சிறப்பு பார்வை Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/trending-stories/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 28 Aug 2025 10:23:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 சிறப்பு பார்வை Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/trending-stories/ 32 32 201197430 உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு 2 கோடி வழங்க வேண்டும்: சீமான்! https://koodal.com/news/2025/08/28/2-crore-should-be-given-to-the-family-of-the-deceased-government-doctor-seeman/ Thu, 28 Aug 2025 10:23:55 +0000 https://koodal.com/?p=93326 அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- கட்டுப்பாடிழந்த அரசுப்…

The post உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு 2 கோடி வழங்க வேண்டும்: சீமான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் திமுக அரசின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தம்பி மணிக்குமார் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை பணியின் போது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று மோதிய விபத்தில் சிக்குண்டு உடல் நசுங்கி, அதே இடத்திலேயே உயிரிழந்தார் எனும் துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மருத்துவர் தம்பி மணிக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய மருத்துவத்துறையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். இதே விபத்தில் சிக்குண்டு படுகாயத்துடன் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் தம்பி பிரவீன் அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இது யார் குற்றம்? சாலையில் நடந்து சென்றது குற்றமா? தரமற்ற பழுதடைந்த அரசுப் பேருந்துகளை சாலையில் பயணிக்க விட்டு, மக்களின் உயிர்களைப் பறிக்கும் அரசின் குற்றமா? அரசின் அனைத்து துறைகளிலும் மலிந்துபோயுள்ள ஊழலால் அரசு நிர்வாகம் முற்று முழுதாகச் சீர்கெட்டு நிகழும் இதுபோன்ற விபத்துகளுக்குக் கூட தார்மீகப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய துயர்துடைப்பு உதவிகள் வழங்க மறுக்கும் திமுக அரசின் செயல் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் அருகே சுரங்கப் பாதையில், மழை வெள்ளம் தேங்கியது குறித்து எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் தடுப்பும் வைக்கப்படாத நிலையில், மகிழுந்தில் சென்ற அரசு பெண் மருத்துவர் தங்கை சத்யா அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேஆண்டு, டிசம்பர் மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றிவந்த மருத்துவர் தம்பி கார்த்திகேயன் அவர்களின் மகிழுந்தை பரம்புபட்டி அருகே திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி மிக மிஞ்சிய வேகத்தில் சென்ற அரசுப் பேருந்து ஒன்று வேகமாக உரசி ஒதுக்கித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற காரணத்தினால், விபத்து ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே மருத்துவர் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்த இரண்டு அரசு மருத்துவர்களுக்கும் உரிய துயர்துடைப்புத் தொகையை இன்றளவும் வழங்காது காலந்தாழ்த்தி வருகின்றது திமுக அரசு.

மதுபோதை மீதான வெறியில் சட்டத்திற்குப் புறம்பாகக் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு தொகையாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூபாய் 10 இலட்சத்தை அள்ளித் தந்து, அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்கும் இந்த ‘திராவிட மாடல்’ திமுக அரசு, மக்களின் உயிர்க் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்கள், அரசின் அலட்சியத்தால் நிகழும் விபத்துகளில் சிக்குண்டு உயிரிழந்தால் கூட அவர்களின் குடும்பத்திற்கு எவ்வித துயர்துடைப்பு உதவிகளையும் வழங்கமறுப்பது வெட்கக்கேடு.

அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், அரசு மருத்துவர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எப்போது?

மக்களுக்கு நோயற்ற வாழ்வளிக்க அரும்பணியாற்றும் அரசு மருத்துவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டியதும், பேரிழப்புகளின் போது அவர்களின் குடும்பத்திற்கு உற்ற துணையாக நிற்க வேண்டியதும் ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாடு அரசு உயிரிழந்த மூன்று அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வீதம் துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், படுகாயமடைந்த மருத்துவர் தம்பி பிரவீனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு 2 கோடி வழங்க வேண்டும்: சீமான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93326
அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: முத்தரசன்! https://koodal.com/news/2025/08/28/prime-minister-modi-must-face-the-us-tax-attack-with-political-determination-mutharasan/ Thu, 28 Aug 2025 02:56:59 +0000 https://koodal.com/?p=93311 ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்…

