தொழில்நுட்பம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/technology/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sun, 05 Jan 2025 06:00:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 தொழில்நுட்பம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/technology/ 32 32 201197430 விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்! https://koodal.com/news/2025/01/05/black-gram-seeds-have-started-sprouting-in-space/ Sun, 05 Jan 2025 06:00:19 +0000 https://koodal.com/?p=74469 பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ…

The post விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதையடுத்து, ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் 20 கிமீ இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன. தொடர்ந்து இவற்றின் தூரம் படிபடியாக குறைக்கப்பட்டு ஜனவரி 7-ம் தேதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விண்வெளியில் வலம்வரும் ஸ்பேடெக்ஸ் பி விண்கலன் தனது கேமரா மூலம் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனை முயற்சிக்காக 24 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் முன்னெடுக்க இருக்கின்றன. அவற்றில் இஸ்ரோ வடிவமைத்த ரோபோட்டிக் ஆர்ம் (Debris Capture Robotic Arm), கிராப்ஸ் (CROPS-Compact Research Module for Orbital Plant Studies) ஆகிய ஆய்வுக் கருவிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘சிறியளவிலான கைகள் போன்றுள்ள ரோபோட்டிக் ஆர்ம் கருவி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்ணில் நகர்ந்து செல்லும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டால் அதிலுள்ள பழுதுகளை சரிபார்த்தல் உட்பட பணிகளை எளிதில் செய்ய ரோபோட்டிக் ஆர்ம் உதவும். அதேபோல், விண்வெளி சூழலில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட கிராப்ஸ் கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு(cowpea) விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து அவை வளர ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எஞ்சியுள்ள கருவிகளும் தனது ஆய்வை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன’’ என்றனர்.

The post விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
74469
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! https://koodal.com/news/2024/12/31/spacecraft-launched-by-pslv-c60-rocket-successfully-deployed/ Tue, 31 Dec 2024 10:07:42 +0000 https://koodal.com/?p=74013 இஸ்​ரோ​வின்​ ஸ்​பேடெக்​ஸ்​ திட்​டத்​தின்​ இரட்​டை ​விண்​கலன்​கள், பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​ மூலம்​ வெற்றிகரமாக ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டு, திட்​டமிட்​டபடி சுற்​றுப்​பாதையில்​ நிலைநிறுத்​தப்​பட்​டன. எதிர்​கால தேவையை கருத்​தில்​​கொண்​டு ‘பாரதிய அந்​தரிக்​ ஷா ஸ்​டேஷன்​’ எனும்​ இந்​திய ஆய்​வு மையத்​தை 2035-ம்​ ஆண்​டுக்​குள்​ ​விண்​வெளியில்​ நிறுவ இந்​திய…

The post பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இஸ்​ரோ​வின்​ ஸ்​பேடெக்​ஸ்​ திட்​டத்​தின்​ இரட்​டை ​விண்​கலன்​கள், பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​ மூலம்​ வெற்றிகரமாக ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டு, திட்​டமிட்​டபடி சுற்​றுப்​பாதையில்​ நிலைநிறுத்​தப்​பட்​டன.

எதிர்​கால தேவையை கருத்​தில்​​கொண்​டு ‘பாரதிய அந்​தரிக்​ ஷா ஸ்​டேஷன்​’ எனும்​ இந்​திய ஆய்​வு மையத்​தை 2035-ம்​ ஆண்​டுக்​குள்​ ​விண்​வெளியில்​ நிறுவ இந்​திய ​விண்​வெளி ஆய்​வு நிறுவனம்​ (இஸ்​ரோ) முடிவு செய்துள்ளது. இந்​த திட்​டத்​தின்​ முதல்​கட்​ட ​விண்​கலங்​கள்​ 2028-ம்​ ஆண்​டு ​விண்​ணில்​ செலுத்​தப்​பட உள்​ளன. அதற்கான முன்​தயாரிப்​பு பணிகளில்​ இஸ்​ரோ ஈடுபட்​டுள்​ளது.

அதன்​ ஒருபகுதியாக ஸ்​பேடெக்​ஸ்​ எனும்​ திட்​டத்​தின்​கீழ்​ ​விண்​ணில்​ ​விண்​கலன்​களை ஒருங்​கிணைக்​கும்​ பணிகள்​ தற்​போது மேற்​​கொள்​ளப்​பட உள்​ளன. இதற்​காக ஸ்​பேடெக்​ஸ்​ ஏ மற்​றும்​ ஸ்​பேடெக்​ஸ்​ பி என இரு ​விண்​கலன்​களை தனியார்​ நிறுவன பங்​களிப்​புடன்​ இஸ்​ரோ வடிவமைத்​தது. ஆந்​திர மாநிலம்​ ஸ்ரீஹரிகோட்​டா​வில்​ உள்​ள சதீஷ் தவான்​ மையத்​தின்​ ஏவுதளத்​தில்​ இருந்​து இந்​த ​விண்​கலங்​களை ​விண்​ணில்​ ஏவுவதற்​கான பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​டின்​ 25 மணி நேர கவுன்​ட்​டவுன்​ நேற்​று முன்​தினம்​ தொடங்​கியது.

