விளையாட்டு Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/sports/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 15 Jul 2025 04:43:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 விளையாட்டு Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/sports/ 32 32 201197430 திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு! https://koodal.com/news/2025/07/15/saina-nehwal-kashyap-announce-separation-from-married-life/ Tue, 15 Jul 2025 04:43:33 +0000 https://koodal.com/?p=90129 இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இதை சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில்…

The post திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இதை சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கச் செய்கிறது. நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நினைவுகளுக்கு நன்றியுடன் இருப்பேன். எங்களது இந்த முடிவை புரிந்து கொண்டதற்கும், எங்களது பிரைவசிக்கு மதிப்பு கொடுத்ததற்கும் நன்றி கூறுகிறேன்” என சாய்னா கூறியுள்ளார்.

சிறு வயது முதலே சாய்னாவும் காஷ்யப்பும் இணைந்து கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமியில் ஒன்றாக இணைந்து பயிற்சி செய்தவர்கள். ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற அடையாளத்தின் மூலம் சாய்னா கவனம் ஈர்த்தார். ஆடவர் பிரிவில் பருபள்ளி காஷ்யப் டாப் 10 இடத்தை பிடித்தவர். 2014-ல் காமன்வெல்த்தில் தங்கம் வென்றார். சாய்னா இரண்டு முறை காமன்வெல்த்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

The post திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
90129
தோனி ஒரு உண்மையான கிரிக்கெட் ஜாம்பவான்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! https://koodal.com/news/2025/06/10/dhoni-is-a-true-cricketing-legend-edappadi-palaniswami-congratulates-him/ Tue, 10 Jun 2025 09:59:49 +0000 https://koodal.com/?p=87348 முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்று உள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின்…

The post தோனி ஒரு உண்மையான கிரிக்கெட் ஜாம்பவான்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்று உள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக “எக்ஸ்” வலைத்தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தோனி ஒரு உண்மையான கிரிக்கெட் ஜாம்பவான் என்று புகழ்ந்த எடப்பாடி, அவரது தலைமைப் பண்பு, அமைதியான அணுகுமுறை மற்றும் ஆட்டத்தை முடிக்கும் திறமை ஆகியவை கிரிக்கெட்டில் புதிய அளவுகோல்களை அமைத்ததாக குறிப்பிட்டார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது முதல் 2011 உலகக் கோப்பையை ஒரு சிக்ஸருடன் முடித்தது வரை, தோனியின் பங்களிப்பு கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கௌரவம், அமைதியுடன் தலைமை தாங்கி, மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தி, இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பொற்காலத்தை வழங்கிய தோனிக்கு பொருத்தமான அங்கீகாரம் என்று எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

The post தோனி ஒரு உண்மையான கிரிக்கெட் ஜாம்பவான்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
87348
சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு! https://koodal.com/news/2025/02/05/praggnanandhaa-gets-a-rousing-welcome-at-chennai-airport/ Wed, 05 Feb 2025 04:41:16 +0000 https://koodal.com/?p=77102 நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். நேற்று தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டின் விஜிக்…

The post சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். நேற்று தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தாவும், உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷும் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் துபாய் வழியாக நேற்று காலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரக்ஞானந்தா கூறியதாவது:-

கடந்த 85 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொடரில் அதிக அளவிலான உலக சாம்பியன்கள் விளையாடிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு பாதியில் என் ஆட்டம் நன்றாக இல்லை. தற்போது 2025-ம் ஆண்டில் முதல் தொடரிலேயே வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொடருக்காக நிறைய பயிற்சிகள் எடுத்து வந்தேன்.

இந்த ஆண்டில் முக்கிய செஸ் தொடர்கள் நடைபெற உள்ளது. இதனால் தற்போதைய வெற்றியை முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். இந்த தொடரில் நான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மகிழ்ச்சியாகவே விளையாடினேன். கடைசி சுற்று மட்டும் பதற்றமாக இருந்தது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் விளையாடிய நானும், குகேஷும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் நமக்கு தான் அந்த பட்டம் கிடைத்திருக்கும். இது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.

