குற்றம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/crime/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Fri, 22 Aug 2025 10:43:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 குற்றம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/crime/ 32 32 201197430 நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது! https://koodal.com/news/2025/08/22/a-person-who-trespassed-into-the-parliament-premises-has-been-arrested/ Fri, 22 Aug 2025 10:43:24 +0000 https://koodal.com/?p=93093 நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலை 6.30 மணியளவில் ஒரு நபர் மரத்தில் ஏறி சுவர் மீது குதித்து உள்ளே நுழைந்தார். ரயில் பவன்…

The post நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலை 6.30 மணியளவில் ஒரு நபர் மரத்தில் ஏறி சுவர் மீது குதித்து உள்ளே நுழைந்தார். ரயில் பவன் பக்கத்திலிருந்து சுவர் தாண்டி குதித்து ஊடுருவியவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கருடா வாயிலை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவர் ஏறி குதித்து ஊடுருவிய நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும் அனலை கிளப்பிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது 20 வயதுடைய நபர் நாடாளுமன்ற வளாகத்தில் சுவர் ஏறி அனெக்ஸ் கட்டிடத்தின் உள்ளே குதித்தார். இந்த சம்பவத்தின் ஒரு வீடியோவும் வெளியாகியிருந்தது. அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் கைது செய்தனர், அவரிடம் ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்றொரு அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது.

The post நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93093
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! https://koodal.com/news/2025/08/12/a-bomb-exploded-at-the-government-polytechnic-college-in-thoothukudi/ Tue, 12 Aug 2025 14:48:42 +0000 https://koodal.com/?p=92507 தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்த நிலையில் அது வெடித்து இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்…

The post தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்த நிலையில் அது வெடித்து இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பாரதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் பரணி என்ற 17 வயது மாணவன் கல்லூரிக்கு வரும் பொழுது புத்தகப் பையில் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புத்தகப்பைக்குள் இருக்கும் நாட்டு வெடிகுண்டை எடுப்பதற்கு இரண்டு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் திடீரென அது வெடித்துச் சிதறியது என்று கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவருக்கு வலது கை முழுவதும் சிதறியுள்ளது. மற்றொரு மாணவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் திருவிழா நேரங்களில் பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றொரு தகவலாக முன்விரோதத்தால் மாணவன் நாட்டு வெடிகுண்டைக் கல்லூரிக்கு எடுத்து வந்த வீசியதாகவும் கூறப்படுகிறது. காரணம் அந்த மாணவன் ‘உங்களை சும்மா விடமாட்டேன்’ என எச்சரிக்கும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92507
திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர்! https://koodal.com/news/2025/08/07/encounter-in-tiruppur-special-si-murder-case/ Thu, 07 Aug 2025 11:40:03 +0000 https://koodal.com/?p=92183 உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ்…

The post திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட மணிகண்டனை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டது. அப்போது கொலைக்கு பயன்படுத்திய அதே அரிவாளை எடுத்து போலீஸாரை தாக்க முயன்றபோது தான் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரிவாளை கீழே போடச் சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் மணிகண்டன் கேட்கவில்லை. 2 முறை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு மணிகண்டன் மீது பாய்ந்து உயிரிழப்பு ஏற்ப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள வாஞ்சிநாதன் நகரில் வசித்து வந்தவர் சண்முகவேல் (57). இவர், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். குடிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு தங்கி வேலை பார்த்து வந்த மூர்த்தி (66) என்பவருக்கும் அவரது மகன்களுக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய மூர்த்தி, அவரது மகன்கள் மணிகண்டன், தங்கப்பாண்டி ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையே, மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரும் திருப்பூர் போலீஸில் சரணடைந்தனர். நேற்று புதன்கிழமை இரவு தனிப்படை போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர்.

மூவரிடமும் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காண்பிப்பதற்காக மணிகண்டனை அழைத்துக் கொண்டு போலீஸார் சிக்கனூத்து அருகே உள்ள உப்பாறு ஓடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது என்கவுன்ட்டரில் மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார் மாவட்ட எஸ்.பி. கிரிஸ் யாதவ்.