திட்​டமிட்​டபடி ராக்​கெட்​ நேற்​று இரவு 10 மணிக்​கு ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டது. சுமார்​ 15 நிமிடத்​தில்​ தரையில்​ இருந்​து 476 கி.மீ உயரத்தில் விண்​கலங்​கள்​ வெற்​றிகரமாக நிலைநிறுத்​தப்​பட்​டன. இந்​த இரட்​டை ​விண்​கலன்​கள்​ தலா 220 கிலோ எடை ​கொண்​டவையாகும்​. தற்​போது ஒன்​றன்​பின்​ ஒன்​றாக சுற்​றிவரும்​ ​விண்​கலங்​களை அடுத்​த 2 வாரங்​களில்​ ஒன்​றிணைக்​கும்​ பணிகள்​ மேற்​​கொள்​ளப்​படும்​.

மனிதர்​களை ​விண்​ணுக்​கு அனுப்​பும்​போது ஒரு ​விண்​கலத்​தில்​ இருந்​து மற்​றொன்​றுக்​கு அவர்​கள்​ மாறவும், எரிபொருளை மாற்​றிக்​ ​கொள்​வதற்​கும்​ இந்​த தொழில்​நுட்​பம்​ பயன்​படும்​. இந்​த திட்​டம்​ வெற்​றி பெற்​றால்​ வல்​லரசு நாடுகளை போன்​று ​விண்​வெளியில்​ இந்​தியாவாலும்​ ஆய்​வு மையத்​தை அமைக்​க முடி​யும். அதனுடன்​ ககன்​யான், சந்​திரயான்​-4 திட்​டங்​கள்​ மற்​றும்​ எதிர்​கால ​விண்​வெளி ஆராய்​ச்​சி நடவடிக்​கைகளுக்​கு உதவிகரமாக அமை​யும்​. மேலும்​, இந்​த சாதனையை அடை​யும்​ 4-வது நாடு என்​ற பெருமையை​யும்​ இந்​தியா பெறும்​.

இதுத​விர பிஎஸ்​எல்​​வி ராக்​கெட்​டின்​ இறுதி பகுதியான பிஎஸ்​-4 இயந்​திரத்​தில்​ போயம்​ எனும்​ பரிசோதனை முயற்​சி​யும்​ 4-வது முறையாக வெற்​றிகரமாக மேற்​​கொள்​ளப்​பட்​டது. அதாவது, பிஎஸ்​-4 இயந்​திரத்​தை இருமுறை நிறுத்​தி மீண்​டும்​ இயக்​கி, அதன்​ உயரமானது 365 கி.மீட்​டருக்​கு கீழே ​கொண்​டுவரப்​பட்​டது. இதில் 24 ஆய்​வுக்​ கரு​விகள்​ இடம்​ பெற்​றுள்​ளன. இவை பு​வியை வலம்​ வந்​தபடி அடுத்​த சில மாதங்​களுக்​கு போடிக்​, செயற்​கை நுண்​ணறிவு, உயிரி தொழில்​நுட்​பம்​ தொடர்​பான ஆய்​வுகளை ​முன்​னெடுக்​க உள்​ளதாகவும்​ இஸ்ரோ ​தெரி​வித்துள்​ளது.

The post பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
74013
ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்! https://koodal.com/news/2024/12/05/pslv-c-59-rocket-launches-with-proba-3-satellites/ Thu, 05 Dec 2024 16:26:24 +0000 https://koodal.com/?p=71975 சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஓர் அங்கமான நியூஸ்பேஸ்…

The post ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச.5) மாலை 4 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.

சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் ‘புரோபா-3’: ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் இணைந்து சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். புரோபா-3 விண்கலத்தில் இருக்கும் இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளன. ஓர் ஆய்வுக்கு இரண்டு செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் செலுத்தப்படுவது உலகில் இதுவே முதல்முறை. கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் எனும் இவ்விரு செயற்கைக்கோள்களும் சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும்.

