டிரெய்லர் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/movies/trailers/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Mon, 10 Feb 2025 16:29:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 டிரெய்லர் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/movies/trailers/ 32 32 201197430 பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ட்ரெய்லர் வெளியானது! https://koodal.com/movie-stories/2025/02/10/the-trailer-of-dragon-starring-pradeep-ranganathan-has-been-released/ Mon, 10 Feb 2025 16:29:29 +0000 https://koodal.com/?p=77586 ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘லவ் டுடே’ மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கவனிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் நடித்து, அடுத்து வரும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்…

The post பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ட்ரெய்லர் வெளியானது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘லவ் டுடே’ மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கவனிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் நடித்து, அடுத்து வரும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். ‘மயில்வாகனன்’ என்ற கேரக்டரில் மிஷ்கின், ‘வாலே குமார்’ என்ற கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன், ‘பரசுராம்’ என்ற கேரக்டரில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கின்றனர்.

வரும் 21-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

The post பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ட்ரெய்லர் வெளியானது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
77586
‘கஜானா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு! https://koodal.com/movie-stories/2024/12/01/trailer-of-the-movie-kajaana-released/ Sun, 01 Dec 2024 04:32:10 +0000 https://koodal.com/?p=71520 யோகி பாபு, வேதிகா நடித்துள்ள ‘கஜானா’ படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘கஜானா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’. மேலும் இப்படத்தில்…

The post ‘கஜானா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
யோகி பாபு, வேதிகா நடித்துள்ள ‘கஜானா’ படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘கஜானா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’. மேலும் இப்படத்தில் சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும் அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகை வேதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post ‘கஜானா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
71520
விஜயிடம் வேலை ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசியுள்ளீர்களா சீமான்: விஜயலட்சுமி! https://koodal.com/movies/trailers/2024/11/23/seeman-have-you-met-rajinikanth-because-vijay-is-not-getting-work-vijayalakshmi/ Sat, 23 Nov 2024 04:35:21 +0000 https://koodal.com/?p=70803 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜயிடம் வேலை ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசியுள்ளீர்களா சீமான் என கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை…

The post விஜயிடம் வேலை ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசியுள்ளீர்களா சீமான்: விஜயலட்சுமி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜயிடம் வேலை ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசியுள்ளீர்களா சீமான் என கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தனது நேரடி அரசியல் எதிரி என திமுகவை வெளிப்படையாகவே அறிவித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும் கடந்த காலங்களில் விஜயை தம்பி என அழைத்து வந்த சீமான் அவரது மாநாட்டுக்குப் பிறகு மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் இடம் வேலைய ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பிச்சை கேட்டீர்களா சீமான் என விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

விஜய் அண்ணன் வீட்டில் பிச்சை எடுத்து எடுத்து பாத்தாச்சு.. அது ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என அடுத்ததா போயஸ் கார்டனில் ரஜினி சார் வீட்டில் பிச்சை எடுக்க போய்ட்டீங்களா சீமான். விஜய் அண்ணன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வேற எந்த வழியும் கிடைக்கலையா?

ரஜினி சார் யார் அப்படின்னு ஞாபகம் இருக்கா? அவர் அரசியலுக்கு வருகிறார் என சொன்னவுடனே உங்க வாய் தான் சொன்னுச்சு. கர்நாடகா காருரு அவரு.. மேல உப்பு மிளகாய் எல்லாம் போட்டு வறுத்து எடுத்து பாக்கணும் அப்படின்னு விருப்பப்படுகிறேன் அப்படின்னு சொன்னது மறந்து போச்சா? மேடை மேடையா கொச்சைப்படுத்தி பேசினீங்களே. அதை மறந்துட்டா அவர் வீட்டில் போயி பிச்சை போடுங்கன்னு நின்னுகிட்டு இருந்தீங்க. அசிங்கமா இல்ல.. என்ன ஒரு கேவலமான பொழப்பு மிஸ்டர் சீமான்.. உங்களுடையது விஜய் அண்ணன் கிட்ட இருந்து தப்பிக்க ரஜினி சார் காலில் போய் விழுகுறீங்க. உங்க மேல வழக்கு தொடுத்தா திமுக காலில் போய் விழுகுறீங்க.. உங்களை யாரும் நம்ப மாட்டாங்க மிஸ்டர் சீமான்..