The post சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
77102
கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாக்கர் வேண்டுகோள்! https://koodal.com/news/2024/12/24/manu-bhaker-clarifies-on-khel-ratna-nomination-amid-controversy/ Tue, 24 Dec 2024 16:45:46 +0000 https://koodal.com/?p=73493 ’கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதியானவள். ஆனால், அதை நாடு பார்த்துக்கொள்ளும்’ என மனு பாக்கர் கூறியதாக அவரது தந்தை ராம் கிஷன் கூறியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பெயர் இந்தாண்டுக்கான கேல்…

The post கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாக்கர் வேண்டுகோள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
’கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதியானவள். ஆனால், அதை நாடு பார்த்துக்கொள்ளும்’ என மனு பாக்கர் கூறியதாக அவரது தந்தை ராம் கிஷன் கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பெயர் இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் சமீபத்தில் தான் கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவரா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பின்னர் அந்தப் பதிவை நீக்கினார். 22 வயதாகும் மனு பாக்கர் இதற்கு முன்பு பல விருதுகளுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்ல என அவரது குடும்பத்தினர் பேசியிருப்பது சர்ச்சையைக் கூட்டியுள்ளது.

இந்த நிலையில் அவரது பெயர் கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இல்லை என்று சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானதைத் தொடர்ந்து மௌனம் கலைத்துள்ளார் மனு பாக்கர். தனது எக்ஸ் பக்கத்தில் மனு பாக்கர் கூறியுள்ளதாவது:-

சமீபத்திய கேல் ரத்னா விருது குறித்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் விளையாட்டு வீராங்கனையாக எனது பங்கு நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே. விருதுகள், மரியாதைகள் எனக்கு ஊக்கம் அளித்தாலும் அவை எனது நோக்கம் கிடையாது. விருதுக்கு விண்ணப்பிக்கும்போது என் தரப்பில் தவறு நடந்திருக்கலாம் என்று நம்புகிறேன், அது சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்த விருதுகளைவிட எனக்கு நாட்டுக்காக பல பதக்கங்களை வெல்வதே எனக்கு ஊக்கம் தருகிறது. இந்த விஷயத்தை பெரிதாக்காதீர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாக்கர் வேண்டுகோள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
73493
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சிகிச்சை! https://koodal.com/news/2024/12/23/vinod-kamblis-health-deteriorates-admitted-to-hospita/ Mon, 23 Dec 2024 15:49:30 +0000 https://koodal.com/?p=73379 பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான வினோத் காம்பிளி, தற்போது போதை பழக்கத்தால் உடல் நலம் வெகுவாக…

The post உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சிகிச்சை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான வினோத் காம்பிளி, தற்போது போதை பழக்கத்தால் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய அணிக்காக 17 டெஸ்ட், 104 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வினோத் காம்பிளி இதுவரை நான்கு முறை டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். இதில் இரண்டு இரட்டை சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை வினோத் காம்பிளிக்கு உள்ளது. எனினும் வினோத் காம்பிளி ஒழுக்கமின்மை மற்றும் போதை, மது, மாது போன்ற பழக்கத்தில் சிக்கியதால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் கிரிக்கெட்டில் நாட்டம் இல்லாததால் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் வினோத் காம்பிளி பொருளாதார ரீதியாகவும் சரிவை சந்தித்தார்.

இந்த நிலையில் வினோத் காம்பிளி அண்மையில் தன்னுடைய பயிற்சியாளர் ராம்கண்ட் அர்ச்சேக்கரின் நூறாவது பிறந்தநாள் விழாவில் சச்சின் உடன் கலந்து கொண்டார். அப்போது வினோத் காம்பிளியின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வினோத் காம்பிளி தானேவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வினோத் காம்பிளியின் உடல் நலத்தில் திடீர் சரிவு ஏற்பட்டது. தற்போது அவர் உடல் நலம் சீராக இருந்தாலும் ஆபத்தான நிலையிலே இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

வினோத் காம்பிளிக்கு சிறுநீர் தொற்று பிரச்சனை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதயத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. வினோத் காம்பிளிக்கு உதவ தயார் என அண்மையில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர். போதை பழக்கத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை பெற முயற்சி செய்கிறேன் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சிகிச்சை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
73379
அஸ்வினுக்கு உருக்கமான கடிதம் எழுதிய பிரதமர் நரேந்திர மோடி! https://koodal.com/news/2024/12/22/pm-modis-heartfelt-letter-to-ashwin-on-his-retiremen/ Sun, 22 Dec 2024 10:54:43 +0000 https://koodal.com/?p=73267 இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்த அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து…

The post அஸ்வினுக்கு உருக்கமான கடிதம் எழுதிய பிரதமர் நரேந்திர மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்த அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு அவரை வாழ்த்தி இருக்கிறார்.