சூரிய கரோனா (சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதி) அதனுடன் தொடர்புடைய பல மர்மங்களைக் கொண்டுள்ளது. சூரிய கரோனா சூரியனின் மேற்பரப்பைவிட ஒரு மில்லியன் டிகிரி வெப்பம் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் ஏற்படும் கரோனல் வெளிப்பாடு (அதிக சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள்) குறித்து தீவிர ஆய்வு செய்யப்பட உள்ளது. கரோனல் வெளிப்பாடு செயற்கைக்கோள்கள் அல்லது தகவல் தொடர்பு மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளை பாதிக்கக்கூடியது என்பதால் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

சூரிய கிரகணம்: பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்போது எற்படும் சூரிய கிரகணம் என்பது சூரிய கரோனாவை ஆய்வு செய்ய இயற்கை கொடுத்த வாய்ப்பு ஆகும். ஆனால் கிரகணங்கள் அரிதானவை. சில நிமிடங்களுக்கு மட்டுமே நிகழும். இதனால் சூரிய கரோனாவை நீண்ட காலம் ஆய்வு செய்ய இயலாது. தற்போது விண்ணில் செலுத்தப்படும் ஆக்ல்டர் மற்றும் கரோனாகிராஃப் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மிகவும் துல்லியமாக வலம் வந்து ஆய்வு செய்யும்.

இந்தியாவில் இருந்து ஏவப்படுவது ஏன்? – 550 கிலோ எடையுள்ள புரோபா-3-ஐ விண்ணில் செலுத்தக்கூடிய நடுத்தர ராக்கெட் ஐரோப்பிய விண்வெளி அமைப்பிடம் (இஎஸ்ஏ) இல்லை. செயற்கைக்கோள்களின் நிறை இஎஸ்ஏ-வின் வேகா-சி என்ற சிறிய ராக்கெட்டின் திறனைவிட அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் பெரிய ஏரியன்-6 ராக்கெட் இந்த வகையான பணிக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புரோபா-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்காக இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டுக்கு இஎஸ்ஏ சார்பில் ரூ. 271 கோடி கட்டணம் செலுத்தப்படுகிறது.

நேற்று ஏவப்பட்டிருக்க வேண்டிய ராக்கெட்: ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் நேற்று மாலை விண்ணில் ஏவப்பட இருந்தது. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடைசிநேர சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து ராக்கெட் ஏவுதலானது இன்று (டிச.5) மாலை 4.12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
71975
இஸ்ரோவின் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்! https://koodal.com/news/2024/11/19/spacex-successfully-launches-isros-gsat-n2-satellite/ Tue, 19 Nov 2024 15:31:19 +0000 https://koodal.com/?p=70470 இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே…

The post இஸ்ரோவின் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன.

இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களோடும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து இயங்குகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று (நவ.19) அதிகாலை 12.01 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக மேலாளருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ், ஜிசாட்-என் 2 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தார்.

The post இஸ்ரோவின் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
70470
செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட் ஆக.24-ல் சென்னையில் சோதனை! https://koodal.com/news/2024/08/21/a-rocket-that-returns-to-earth-after-launching-satellites-was-tested-in-chennai-on-august-24/ Wed, 21 Aug 2024 16:14:46 +0000 https://koodal.com/?p=63832 செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 3 சிறிய செயற்கைக்கோள்களுடன் வருகிற 24-ம் தேதி சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில்…

The post செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட் ஆக.24-ல் சென்னையில் சோதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 3 சிறிய செயற்கைக்கோள்களுடன் வருகிற 24-ம் தேதி சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ‘ரூமி’என்ற மினி ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

மார்ட்டின் குழுமத்தின் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலில் பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பில் உருவானது. இதன் எடை சுமார் 80 கிலோ. இந்த ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஏறத்தாழ 6 ஆயிரம் பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு , காற்றின் தன்மை தொடர்பான தரவுகளை சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 விதமான ஆய்வு சாதனங்களுடன் ‘ரூமி’ ராக்கெட் வருகிற 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 7.45 மணிக்குள் சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மூன்று செயற்கைகோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்திவிட்டு அதில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும். இந்த புதிய ராக்கெட் திட்டம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோர் சென்னையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர்.

அப்போது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, “இன்றைய தினம் விண்வெளி துறையில் அரசுத்துறையோடு தனியாரும் இணைந்துள்ளனர். வழக்கமாக செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டிருப்பது புதிய முயற்சி. ராக்கெட் தயாரிப்பில் இது அடுத்த கட்டம் ஆகும்,” என்று கூறினார்.

