இலங்கை Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/srilanka/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Fri, 22 Aug 2025 10:45:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 இலங்கை Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/srilanka/ 32 32 201197430 இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது! https://koodal.com/news/2025/08/22/former-sri-lankan-president-ranil-wickremesinghe-arrested/ Fri, 22 Aug 2025 10:45:32 +0000 https://koodal.com/?p=93096 அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சம்மன் வழங்கிய நிலையில், அவர்…

The post இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சம்மன் வழங்கிய நிலையில், அவர் கொழும்புவில் சிஐடி(CID) அதிகாரிகள் முன்பு இன்று ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரணில் விக்ரமசிங்க உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இன்று(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ரணில் விக்ரமசிங்க சென்றுள்ளார். இதற்காக இலங்கை அரசின் நிதியில் இருந்து ரூ. 1.7 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரணில் விக்ரமசிங்க உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93096
இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை! https://koodal.com/news/2025/07/03/indian-fishermen-will-be-arrested-if-they-trespass-sri-lanka/ Thu, 03 Jul 2025 04:40:52 +0000 https://koodal.com/?p=89174 இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப்…

The post இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இரண்டு மாதம் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14, 2025 வரை இந்த வருடாந்திர தடைக்காலம் அமலில் இருந்தது. பாக் ஜலசந்தியில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தடைக்காலம் முடிவடைந்த உடனேயே, தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கத் தொடங்கினர். ஜூன் 30, 2025 அன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து 19 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள) மைலிட்டி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பிரச்சினையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.

பல பத்தாண்டுகளாக நீடிக்கும் பாக் ஜலசந்தி மீன்பிடி மோதல் தமிழ்நாட்டிலும், வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள ஏழை மீனவர்களைப் பாதித்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் நோக்கில், 2016-ம் ஆண்டு இந்திய – இலங்கை அரசுகள் ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைத்தன. இந்த குழு, இழுவை மீன்பிடி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

The post இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
89174
இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு! https://koodal.com/news/2025/05/12/15-people-killed-in-bus-accident-in-sri-lanka/ Mon, 12 May 2025 05:23:39 +0000 https://koodal.com/?p=85387 இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70…

The post இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் கூடுதலாக 20 பேர் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் விபத்துக்கு இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக்குறைவு உட்பட வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

The post இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85387
சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் சோதனை! https://koodal.com/news/2025/05/03/srilankan-airlines-flight-from-chennai-searched-at-colombo-over-suspiction-of-pahalgam-terror-suspects-onboard/ Sat, 03 May 2025 15:43:39 +0000 https://koodal.com/?p=84740 சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து…

The post சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் சோதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர், இலங்கைக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வந்த தகவலையடுத்து, இலங்கையின் பண்டாரநாயகே விமான நிலையத்தில், சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளும் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கை தப்பியிருக்கலாம் என்று இந்திய புலனாய்வுப் பிரிவு அளித்த தகவலையடுத்து இன்று சனிக்கிழமை, ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியா தரப்பிலிருந்து, 6 பயங்கரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையிலிருந்து வந்த விமானம், பண்டாரநாயகே விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தேடுதல் பணி நடத்தப்பட்டது.

சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல்122 எண் விமானம் சென்னையிலிருந்து இன்று முற்பகல் 11.59 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு சென்றதும், பாதுகாப்புப் படை அதிகாரிகளால் முழுவதுமாக சோதனையிடப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புச் சோதனையானது, இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் விமானத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்படி, உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த விமானம் அடுத்து சிங்கப்பூர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், எங்களது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிக மோகமான தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் சோதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
84740
இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க! https://koodal.com/news/2025/04/05/we-will-not-allow-sri-lankan-territory-to-be-used-against-india-president-dissanayake/ Sat, 05 Apr 2025 16:30:12 +0000 https://koodal.com/?p=82233 இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு…

The post இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.

அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு கொழும்புவில் பேசிய அதிபர் அனுர திசநாயக்க கூறியதாவது:-

வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்த கொள்கையின் தொடக்கமாக பிரதமர் மோடியும் நானும் பல்வேறு மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் சாத்தியமான கூட்டாண்மை குறித்து விவாதித்தோம். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்துக்காக இந்திய அரசு வழங்கியுள்ள ரூ.300 கோடி நிதியுதவிக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை அரசு அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடி) இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை வழங்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர். இதனை நாங்கள் பூரணமாக நம்புகிறோம்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது. நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே அண்டை நாடுகளான நாம் ஆழமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் மத ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ளோம். இந்த உறவு இரு நாடுகளுக்கு இடையே பகிரப்பட்ட மதிப்பீடுகள், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்த விருப்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இரு நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்காக சந்தித்துக் கொண்டனர். கூட்டத்துக்கு முன்பாக இருவரும் பரஸ்பர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவின் பிரிதிநிதிகளாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், இந்தியா – இலங்கை – யுஏஇ இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க பிரதமர் மோடிக்கு வழங்கினார். இதில் உள்ள தம்மச் சக்கரம் இரண்டு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைக்க பகிரப்பட்ட பவுத்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட புன்னிய கலசம் செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது. நவ ரத்தினங்கள் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மதிப்புமிக்க மற்றும் நீடித்த நட்புறவைக் குறிக்கிறது. இது தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பூமிக்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக சூரியன் சந்திரன் கடந்த காலத்தில் இருந்து எதிர்காலம் வரை தொடரும் முடிவுறா பிணைப்பினைக் குறிக்கிறது. இந்த கூறுகள் எல்லாம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார, மத ரீதியிலான தொடர்புகளை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

The post இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82233
தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்! https://koodal.com/news/2025/04/05/prime-minister-modi-urges-tamil-nadu-fishermen-to-release-their-boats/ Sat, 05 Apr 2025 16:22:29 +0000 https://koodal.com/?p=82225 மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.…

The post தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று அவர் கொழும்புவில், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இன்று நாங்கள் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினோம். மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமரசம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

இலங்கை அரசு, தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்றும், அரசியலமைப்பினை நிறைவேற்றும் திசையில் செயல்படும் என்றும், கவுன்சில் தேர்தல் குறித்த அவர்களின் உறுதிமொழிகளை பூர்த்தி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுக்கு 10,000 வீடுகள் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.

உண்மையான நண்பன் மற்றும் நட்பை விட எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு தரும் கேடயம் வேறொன்று இருக்க முடியாது என்று தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதிபர் அனுர குமார திசநாயக்க தனது பயணத்துக்கான முதல் வெளிநாடாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். இன்று அவர் பதவியேற்ற பின்பு இலங்கைக்கு முதல் வெளிநாட்டு பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன். நமது நட்பின் சிறப்பினையும் ஆழத்தையும் இது வெளிப்படுத்துகிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பதிலும், சாகர் திட்டத்திலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு.

நான் இலங்கைக்கு வருவது இது நான்காவது முறை. கடந்த முறை மிக முக்கியமான காலகட்டத்தில் நான் இலங்கைக்கு வந்தேன். அப்போது இலங்கை மீண்டெழும், வலிமையாக மீண்டெழும் என்று நான் நம்பினேன். இன்று இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையான நண்பனாக நாங்கள் இலங்கையுடன் நின்றது எங்களுக்கு பெருமையளிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலோ, கொரோனா பெருந்தொற்றோ அல்லது சமீபத்திய பொருளாதார நெருக்கடியோ நாங்கள் இலங்கை மக்களுடன் துணையாக நின்றிருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இலங்கையின் உயரிய விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளிட்டுள்ள பதிவில், “இன்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவால் இலங்கை மித்ர விபூஷண விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இது எனக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை. 140 கோடி இந்திய மக்களுக்கான பெருமை. இந்த மரியாதை, இரு நாடுகளுக்கு இடையே வேரூன்றிய ஆழமான நட்பு மற்றும் வரலாற்று உறவுகளையே குறிக்கிறது. இந்த மரியாதைக்காக இலங்கை அதிபர், அரசு மற்றும் இலங்கை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82225
இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! https://koodal.com/news/2025/04/05/prime-minister-modi-receives-enthusiastic-welcome-in-sri-lanka/ Sat, 05 Apr 2025 04:41:08 +0000 https://koodal.com/?p=82192 இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர்…

The post இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் மூத்த மந்திரிகள் அடங்கிய குழு ஒன்று பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றது.

அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதில் முக்கியமாக, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகாவுடன் இன்று (சனிக்கிழமை) விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையுடனான ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதைத்தவிர எரிசக்தி, இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பிரதமர் மோடியின் பயணம் உதவும் என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். மேலும் இந்தியா உதவியுடன் இலங்கையில் நடந்துள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் இணைந்து தொடங்க வைக்கிறார்கள். மேலும் சோலார் திட்டம் ஒன்றுக்கும் இருவரும் இணைந்து அடிக்கல் நாட்டுகின்றனர்.

The post இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82192
இலங்கையில் தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை! https://koodal.com/news/2025/04/04/11-tamil-nadu-fishermen-released-unconditionally-in-sri-lanka/ Fri, 04 Apr 2025 15:01:50 +0000 https://koodal.com/?p=82151 பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, நெடுந்தீவு அருகே…

The post இலங்கையில் தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின் போது சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி , இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்ட், பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், அந்தோணி சீசரியன், முத்துகளங்கியம், கிறிஸ்துராஜாஆகிய 11மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களின் வழக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவர்களின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.

ஊர்காவல் துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன் மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 11 பேரை தண்டனை மற்றும் அபதராமின்றி விடுதலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

The post இலங்கையில் தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82151
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு! https://koodal.com/news/2025/03/27/rameswaram-fishermen-representatives-meet-with-tamil-nadu-fishermen-in-sri-lankan-jail/ Thu, 27 Mar 2025 16:40:08 +0000 https://koodal.com/?p=81378 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 21 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 159 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 60 மீனவர்கள் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக…

The post இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 21 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 159 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 60 மீனவர்கள் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள நடைபெற்ற தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்தித்துப் பேசினர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் தங்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகவும், தங்களது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ராமேசுவரம் மீனவர் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

The post இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் ராமேசுவரம் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
81378
இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வவுனியா கூட்டத்தில் வலியுறுத்தல்! https://koodal.com/news/2025/03/27/indian-and-sri-lankan-governments-should-hold-talks-emphasis-at-vavuniya-meeting/ Thu, 27 Mar 2025 04:24:26 +0000 https://koodal.com/?p=81305 மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்திய, இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வவுனியாவில் நடந்த இரு நாட்டு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் உள்ள வவுனியாவில்…

The post இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வவுனியா கூட்டத்தில் வலியுறுத்தல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்திய, இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வவுனியாவில் நடந்த இரு நாட்டு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் உள்ள வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் (ராமேசுவரம்), சுரேஷ் (நாகை மாவட்டம்) ஆகியோரும், இலங்கை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி சேசுராஜா, இலங்கை மீனவப் பிரதிநிதிகள் அன்னராசா (யாழ்ப்பாணம்), ஆலம் (மன்னார்) ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2016-ல் டெல்லியில் கடைசியாக நடந்த இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவுகள் எதையுமே கடந்த 9 ஆண்டுகளில் இரு நாட்டு அரசாங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் பிரச்சினைகளை இரு நாட்டு அரசுகளும் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, உடனடியாக இரு நாட்டு அரசுகளும் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல்கட்டமாக இரு நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து, அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பது ராமேசுவரம் மீனவர்களின் நோக்கமல்ல. இழு வலை மூலம் மீன்பிடிப்பதை படிப்படியாக நிறுத்தவும் சம்மதிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

முன்னதாக, நடுக்கடலில் இறந்த இரு நாட்டு மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

The post இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வவுனியா கூட்டத்தில் வலியுறுத்தல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
81305