The post அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: முத்தரசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு (ஜனவரி 2025) அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை செய்ய முடியாத அளவில் உயர்த்தி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு தாக்குதல் நடத்தி வருகிறார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ஆயுதத் தாக்குதலை ஊக்குவித்து, ஈரான் மீது தாக்குதலை விரிவுபடுத்தி, மேலும், பல நாடுகளையும் மிரட்டி வரும் ட்ரம்ப் அரசு நிர்வாகம், மறு கையில் இறக்குமதி பொருள்கள் மீது கடுமையான வரி உயர்வு உத்தரவுகளை வெளியிட்டு மிரட்டி வருகின்றது.

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என தொடர்ந்து நிர்பந்தித்து வந்த அமெரிக்க அரசு, தற்போது, இன்று முதல் (27.08.2025) இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், ஏற்கனவே, அங்கு இறக்குமதி செய்து, குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விற்பனைக்காக வெளியில் எடுக்கப்பட்டாலும் அவை மீது 25 சதவீதம் கூடுதல் வரியும், அபராதமாக 25 சதவீதம் என 50 சதவீத வரி வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபாரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், மின்சார எந்திர சாதனங்கள் போன்ற உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கும் என தெரியவந்துள்ளது.

“இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார்கள் உலகம் முழுவதும் ஓடும்” எனப் பெருமிதப்படும் பிரதமரின் எண்ணம் அமெரிக்காவில் நடக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் சுய பொருளாதாரத்தை தாக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் “மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்” என்ற பிரதமரின் பேச்சு வழக்கமான வாய்ச்சவடாலாகி நின்று விடக்கூடாது. அதனை அரசியல் உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசின் வரிவிதிப்பால் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதிலும் கடுமையாக பாதிக்கும் என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு, இந்தப் பகுதி தொழில்களின் ஏற்றுமதி பாதிக்காமல் தொடர்ந்து நடைபெற, பொருத்தமான மாற்றுத் திட்டத்தையும், வரிச் சலுகைகள் உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: முத்தரசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93311
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி https://koodal.com/news/2025/08/27/government-should-immediately-provide-permanent-positions-to-honorary-lecturers-anbumani/ Wed, 27 Aug 2025 05:13:52 +0000 https://koodal.com/?p=93283 உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அரசு…

The post கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மூன்று வகையான உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நிரந்தர உதவிப் பேராசிரியர்கள், தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் 2012-ம் ஆண்டில் முறையே ரூ.40,412, ரூ.34,000, ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிரந்தர உதவிப் பேராசிரியர்களின் ஊதியம் ரூ.1,36,952 ஆகவும், தற்காலிக உதவிப் பேராசிரியர்களின் ஊதியம் ரூ.1,16,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கு இப்போதும் ரூ.30,000 தான் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய முரண்பாட்டை களையக் கோரி ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில்தான் சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களை பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரா ஆகியோருடன் ஒப்பிட்டு வணங்குவதால் மட்டும் அவர்களுக்கு கண்ணியம் ஏற்பட்டுவிடாது; எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் அவர்களுக்கு கண்ணியமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், இதை 2012-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு ஆண்டுக்கு 8% வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ளத் தீர்ப்பு தமிழகத்திலுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பொருந்தும்.

குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களை விட தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கு 2012-ம் ஆண்டிலேயே ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழக கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம்தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள்தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8,000-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துதான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள்தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019-ம் நாள் ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படாத நிலையில், அதை எதிர்த்து வழக்கில் கடந்த 21.03.2024-ம் நாள் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு “கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.. அவமதிப்பூதியம். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அரசுக்கு ஆணையிட்டது.

அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாத நிலையில், மீண்டும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் நாள் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30-ம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை திமுக அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93283
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: சீமான் கண்டனம்! https://koodal.com/news/2025/08/25/hydrocarbon-wells-in-ramanathapuram-seeman-condemns/ Mon, 25 Aug 2025 04:33:40 +0000 https://koodal.com/?p=93203 இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது, தமிழக மக்களின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரலையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும். இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்…

The post ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: சீமான் கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது, தமிழக மக்களின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரலையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும். இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த நிலையில் அதற்கான சூழலியல் அனுமதியை மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம், அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தினை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரே கடல்சார் உயிர்கோளக் காப்பகம் மன்னார் வளைகுடாவாகும். இது அரிய மற்றும் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களை, குறிப்பாக பவளப் பாறைகள், மீன்கள், கடல் மிருகங்கள் மற்றும் பல்வேறு கடல் உயிரினங்களைக் கொண்டுள்ளது.

திட்டமிடப்பட்டக் கிணறு தோண்டும் இடங்களுக்கு அருகில் உள்ள இந்தப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இந்த செயல்பாடுகள், கடல் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும். மேலும் இத்திட்டம், கிணறு தோண்டும் இடங்கள், குழாய்கள் மற்றும் செயலாக்க ஆலைகளுக்குப் பெரும் நிலப்பரப்பு தேவைப்படுத்துகிறது. இது கடற்கரையோர வாழ்விடங்களை அழித்து, உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கும்.

2019ல் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹைட்ரோகார்பன் திட்டத்தினை சட்டசபையில் எதிர்த்து அதிமுக அரசிடம் குரல்கொடுத்தது முதல், 2023ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்துக் கேள்வி எழுந்த நிலையில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மாட்டோம் என்று ஆளும் கட்சியாக உறுதியளித்தது வரையில் திமுக அரசு கூறிவந்த கூற்றுக்கு மாறாக தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசினால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பது மேலும் கண்டனத்திற்குரியதாகும்.

மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் முழு அதிகாரம் மாநில அரசிடம் இல்லை என தமிழ்நாடு அரசு கூறுமானால் அதனை மாற்றி அமைக்கும் முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லையா? மேலும் இவற்றை நிறுவக்கூடிய விதிகளான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006ஐ உருவாக்கியபோது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சராக திமுகவை சேர்ந்த ஆ.ராசா அவர்கள் இருந்த நிலையிலும் இதனைக் கருத்திற்கொள்ளவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது.

இனியும் மக்களை வெற்றுச் சொற்கள் கொண்டு ஏமாற்றாமல், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் திமுக அரசு முன்வர வேண்டும். இத்திட்டத்திற்கான சூழலியல் அனுமதியை திரும்பப்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்திட்ட முன்மொழிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: சீமான் கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93203
இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி! https://koodal.com/news/2025/08/23/there-is-a-democratic-deficit-in-india-sudarshan-reddy/ Sat, 23 Aug 2025 17:14:54 +0000 https://koodal.com/?p=93180 “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு…

The post இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சுதர்சன் ரெட்டி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு புதிது கிடையாது.

பொருளாதார நிலையில் பற்றாக்குறை குறித்து பல தரப்பினரும் விவாதிக்கும் வேளையில், இப்போது இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. அதாவது, நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதுபோலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டியா கூட்டணி சார்பில் நானும் போட்டியிடுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இது எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி கிடையாது. மாறாக, இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி இது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்காரர். ஆனால், நான் எந்த சித்தாந்தத்தையும் பின்பற்றவில்லை என்றாலும், நான் ஒரு ஜனநாயகவாதி. அதன் அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. ‘நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஒருவகையான போராட்டம்’ என்று மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு வழக்கில் நான் நக்சல் தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்ய விரும்பவில்லை. அந்தத் தீர்ப்பு என்பது என்னுடைய தீர்ப்பு கிடையாது. அது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரங்களையும் அமைச்சர் அமித் ஷா படித்து பார்க்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93180
உதயநிதியை பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது: ஆ.ராசா! https://koodal.com/news/2025/08/23/amit-shah-is-scared-after-seeing-udhayanidhi-a-raja/ Sat, 23 Aug 2025 04:36:20 +0000 https://koodal.com/?p=93140 “துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார்” என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார். இது குறித்து ஆ.ராசா…

The post உதயநிதியை பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது: ஆ.ராசா! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார்” என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார்.