தமிழ்நாடு மக்கள் கிட்ட சொல்றேன் யாரும் சீமான நம்பாதீங்க. நான் அவருடைய முதல் மனைவி அப்படிங்கறது உலகத்துக்கே தெரியும். என் வாழ்க்கையே சீரழிச்சு கர்நாடகாவில் அனாதையாக தூக்கிப் போட்டவர் சீமான். எனது அக்கா நடக்கக்கூட முடியாத மோசமான நிலையில் இருக்காங்க.. அந்த நிலைமையில் கூட போன வருஷம் 50000 தருகிறேன் என வீட்டுக்குள்ள வந்து வீடியோக்களை வாங்கிவிட்டு இரவும் பகலுமாக டார்ச்சர் பண்ணார்.. அதை தாங்க முடியாமல் தான் நான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன்..

அதை வைத்து என்னையும் திமுகவையும் மேடை மேடையாக கேவலமாக பேசி மக்களை ஏமாற்றினார் சீமான்.. யாரும் சீமானை சப்போர்ட் பண்ணாதீங்க.. தயவு செய்து மீடியா இந்த வீடியோவை டெலிகாஸ்ட் பண்ணுங்க.. நான் ஏமாந்த மாதிரி தமிழ்நாடு மக்களை சீமான் கிட்ட ஏமாற்றத்துக்கு நான் விடவே மாட்டேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

The post விஜயிடம் வேலை ஆகவில்லை என்பதற்காக ரஜினியை சந்தித்து பேசியுள்ளீர்களா சீமான்: விஜயலட்சுமி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70803
செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன: சவுக்கு சங்கர்! https://koodal.com/movies/trailers/2024/11/23/there-are-all-possibilities-to-cancel-senthil-balajis-bail-order-savukku-shankar/ Sat, 23 Nov 2024 04:33:23 +0000 https://koodal.com/?p=70799 செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்று கரூரில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு தயங்கிய மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களை குறிப்பிட்டு தான்…

The post செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன: சவுக்கு சங்கர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்று கரூரில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு தயங்கிய மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களை குறிப்பிட்டு தான் அதானி குழுமம் மீது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை முழுமையாக மறைத்து, அதானி குழுத்தோடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

கரூரில் அமைந்துள்ள வழக்கறிஞர் கரிகாலன் அலுவலகத்திற்கு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

அதானி குழுமத்தோடு தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவில் அதானி குடும்பத்தின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் நேரடியாக மின்சாரம் வாங்க தயங்குகின்றன. அப்படி தயங்கும் மாநில அரசுகளை, மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் சிக்கி உள்ளது என்பதை குறிப்பிட்டு தான் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மின்சாரம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முழுமையாக மறைத்து, அதானி குழுத்தோடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என செந்தில் பாலாஜி பேசியுள்ளார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை.

செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகு மீண்டும் அதே துறை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறை செல்வதற்கு முன்பு எவ்வாறு கொள்ளையடித்தாரோ அதே வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் விரைவில் அவரது ஜாமீன் உத்தரவை ரத்து செய்யும் மனு விசாரணைக்கு வரவுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த மூன்று நாட்களில், செந்தில்பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததை உச்ச நீதிமன்றம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாது. ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன: சவுக்கு சங்கர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70799
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்: கார்த்தி சிதம்பரம்! https://koodal.com/movies/trailers/2024/11/23/congress-will-try-to-be-part-of-the-coalition-government-in-tamil-nadu-karthi-chidambaram/ Sat, 23 Nov 2024 04:32:29 +0000 https://koodal.com/?p=70797 ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன்…

The post தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்: கார்த்தி சிதம்பரம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்து நியாயமானதுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாததால் அதிமுகவில் தற்போது குழப்பம் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெற முயற்சிப்போம். பின்னர் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

தனிப்பட்ட விரோதத்தால் நடைபெறும் குற்றங்களை காவல் துறையால் தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவை பள்ளி, நீதிமன்றம், மருத்துவமனை வளாகங்களில் நடந்துள்ளன என்பது கவலையளிக்கிறது. மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் திரட்டிய நிதியை இந்திய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய அரசும், பிரதமரும் எந்த கருத்தும் கூறவில்லை. இப்பிரச்சினை குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

The post தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்: கார்த்தி சிதம்பரம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70797
அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்! https://koodal.com/movies/trailers/2024/11/23/marxist-protest-on-the-28th-demanding-the-arrest-of-adani/ Sat, 23 Nov 2024 04:31:30 +0000 https://koodal.com/?p=70795 சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி…