அஸ்வின் ஓய்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த கடிதம் உங்களை வந்து அடையும் என நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னும் பல ஆஃப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை வீசினீர்கள். இருப்பினும், இது உங்களுக்கும் கடினமான முடிவாக இருந்திருக்கும், குறிப்பாக நீங்கள் இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை ஆடியவர் என்ற அடிப்படையில் உங்கள் முடிவை அனைவரும் புரிந்துகொள்வார்கள். புத்திசாலித்தனம், கடின உழைப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அணியை முன்னிலைபடுத்தி ஆடியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் விடைபெற்ற நிலையில்,​​ஜெர்சி எண் 99 உங்கள் இழப்பை உணரவைக்கும். நீங்கள் பந்துவீசுவதற்கு கிரீஸில் இருந்தபோது ஏற்படும் எதிர்பார்ப்பு உணர்வை இனி கிரிக்கெட் பிரியர்கள் இழக்க நேரிடும். நீங்கள் எதிரணியைச் சுற்றி ஒரு வலையைப் பின்னுகிறீர்கள் என்ற உணர்வு எப்போதும் இருந்தது. அது எதிரணியினரை எந்த நேரத்திலும் சிக்க வைக்கும். பழைய ஆஃப்-ஸ்பின் டெக்னிக் மற்றும் அதில் பல புதுமையான மாறுபாடுகள் மூலம் பேட்ஸ்மேன்களை மிஞ்சும் அசாத்திய திறமையை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அனைத்து வடிவங்களிலும் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான தொடர் ஆட்டக்காரர் விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனையை வைத்திருப்பது என்பது, கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றியில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டுகிறது.

ஒரு இளம் வீரராக, உங்கள் டெஸ்ட் அறிமுகத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தீர்கள். 2013 சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி ஓவரில் நீங்கள் அணியை வெற்றிபெறச் செய்த போது, நீங்கள் இந்திய அணியின் முக்கிய உறுப்பினராக மாறிவிட்டீர்கள். பின்னர், நீங்கள் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பல வெற்றிகள் மூலம் அணியில் மூத்த வீரராக முக்கிய பங்கு வகித்தீர்கள். ஐசிசியின் ஆண்டின் சிறந்த வீரர் விருது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் உலகளாவிய மரியாதையையும் பெற்றுள்ளீர்கள். ஒரே போட்டியில் பலமுறை சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உங்களின் ஆல் – ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். 2021 இல் சிட்னியில் பேட்டிங்கின் போது துணிச்சலான இன்னிங்ஸ் ஆடி போட்டியை காப்பாற்றி, பல நினைவுகளை நமது தேசத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள். தாங்கள் விளையாடிய சில அற்புதமான ஷாட்களுக்காக மக்கள் சில வீரர்களை அடிக்கடி நினைவுகூருவார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் புகழ்பெற்ற போட்டியில் (இந்தியா – பாகிஸ்தான் போட்டி) ஒரு ஷாட் மற்றும் பந்தை அடிக்காமல் விட்டதற்காக நீங்கள் நினைவுகூரப்படும் வீரராக இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அடித்த வெற்றிக்கான ஷாட் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் அதற்கு முந்தைய பந்தை அடிக்காமல் விட்டுச் சென்ற விதம், அதை வைட் பந்தாக மாற்றியது. அது உங்கள் விழிப்பான மனதை எங்களுக்கு காட்டியது. இக்கட்டான தருணங்களில் கூட, உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு முதன்மையாக இருந்தது.