இது குறித்து ஆ.ராசா எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருநெல்வேலி பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த ஒன்றிய உள்துறை அமித் ஷா, டெல்லியில் இருந்து எதையும் கொண்டு வரவில்லை. வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். திராவிட மாடல் அரசைக் குறை கூறுவதற்கு எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்களைப் பேசிச் சென்றிருக்கிறார்.

“திருக்குறளின் வழி நின்று ஆட்சி நடத்தி வருகிறார் மோடி” எனச் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் குறள் பாடியே ஒன்றிய அரசைச் சாடியிருப்பார். பொய்களை மட்டுமே கொண்டு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும் ஒன்றிய அரசு திருவள்ளுவர் எழுதிய பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்ற குறளைப் படிக்க வேண்டும்.

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும் என்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறளை அமித் ஷா படித்தால் போதும் பொது வெளியில் பொய் வடைகளை சுடுவதை நிறுத்தி விடுவார். வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் / கோலொடு நின்றான் இரவு – என்ற குறளில், ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். அளவுக்கு அதிகமாக வரி வசூலிக்கும் அரசரை வழிப்பறிக் கொள்ளையனுடன் ஒப்பிடுகிறார். ஜி.எஸ்.டி என்ற கொடிய வரியை வசூலித்து மக்களை வஞ்சிக்கும் அமித் ஷா எல்லாம் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பேசத் தகுதியே இல்லை.

“சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே கனவு; அதேபோல திமுகவுக்கு உதயநிதியை முதல்வராக்குவதே கனவு. இந்த இரண்டுமே நடக்காது” எனச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா.
அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டு போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதல்வர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதல்வர் ஆக வேண்டும் என்பதை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரான அமித் ஷா முடிவு செய்ய முடியாது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்படித்தான் சொன்னார். அவருடைய மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சொன்னார். ஆனால், வரலாறு நடத்திக் காட்டியது. துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதல்வர், அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்துதான் வருவார்கள்.

“வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார் அமித் ஷா. இந்தியாவில் இருந்தே வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய நச்சு செடி பாசிச பாஜக. இந்தியா கூட்டணியும் மக்களும் அதனை நிகழ்த்திக் காட்டுவார்கள்.

“130-வது சட்டத் திருத்தத்தை ‘கறுப்பு சட்டம்’ என்கிறார் ஸ்டாலின். அதைச் சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்கிறார் அமித் ஷா. சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சிறையிருந்த நீங்கள் எல்லாம் இந்தச் சட்டத்தை இயற்ற தகுதியில்லாதவர். மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. இதில் 19 அமைச்சர்கள் மீது மிகவும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம் 130-வது சட்டப் பிரிவு பாயுமா? தங்களுக்குப் பிடிக்காதவர்களை ஆட்சியிலிருந்து விரட்டக் கொண்டு வந்த சட்டத்தை ‘கறுப்பு சட்டம்’ என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பார்களாம். இது நல்ல சட்டம் என்றால், ஏன் பாஜகவுக்கு மட்டும் பொருந்துவதில்லை.

130-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் தனது ஏவல் துறையான அமலாக்கத் துறையை பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தனது அரசியல் எதிரிகளை மிரட்டி தன்னால் ஆளமுடியாத மாநில அரசுகளை முடக்குவதற்காக 130-ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது பாஜக. ஏற்கெனவே அமலாக்கத் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளை அரசியல் எதிரிகளை பழிவாங்கப் பயன்படுத்திவரும் பாஜக, இப்போது தான் ஆள முடியாத மாநிலங்களின் முதல்வர்கள் அமைச்சர்களைக் கைது செய்து அவர்களது பதவியைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

இந்தச் சர்வாதிகாரக் கறுப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பிய கண்டனக் குரல் அமித் ஷாவை ஆட்டங்காணச் செய்திருக்கிறது, அதனால்தான் உடனே தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். நாட்டைச் சர்வாதிகார நாடாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் பாசிசத் திட்டத்திற்கு எதிரான சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார் என்பதைத்தான் அமித் ஷாவின் அபத்த உளரல்கள் நிரூபித்திருக்கிறது.

