உலகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/world/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 23 Aug 2025 10:16:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 உலகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/world/ 32 32 201197430 நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை! https://koodal.com/news/2025/08/23/gaza-city-will-be-destroyed-if-conditions-are-not-met-israel-warns/ Sat, 23 Aug 2025 10:16:40 +0000 https://koodal.com/?p=93174 மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி…

The post நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும்’’ என்று எச்​சரித்​துள்​ளார்.

காசா நகரை முற்​றுகை​யிட இஸ்​ரேல் ராணுவத்​துக்கு அனு​மதி வழங்​க​வுள்​ள​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று முன்​தினம் அறி​வித்ததை தொடர்ந்து பாது​காப்பு அமைச்​சர் இந்த எச்​சரிக்கையை விடுத்​துள்​ளார். இந்​நிலை​யில் காசா நகரை முழு​மை​யாக கைப்​பற்​றும் முயற்​சி​யில் இஸ்​ரேல் ராணுவம் ஈடு​பட்​டுள்​ளது. மக்​களை தெற்கே செல்​லு​மாறு எச்சரித்துள்ளது.

The post நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93174
ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு! https://koodal.com/news/2025/08/22/external-affairs-minister-s-jaishankar-meets-russian-president-putin/ Fri, 22 Aug 2025 04:49:05 +0000 https://koodal.com/?p=93051 ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். டிரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த…

The post ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். டிரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷ்யா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ரஷ்ய அதிபர் புதினை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜே லாவ்ரோவுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, புதினை சந்தித்து இருக்கிறார். ர

ஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று வலியுறுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதித்துள்ளார். இத்தகைய சூழலில் புதின் – ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, இந்தியா-ரஷ்யா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் கூறியதாவது:-

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற முயற்சிகள் வெளிநாட்டு வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து உள்ளன. இது ரஷ்ய நிறுவனங்கள் அதிகமாக இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. எனவே ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இன்னும் தீவிரமான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். இந்தியாவும் ரஷியாவும் தற்போதைய காலத்தில் நிலையான உறவுகளில் ஒன்றை வளர்த்துள்ளன. ஆனாலும் அது குறிப்பிடத்தக்க பொருளாதார ஒத்துழைப்பாக மாறவில்லை. நமது வர்த்தகம் குறைவாகவே உள்ளது. வர்த்தக பற்றாக்குறை உள்ளதால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் விரைவுபடுத்துவதிலும் இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் செய்யக்கூடியது நிறைய இருக்கிறது. வர்த்தக ஏற்றத்தாழ்வை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும். இது நமது வர்த்தகத்தை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல், 2030-ம் ஆண்டுக்குள் நமது திருத்தப்பட்ட வர்த்தக இலக்கான 100 பில்லியன் டாலர்களை சரியான நேரத்தில் அடைவதை விரைவுபடுத்தவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93051
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு: வெள்ளை மாளிகை! https://koodal.com/news/2025/08/20/50-tax-on-india-to-end-ukraine-war-white-house/ Wed, 20 Aug 2025 15:06:16 +0000 https://koodal.com/?p=92925 உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செயலர் விளக்கம் அளித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கும் நோக்கில்…

The post உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு: வெள்ளை மாளிகை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த புதிய வரிவிதிப்பு முதலில் விதிக்கப்பட்ட 25% வரி கடந்த 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் கூடுதல் 25% வரி வரும் 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனால், மொத்தமாக 50% வரி வரும் 27ம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 விழுக்காடு வரியுடன் கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்பட்டு, இந்தியாவின் இறக்குமதி வரி 50 விழுக்காடாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டு, போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும்.

அதிபர் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால், இந்த போரே மூண்டிருக்காது. ரஷ்ய அதிபர் புதினும் அதை உறுதி செய்துள்ளார். அதிபர் புதினை சந்தித்த 48 மணி நேரத்திற்குள், ஐரோப்பிய தலைவர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு விரைந்து வந்து டிரம்பை சந்தித்தனர். போரின் போக்கு மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்த டிரம்பின் விளக்கங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் முந்தைய நிர்வாகம் இதை செய்யத் தவறியது. இவ்வாறு அவர் கூறினார்.