The post திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92183
திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலையில் தந்தை, மகன் சரண்! https://koodal.com/news/2025/08/06/father-son-surrender-in-tiruppur-special-si-murder-case/ Wed, 06 Aug 2025 16:07:25 +0000 https://koodal.com/?p=92122 தமிழ்நாட்டையே உலுக்கிய சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு…

The post திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலையில் தந்தை, மகன் சரண்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழ்நாட்டையே உலுக்கிய சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் ஆகியோரும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். மூன்று பேரும் நேற்று இரவு மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் இருவரும் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். போலீஸ் வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார்.

காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார் சண்முகவேல். மேலும் மூர்த்தி, தங்கபாண்டி புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் உதவி ஆய்வாளரை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க ஓடியுள்ளார். போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தனர்.

உடன் இருந்த ஓட்டுனரையும் துரத்திச் சென்றுள்ளனர். அவர் ஓடி தப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியே கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சண்முகவேலை கொலை செய்து விட்டு தப்பியோடிய மூர்த்தி, தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டனை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், சண்முகவேலை வெட்டி கொன்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை சரண் அடைந்தனர். அதே வேளையில் மணிகண்டன் சரணடையவில்லை. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உடற்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சண்முகவேல் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.

The post திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலையில் தந்தை, மகன் சரண்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92122
திருப்பூர் சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு! https://koodal.com/news/2025/08/06/6-special-forces-formed-to-catch-the-murderers-of-tiruppur-special-si/ Wed, 06 Aug 2025 13:08:37 +0000 https://koodal.com/?p=92077 உடுமலை அருகே தந்தை – மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்படட்உள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார். திருப்பூர்…

The post திருப்பூர் சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உடுமலை அருகே தந்தை – மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்படட்உள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. தோட்டப்பராமரிப்புக்காக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி காமாட்சி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டன் (20). அவரது மனைவி சபீனா ஆகியோரும் தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர்.

நேற்று மூர்த்தியின் 2 வது மகன் தங்கபாண்டி (28) தந்தையை பார்பதற்காக வந்துள்ளார். இரவு கறி விருந்துடன் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் தங்கபாண்டிக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மூர்த்தி காயம் அடைந்தார். தகராறு முற்றிய நிலையில் பண்ணை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக குடிமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ் ஐ சண்முகவேலுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநர் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீஸார் வருவதை அறிந்து தங்கப்பாண்டி தோப்புக்குள் மறைந்திருந்துள்ளார். உடனடியாக காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். மேலும் உடன் சென்றவர்களையும் அரிவாளால் தாக்க முற்பட்டுள்ளார்.

ஓட்டுநர், பண்ணை மேலாளர் அங்கிருந்து தப்பி வந்த குடிமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்ரிஷ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். உதவி ஆய்வாளரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஐஜி செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது: “குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர்களிடம் விசாரிப்பதன் மூலம் யார் யார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்” என்றார்.

The post திருப்பூர் சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92077
திருப்பூரில் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து கொடூர கொலை! https://koodal.com/news/2025/08/06/sub-inspector-beheaded-in-tirupur-brutally-murdered/ Wed, 06 Aug 2025 04:44:52 +0000 https://koodal.com/?p=92055 திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் தலையை துண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்…

The post திருப்பூரில் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து கொடூர கொலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் தலையை துண்டித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (52). இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது 100 எண்ணுக்கு வந்த ஓர் அழைப்பில் தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரில், குடிமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகனுக்கு இடையே எழுந்த பிரச்சனையில் தந்தை, மகனை கொல்ல அறிவாளியுடன் துரத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், தனது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும், ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மகனையும் தந்தை வெட்டியுள்ளார்‌. தந்தை, மகனுக்கு இடையேயான பிரச்சனையை விசாரிக்கச் சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருப்பூரில் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து கொடூர கொலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92055
தோண்டதோண்ட கிடைக்கும் ஆதாரங்கள்.. நடுங்கவைக்கும் தர்மஸ்தலா வழக்கு! https://koodal.com/news/2025/07/31/evidence-found-after-digging-the-shocking-dharmasthala-case/ Thu, 31 Jul 2025 17:29:25 +0000 https://koodal.com/?p=91626 கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 13 இடங்களில் உடல்களை தேடும் பணி தொடங்கி உள்ள நிலையில் இன்று சிதைந்த மனித எலும்பு கிடைத்தது. நேற்று பெண்களின்…

The post தோண்டதோண்ட கிடைக்கும் ஆதாரங்கள்.. நடுங்கவைக்கும் தர்மஸ்தலா வழக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 13 இடங்களில் உடல்களை தேடும் பணி தொடங்கி உள்ள நிலையில் இன்று சிதைந்த மனித எலும்பு கிடைத்தது. நேற்று பெண்களின் மேலாடை கிடைத்த நிலையில் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.

கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலா என்ற புகழ்பெற்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் போலீசில் அளித்த புகார் சர்ச்சையை கிளப்பியது. ஏனென்றால் அந்த புகாரில் அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். கடந்த 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றியதாகவும், இந்த காலக்கட்டத்தில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். தற்போது கோவில் பணியில் இருந்து நின்றுவிட்டேன். வெளிமாநிலங்களில் வசிக்கும் நிலையில் மனம் உறுத்தியதால் புகார் அளித்தேன் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி பெண்கள், மாணவிகளின் உடல்களை தர்மஸ்தலா கோவில் அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றின் கரையோர வனப்பகுதியில் புதைத்தேன். புதைக்கப்பட்ட உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானது. மேலும் இந்த பெண்கள், மாணவிகள் எப்படி இறந்தனர்? அவர்களின் உடல்கள் எதற்காக குறிப்பிட்ட இடத்தில் புதைக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாஜி தூய்மை பணியாளர் குறிப்பிட்டு சொன்ன 13 இடங்களில் உடல்களை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணி கடந்த 29ம் தேதி தொடங்கியது. 3வது நாளான இன்று மாஜி தூய்மை பணியாளர் சொன்ன 6வது இடத்தில் சிதைந்த மனித எலும்பு கிடைத்தது. அது ஆணின் எலும்புகூடு என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் மனித எச்சங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று எலும்பு கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்த தேடுதல் பணியின்போது மனித எச்சங்கள் தவிர்த்து பிற பொருட்கள் கிடைத்தன. அதன்படி முதல் நாளான நேற்று முன்தினம் நேத்ராவதி ஆற்றின் தடுப்பணை பகுதியில் பள்ளங்கள் தோண்டியபோது பார்ன் கார்டு, ரூபே டெபிட் கார்டு உள்ளிட்டவை கிடைத்தன. இதில் பார்ன் கார்டு ஆண் பெயரும், டெபிட் கார்டில் பெண் பெயரும் இருந்தது. அதன்பிறகு பெண்களின் மேலாடை கிடைத்தது. இருப்பினும் இது புதைக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு சொந்தமானதா இல்லையா? என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதுபற்றி விரிவான விசாரணைக்கு பிறகு தான் தகவல் தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது உடல்களை தேடும் இடத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் எஸ்பி ஜிதேந்திர குமார், புத்தூர் உதவி கமிஷனர் ஸ்டெல்லா வர்க்கிஸ், தடயவியல் நிபுணர்கள் உள்ளனர். மேலும் மோப்பநாய்களும் சம்பவ இடத்தில் உள்ளன. சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை தடயவில் நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர். மேலும் நேத்ராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் செல்கிறது. இதனால் உடல்களை தேடும் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் சில இடங்களில் மோட்டார்கள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தர்மஸ்தலா விவகாரம் தொடர்பா ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் சிறப்பு விசாரணை குழுவினருக்கு தகவல் அளிக்கலாம். சிறப்பு விசரணை குழுவினரை பொதுமக்கள் 0824 – 2005301 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் வாட்ஸ்அப்பில் 8277986369 என்ற எண்ணில் தகவல்களை அளிக்கலாம். இ-மெயில் என்றால் sitdps@ksp.gov.in என்பதன் மூலம் தகவல்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தோண்டதோண்ட கிடைக்கும் ஆதாரங்கள்.. நடுங்கவைக்கும் தர்மஸ்தலா வழக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
91626
மோசடி வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது! https://koodal.com/news/2025/07/30/power-star-srinivasan-arrested-by-delhi-police-in-connection-with-a-fraud-case/ Wed, 30 Jul 2025 17:16:37 +0000 https://koodal.com/?p=91533 பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் எஸ். சீனிவாசன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். நடிகர்…

