தமிழகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/tamilnadu/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 21 Nov 2024 16:08:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 தமிழகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/tamilnadu/ 32 32 201197430 திருநெல்வேலியில் வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும்: சீமான்! https://koodal.com/news/2024/11/21/the-department-of-charities-should-abandon-its-attempt-to-demolish-houses-in-tirunelveli-seeman/ Thu, 21 Nov 2024 16:06:36 +0000 https://koodal.com/?p=70672 திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- திருநெல்வேலி மாநகரம், செங்குந்தர் தெருவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும்…

The post திருநெல்வேலியில் வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும்: சீமான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

திருநெல்வேலி மாநகரம், செங்குந்தர் தெருவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வரும் 32 வீடுகளை, கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை இடித்து மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

நூறு ஆண்டுகளுக்கு முன் நத்தம் நிலமாக இருந்த பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புக்கு அதற்கான தீர்வையையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு திருஞானசம்பந்தர் கோயில் அறங்காவலர்கள் சார்பாக வீடுகள் அமைந்துள்ள நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்றுகூறி திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கோயில் நிலம் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று, மக்களுக்குச் சாதகமாக வழக்கின் தீர்ப்பு அமைந்ததால், கோயில் அறங்காவலர்கள் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

அன்றாடம் உழைத்து வறுமையில் வாழும் அம்மக்களிடம் பணம் இல்லாத காரணத்தாலும், வழக்கு தொடர்பான விபரம் தெரியாத அறியாமையில் இருந்ததாலும், மேல்முறையீட்டு வழக்கில் 32 வீடுகளைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளாத நிலையில், அதனைப் பயன்படுத்தி கடந்த 1997 ஆம் ஆண்டு வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறும் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, 32 வீடுகளில் 2 வீடுகள் மட்டும் சரிந்து விழுந்துள்ளது. 2 வீடுகள் இடிந்ததையும், நீதிமன்ற தீர்ப்பையும் காரணம் காட்டி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை வீடுகளை இடிக்க ஆணை பிறப்பித்ததுடன், கடந்த 19.11.2024 அன்று காவல்துறை துணையுடன் அவ்வீடுகளை இடிக்கவும் முற்பட்டுள்ளது. அதனை எதிர்த்து அங்கு வாழும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலி நகர நாம் தமிழர் கட்சி உறவுகளும் மக்களுக்குத் துணையாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திலும் 32 குடும்பங்கள் சார்பாக வழக்கும் தொடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழில் செய்து வறுமையில் வாழ்ந்து வருவதால் வழக்கைத் தொடர்ந்து நடத்தவே பணமின்றி தவித்து வருகின்றனர்.

நத்தம் நிலம் என 1910ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலம், பின்னாளில் திருஞானசம்பந்தர் கோயில் நிலம் எனத் தவறுதலாக மாற்றப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறும் நிலையில், அவர்களின் வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கடுமை காட்டுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே சிவநெறி கூறும் அறநெறியாகும். எந்த கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த பக்தியும் ஆகாது. இன்றளவும் கோயில்கள் பெயரில் உள்ள ஏராளமான விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளை ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தியே வருகின்றனர். கருணை அடிப்படையில் அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை எனும் நிலையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மக்கள் கடந்த 60ஆண்டுகளாக வாழ்ந்துவரும் வீடுகளை மட்டும் இடித்து, வலுக்கட்டாயமாக மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்ற முயல்வது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

ஆகவே, திருநெல்வேலி மாநகரம், செங்குந்தர் நடுத்தெருவில் அமைந்துள்ள 32 வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டுமெனவும், அதற்கென தொடர்ந்துள்ள வழக்கையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருநெல்வேலியில் வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும்: சீமான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70672
இனி அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம்! https://koodal.com/news/2024/11/21/from-now-on-new-appointments-will-be-made-only-through-outsourcing-anna-university/ Thu, 21 Nov 2024 16:04:13 +0000 https://koodal.com/?p=70670 இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணிநியமனங்களை மேற்கொள்வது என அண்ணா பல்கலைக்கழகம் திடீர் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும்…

The post இனி அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணிநியமனங்களை மேற்கொள்வது என அண்ணா பல்கலைக்கழகம் திடீர் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாம். ஏதேனும் ஒரு துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் பற்றாக்குறை உள்ள வேறு துறையில் பணியமர்த்தலாம். இந்த புதிய உத்தரவு 20.1. 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவாளரின் இந்த சுற்றறிக்கை காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவி பேராசிரியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அவற்றில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள்.

