முக்கியச் செய்திகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/top-stories/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 28 Aug 2025 10:25:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 முக்கியச் செய்திகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/top-stories/ 32 32 201197430 திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்! https://koodal.com/news/2025/08/28/tiruppur-textile-centre-suffers-export-loss-of-rs-3000-crore-chief-minister-stalin/ Thu, 28 Aug 2025 10:25:03 +0000 https://koodal.com/?p=93328 இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட…

The post திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சமூகவலைதளப் பதிவொன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93328
எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! https://koodal.com/news/2025/08/27/we-will-not-bow-to-any-crisis-prime-minister-modi/ Wed, 27 Aug 2025 05:24:17 +0000 https://koodal.com/?p=93302 இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு…

The post எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு அறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (ஆக. 27) நள்ளிரவு 12.01 மணிக்கு பிறகு கூடுதல் வரிகள் அமலுக்கு வரும்.

இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் 66 சதவீத ஏற்றுமதி பாதிப்படையும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், கம்பளங்கள், பர்னிச்சர் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 60.2 பில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 2025-ம் நிதியாண்டில் 86.5 பில்லியன் டாலராக இருந்தது. தற்போதைய 50 சதவீத வரி விதிப்பால் நடப்பு நிதியாண்டில் இது 49.6 பில்லியன் டாலராக குறையும். ஒட்டுமொத்தத்தில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மொத்தம் 43 சதவீத சரிவு ஏற்படும். குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்பும் ஏற்படும். இது இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் தீவிரமான சவாலை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த அளவில் இவற்றின் தாக்கம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக சரிவடையச் செய்யும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எந்தவித நெருக்கடிகளுக்கும் இந்தியா அடிபணியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “குறு, சிறு நிறுவனங்கள், விவசாயிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளேன். அதற்கு தடையாக எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு அடிபணிய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93302
கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்! https://koodal.com/news/2025/08/27/why-is-the-website-for-applying-under-the-right-to-education-act-blocked-high-court/ Wed, 27 Aug 2025 05:17:22 +0000 https://koodal.com/?p=93291 கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​கீழ் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யில்​லாமல் அதற்கான இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பியுள்​ளனர். கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி தனி​யார் பள்​ளி​களில்…

The post கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​கீழ் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யில்​லாமல் அதற்கான இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பியுள்​ளனர்.

கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடஒதுக்​கீட்​டில் ஏழை, எளிய மாணவர்​களுக்கு சேர்க்​கைக்​கான இணை​யதள பக்​கம் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக​ கூறி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்​வாகி வே.ஈஸ்​வரன் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கல்வி உரிமை சட்​டத்​தின்​படி மத்​திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்​டும் என்​றும், தமிழக அரசும் நிதி கிடைப்​பதை காரணம் காட்​டா​மல் நிதியை வழங்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த உத்​தரவை தமிழக அரசு அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி மனு​தா​ரர் தரப்​பில் பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் சந்​திரமோகன், தனி​யார் பள்​ளி​களின் இயக்​குநர் குப்​பு​சாமி ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதனை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி​நா​ராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது.

தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநர் தாக்​கல் செய்​திருந்த பதில் மனு​வில், மத்​திய அரசு தனது பங்​களிப்பு நிதி​யான 60 சதவீதத்தை ஒதுக்​காத​தால் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​துக்​கான இடஒதுக்​கீட்டை அமல்​படுத்த இயல​வில்லை என தெரி​வித்​திருந்​தார். அரசு தரப்பு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன், கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தில் மத்​திய அரசுக்​கும் பங்​குள்​ளது என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ஏழை, எளிய மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யின்றி இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன் என்​றும் மாணவர்​களின் நலனைக் கருத்​தில் கொண்டு வரட்டு கவுர​வம் பார்க்​காமல் தமிழக அரசு இணை​யதள பக்​கத்தை செயல்​படுத்த வேண்டும் என்றும் கூறினர். அதற்கு அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர், மாணவர்​களின் நலனில் அரசு அக்​கறை கொண்​டுள்​ளது. தமிழக அரசுக்கு எந்த கவுர​வப் பிரச்​சினை​யும் இல்​லை, என்​றார். அதையடுத்து வி​சா​ரணை​யை வரும்​ செப்​.9-க்​கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93291
கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்! https://koodal.com/news/2025/08/27/no-permission-to-inspect-kotanadu-bungalow-court/ Wed, 27 Aug 2025 05:15:32 +0000 https://koodal.com/?p=93287 கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள கோட​நாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு,…