The post உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு: வெள்ளை மாளிகை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92925
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: டிரம்ப்! https://koodal.com/news/2025/08/19/steps-will-be-taken-to-ensure-ukraines-security-trump/ Tue, 19 Aug 2025 04:28:22 +0000 https://koodal.com/?p=92787 இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது என்று ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார். ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து…

The post உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: டிரம்ப்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது என்று ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷ்ய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார்.

அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போதும் அதுபோல் நடக்காமல் இருக்க ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து, டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிரம்ப்பை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். ஜெலன்ஸ்கியை வரவேற்று அழைத்து சென்றார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து டிரம்ப் பேசியதாவது:-

இங்கு வருகை தந்த ஜெலென்ஸிக்கு நன்றி . போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் விரும்புகிறார்.. இது வரை 6 பேர்களை நிறுத்தியுள்ளேன். விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். உலக நாடுகள் இந்த போரால் தளர்ந்து போய்விட்டன. இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். இது தொடர்பாக ரஷ்யா- உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும். போரில் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர், உக்ரைன் மக்களை நேசிக்கிறோம். இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது.

புதினுடன் பேசினேன், இந்த சந்திப்புக்கு பிறகும் புதினுடன் பேச உள்ளேன். புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம் . உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என்றார்.

இதனையடுத்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்,போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நன்றி. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவி தேவை, இன்று கூட ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பாதுகாப்பை உறுதி செய்யாமல் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது, யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து 7 ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டிரம்ப் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

The post உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: டிரம்ப்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92787
அமெரிக்காவில் ட்ரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை! https://koodal.com/news/2025/08/17/trump-putin-hold-3-hour-talks-in-the-us/ Sun, 17 Aug 2025 06:30:30 +0000 https://koodal.com/?p=92662 உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின்…

The post அமெரிக்காவில் ட்ரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்தி உள்​ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்​கா, ரஷ்ய அதிபர்​கள் நேற்று நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

ஆங்​கரேஜ் விமான தளத்​தில் தரை​யிறங்​கிய அதிபர் புதினை, அதிபர் ட்ரம்ப் வரவேற்று அழைத்​துச் சென்​றார். அப்​போது வானில் அமெரிக்​கா​வின் பி2, எப்22 ரக போர் விமானங்​கள் பறந்து புதினுக்கு வரவேற்பு அளித்​தன. பின்​னர் இரு தலை​வர்​களும் 3 மணி நேரம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அதன்​பிறகு இரு​வரும் கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தனர்.

அதிபர் புதின் கூறிய​தாவது:-

உக்​ரைனை எங்​களு​டைய சகோதர நாடாகவே கருதுகிறோம். இரு நாடு​களின் வேர்​களும் ஒன்​று. ஆனால் ரஷ்​யா​வின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​ட​தால் போர் மூண்​டது. இது எங்​களுக்கு மிகுந்த வேதனை அளிக்​கிறது. இன்​றைய பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​தது. உக்​ரைனில் அமைதி திரும்ப புதிய பாதை திறந்​திருக்​கிறது. உக்​ரைனும் ஐரோப்​பிய நாடு​களும் கலந்​தாலோ​சித்து நல்ல முடிவை எடுக்க வேண்​டும்.

ரஷ்​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒத்​துழைப்பை அதி​கரிக்க வாய்ப்பு இருக்​கிறது. இன்​றைய தின பேச்​சு​வார்த்​தை​யில் பல்​வேறு உடன்​பாடு​கள் எட்​டப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் உக்​ரைன் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண முடி​யும். அதோடு அமெரிக்​கா, ரஷ்யா இடையி​லான உறவும் மேம்​படும். உக்​ரைன் பிரச்சினைக்கு விரை​வில் தீர்வு காணப்பட வேண்​டும். இவ்​வாறு புதின் பேசி​னார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய​தாவது:-

இன்​றைய பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​தது. குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. எனினும் எவ்​வித ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. உக்​ரைன் விவ​காரம் தொடர்​பாக அந்த நாட்​டின் அதிபர் ஜெலன்​ஸ்​கி, நேட்டோ நாடு​களின் தலை​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வேன்.