ஆனந்த் மேகலிங்கம் கூறுகையில், “மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை கொண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதால் செலவு மிச்சமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். நடமாடும் ஏவுதளம் (மொபைல் லாஞ்ச்பேட்) மூலமாக இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். ஜீரோ டிகிரி முதல் 120 டிகிரி கோணம் வரை எந்த கோணத்ததுக்கும் இந்த நடமாடும் ஏவுதளத்தை மாற்றியமைக்க முடியும். 3 செயற்கைக்கோள்களையும் குறிப்பிட்ட தூரத்தில் விண்ணில் செலுத்திய பிறகு அதில் உள்ள பாரசூட் மூலம் அது மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும். அந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. நாங்கள் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறும்போது, “ராக்கெட் ஏவுவதற்கு கோடிக்கணக்கில் செலவாகும் நிலையில் தற்போது குறைந்த செலவில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டத்தை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில், இத்திட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற நாங்கள் உதவியுள்ளோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

The post செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட் ஆக.24-ல் சென்னையில் சோதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
63832
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல: கிரவுட்ஸ்ட்ரைக்! https://koodal.com/news/2024/07/20/microsoft-tech-problem-not-cyber-attack-crowdstrike/ Sat, 20 Jul 2024 10:20:17 +0000 https://koodal.com/?p=61235 மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் கிரவுட்ஸ்ட்ரைக் தொடர்ந்து…

The post மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல: கிரவுட்ஸ்ட்ரைக்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் கிரவுட்ஸ்ட்ரைக் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மேக் மற்றும் லினக்ஸ் ஹோஸ்ட்களில் எந்த பாதிப்பும் இல்லை. இது ஒரு சைபர் தாக்குதல் அல்ல. பிரச்சினை கண்டறியப்பட்டு, அதனை சரிசெய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமீபத்திய அப்டேட்களுக்கு எங்களுடைய சப்போர்ட் போர்ட்டலை வாடிக்கையாளர்கள் பின்தொடருமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

அதிகாரபூர்வ சேனல்கள் மூலம் கிரவுட்ஸ்ட்ரைக் பிரதிநிதிகளை தொடர்பு கொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எங்கள் குழு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் சிரமத்திற்கும் இடையூறுக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். கணினிகள் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான சேவையை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு நாங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம்.

கிரவுட்ஸ்ட்ரைக் சாதாரண முறையிலேயே இயங்குகிறது என்றும் இந்தச் சிக்கல் எங்களது ஃபால்கன் இயங்குதள அமைப்புகளைப் பாதிக்காது என்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். மேலும் உங்களுடைய கணினிகள் சாதாரண முறையில் இயங்கினாலோ, அவற்றில் ஃபால்கன் சென்சார் நிறுவப்பட்டிருந்தாலோ அவற்றின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.

‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம். அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அஸூர், ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினி செயலிழந்துள்ளது’ என்பதை காட்டியது.

The post மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல: கிரவுட்ஸ்ட்ரைக்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
61235
உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்! https://koodal.com/news/2024/07/19/microsoft-windows-is-disabled-all-over-the-world/ Fri, 19 Jul 2024 11:21:43 +0000 https://koodal.com/?p=61142 மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால், தவித்து வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில்…

The post உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால், தவித்து வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ‘ப்ளூ ஸ்க்ரீன் எரர்’ Blue Screen of Death (BSOD) காண்பிக்கிறது.

இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதில் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்திய விமான நிறுவனங்கள் இந்த சிக்கலால் சேவை குறைபாடுகளை எதிர்கொண்டுள்ளதாக தங்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதனால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதேபோல், வின்டோஸ் சேவை பாதிப்பால் விமான நிலையங்களிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வின்டோஸ் சாப்டவேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது.

லண்டனை சேர்ந்த ஸ்கை நியூஸ் விண்டோஸ் சேவை பாதிப்பால் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜாக்கி பெல்ட்ராவ் இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “ஒளிபரப்பை தொடர முயற்சித்து வருகிறோம்” என்றுள்ளார்.

