இந்தியா Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/india/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 28 Aug 2025 02:57:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 இந்தியா Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/india/ 32 32 201197430 நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்! https://koodal.com/news/2025/08/28/we-must-be-prepared-for-long-wars-rajnath-singh/ Thu, 28 Aug 2025 02:57:47 +0000 https://koodal.com/?p=93313 குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:- வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி…

The post நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை வடிவமைக்க உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். துல்லியமாக வழிநடத்தப்படும் ஆயுதங்கள், நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த தகவல்கள் ஆகியவையே இப்போது எந்தவொரு யுத்தத்திலும் வெற்றிக்கான அடித்தளமாக மாறிவிட்டன.

நவீன போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியுடன் மட்டும் கட்டுப்படுத்தப்படாது. இனி அவை விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் வரை விரிவடையும். செயற்கைக்கோள் அமைப்புகள், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் விண்வெளி கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவை அதிகாரத்தின் புதிய கருவிகளாகும். தொழில்நுட்பம், ஒரு புதுமையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் நேரத்தில், இன்னொன்று உருவாகி, போரின் போக்கையே முற்றிலுமாக மாற்றும் அளவுக்கு உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

The post நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93313
எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! https://koodal.com/news/2025/08/27/we-will-not-bow-to-any-crisis-prime-minister-modi/ Wed, 27 Aug 2025 05:24:17 +0000 https://koodal.com/?p=93302 இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு…

The post எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு அறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (ஆக. 27) நள்ளிரவு 12.01 மணிக்கு பிறகு கூடுதல் வரிகள் அமலுக்கு வரும்.

இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் 66 சதவீத ஏற்றுமதி பாதிப்படையும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், கம்பளங்கள், பர்னிச்சர் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 60.2 பில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 2025-ம் நிதியாண்டில் 86.5 பில்லியன் டாலராக இருந்தது. தற்போதைய 50 சதவீத வரி விதிப்பால் நடப்பு நிதியாண்டில் இது 49.6 பில்லியன் டாலராக குறையும். ஒட்டுமொத்தத்தில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மொத்தம் 43 சதவீத சரிவு ஏற்படும். குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்பும் ஏற்படும். இது இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் தீவிரமான சவாலை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த அளவில் இவற்றின் தாக்கம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக சரிவடையச் செய்யும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எந்தவித நெருக்கடிகளுக்கும் இந்தியா அடிபணியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “குறு, சிறு நிறுவனங்கள், விவசாயிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளேன். அதற்கு தடையாக எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு அடிபணிய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93302
ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்! https://koodal.com/news/2025/08/26/information-that-the-gst-tax-cut-will-be-implemented-on-october-2/ Tue, 26 Aug 2025 03:03:06 +0000 https://koodal.com/?p=93275 ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த…

The post ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

ஜிஎஸ்டி கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரண்டு அடுக்காக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது ஜிஎஸ்டி புதிய வரி விகிதம் அமல்படுத்தப்படும். இதனால், உணவு பொருட்கள், காய்கறி, பழங்கள், மருந்துகள், கார், ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, ஜவுளி, சிமென்ட் உட்பட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறையும். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதுபோல, தீபாவளி பண்டிகை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93275
ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு! https://koodal.com/news/2025/08/25/is-jagdeep-dhankhar-under-house-arrest-amit-shah-denies/ Mon, 25 Aug 2025 11:48:40 +0000 https://koodal.com/?p=93235 குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தன்கர்…

The post ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தன்கர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித் ஷா அளித்த பேட்டியில்,” ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் தெளிவாக உள்ளது. அவர் தனது ராஜினாமாவுக்கு உடல்நலக் காரணங்களையே குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சிறப்பான பதவிகாலத்துக்காக பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்” என்றார்

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறுவது குறித்து கேட்டபோது, “​​உண்மை மற்றும் பொய்களின் விளக்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது. இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தன்கர் ஒரு அரசியலமைப்பு பதவியை வகித்து அரசியலமைப்பின் படி தனது கடமைகளைச் செய்தார். தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்தார். இந்த விஷயத்தில் அதிகம் சிந்திக்கக்கூடாது” என்று கூறினார்.

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். தன்கர் வீட்டுக் காவலின் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சில எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மூத்த தலைவருமான கபில் சிபல், ‘தன்கர் பொதுமக்களின் பார்வையில் இல்லை. இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?’ என கேள்வியை எழுப்பியுள்ளார்.