உங்கள் தாயார் மருத்துவமனையில் இருந்தபோதும் அணிக்கு பங்களிக்க வேண்டி நீங்கள் போட்டிக்கு திரும்பி வந்த விதம் மற்றும் சென்னையில் வெள்ளத்தின் போது உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாதபோதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நீங்கள் விளையாடிய நேரத்தை நாங்கள் அனைவரும் நினைவில் கொள்கிறோம்.​​உங்கள் நெகிழ்வுத்தன்மையும், தகவமைப்புத் தன்மையும் தனித்து நிற்கின்றன. விளையாட்டின் பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப உங்கள் அணுகுமுறையை நீங்கள் வடிவமைத்த விதம் அணிக்கு ஒரு சொத்தாக இருந்தது. ஒரு பொறியியலாளராக நீங்கள் பெற்ற கல்வி, நுட்பமான மற்றும் விவரம் சார்ந்த அணுகுமுறையில் உங்களுக்கு உதவியது எனக்கு வியப்பை அளிக்கிறது. உங்களின் உங்களது கூர்மையான கிரிக்கெட் மூளையை பல ஆய்வாளர்கள் மற்றும் சக வீரர்கள் பாராட்டி உள்ளனர். இதுபோன்ற அறிவு எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் உரையாடல்களில் நீங்கள் கொண்டு வரும் புத்திசாலித்தனம் மற்றும் அரவணைப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. கிரிக்கெட், விளையாட்டு மற்றும் பொதுவாக வாழ்க்கை பற்றிய ‘குட்டி ஸ்டோரீஸ்’-ஐ தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விளையாட்டின் தூதராக நீங்கள் நாட்டையும், உங்கள் குடும்பத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர், உங்கள் மனைவி பிரித்தி மற்றும் உங்கள் மகள்களையும் வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். அவர்களின் தியாகம் மற்றும் ஆதரவு, ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்ததாக நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை வருடங்களாக நீங்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என நினைக்கிறேன். இனி நீங்கள் மிகவும் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்களிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். மீண்டும் ஒருமுறை, உங்களது சிறந்த பங்களிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அஸ்வினுக்கு உருக்கமான கடிதம் எழுதிய பிரதமர் நரேந்திர மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
73267
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துக்கு நிச்சயதார்த்தம்! https://koodal.com/news/2024/12/14/indian-badminton-player-p-v-sindhu-is-engaged/ Sat, 14 Dec 2024 16:27:41 +0000 https://koodal.com/?p=72694 இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.…

The post இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துக்கு நிச்சயதார்த்தம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று சிந்துவுக்கும் வெங்கட தத்தா சாய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கலீல் ஜிப்ரான் அவர்களின் கவிதையான, “அன்பு உங்களை அழைக்கும் போது, அதை பின்தொடருங்கள், ஏனென்றால் அன்பு தன்னைத் தவிர வேறு எதையும் கொடுக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

இவர்களின் திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும் என்றும் 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சிந்துவின் அப்பா தெரிவித்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிந்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

The post இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துக்கு நிச்சயதார்த்தம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
72694
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு: முதல்வர் ஸ்டாலின்! https://koodal.com/news/2024/12/14/world-chess-champion-kukesh-gets-rs-5-crore-cash-prize-chief-minister-stalin/ Sat, 14 Dec 2024 04:47:17 +0000 https://koodal.com/?p=72624 சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்​பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்​கம், டிராபி​யுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகை​யும் வழங்​கப்​பட்​டது. அவரை ஊக்கப்​படுத்​தும் வகையில் தமிழக அரசு சார்​பில்…

The post உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்​பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்​கம், டிராபி​யுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகை​யும் வழங்​கப்​பட்​டது. அவரை ஊக்கப்​படுத்​தும் வகையில் தமிழக அரசு சார்​பில் ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்​றுள்​ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்​டரான 18 வயது குகேஷ். இதன்​மூலம் இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் படைத்தார். விஸ்​வநாதன் ஆனந்​துக்கு பிறகு உலக சாம்​பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்றுள்​ளார். உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி நிறைவு விழா சிங்​கப்​பூரில் நேற்று மாலை நடந்தது. இதில், இளம் உலக சாம்​பியனான குகேஷுக்கு, தங்கப் பதக்​கத்​தை​யும், டிராபியை​யும் சர்வதேச செஸ் சங்கத்​தின் (ஃபிடே) தலைவர் ஆர்கடி டிவோர்​கோ​விச் வழங்​கினார். ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை​யும் அவருக்கு வழங்​கப்​பட்​டது.