வங்கிகள், விமான நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிவி, ரேடியோ மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிகங்கள் என உலகம் முழுவதும் விண்டோஸ் சாப்ட்வேர் குளறுபடியால் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் விண்டோஸ் சேவைகள் முடங்கிய நிலையில், அந்நாட்டு அரசு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

The post உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
61142
இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம் தரையிறங்கும் சோதனை வெற்றி! https://koodal.com/news/2024/06/24/isros-pushpak-spacecraft-landing-test-successful/ Mon, 24 Jun 2024 04:28:53 +0000 https://koodal.com/?p=58948 இஸ்ரோ தயாரித்த ‘புஷ்பக்’ என்ற மறுபயன்பாட்டு விண்கலத்தின் (ஆர்எல்வி) மூன்றாவது தரையிறங்கும் சோதனை பெங்களூரு அருகே நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு மறுபயன்பாட்டு விண்கலம் அவசியம். இதற்காக மறுபயன்பாட்டு விண்கலத்தின் மாதிரி…

The post இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம் தரையிறங்கும் சோதனை வெற்றி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இஸ்ரோ தயாரித்த ‘புஷ்பக்’ என்ற மறுபயன்பாட்டு விண்கலத்தின் (ஆர்எல்வி) மூன்றாவது தரையிறங்கும் சோதனை பெங்களூரு அருகே நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு மறுபயன்பாட்டு விண்கலம் அவசியம். இதற்காக மறுபயன்பாட்டு விண்கலத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கி, அதை ஹெலிகாப்டரில் தூக்கிச் சென்று வானில் இருந்து விடுவித்து, விண்கலத்தை தானாக தரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

‘புஷ்பக்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆர்எல்வி-யை ஏற்கனவே இரண்டு முறை தரையிறக்கும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-வது முறையாக ஆர்எல்வி தரையிறக்கும் சோதனை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சலக்கேரி என்ற இடத்தில்அமைக்கப்பட்டுள்ள ஏரோநாடிக்கல் பரிசோதனை மையத்தில் நேற்று காலை 7.10 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

விமானப்படையின் சிணுக் ரகஹெலிகாப்டர், புஷ்பக் விண்கலத்தை வானில் 4.5 கி.மீ உயரத்துக்கு தூக்கிச் சென்று விடுவித்தது. அதன்பின் ஆர்எல்வி தானாகஇயங்கி, ஓடு பாதையில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் தரையிறங்கியது. ஓடு பாதையில் புஷ்பக் விண்கலம் துல்லியமாக தரையிறங்கியதும், அதில் உள்ள பாராசூட் புஷ்பக் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 100.கி.மீ. ஆக குறைத்தது. அதன்பின் விண்கலத்தின் பிரேக்குகள் இயக்கப்பட்டு புஷ்பக் விண்கலம் நிறுத்தப்பட்டது.

விண்ணில் இருந்து பூமி திரும்பும் விண்கலம் மிக வேகமாக வரும் என்பதால், புஷ்புக் விண்கலம் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது. இதன்மூலம் புஷ்பக் விண்கலம் விண்ணுக்கு சென்று மீண்டும் பூமி திரும்பும் பரிசோதனைக்கு தயாராகிவிட்டது.

The post இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம் தரையிறங்கும் சோதனை வெற்றி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
58948
ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி! https://koodal.com/news/2024/06/02/phase-3-test-for-gaganyaan-project-successful/ Sun, 02 Jun 2024 06:15:12 +0000 https://koodal.com/?p=57122 மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை…

The post ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக சிஸ்டம் டெமான்ஸ்ட்ரேஷன் மாடல் (SDM) என்ற ‘மாடூலிங்’ என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக இங்கு நடந்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் 3-வது கட்டமாக 1,703 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர்.

ஏற்கனவே முதல் கட்டமாக 724 வினாடிகளும், 2-வது கட்டமாக 324 வினாடிகளும் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
57122
அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி! https://koodal.com/news/2024/05/31/agnikul-cosmos-launches-indias-second-privately-built-rocket-agniban-sorted/ Fri, 31 May 2024 04:35:01 +0000 https://koodal.com/?p=56941 உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ்…

The post அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனியார் பயன்பாட்டுக்கு தேவைப்படும் சிறிய ரக ராக்கெட்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சம் 300கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட ‘அக்னிபான்’ என்ற சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கியது. முப்பரிமாண (3-டி) பிரின்டிங் முறையில் இதன் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானிகள் 45 பேரின் வழிகாட்டுதலில் 200 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் உள்ள தேசிய எரிபொருள் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமும் அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ளஅக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் அந்த ராக்கெட்டை சோதித்து பார்க்க கடந்த மார்ச் 22, ஏப்ரல் 6, 7, மே 28 என 4 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினையால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், 5-வது முறையாக நேற்று காலை 7.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘சொந்த ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் எங்களது அக்னிபான் ராக்கெட் ஆகும். உலகிலேயே முப்பரிமாண (3-டி)முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் கொண்ட ராக்கெட் அக்னிபான் மட்டுமே’ என்று தெரிவித்துள்ளது.

The post அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56941