The post அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கட்சி அணிகளும், அனைத்து தரப்பு பொது மக்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என. அக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70795
நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி! https://koodal.com/movies/trailers/2024/11/23/no-one-can-destroy-our-bharat-and-spirituality-governor-r-n-ravi/ Sat, 23 Nov 2024 04:30:05 +0000 https://koodal.com/?p=70792 உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில்…

The post நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவைத் தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ எனும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மார்கழி மாதம் இசைக்கும், ஆன்மிகத்துக்கும் உகந்த மாதம். கர்நாடக இசையானது உலகளவில் பாராட்டப்படக்கூடிய ஒன்றாகும். அத்தகைய இசை நமது அடையாளமாக இருப்பது பெருமையாகும். ஆன்மிகமும் கலாச்சாரமும்: பாரதம் என்பது ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப் பட்டது. பாரதத்தின் அடையாளம் சனாதனம். ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்போது நமது கலாச்சாரம், ஆன்மிகம் உட்பட சிலவற்றை அழிக்க முயற் சித்தனர். அப்படி செய்துவிட்டால் அவை வரலாற்றில் இருந்து மறைந்துவிடும் என எண்ணினர். ஆனால், அது நிறைவேறவில்லை. நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. பாரதமும், ஆன்மிகமும் இருப்பதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் சிறந்த நாடாக விளங்குகிறது.

நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதலில் வந்த ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மையை பற்றி பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய மதச்சார்பின்மையைத்தான் பின்பற்றினர். ஐரோப்பிய கலாச்சாரத்தின் எண்ணங்கள் மற்றும் அதன் வழிகளையே பிரதானமாக நினைத்தனர். அதன் விளைவு, மாநிலங்களின் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகாரிகளின் பொறுப்புகள் அதிகரித்தன. இவற்றை பொதுமக்கள் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70792
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்! https://koodal.com/movies/trailers/2024/11/23/sexual-harassment-of-female-sp-arrest-warrant-issued-for-retired-ig/ Sat, 23 Nov 2024 04:28:08 +0000 https://koodal.com/?p=70789 பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017-18ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில்…

The post பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017-18ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். இதனிடையே, அந்த அலுவலகத்தில் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குறச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி போலீசில் புகார் அளித்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு முன்னாள் ஐ.ஜி. முருகன் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகத ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

The post பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கு பிடிவாரண்ட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70789
மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்: மு.க.ஸ்டாலின் https://koodal.com/movies/trailers/2024/11/23/2026-assembly-elections-are-many-times-more-important-than-lok-sabha-elections-mk-stalin/ Sat, 23 Nov 2024 04:26:19 +0000 https://koodal.com/?p=70786 “2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

The post மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்: மு.க.ஸ்டாலின் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்’ நேற்று நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு தேவையான நிதி ஒதுக்காதது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பாஜகவிடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள்.

நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள். நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். ஒன்றிய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும்.

எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கட்சியில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்ட செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய – பகுதி – பேரூர் செயலாளர்களும். அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும்.கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக, தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக, தொகுதி மக்களின் தேவைகளுக்காக உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

The post மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்: மு.க.ஸ்டாலின் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70786
ராஜஸ்தானில் தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன் கண்டனம்! https://koodal.com/movies/trailers/2024/11/23/attack-on-tamil-nadu-kabaddi-players-in-rajasthan-velmurugan-condemns/ Sat, 23 Nov 2024 04:25:17 +0000 https://koodal.com/?p=70784 விளையாட்டுப் போட்டியில் கூட தமிழர்கள் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தானில் நடைபெற்று வரும்…

The post ராஜஸ்தானில் தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன் கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
விளையாட்டுப் போட்டியில் கூட தமிழர்கள் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பல்கலைக்கழகங்களின் சார்பில் அதன் அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியும் பஞ்சாபின் குரு காசி பல்கலைக்கழக அணியும் விளையாடிய நிலையில் முன்னணியில் இருந்த எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணிக்கு எதிராகவும் பஞ்சாப் பல்கலைக்கழக அணிக்கு ஆதரவாகவும் முடிவுகள் வழங்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற அணிகள் மற்றும் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் ஒரு பயிற்சியாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் வகையில் நடத்தப்படும் விளையாட்டு போட்டியில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெறுவதை ஏற்க்க முடியாத அளவிற்க்கு வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது.

மேற்கண்ட தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராஜஸ்தானில் தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன் கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70784