அறிவியல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/science/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Mon, 13 May 2024 17:43:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 அறிவியல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/science/ 32 32 201197430 அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்தார்! https://koodal.com/news/2024/05/13/first-recipient-of-genetically-engineered-pig-kidney-has-died/ Mon, 13 May 2024 17:42:24 +0000 https://koodal.com/?p=56033 அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரக உறுப்பு உடலில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது. 62 வயதான ரிக் ஸ்லேமேன் எனும் நபர்தான் உலகில்…

The post அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்தார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரக உறுப்பு உடலில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது.

62 வயதான ரிக் ஸ்லேமேன் எனும் நபர்தான் உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொருத்தி இருந்தனர். மருத்துவ துறையில் இது முக்கிய மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத காலத்துக்குள் அவர் உயிரிழந்தார். உறுப்பு மாற்று சிகிச்சையின் விளைவுதான் அவரது மரணத்துக்கு காரணம் என சொல்வதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ரிக் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் மாற்று உயிரின உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள அவரது செயல் பலரையும் ஊக்கப்படுத்தும்” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ல் இதே மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் ஐந்து ஆண்டுகளில் அது செயலிழந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து டயலஸிஸ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த 2022-ல் அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவமனையில் பன்றியின் இதயம் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரண்டு மாத காலத்தில் உயிரிழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

The post அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்தார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56033
புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுதினம் இன்று! https://koodal.com/news/2024/03/14/famous-physicist-stephen-hawking-memorial-day-today/ Thu, 14 Mar 2024 17:33:14 +0000 https://koodal.com/?p=50931 புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுதினம் இன்று. கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உடைய பிரபஞ்சம் மற்றும் கடவுளின்…

The post புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுதினம் இன்று! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுதினம் இன்று. கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.

புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உடைய பிரபஞ்சம் மற்றும் கடவுளின் இருப்பு அவரது கருத்துகள் கவனிக்க கூடிய ஒன்றாக இருந்தது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்த ஹாக்கிங், பிரபஞ்சத்தின் மர்மங்களை நோக்கிய ஆய்வுகளில் தனது கவனத்தை செலுத்தினார்.

இவரது தந்தை மருத்துவர் தாயார் தத்துவவியல் பட்டதாரி. வடக்கு லண்டனை சேர்ந்த இவர்கள் 2ஆம் உலகப்போர் காரணமாக ஆக்ஸ் போர்டு நகரில் குடியேறினர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில் 1959ல் இடம் கிடைத்த உடன் தன் விருப்பத்தின் காரணமாக இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்க தொடங்கினார். இதில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

21 வயதில், ஹாக்கிங்கிற்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்ற நரம்பியக்கடத்தல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் படிப்படியாக குணப்படுத்த முடியாத இந்த நோயினால் தன் கால், கை, பாதிக்கப்பட்டு இறுதியில் பேச்சையும் இழந்தார். உடலை சற்றும் தானாக அசைக்க முடியாத சூழலிலும் தொடர்ச்சியாக தன் மூளையை பட்டை தீட்டிக் கொண்டிருந்தார் ஹாக்கிங்ஸ். இதனால் தனது நகைச்சுவை ததும்பிய பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் என்பதே இந்த சக்கர நாற்காலி மனிதரின் தனிச்சிரிப்பு. பேச்சை இழந்த அந்த போராளி தொடர்ச்சியாக வாய்ஸ் சிந்தசைசர் கருவியின் உதவியால் இந்த உலகோடு கடைசி வரை உரையாடிய வண்ணம் வலம் வந்தார்.

அவரது கல்லூரி மற்றும் ஆய்வுபடிப்புகளுக்கு பிறகு, 1970களில் ஹாக்கிங்கின் மிக அற்புதமான கோட்பாடுகளில் ஒன்றான ’கருந்துளைகள்’ குறித்த ஆய்வை நடத்தினார். வானத்தில் உள்ள பொருட்கள் முற்றிலும் “கருப்பு” அல்ல, அவை கதிர்வீச்சுகளை வெளியிடுகிறது என்ற கருத்தை ஹாக்கிங் முன் வைத்தார். இது “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்று அழைக்கப்பட்டது.

அவரது விஞ்ஞான சாதனைகளுக்கு அப்பால், ஹாக்கிங் தத்துவங்களை நோக்கி சென்றார். குறிப்பாக கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. லியோனார்ட் ம்லோடினோவுடன் இணைந்து எழுதிய “தி கிராண்ட் டிசைன்” என்ற புத்தகத்தில், ஹாக்கிங், புவியீர்ப்பு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகியவை பிரபஞ்சம் தொடக்க காரணமாக அமைந்ததாக குறிப்பிடுகிறார். எனவே உலகை படைத்தவர் என்ற தத்துவத்தின் தேவையை இது இல்லாமல் செய்கிறது என்பது ஹாக்கிங்கின் முன் மொழிவாக இருந்தது.

ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட படைப்பாளியின் தேவை இல்லாமல், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு அறிவியல் விளக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஹாக்கிங் நம்பினார். ALS காரணமாக அவரது உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும், ஹாக்கிங்கின் குரல் உலகளவில் எதிரொலித்தது. அவரது உறுதியும், அறிவுத்திறனும், இயலாமையின் எல்லையைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்டீபன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி காலமானார். கடவுள் கோட்பாடு உட்பட பிரபஞ்சத்தின் ஆழமான கேள்விகளைப் பற்றி சிந்திக்க அவரது அறிவியல் ஆய்வுகள் வழிகாட்டியாக உள்ளது.

The post புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுதினம் இன்று! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
50931
100 ரூபாயில் புற்றுநோய் மருந்து: இந்திய மருத்துவர்கள் சாதனை! https://koodal.com/news/2024/03/01/tata-institute-claims-only-rs-100-tablet-can-prevent-recurrence-of-cancer/ Fri, 01 Mar 2024 13:20:57 +0000 https://koodal.com/?p=49792 புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில், (TMC) புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க மிககுறைந்த விலையில் மருந்தினை கண்டறிந்துள்ளது. தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு லட்சங்கள், கோடிகள் செலவழிக்கப்படும் நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரை வெறும் 100…

The post 100 ரூபாயில் புற்றுநோய் மருந்து: இந்திய மருத்துவர்கள் சாதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில், (TMC) புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க மிககுறைந்த விலையில் மருந்தினை கண்டறிந்துள்ளது. தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு லட்சங்கள், கோடிகள் செலவழிக்கப்படும் நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரை வெறும் 100 ரூபாய்க்கு கிடைக்கும் என மருந்தினை கண்டுபிடித்த டாடா மெமோரியல் சென்டர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய்களுக்கு இன்றைய தேதியில் சென்னை போன்ற பெருநகரங்களில் கோடிகளை அல்லது லட்சங்களை கொட்டி செலவு செய்தால் ஓரளவு தீர்வினை பெற முடியும்.. அதுவும் 100 சதவீதம் தீர்வினை பெற முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. அதேநேரம் அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய அசுர வளர்ச்சி ஏற்பட்டு வருவதால் மருத்துவதுறையில் மிகப்பெரிய புரட்சிகள் நடந்து வருகிறது. பல கடிமான நோய்களுக்கு மருந்தே இல்லை என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்கப்பட்டு வருகிறது. பல லட்சம் என்று விற்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகளின் செலவுகள் குறைந்து வருகிறது. சாமானியருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை முதல் குடல் மாற்று அறுவை சிகிச்சை வரை கிடைக்க தொடங்கி உள்ளது. உலகத்தில் பல்வேறு வகையான மருத்துவ கண்டுபிடிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெறும் 100 ரூபாயில் புற்றுநோயை கொல்லும் மருந்தினை இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை என்று இந்திய மருத்துவ துறையையே இந்த கண்டுபிடிப்பை புகழ்ந்து வருகிறது.

டாடா மெமோரியல் சென்டர் (TMC) புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க மிககுறைந்த விலையிலான மருந்தினை கண்டுபிடித்திருக்கிறது. ஐஏஎஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர் பொதுவாக புற்றுநோய் வந்தவர்களுக்கு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை அளித்து புற்றுநோய் குணமாக்கப்படுகிறது. இதில் இறக்கும் புற்றுநோய் செல்கள் உயிரணு இல்லாத குரோமாடின் துகள்களை வெளியிடுகின்றன. அப்படி வெளியிடப்படும் துகள்கள் காரணமாக நம்முடைய உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சைக்கு பின்னர், இறந்த புற்றுநோய் செல்கள் மூலம் வெளியிடப்படும் செல்-இலவச குரோமாடின் துகள்கள் உடலின் மற்ற செல்களுக்கு பரவாமல் தடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யும் மற்றும் அழிக்கும். மருந்துகள் எடுத்துக் கொண்டால் மட்டுமே புற்றுநோய் மீண்டும் வராது என்ற நிலை இருக்கிறது. இதை பல்வேறு மருத்துவ ஆய்வுகளுமே பரிந்துரைக்கிறது. மருத்துவ ஆய்வின்படி, இறக்கும் புற்றுநோய் செல்கள் உயிரணு இல்லாத குரோமாடின் துகள்களை (cfChPs அல்லது குரோமோசோம்களின் துண்டுகள்) நம் உடலுக்குள் வெளியிடுகின்றன. இது ஆரோக்கியமான செல்களை புற்றுநோயாக மாற்றும் அபாயம் உள்ளது. ரத்த ஓட்டத்தின் மூலம் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய புற்று நோய் கட்டிகளை ஏற்படுத்தலாம்.