The post ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93235
பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா?: பாஜக கண்டனம்! https://koodal.com/news/2025/08/25/will-pinarayi-vijayan-and-stalin-participate-in-ayyappa-sangam-bjp-condemns/ Mon, 25 Aug 2025 04:44:03 +0000 https://koodal.com/?p=93213 சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சி,…

The post பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா?: பாஜக கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சி, பம்பையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது. கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். திருவாங்கூர் தேவசம் போர்டின் 70-ம் ஆண்டை முன்னிட்டு விழா நடைபெற உள்ளது. தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வசவன், மு.க. ஸ்டாலினை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

பினராயி விஜயனுக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் கேரள மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களின் ஒரு தெளிவான செய்தி இது. நீங்கள் இருவரும் பல ஆண்டுகளாக சபரிமலை, ஐயப்ப பக்தர்கள், இந்து நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீங்கு விளைவித்து அவமதித்துள்ளீர்கள். பினராயி விஜயன் பல ஐயப்ப பக்தர்களை சிறையில் அடைத்துள்ளார். மேலும் பலர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளார். ஐயப்ப பக்தர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவியுள்ளார். இவை மட்டுமின்றி, சபரிமலையின் புனித மரப்புகளை மீறியுள்ளார், அவமதித்துள்ளார்.

மு.க. ஸ்டாலினும் அவரது பயனற்ற வாரிசும் மீண்டும் மீண்டும் இந்தக்களை அவமதித்துள்ளனர். இந்து நம்பிக்கைகளை வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை ஒவ்வொரு இந்துவின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கேரள இடதுசாரி அரசு ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவது ஒரு நாடகம், மக்களை முட்டாளாக்கும் உத்தி. பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்க ஒரே வழி, இந்துக்களிடமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்பதுதான். பினராயி விஜயன் ஐயப்ப பக்தர்கள் மீது போட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சபரிமலை மரபுகளை மீறியதற்காக ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும.

ஸ்டாலினும் அவரது பயனற்ற வாரிசு உதயநிதியும் கேரளாவுக்கு வர விரும்பினால் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காமல், பினராயி விஜயனோ, ஸ்டாலினோ சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கேரள பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் வெளியே வந்து தடுத்து நிறுத்துவார்கள். இந்த விஷயத்தில் எங்கள் மன உறுதியை குறைத்து மதிப்பிடாதீர்கள். எங்களை தூண்டாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், “ஹிட்லர் யூதர்களைக் கொண்டாடுவடுவது, ராகுல் காந்தி உண்மை பேசுவது, ஒசாமா பின்லேடன் அமைதியின் தூதுவரக மாறுவது, ஹமாஸ் / ஜமாத் இஸ்லாமியர்கள் பிற மதங்களைச் சேர்ந்த மக்களை மதிப்பது, காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் வாரிசு அரசியலையும் ஊழலையும் கைவிடுவது போன்றது காங்கிரஸ், திமுக, சிபிஎம் போன்ற இண்டியா கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்குச் செல்வது” என்று விமர்சித்துள்ளார்.

The post பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா?: பாஜக கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93213
ஒவ்வொரு தொடரிலும் நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா! https://koodal.com/news/2025/08/25/it-is-not-good-to-shut-down-parliament-in-every-session-amit-shah/ Mon, 25 Aug 2025 04:42:34 +0000 https://koodal.com/?p=93211 நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அனைத்து இந்திய சட்டசபை சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி…

The post ஒவ்வொரு தொடரிலும் நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

அனைத்து இந்திய சட்டசபை சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளை எதிர்க்கட்சிகள் முடக்குவது குறித்து காட்டமாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு ஜனநாயகத்தில் விவாதம் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் சிலரின் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றமோ அல்லது சட்டசபைகளோ முடக்கப்படுவது நல்லதல்ல. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால், தேச கட்டுமானத்தில் அதன் பங்களிப்பு பாதிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகள் எப்போதும் நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் எதிர்ப்பு என்ற பெயரில் நாள்தோறுமோ அல்லது ஒவ்வொரு தொடரிலுமோ அவையை நடக்க அனுமதிக்காமல் இருப்பது நல்லது அல்ல.

நாடு அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், மக்கள் அது குறித்து யோசிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அது குறித்து சிந்திக்க வேண்டும். விவாதம் இல்லாத நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் வெற்று கட்டிடங்களாக மட்டுமே இருக்கும்.மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கு ஒரு பாரபட்சமற்ற தளத்தை வழங்க நாம் பாடுபட வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் வாதங்கள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். அந்தந்த சபையின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி சபையின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மகாபாரதத்தில் அஸ்தினாபுரம் அரண்மனையில் திரவுபதிக்கு ஏற்பட்டதைப்போல, அவையின் கண்ணியம் எப்போதெல்லாம் சமரசத்துக்கு உள்ளாகிறதோ, அப்போது நாடு தீவிர விளைவுகளை சந்திக்கும். நாடு விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயக மரபு சிறப்பாக உள்ளது. இங்கு ஜனநாயகம் மிகவும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. ஜனநாயகம் மோசமடைந்துள்ள நாடுகளை போல இல்லாமல், ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் பல ஆண்டுகளாக ஆட்சி மாற்றங்கள் நடந்து வருகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரரான விட்டல்பாய் படேல், மத்திய சட்டசபையின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சபாநாயகரானார். சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான விட்டல்பாய் படேலின் பங்களிப்பு பல ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. நாட்டின் விடுதலைப்போராட்டம் முக்கியம் என்றால் நாட்டை நடத்துவதும் சட்டமன்ற நடைமுறைகளை நிறுவுவதும் அதைப்போன்று முக்கியம் ஆகும். கடினமான நாட்களில் கூட ஜனநாயகத்தை நிறுவுவதிலும் வலுப்படுத்துவதிலும் விட்டல்பாய் படேல் முக்கிய பங்கு வகித்தார். நாம் அனைவரும் அதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

The post ஒவ்வொரு தொடரிலும் நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93211
இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி! https://koodal.com/news/2025/08/23/there-is-a-democratic-deficit-in-india-sudarshan-reddy/ Sat, 23 Aug 2025 17:14:54 +0000 https://koodal.com/?p=93180 “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு…

The post இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சுதர்சன் ரெட்டி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு புதிது கிடையாது.

