈர்க்கிறது. ‘அட்டக்கத்தி’ தினேஷ் டீசரின் இறுதியில் தோன்றினாலும், படத்தின் அவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

The post ‘தண்டகாரண்யம்’ டீசர் வெளியானது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93259
நல்லது செய்வது அரசியல் என்றால் நான் அரசியல்வாதிதான்: விஷால்! https://koodal.com/movies/2025/08/26/if-doing-good-is-politics-then-i-am-a-politician-vishal/ Tue, 26 Aug 2025 02:48:55 +0000 https://koodal.com/?p=93256 நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார். உதகை அருகே விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர்…

The post நல்லது செய்வது அரசியல் என்றால் நான் அரசியல்வாதிதான்: விஷால்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார்.

உதகை அருகே விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர் படபிடிப்பு தளத்திற்கு வந்த அனைவருக்கும் தனது கையால் மதிய உணவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது:-

கேப்டன் விஜயகாந்த் மறக்க முடியாத மனிதர். நடிகர், அரசியல்வாதி அவர் எந்த துறைக்கு சென்றாலும் முன்னுதாரணமாக இருந்தவர். நாம் இப்போது சினிமா சூட்டிங் தளத்தில் சாப்பிட முக்கிய காரணம் விஜயகாந்த் தான். அவர் சாப்பிடுவதையே அனைவரும் சப்பிட வேண்டும் என்பார். பசியோடு வந்தவர்களை பசியாற வைத்து தான் அனுப்புவார். அது தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது.

விஜயகாந்த் வழியில் உணவு அளிக்க வேண்டும் என்பது ஆசை. இன்று விஜயகாந்த் இல்லை என்றாலும் கொண்டாட கூடிய மனிதராக உள்ளார். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டிடடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்தின் கனவு இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிந்து நனவாகும். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும்.

சினிமாவை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். சூதாட்டத்திற்கும் சினிமவிற்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதில் மாற்றம் கொண்டுவரவேண்டும். தற்போது தமிழக அரசு 5 கோடியில் திறந்து வைத்துள்ள படப்பிடிப்பு தளம் வரவேற்கத்தக்கது.

விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துகள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும். சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. இந்த 2026-ஆண்டு தேர்தலில் நிறைவேற்றபடாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். நல்லது செய்வது தான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு மாதத்தில் திறப்பு விழா நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நல்லது செய்வது அரசியல் என்றால் நான் அரசியல்வாதிதான்: விஷால்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93256
சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர் வெளியீடு! https://koodal.com/movies/2025/08/26/samuthirakanis-veeravanakam-trailer-released/ Tue, 26 Aug 2025 02:46:36 +0000 https://koodal.com/?p=93253 சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீரவணக்கம்’ படத்தின் ட்ரெய்லரை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். மலையாள இயக்குநர் அனில் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வீரவணக்கம்’. சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ…

The post சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீரவணக்கம்’ படத்தின் ட்ரெய்லரை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

மலையாள இயக்குநர் அனில் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வீரவணக்கம்’. சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளர் பி. கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்துக்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார்கள்.

மறைந்த பாடகர் டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

The post சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93253
பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ்!: வாங்க மறுத்த நடிகர் ரவி மோகன்! https://koodal.com/movies/cine-news/2025/08/25/notice-to-confiscate-bungalow-actor-ravi-mohan-refuses-to-buy-it/ Mon, 25 Aug 2025 11:45:02 +0000 https://koodal.com/?p=93227 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளார். வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி நோட்டீஸ் கொடுக்க வந்த கொரியர் ஊழியரை திரும்பி அனுப்பிவிட்டனராம்.…

The post பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ்!: வாங்க மறுத்த நடிகர் ரவி மோகன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளார். வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி நோட்டீஸ் கொடுக்க வந்த கொரியர் ஊழியரை திரும்பி அனுப்பிவிட்டனராம்.

ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி மோகன், பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். இவர் காதலித்து ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி வேறு யாருமில்லை, சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்தான். இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் ஆரவ் டிக்டிக்டிக் என்ற திரைப்படத்தில் ரவியுடன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தார். இதற்கு ஆர்த்தி மறுத்தார். ரவி மோகன் எனினும் ரவி, தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாத நிலையில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய மனுதாக்கல் செய்யுமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பராசக்தி தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை ரவி தொடங்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாக ரவி மோகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே பாபி டச் கோல்டு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ரவி ஒப்புக் கொண்டாராம். அதற்காக முன்பணமாக ரூ 6 கோடி பணத்தை திருப்பி செலுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரவி மோகன் தனது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நிலையில் அவரின் சொத்துக்களை முடக்கும் வகையில் மனுதாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியது. பிரைவேட் நிறுவனம் இது தொடர்பாக பாபி டச் கோல்டு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இரு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்திற்கு ரூ 15 கோடி ஊதியம் பேசப்பட்டு ரூ 6 கோடி முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் போட்டதன்படி எங்கள் நிறுவன படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் அவர் நடித்ததால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டோம். ஆனால் அவர் தரவில்லை. ரூ 6 கோடி தராத ரவி ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிய படத்தை தயாரித்து வருகிறார். எனவே எங்களிடம் வாங்கிய 6 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், ரூ 6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடிகர் ரவிக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. 6 கோடி பணம் இதனால் ரூ 6 கோடி பணத்திற்காக அவருடைய சொத்துக்களை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் ஜெயம் ரவி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி அங்கு மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில் அந்த வீட்டிற்கு ரவி செல்வதில்லை. அது போல் அந்த வீடு எச்டிஎப்சி வங்கியில் லோன் போட்டு வாங்கிய நிலையில் கடந்த 10 மாதங்களாக தவணை தொகையையும் அவர் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து வீட்டை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் முடிவு செய்து ரவிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீஸை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்த ரவி மகன் தரப்பு, வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை திருப்பி அனுப்பிவிட்டதாம். குடும்பத் தகராறு, கேரக்டர் டேமேஜ், பட தயாரிப்பு நிறுவனம் குடைச்சல், இத்தனைக்கும் மத்தியில் தற்போது வங்கி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸை அனுப்பியுள்ளது.

The post பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ்!: வாங்க மறுத்த நடிகர் ரவி மோகன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93227
சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது: கீர்த்தி சனோன்! https://koodal.com/movie-stories/2025/08/25/nothing-comes-easy-in-cinema-keerthy-sanon/ Mon, 25 Aug 2025 11:43:42 +0000 https://koodal.com/?p=93224 இந்தி நடிகையான கீர்த்தி சனோன், இப்போது தனுஷ் ஜோடியாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமா பின்னணி இல்லாமல், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். அவர், சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து…

The post சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது: கீர்த்தி சனோன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தி நடிகையான கீர்த்தி சனோன், இப்போது தனுஷ் ஜோடியாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமா பின்னணி இல்லாமல், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். அவர், சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை கீர்த்தி சனோன் கூறியுள்ளதாவது:-

பாலிவுட்டில் வெற்றி பெற ஆர்வமும் கடின உழைப்பும் அவசியம். எதுவும் எளிதாகவோ, இலவசமாகவோ கிடைக்காது. குறுக்குவழி என்று எதுவும் இல்லை. ஆனால் முயற்சியை கைவிடக்கூடாது. சினிமா பின்னணி இல்லாமல் வந்தால் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ‘உனக்கு ஏன் வாய்ப்புக் கிடைக்கவில்லை? உன்னிடம் ஏதோ குறை இருக்கிறது; நீ உயரமாக இருக்கிறாய், ஒல்லியாக இருக்கிறாய்; உன் உடல் சரியான வடிவத்தில் இல்லை என்று சுற்றி இருப்பவர்கள் குறைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களால், அதை மட்டுமே செய்ய முடியும். ஆனால், உங்களால் முடியும் என்று உங்களைத் தவிர, உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சினிமாவில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது: கீர்த்தி சனோன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93224