அதிபர் புதினுடன் எனக்கு நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. ரஷ்யா குறித்து எதிர்​மறை​யான தகவல்​கள் பரப்​பப்​படு​கின்​றன. அவை அனைத்​தும் வெறும் வதந்​தி​கள். உக்​ரைன் போரை நாங்​கள் நிறுத்​தப் போகிறோம். இதுதொடர்​பாக விரை​வில் நாங்​கள் மீண்​டும் சந்​தித்​துப் பேசுவோம். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் பேசி​னார்.

இதைத் தொடர்ந்து அதிபர் புதின் கூறும்​போது, ‘‘அடுத்த முறை ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் சந்​தித்​துப் பேசலாம்’’ என்று தெரி​வித்​தார். இதை ட்ரம்ப் ஏற்​றுக் கொண்​டார். உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்​டன் செல்​கிறார். அப்​போது அதிபர்​ டொனால்​டு ட்ரம்​பை அவர்​ சந்​தித்​து பேச உள்​ளார்​.

ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்புக்கு பிறகு பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது ட்ரம்ப் கூறியதாவது:-

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியது தொடர்பாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளோம். இதனால் மிகப்பெரிய வாடிக்கையாளரை (இந்தியா) ரஷ்யா இழந்திருக்கிறது. இதேபோல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது கூடுதல் வரி விதித்தால் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இப்போதைய சூழலில் ரஷ்யா மற்றும் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரியை விதிப்பது குறித்து சிந்திக்கவில்லை. அதிபர் புதின் உடனான பேச்சுவார்த்தை 100 சதவீதம் முழுதிருப்தி அளிக்கிறது. உக்ரைனில் முழுமையாக அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அமெரிக்காவில் ட்ரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92662
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு! https://koodal.com/news/2025/08/13/france-opposes-israels-plan-to-seize-gaza/ Wed, 13 Aug 2025 10:04:44 +0000 https://koodal.com/?p=92551 காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு…

The post காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளதாவது:-

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம், முன் எப்போதும் இல்லாத பேரழிவுக்கும் நிரந்தர போருக்கும் வழி வகுக்கும். இதனால், பெரிதும் பாதிக்கப்படப்போவது, இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும்தான்.

காசாவை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஐநா முன்னெடுக்க வேண்டும். இதற்கான அமைப்பை, காசாவில் நிறுவ வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஐ.நா.வால் முன்மொழியப்படும் இந்த அமைப்பு, காசாவை பாதுகாப்பது, அப்பாவி மக்களை பாதுகாப்பது, பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் கடந்த மாதம் அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தனக்கு உள்ள உறுதியை இம்மானுவேல் மேக்ரான் வெளிப்படுத்தி உள்ளார்.

காசாவை கைப்பற்றுவதற்கான இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இஸ்ரேல் தனது படைகளை நியாயமான முறையில் பயன்படுத்துகிறது. ஹாமாசின் தோல்வியை முழுமையாக்குவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. காசாவின் சுமார் 75% பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மீதம் 2 கோட்டைகள் உள்ளன. ஒன்று காசா மாநகரம், மற்றொன்று அல் மவாசியில் உள்ள மத்திய முகாம்கள் பகுதி” என்று தெரிவித்துள்ளார்.

The post காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92551
இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலி, கடும் கண்டனம்! https://koodal.com/news/2025/08/12/journalists-killed-in-israeli-attack-strong-condemnation/ Tue, 12 Aug 2025 04:26:45 +0000 https://koodal.com/?p=92425 காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல்…

The post இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலி, கடும் கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. 20 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். எனினும், போரை நிறுத்தி வைக்க போர்நிறுத்த ஒப்பந்தம் உதவியாக அமைந்தது. ஆனால், மார்ச் 1-ந்தேதியுடன் முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் பணய கைதிகள் மீட்புக்காக, காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், காசா சிட்டியில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் முக்கிய வாசலுக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த கூடாரம் மீது நேற்று தாக்குதல் நடந்தது. அந்த கூடாரத்தில், பத்திரிகையாளர்கள் தங்கியிருந்தனர். அந்த பகுதியில் நடந்த இஸ்ரேலின் ஆளில்லா விமான தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல், தாக்குதலில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களான அனாஸ் அல்-ஷரீப், முகமது கிரெய்க் மற்றும் புகைப்பட நிருபர்களான இப்ராகிம் ஜாகிர், மோவாமென் அலிவா மற்றும் முகமது நவுபால் ஆகியோர் பலியானார்கள்.