குரோமாடின் துகள்கள் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம். செல்-இலவச குரோமாடின் துகள்கள் என்பது நமது உடலில் உள்ள டிஎன்ஏ மற்றும் புரோட்டீன்களின் சிக்கலான குரோமடினின் துண்டுகளை குறிப்பதாகும். அவை தான் குரோமோசோம்களை உருவாக்குகின்றன. அவை இரத்தம் அல்லது சிறுநீர் போன்ற உடல் திரவங்களில் செல்களுக்கு வெளியே நமது உடலில் காணப்படுகின்றன. இறந்த புற்றுநோய் செல்கள் குரோமாடின் துகள்களாகி சிறிய துண்டுகளாக உடைந்து, ரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று ஆரோக்கியமான செல்களுக்குள் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண டாடா மெமோரியல் சென்டர் கண்டுபிடித்த ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட புரோ-ஆக்ஸிடன்ட் மாத்திரைகளை பயன்படுத்த முடியும்.

“டாடா டாக்டர்கள் இந்த மாத்திரியை கண்டுபிடிக்க ஏறக்குறைய பத்தாண்டுகளாக பணியாற்றி உள்ளார்கள். இந்த மாத்திரைக்கு அனுமதி கேட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒப்புதலுக்காக TIFR விஞ்ஞானிகள் அனுப்பி உள்ளார்கள் . ஒப்புதல் கிடைத்த பிறகு, அது ஜூன்-ஜூலை முதல் சந்தையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த உதவும் என்று மூத்த புற்றுநோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து புற்றுநோய் சிகிச்சை சிகிச்சையின் பக்க விளைவுகளை சுமார் 50 சதவீதம் குறைக்கும் என்றும் இரண்டாவது முறை புற்றுநோயைத் தடுப்பதில் 30 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post 100 ரூபாயில் புற்றுநோய் மருந்து: இந்திய மருத்துவர்கள் சாதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
49792
பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன் https://koodal.com/news/science/2022/04/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/ Fri, 29 Apr 2022 13:10:59 +0000 https://koodal.com/?p=1438 மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் போது, எரிபொருள் மீதான வரியை 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே ஒன்றிய…

The post பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் போது, எரிபொருள் மீதான வரியை 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே ஒன்றிய அரசு குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.ஆனால் மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரியை குறைக்காமல் இருப்பதால் அம்மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து சிரமம் அடைந்து வருவதாக அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எதிர்க்கட்சி ஆளும் முதல்வர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே காரணம் என்று தெரிவித்தனர். மாநிலங்கள் மீது குறைக்கூற மோடி வெட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 2014ம் ஆண்டில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதே தற்போதைய விலை உயர்வுக்கு காரணம் என்றார். கடந்த 6 ஆண்டுகளாக கேரள அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரியை உயர்த்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை தராமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டாட்சி தத்துவதற்கு எதிராக பிரதமர் மோடி தான் செயல்படுவதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1438
தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு https://koodal.com/news/science/2022/04/13/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/ Wed, 13 Apr 2022 11:32:26 +0000 https://koodal.com/?p=724 தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன. தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில்,…

The post தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில், “தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன. புதிய வைரஸ்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.

The post தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
724
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வரிசைப்படுத்தல் முடிந்தது https://koodal.com/news/science/2022/01/09/james-webb-space-telescope-fully-deployed/ Sun, 09 Jan 2022 02:21:21 +0000 https://koodal.com/?p=410 அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகிய ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்று முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் சனிக்கிழமையன்று அதன் இரண்டு வார கால வரிசைப்படுத்தல் கட்டத்தை நிறைவுசெய்தது,…

The post ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வரிசைப்படுத்தல் முடிந்தது appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகிய ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்று முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் சனிக்கிழமையன்று அதன் இரண்டு வார கால வரிசைப்படுத்தல் கட்டத்தை நிறைவுசெய்தது, அண்ட வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆய்வு செய்யத் தயாராகும் போது இறுதி கண்ணாடிப் பலகத்தை விரிவுபடுத்தியது.

இதுவரை கட்டப்பட்ட மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹப்பிளின் வாரிசான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, டிசம்பர் 25 அன்று ஏரியன் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவில் இருந்து மிக துல்லியமாக ஏவப்பட்டது. இது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல்கள் (1.5 மில்லியன் கிலோமீட்டர்) அதன் சுற்றுப்பாதை புள்ளியை நோக்கி செல்கிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும். இதன் மூலம் விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடைகிடைக்கும் என்று கூறப்படுகிறது.

The post ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வரிசைப்படுத்தல் முடிந்தது appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
410