The post கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள கோட​நாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக சயான், வாளை​யாறு மனோஜ், சந்​தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகு​மார், ஜித்​தின் ஜாய், ஜம்​சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்​றவாளி கனக​ராஜ் சாலை விபத்தில் உயி​ரிழந்​தார். இந்த வழக்கு விசா​ரணை நீல​கிரி மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. திமுக ஆட்​சிக்கு வந்த பின்​னர் கோட​நாடு வழக்கு சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது.

கொலை, கொள்ளை சம்​பவம் நடை​பெற்ற கோட​நாடு பங்​களா​வில் தடயங்​கள் அழிக்​கப்​பட்டு உள்​ள​தால், வழக்கை விசா​ரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் கோட​நாடு பங்​களாவை ஆய்வு செய்ய அனு​மதிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, இந்த வழக்​கில் 10-வது குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டுள்ள ஜித்​தின் ஜாய் தரப்​பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

ஏற்​கெனவே நிபுணர் குழு கோட​நாடு பங்​களாவை ஆய்வு செய்து அறிக்கை அளித்து விட்​ட​தா​லும், தற்​போது புலன் விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தா​லும், கோட​நாடு பங்​களாவை எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் ஆய்வு செய்ய அனு​ம​திக்க முடி​யாது என்​றும், தேவைப்​பட்​டால் மாவட்ட நீதிபதி மட்​டும் ஆய்வு செய்​ய​லாம் என்​றும் சிபிசிஐடி தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ஜித்​தின் ஜாய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை தள்​ளு​படி செய்​தும், வழக்கு விசா​ரணையை அடுத்த மாதம் 19-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தும் நீதிபதி முரளிதரன் உத்​தர​விட்​டார்.

The post கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93287
ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்! https://koodal.com/news/2025/08/26/information-that-the-gst-tax-cut-will-be-implemented-on-october-2/ Tue, 26 Aug 2025 03:03:06 +0000 https://koodal.com/?p=93275 ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த…

The post ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

ஜிஎஸ்டி கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரண்டு அடுக்காக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது ஜிஎஸ்டி புதிய வரி விகிதம் அமல்படுத்தப்படும். இதனால், உணவு பொருட்கள், காய்கறி, பழங்கள், மருந்துகள், கார், ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, ஜவுளி, சிமென்ட் உட்பட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறையும். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதுபோல, தீபாவளி பண்டிகை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்படுத்தப்படும் என்று தகவல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93275
நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த வைகோ! https://koodal.com/news/2025/08/26/vaiko-personally-inquired-about-nallakannus-health/ Tue, 26 Aug 2025 02:57:30 +0000 https://koodal.com/?p=93268 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை…

The post நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த வைகோ! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.

மேலும், 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலை அவரது உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதெனவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நேற்று இரவு நல்லகண்ணு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தகைசால் தமிழருமான நல்லகண்ணு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார். மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (25.08.2025) மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ள மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் நலம் விசாரித்தார். அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த வைகோ! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93268
தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு! https://koodal.com/news/2025/08/25/dmdk-state-convention-announcement/ Mon, 25 Aug 2025 11:51:26 +0000 https://koodal.com/?p=93237 தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி,…

The post தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமைக் கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழகம், மகளிர் அணியினர் மற்றும் கட்சத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூர் மாநாட்டில் தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா ஏற்கெனவே தெரிவித்திருப்பதால் கட்சித் தொண்டர்களிடையே இந்த மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளான இன்று கட்சியின் மாநாடு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93237
ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு! https://koodal.com/news/2025/08/25/is-jagdeep-dhankhar-under-house-arrest-amit-shah-denies/ Mon, 25 Aug 2025 11:48:40 +0000 https://koodal.com/?p=93235 குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தன்கர்…