இவர்கள் தவிர, முகமது அல்-கால்தி என்ற உள்ளூர் நிருபர் ஒருவரும் பலியானார். இதே தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர் என அல் ஜசீரா தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்திற்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாலஸ்தீனியர்களுக்காக ஆதரவுடன் நிற்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடக பணியாளர்களை கேட்டு கொண்டுள்ளது.

ஐ.நா. அமைப்பும், பத்திரிகையாளர்கள் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்களை வெளியிட்டு உள்ளது. ஐ.நா. அமைப்பில் உள்ள பாலஸ்தீனிய இயக்கம், ஈரான் வெளியுறவு அமைச்சகம், கத்தார் பிரதமர் சார்பிலும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அல் ஜசீரா ஊடக நெட்வார்க் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். பத்திரிகையாளர்கள் படுகொலையில் இது மிக அதிகம் என அல் ஜசீரா தெரிவித்து உள்ளது.

The post இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலி, கடும் கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92425
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்: பாக்.ராணுவ தளபதி! https://koodal.com/news/2025/08/11/if-india-builds-a-dam-on-the-indus-river-we-will-destroy-it-pakistan-army-chief/ Mon, 11 Aug 2025 10:30:37 +0000 https://koodal.com/?p=92374 சிந்து நதியில் (Indus Water Treaty) இந்தியா அணை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா மட்டும் அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடியாக பேசியுள்ளார். அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்ற…

The post சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்: பாக்.ராணுவ தளபதி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சிந்து நதியில் (Indus Water Treaty) இந்தியா அணை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா மட்டும் அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடியாக பேசியுள்ளார்.

அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் இப்படி பேசியது மட்டும் இன்றி உலக நாடுகளுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். பகல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்த இந்தியா, அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரண்டு போன பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை கூறி வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தானின் பெரும் பகுதி வறண்டு போகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. இதனால், கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால் பாகிஸ்தான், என்ன செய்வது என்று தெரியாமல் கண்டபடி உளறி வருகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து ரத்து தான் என்று கூறிவிட்டது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து வரும் பாகிஸ்தான், வழக்கம் போல தனது உளறல் பேச்சுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஆசிம் முனீர் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஆசிம் முனீர், டாம்பாவில் நடைபெற்ற சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழா மற்றும் புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பொறுப்பேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முனீர் கூறியதாவது:-

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா முடிவு, 2 கோடி மக்களை பட்டினியில் கிடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா அணையை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியா மட்டும் அணையை கட்டினால், 10 ஏவுகணைகளை கொண்டு அதை தகர்ப்போம். சிந்து நதி என்பது இந்தியாவின் குடும்ப சொத்து இல்லை. எங்களுக்கு ஏவுகணைகளுக்கு ஒன்றும் பற்றாக்குறை இல்லை” என்றார்.

மேலும் உலக நாடுகளுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர். பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் மிரட்டியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அணு ஆயுத போர் குறித்தும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிம் முனீர் கூறியதாவது:- நாங்கள் அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ந்துவிடுவொம் என்று நீங்கள் நினைத்தால், உலகின் பாதி நாடுகளை எங்களுடன் அழைத்து சென்றுவிடுவோம்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அதாவது, எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தானின் இருப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் உலகின் பாதி நாடுகள் அழிந்து போகும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியுள்ளார். அமெரிக்காவுடன் சமீப காலமாக பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இப்படி அடாவடியாக பேசியுள்ளார்.