அண்மையில் தேசிய கல்விக்கொள்கை-2020 தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க சென்னை வந்திருந்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இனி அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70670
புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி! https://koodal.com/news/2024/11/21/actress-kasthuri-released-from-puzhal-prison/ Thu, 21 Nov 2024 16:03:01 +0000 https://koodal.com/?p=70667 புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை…

The post புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.

நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இது குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தேடிவந்தனர். கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.‌

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. எனினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் இன்று வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் நடிகை கஸ்தூரி. சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு நின்று வரவேற்றனர். அப்போது, “மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!” என்று அவர்கள் முழக்கமிட்டனர். சால்வை அணிவித்து வரவேற்றனர்.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவளித்த தெலங்கானா, ஆந்திர மக்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

The post புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70667
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை: தமிழ்நாடு அரசு! https://koodal.com/news/2024/11/21/no-permission-has-been-given-to-set-up-a-tungsten-mine-in-madurai-tamil-nadu-government/ Thu, 21 Nov 2024 16:01:06 +0000 https://koodal.com/?p=70665 மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 2000…

The post மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை: தமிழ்நாடு அரசு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 2000 ஹெக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இதையடுத்து தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு அளித்த அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை எனவும் மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதி பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிகையில், “ஒன்றிய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும். அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

The post மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை: தமிழ்நாடு அரசு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70665
நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா?: செல்லூர் ராஜு https://koodal.com/news/2024/11/21/2-special-teams-to-catch-the-actress-but-senthil-balajis-brother-couldnt-be-caught-sellur-raju/ Thu, 21 Nov 2024 16:00:06 +0000 https://koodal.com/?p=70663 நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு திரைப்பட நடிகை.…

The post நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா?: செல்லூர் ராஜு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.

ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல்துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.

ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர். எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நடிகையை பிடிக்க 2 தனிப்படை, ஆனால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா?: செல்லூர் ராஜு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70663
வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! https://koodal.com/news/2024/11/21/high-court-orders-bar-council-to-make-recommendations-to-government-for-protection-of-lawyers/ Thu, 21 Nov 2024 15:51:59 +0000 https://koodal.com/?p=70651 ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

The post வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிவிட்டதா? கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?” என கேள்வி எழுப்பினர். மேலும், “இச்சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ள நிலையில், ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை குறித்து உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதனிடையே, ஓசூர் சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், என்எஸ்சி போஸ் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், “வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கறிஞரை கொல்ல முயற்சி செய்த நபர் மீது கடுமையான பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.

The post வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70651
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்பு இல்லை: செந்தில் பாலாஜி! https://koodal.com/news/2024/11/21/tamil-nadu-electricity-board-has-no-connection-with-adani-senthil-balaji/ Thu, 21 Nov 2024 13:12:20 +0000 https://koodal.com/?p=70640 “தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை” என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- அதானி குழுமத்தின் மீது…

The post அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்பு இல்லை: செந்தில் பாலாஜி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை” என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு என ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன். தமிழ்நாடு மின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய மின்சார துறையோடு இருக்கும் அமைப்புகளோடு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அந்த நிறுவனத்துடன்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு செய்துள்ளது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் இது மத்திய அரசு நிறுவனம். அந்த நிறுவனங்கள்தான் யாரெல்லாம் உற்பத்தி செய்கிறார்களோ, அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வர். அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களிடம் என்ன தேவை என்பதைக் கேட்டு விலை இறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு தான் அந்தந்த மாநில அரசுகளோடு மத்திய அரசு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும். அப்படிதான் அந்நிறுவனத்தோடு மிக குறைந்த விலையில் மிக குறைந்த விலையில் ரூ.2.61-க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே அதிமுக ஆட்சியில் ரூ.7.01-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மத்திய அரசின் எரிசக்தி துறையின் அங்கம். அதில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் தகவல்களை பதிவிடுபவர்கள் இதை தெளிவுபடுத்திக் கொண்டு பதிவிடவேண்டும். என்னிடமோ அல்லது மின் துறை அதிகாரிகளிடடோ கேட்டால் தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