The post மோசடி வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் எஸ். சீனிவாசன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்துடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் இருந்து வந்தார். இந்த நிலையில் தான், பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தொழில் அதிபரிடம் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1,000 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.5 கோடி கடன் பெற்றுள்ளார். 5 கோடி பணத்தை பெற்றுக்கொண்ட பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் எதுவும் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்போதே கைது செய்யப்பட்ட சீனிவாசன், இந்த வழக்கு தொடர்பாக பீகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் பல மோசடி வழக்குகள் பதியப்பட்டது. பல்வேறு இடங்களில் இதேபோன்று இவர் மோசடியில் ஈடுபட்டதாக பல வழக்குகள் பதிவானது. குறிப்பாக சென்னையில் கூட 6 வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல மாநிலங்களில் கடன் பெற்று தருவதாக கூறி காசோலை வழங்கி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்குகளையும் பவர்ஸ்டார் சீனிவாசன் சந்தித்து வந்துள்ளார். இதில் டெல்லி தொழில் அதிபரை மோசடி செய்த வழக்கும் டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றவாளி என்று அறிவித்த பிறகும் சீனிவாசன் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

The post மோசடி வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
91533
நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு! https://koodal.com/news/2025/07/29/17-year-old-boy-shot-in-nellai/ Tue, 29 Jul 2025 11:09:10 +0000 https://koodal.com/?p=91422 திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில்…

The post நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு ஒளிந்து கொண்டார். ஆனாலும் அச்சிறுவன் ஆத்திரத்தில் அரிவாளால் கழிவறையின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழிவறையின் கதவு வெட்டுப்பட்டு துண்டானது. இதனால் நிலைகுலைந்த உதவி காவல் ஆய்வாளர் ஒரு கட்டத்தில் தற்காப்புக்காக தன்னிடமிருந்த துப்பாக்கியால் சிறுவனை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அச்சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சீருடையில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் அத்துமீறியதாகவும் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பெண்களை அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியதாகவும் 11 பிரிவுகளில் அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாப்பாக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இதை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக திருநெல்வேலி பாப்பாக்குடி காலனி சமத்துவபுரத்தை பூர்வீகமாக கொண்ட, சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார் (22). தற்போது ரஸ்தாவூர் ஊரில் குடியிருந்து வருகிறார். பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறார்கள், சக்தி குமாரை வரவைத்து சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் நாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை வெளியில் மற்றும் போலீஸ்க்கு எப்படி தெரிவிக்கலாம் என்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்றுள்ளனர். இளம் சிறார்களை பிடிக்கும் முயற்சி செய்தபோது இரண்டு சிறார்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை ரஞ்சித் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற உதவி காவல் ஆய்வாளர் முருகனையும், அந்த இரு சிறுவர்களும் சேர்ந்து வெட்ட முயற்சி செய்து உள்ளார்கள்.

தற்காத்துக் கொள்வதற்காக சம்பவ இடத்தின் அருகே இருந்த வீட்டிற்குள் காவல் துறையினர் சென்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த சிறுவர்கள் இருவரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்த கதவை உடைத்துள்ளனர். அந்த வீட்டில் ஒரு பெண்ணும் அவருடைய குழந்தையும் இருந்தனர். இதனால் காவலர்கள் அவர்களை பாதுகாக்க, அந்த சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது போல் சிறுவன் தாக்கியதில் காயமடைந்த சக்திகுமார், காவலர் ரஞ்சித் உள்ளிட்ட மூவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த சிறுவன் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பாப்பாக்குடி கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

The post நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
91422
நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை?: இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு! https://koodal.com/news/2025/07/28/youth-honor-killing-in-nellai-case-filed-against-3-people-including-two-assistant-inspectors/ Mon, 28 Jul 2025 15:00:42 +0000 https://koodal.com/?p=91361 திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கொலை தொடர்பாக சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், தற்போது அவரது தந்தை…

The post நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை?: இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கொலை தொடர்பாக சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், தற்போது அவரது தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்களின் பெயர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும். இதனைக் கண்டித்தும் பழக்கம் தொடர்ந்ததால் இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஆணவக் கொலை என்ற கண்டனங்களும் எழுந்துள்ளன.

இதற்கிடையில் உயிரிழந்த இளைஞர் கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை?: இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
91361