The post ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தன்கர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித் ஷா அளித்த பேட்டியில்,” ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் தெளிவாக உள்ளது. அவர் தனது ராஜினாமாவுக்கு உடல்நலக் காரணங்களையே குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சிறப்பான பதவிகாலத்துக்காக பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்” என்றார்

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறுவது குறித்து கேட்டபோது, “​​உண்மை மற்றும் பொய்களின் விளக்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது. இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தன்கர் ஒரு அரசியலமைப்பு பதவியை வகித்து அரசியலமைப்பின் படி தனது கடமைகளைச் செய்தார். தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்தார். இந்த விஷயத்தில் அதிகம் சிந்திக்கக்கூடாது” என்று கூறினார்.

ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். தன்கர் வீட்டுக் காவலின் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சில எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மூத்த தலைவருமான கபில் சிபல், ‘தன்கர் பொதுமக்களின் பார்வையில் இல்லை. இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?’ என கேள்வியை எழுப்பியுள்ளார்.

The post ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?: அமித் ஷா மறுப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93235
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன: பெ.சண்முகம்! https://koodal.com/news/2025/08/25/marxist-party-offices-remain-open-for-lovers-p-shanmugam/ Mon, 25 Aug 2025 11:47:33 +0000 https://koodal.com/?p=93232 “தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன” என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியுள்ளார். தமிழகத்தில் ஆணவக்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கவின்…

The post காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன: பெ.சண்முகம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன” என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஆணவக்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கவின் ஆணவக்கொலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ந்நிலையில் ஆணவக் கொலைகள் – குற்றங்களுக்கு எதிரான சமூக நீதிக் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறிச் செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன: பெ.சண்முகம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93232
இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு பேச்சால் சர்ச்சை! https://koodal.com/news/2025/08/25/hinduism-must-be-destroyed-controversy-over-vanni-arasu-speech/ Mon, 25 Aug 2025 11:46:00 +0000 https://koodal.com/?p=93230 “இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். ராமனும் ஒன்றுதான், ராமதாஸும் ஒன்றுதான். பார்ப்பனர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்” என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் நேற்று…

The post இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு பேச்சால் சர்ச்சை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். ராமனும் ஒன்றுதான், ராமதாஸும் ஒன்றுதான். பார்ப்பனர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்” என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பங்கேற்றுப் பேசியதாவது:-

ராமன் வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் செல்லும் போது அங்கே ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கின்றான். அவனிடம் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என ராமன் கேள்வி கேட்கிறான். அப்போது எனது பெயர் சம்பூகன், நான் வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவன். தற்போது தவம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறான். கீழ் ஜாதியைச் சேர்ந்த நீ எப்படி இந்த தர்மத்தைச் செய்ய முடியும்? அந்தந்த ஜாதிக்கு என தர்மம் உள்ளது என்று கூறி தலைமையை வெட்டி படுகொலை செய்கிறான். படுகொலையின் போது தெறித்த ரத்தத்தால் அந்த குழந்தை உயிர்ப்பித்ததாக கதையில் சொல்லப்படுகிறது. இந்த கொலைக்கு பின்னால் ஆணவக் கொலைகளுக்கு பின்னணியில் ஒரு கோட்பாடு உள்ளது. இந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு, வர்ணாசிரம கோட்பாடு. இதனை அழித்தொழிக்க வேண்டும் என அம்பேத்கர் சொல்கிறார்.

இந்து மதத்தில் சமத்துவம், சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். இதனால் தான் இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் மதம் மாறுகிறார். இந்த படுகொலை எங்கிருந்து தொடங்குகிறது. இந்த கோட்பாட்டை வர்ணாசிரமத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் நுட்பமான அரசியல். ராமன் பார்ப்பனர் கிடையாது, ஆனால் பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தார். அதே போன்று ராமதாஸ் பார்ப்பனர் கிடையாது, ஆனால் பார்ப்பனியர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வேலையை செய்கிறார். கருத்தியல் ரீதியாக ராமதாஸ் செய்வதும், ராமன் செய்ததும் ஒன்று தான். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

The post இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு பேச்சால் சர்ச்சை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93230