The post அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்பு இல்லை: செந்தில் பாலாஜி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70640
திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது! https://koodal.com/news/2024/11/21/dmk-mps-meeting-to-be-held-tomorrow-at-7-pm-chaired-by-mk-stalin/ Thu, 21 Nov 2024 13:11:07 +0000 https://koodal.com/?p=70638 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர்…

The post திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். இந்த குளிர்கால கூட்டத்தொடர் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடக்கும் மூன்றாவது கூட்டத்தொடர். அரசு எந்தெந்த மசோதாக்களை அறிமுகப்படுத்தும், எதை எதை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கக்கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நவம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில், நவ.25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படவுள்ளது” என கூறியுள்ளார்.

The post திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70638
முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்! https://koodal.com/news/2024/11/21/chief-minister-m-k-stalin-adani-should-explain-the-secret-meeting-ramadoss/ Thu, 21 Nov 2024 13:09:57 +0000 https://koodal.com/?p=70636 “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது 25,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியதாகவும், இந்த முதலீடுகளை திரட்டுவதற்கு அடிப்படையாக பல்வேறு மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைக் காட்டியதாகவும், அந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பல அமைப்புகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு அதை மறைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அந்த ஆவணத்தின் 20 மற்றும் 21-ஆம் பத்திகளில் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதன் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில், ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒடிசா, ஜம்மு – காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்துக்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட லஞ்சம் பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, லஞ்சம் வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் லாபத்தில் இயங்கவில்லை என்பதை பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மின்சார வாரியத்துக்கு காரணம் அதானி குழுமம் போன்ற நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது தான். ஆட்சியாளர்களின் லாபம் மற்றும் சுயநலத்துக்காக பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுவதையும், அப்பாவி மக்கள் மீது மின்கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது.

கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70636
மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: மநீம! https://koodal.com/news/2024/11/21/central-and-state-governments-should-come-forward-to-wipe-away-the-tears-of-fishermen-mnm/ Thu, 21 Nov 2024 13:08:42 +0000 https://koodal.com/?p=70634 “ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும், மாதக்கணக்கில் சிறையில் அடைப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு…

The post மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: மநீம! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும், மாதக்கணக்கில் சிறையில் அடைப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மநீம மீனவர் அணியின் மாநில செயலாளர் ஆர்.பிரதீப் குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உலகெங்கும் பல்வேறு இடங்களில் மீன்பிடி வளங்கள் நாசமாக்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்க்கையே போர்க்களமாகத்தான் மீனவர்களின் வாழ்வு நீடிக்கிறது. பொருளாதாரச் சிரமங்கள் மட்டுமின்றி, அடிப்படை உரிமைகளை இழந்தும், பாதுகாப்பற்ற நிலையிலும் மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே போராட வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் கடல் மற்றும் நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுவது அவசியம். மிகப் பெரிய கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் இன்னல்களுடன், அண்டை நாட்டு கடற்படையினராலும் சொல்லவொண்ணா துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும், மாதக்கணக்கில் சிறையில் அடைப்பதும் தொடர்கதையாகவே உள்ளது. இதெல்லாம் போதாதென்று, இப்போது லட்சக்கணக்கில் அபராதம் விதித்தும் மீனவர்களை பரிதவிக்கச் செய்கின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம், மீனவர்களுக்கான முதல் ஆதரவுக் குரல் எழுப்புவது மக்கள் நீதி மய்யம்தான். இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடி வருகிறது.

தமிழக மீனவர்களின் கடல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன், மீனவர்களின் சமூக நலன்களை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு சத்தான உணவு வழங்கும் மீனவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கடலிலும், கரையிலும் போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். மழை, புயல் என இயற்கைப் பேரிடர்களைக் கடந்து, பல்வேறு சிரமங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நெய்தல் நிலச் சொந்தங்களுக்கு மக்கள் நீதி மய்யம் உலக மீனவர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: மநீம! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70634