The post சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்: பாக்.ராணுவ தளபதி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92374
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு! https://koodal.com/news/2025/08/10/trump-putin-to-meet-on-aug-15-to-discuss-ukraine-ceasefire/ Sun, 10 Aug 2025 05:51:15 +0000 https://koodal.com/?p=92365 அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் வரும் 15-ம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டு வருவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கையையும்…

The post உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் வரும் 15-ம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டு வருவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கையையும் மீறி, நேட்டோவுடன் இணைந்து செயல்பட்டதால், உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கினார் புதின். அமைதியை ஏற்படுத்த பல நாட்டு தலைவர்கள் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதில் மத்தியஸ்தராக இருந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வரும் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து அவர் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இத்தகவலை வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

‘கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து உக்ரைன் படைகள், நேட்டோ படைகள் வெளியேற வேண்டும். அப்படி செய்தால் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்கிறேன்’ என்று அதிபர் புதின் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு, கிழக்கு உக்ரைனை ரஷ்யா கேட்கிறது. அத்துடன் அந்தப் பகுதியை சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கானதாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய தலைவர்கள், உக்ரைன் அதிகாரிகள் கூறியதாகவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ‘‘எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் பிரதேச மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஆனால், சில பகுதிகளை நாங்கள் திரும்ப பெறுவோம். சில பகுதிகள் மாறலாம். அது இரு தரப்புக்கும் நன்மை தருவதாக இருக்கும். என்னைப் பொருத்தவரை புதின் அமைதியை விரும்புவதாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார். ‘புதினை சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அலாஸ்காவில் இந்த சந்திப்பு 15-ம்தேதி நடைபெறும்’ என்று சமூக வலைதளத்திலும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஜெனீவாவில் அமெரிக்கா – ரஷ்யா மாநாடு கடந்த 2021-ல் நடந்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேசினர். அதன்பிறகு ரஷ்ய அதிபர் புதினை தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனையும் சேர்க்க வேண்டும் என அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘உக்ரைனின் பிராந்திய இறையாண்மையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தை மேஜையில் உக்ரைனின் குரலும் உள்ளடக்கியிருக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர், ‘உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரான முடிவுகளாகும். அவை எந்த பலனையும் தராது. செத்துப்போன முடிவுகள். அவை ஒருபோதும் வேலை செய்யாது’ என்றும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

ரஷ்யா செய்தவற்றுக்காக அதற்கு எந்த விருதையும் உக்ரைன் கொடுக்காது எனக்கூறியுள்ள ஜெலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தனது நிலத்தை உக்ரைன் மக்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றும் சாடியிருந்தார்.

The post உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92365
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச் செயலாளர்! https://koodal.com/news/2025/08/10/israels-decision-to-occupy-gaza-is-dangerous-un-secretary-general/ Sun, 10 Aug 2025 05:30:55 +0000 https://koodal.com/?p=92333 காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர்…

The post காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச் செயலாளர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இஸ்ரேல் அரசாங்கம் காசா நகரத்தைக் முழுமையாக கைப்பற்றும் முடிவால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இந்த முடிவு ஆபத்தான ஆக்கிரமிப்பு ஆகும். ஏற்கனவே பேரழிவில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் வாழ்வை இது மேலும் ஆபத்தில் ஆழ்த்தும். மீதமுள்ள பணயக்கைதிகள் உட்பட மேலும் பல உயிர்களுக்கு இது ஆபத்தை விளைவிக்கும்.

காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் பொதுமக்கள் மற்றும் பணயக்கைதிகளுக்கு அச்சத்தைத் தூண்டுகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து பயங்கரமான பேரழிவை சந்தித்து வருகின்றனர். நிரந்தர போர்நிறுத்தம், காசா முழுவதும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் மற்றும் அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவித்தல் ஆகியவற்றை உடனே செய்யவேண்டும். சர்வதேச சட்டத்துக்கு இஸ்ரேல் கீழ்ப்படிய வேண்டும்.

இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவராமல், இந்த மோதலுக்கு நிலையான தீர்வு கிடைக்காது. காசா பாலஸ்தீன அரசின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அது அவ்வாறே தொடர்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று (ஆகஸ்ட் 10) அவசரக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

The post காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச் செயலாளர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92333