பொருளாதார நிலையில் பற்றாக்குறை குறித்து பல தரப்பினரும் விவாதிக்கும் வேளையில், இப்போது இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. அதாவது, நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதுபோலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டியா கூட்டணி சார்பில் நானும் போட்டியிடுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இது எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி கிடையாது. மாறாக, இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி இது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்காரர். ஆனால், நான் எந்த சித்தாந்தத்தையும் பின்பற்றவில்லை என்றாலும், நான் ஒரு ஜனநாயகவாதி. அதன் அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. ‘நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஒருவகையான போராட்டம்’ என்று மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு வழக்கில் நான் நக்சல் தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்ய விரும்பவில்லை. அந்தத் தீர்ப்பு என்பது என்னுடைய தீர்ப்பு கிடையாது. அது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரங்களையும் அமைச்சர் அமித் ஷா படித்து பார்க்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93180
அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை! https://koodal.com/news/2025/08/23/cbi-raids-places-belonging-to-anil-ambani/ Sat, 23 Aug 2025 10:13:04 +0000 https://koodal.com/?p=93168 பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத ரிலையன்ஸ்…

The post அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை மோசடி நிறுவனமாக கடந்த ஜூன் 13ம் தேதி வங்கி அறிவித்தது. இது குறித்த எழுத்துப்பூர்வ தகவலை ஜூன் 24-ம் தேதிக்கு ரிசர்வ் வங்கிக்குத் தெரிவித்த பாரத ஸ்டேட் வங்கி, சிபிஐயிடம் புகார் அளிக்கும் பணியிலும் ஈடுபட்டது. இது குறித்த எழுத்துப்பூர்வ பதிலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கடந்த மாதம் மக்களவையில் அளித்தார்.

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அந்த நிறுவனத்துக்கும் அதன் இயக்குநர் அனில் அம்பானிக்கும் சொந்தமான இடங்களில் இன்று (சனிக்கிழமை) சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த தகவலை சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93168
சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்: அமித்ஷா குற்றச்சாட்டு! https://koodal.com/news/2025/08/23/sudarshan-reddy-is-a-supporter-of-naxalites-amit-shah-alleges/ Sat, 23 Aug 2025 04:48:15 +0000 https://koodal.com/?p=93156 இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக அமித்ஷா கூறினார். துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என…

The post சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்: அமித்ஷா குற்றச்சாட்டு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக அமித்ஷா கூறினார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

கேரளாவின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இது குறித்து அவர் கூறுகையில், ‘சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜுடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020-ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார்’ என குற்றம் சாட்டினார்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்தி போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சுதர்சன் ரெட்டி, சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவித்ததுடன், உடனடியாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பதாகவும் சாடினார்.

The post சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்: அமித்ஷா குற்றச்சாட்டு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93156
இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி! https://koodal.com/news/2025/08/22/no-one-can-rule-from-prison-anymore-prime-minister-modi/ Fri, 22 Aug 2025 14:56:13 +0000 https://koodal.com/?p=93108 அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அவர் இன்று பிகாரில் பேசுகையில், ‘ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின்…

The post இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அவர் இன்று பிகாரில் பேசுகையில், ‘ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னெடுப்பு இது. இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது.’ என்று கூறினார்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரதமர் மோடி 2-வது முறையாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் இருந்தனர். தொடர்ந்து கயாஜியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பிரதமர் பேசியதாவது:-

ஓர் அரசு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டால் அடுத்த 50 மணி நேரத்தில் அவரது வேலை பறிபோகிறது. ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர், ஏன் பிரதமர் கூட சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தலாம். சில நாட்களுக்கு முன்னர் நாம் சிறையிலிருந்து அரசு உத்தரவுகள் பறந்ததைப் பார்த்தோம். தலைவர்களுக்கு இதுபோன்ற மனப்பாண்மை இருந்தால், நாம் ஊழலை எப்படி ஒழிப்பது. அதனால் தான் நாம் ஊழலுக்கு எதிரான இந்த புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். அந்த வரம்புக்குள் பிரதமரும் வருகிறார்.

ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகள்தான் தங்களது பதவிகளை இழக்க வேண்டும். எனவே இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகளே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றன.

பிகார் எனும் புனித பூமியில் எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானமும் வீண் போகாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த வாக்குறுதி நிறைவேற்றுப்பட்டது ஆனால், பிகார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களின் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முதல்நாள் இந்தக் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

The post இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93108