விழா​வில் குகேஷ் பேசும்​போது, “நான் ஒரு மில்​லியன் முறை வாழ்ந்​ததுபோல இத்தருணத்தை உணர்​கிறேன். இந்த கோப்​பையை ஏந்தி​யிருப்​பதை, என் வாழ்க்கை​யில் மற்ற எல்லா​வற்​றை​யும்விட முக்​கிய​மானதாக கருதுகிறேன். பல கனவு​களோடு, பல சவால்​களும் இந்த பயணத்​தில் இருந்தன. என்னுடன் இருந்​தவர்​களால் அது அழகாகவே அமைந்​தது. நான் தீர்வுகாண முடி​யாமல் தவித்து நின்ற நேரத்​தில், கடவுள்​தான் என்னை அழைத்துச் சென்று வழிகாட்​டி​யுள்​ளார்” என்று தெரிவித்தார்.

சாம்​பியன் டிராபியை பெற்ற பிறகு, மேடை​யில் இருந்து இறங்கி வந்த குகேஷ், அதை தனது தந்தை ரஜினி​காந்​திடம் வழங்​கினார். அவர், அதை குகேஷின் அம்மா பத்மகு​மாரி​யிடம் கொடுத்​தார். அதை கைகளில் வாங்கிய அவர், நெகிழ்ச்​சி​யுடன் முத்​தமிட்​டார். விழா​வில் நூற்றுக்​கணக்கான ரசிகர்கள் குகேஷை சூழ்ந்தனர். மகிழ்ச்​சி​யுடன் அவர்கள் அனைவருக்​கும் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.

முன்னதாக ஃபிடே சார்​பில் காலையில் நடத்​தப்​பட்ட போட்​டோ ஷூட்​டின்​போது, டிராபியை வியந்து பார்த்த குகேஷ், “நிறைவு விழா​விலேயே டிராபியை பெற்றுக் கொள்​கிறேன். இப்போது தொட்டுப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி​விட்​டார்.

மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் வென்று உலக செஸ் சாம்​பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியா​வுக்​கும் தமிழகத்​துக்​கும் பெருமை சேர்த்த குகேஷை, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்​தில் பாராட்டி வாழ்த்தி பதிவிட்​டிருந்​தார். அத்துடன் தொலைபேசி வாயி​லாக​வும் அவரை தொடர்​பு​கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார்.

தமிழகத்​துக்கு பெருமை சேர்த்​துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்​கப்​ பரிசு வழங்குமாறு முதல்​வருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் கோரிக்கை விடுத்​தார். அதையேற்று, கு​கேஷை மேலும் ஊக்கு​விக்​கும் வகையில், ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார் என தமிழக அரசு வெளி​யிட்ட அறிவிப்​பில் கூறப்​பட்​டுள்ளது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குகேஷ், சென்னை அடுத்த மேல் அயனம்​பாக்​கத்​தில் உள்ள வேலம்​மாள் வித்​யாலயா பள்ளி மாணவர் ஆவார். அவரது வெற்றி குறித்து பள்ளி நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள செய்தி​யில், ‘தனது செஸ் பயணத்தை சிறு​வய​திலேயே தொடங்​கியவர் குகேஷ். அவரது திறமையை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்ட பள்ளி, அவரது திறமைகளை வளர்த்​துக் கொள்ள முழு ஆதரவு வழங்கியது. கடும் பயிற்சி மற்றும் விளை​யாட்​டின் மீதான ஆர்வத்​தால் 12 வயதிலேயே கிராண்ட்​மாஸ்டர் பட்டம் பெற்​றார், தற்போது இந்​திய சதுரங்​கத்​தில் ஒரு பு​திய சகாப்​தம் படைத்துள்ளார். இளம் ​திறமையாளர்களை வளர்க்​கும் வேலம்​மாள் போன்ற நிறு​வனங்​களின் அர்ப்​பணிப்பு, ஆதர​வுக்கு இது ஒரு சான்​று’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

The post உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
72624
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா! https://koodal.com/news/2024/12/04/sara-takes-charge-as-director-of-sachin-tendulkar-foundation/ Wed, 04 Dec 2024 16:23:19 +0000 https://koodal.com/?p=71879 சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக சச்சின் டெண்டுல்கரின்…

The post சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இருந்து வருகிறார். இந்நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை அவர் தொடங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.

The post சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
71879
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்! https://koodal.com/news/2024/11/12/chennai-grand-masters-2024-arvind-chidambaram-champion/ Tue, 12 Nov 2024 04:38:32 +0000 https://koodal.com/?p=69855 சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த், பிரணவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

The post சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த், பிரணவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி சரானா, இந்தியாவின் விதித் குஜ்ராத்தியை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

3-வது போர்டில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் மாக்சிம்வாச்சியர் லாக்ரேவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 38-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். 4-வது போர்டில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, இந்தியாவின் அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 64-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

கடைசி சுற்றின் முடிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகளை பெற்றிருந்தனர். இதனால் சாம்பியன் பட்டம் யாருக்கும் என்பதை தீர்மானிக்க டை பிரேக்கர் நடத்தப்பட்டது. இதில் முதல் டைபிரேக்கரில் லெவோன் அரோனியன், அர்ஜுன் எரிகைசி மோதினார்கள். 2 ஆட்டங்கள் கொண்ட டை பிரேக்கரில் முதல் ஆட்டத்தில் லெவோன் அரோனியனும், 2-வது ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசியும் வெற்றி பெற்றார்கள். இதையடுத்து சடன்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆட்டம் டிரா ஆனது. இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய லெவோன் அரோனியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து லெவோன் அரோனியன், அரவிந்த் சிதம்பரத்துடன் டை பிரேக்கரில் பலப்பரீட்சை நடத்தினார். இதில் இரு ஆட்டங்களிலும் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அரவிந்த் சிதம்பரம், தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.

2-வது இடம் பிடித்த லெவோன் அரோனியனுக்கு ரூ.11 லட்சமும், 3-வது இடம் பிடித்த இந்தியாவின் அர்ஜுன் எரிகைசிக்கு ரூ.11 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 4 புள்ளிளுடன் 4-வது இடம் பிடித்த ஈரானின் அமீன் தபதாபேயிக்கு ரூ.5 லட்சமும், 3 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்த பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுக்கு ரூ.4 லட்சமும், 2.5 புள்ளிகளுடன் 6-வது இடம் பிடித்த ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுக்கு ரூ.4 லட்சமும், 2.5 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்த செர்பியாவின் அலெக்ஸி சாரானாவுக்கு ரூ.2.66 லட்சமும், 2.5 புள்ளிகளுடன் 8-வது இடம் பிடித்த விதித் குஜ்ராத்திக்கு ரூ.2.66 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

சாலஞ்சர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் பிரணவ், லியோன் மென்டோன்கா மோதினார்கள். இந்த ஆட்டம் 41-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் ஹரிகா துரோணவல்லி, பிரனேஷ் மோதினார்கள். இந்த ஆட்டம் 52-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.

3-வது போர்டில் அபிமன்யு புராணிக், ரவுனக் சத்வானி மோதினார்கள். இந்த ஆட்டம் 32-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிடைந்தது. 4-வது போர்டில் ஆர்.வைஷாலி, கார்த்திக்கேயன் முரளியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 42-வதுகாய் நகர்த்தலின் போது கார்த்திக்கேயன் முரளி வெற்றி பெற்றார். 7 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் முடிவில் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரணவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.6 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மேலும் சாலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் கலந்துகொள்ள நேரடியாகவும் தகுதிபெற்றார் பிரணவ். 5 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்த லியோன் மென்டோன்காவுக்கு ரூ.4 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 4 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்த ரவுனக் சத்வானிக்கு ரூ.3.20 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த், பிரணவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகத் திறமையால், குறிப்பாக இறுதிச் சுற்றில், தனது மூலோபாய புத்திசாலித்தனத்தை உறுதிபட நிரூபித்து பட்டம் வென்ற அரவிந்துக்கு வாழ்த்துகள். பிரணவுக்கும் பாராட்டுகள், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது. உலகளாவிய செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் இந்த நிகழ்விற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

The post சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
69855