அமித் ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடைநடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல, தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காத்து நிற்கும் மானமிகு முதலமைச்சரின் அரசு, “நாட்டின் மிகப் பெரிய ஊழல் கட்சி திமுக” என தேய்ந்த ரிக்கார்டு போலச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. அமித் ஷாவுக்கு நாக்கு ஒன்றுதான். வார்த்தைகள்தான் வேறு வேறு.

2018 ஜூலை 9-ம் தேதி சென்னையில் பேசிய அமித் ஷா, “நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளது” என்று அன்றைக்கு இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைச் சொன்னார். 2016 ஏப்ரல் 14-ம் தேதி திருச்சியில் பேசிய அமித் ஷா, “நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சிதான்” என்றார். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகளை ஊழல் ஆட்சியென்று சொல்லிவிட்டு அதிமுகவோடு கூட்டணி போடுவது எல்லாம் அமித் ஷாவின் சாணக்கியத்தனத்தில் அடங்குமா? ஊழலிலேயே திளைத்து ஊழலிலேயே தவழ்ந்து உலக மகா ஊழல் ஆட்சி நடத்திய அதிமுகவுடன் வெட்கமே இல்லாமல் ஊழல் கூட்டணி வைத்திருக்கும் அமித் ஷா, தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று பேசுவைத் கேட்டால் சின்னக் குழந்தையும் கைகொட்டிச் சிரிக்கும்.

தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி சுட்டிக்காட்டிய 7.5 கோடி ஊழல், ரஃபேல் விமான முறைகேடு ஊழல் என ஒன்றிய பாஜக அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அணி வகுக்கின்றன. புலனாய்வு அமைப்புகளை வளைத்துவிட்டதால் பாஜக ஆட்சியாளர்கள் விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பியோடுவது நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும். ஊழல் புகார்களில் சிக்கியவர்களை பாஜக வாஷிங் மெஷினில் போட்டு, தூய்மையானவர்கள் என பட்டம் கொடுத்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் அமித் ஷாவிற்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது ?

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டமில்லை; சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை; தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை; இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித் ஷா அவர்களே!

தமிழ்நாடு இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்கிற உண்மை உறுத்தியிருப்பதால் மக்களிடம் தோற்றுப் போன இந்தப் பொய்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அமித் ஷா. ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும் சரி, பாஜகவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது! விடியல் ஆட்சியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது! தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகப் பாஜகவையும் அதன் பண்ணையடிமையாக மாறிவிட்ட அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் ஓட ஓட விரட்டக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு ஆ.ராசா கூறியுள்ளார்.

The post உதயநிதியை பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது: ஆ.ராசா! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93140
அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி! https://koodal.com/news/2025/08/22/temporary-employees-in-government-departments-should-be-made-permanent-anbumani/ Fri, 22 Aug 2025 10:25:04 +0000 https://koodal.com/?p=93071 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அரசுத் துறைகளில் தற்காலிக…

The post அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.

உத்தரப் பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.

பணியாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது. தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது’’ என்றும் அறிவுறுத்தினர். அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.

தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தற்காலிக நியமனங்களை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர்; அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.

தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தான் திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை படித்தாவது திமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.

அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93071
தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: விஜய்! https://koodal.com/news/2025/08/21/bjp-is-thavekas-political-enemy-dmk-is-his-political-enemy-vijay/ Thu, 21 Aug 2025 15:41:38 +0000 https://koodal.com/?p=93002 மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.…

The post தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: விஜய்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மங்கல இசை, மதுரை மாநாட்டுக்கான சிறப்புப் பாடல் என்று கூட்டம் தொடங்கியது. அதில் விஜய் பேசியதாவது:-

ஒரு கானகத்தில் சிங்கம், புலி, நரி என்று பல்வேறு மிருகங்கள் இருந்தாலும் சிங்கம்தான் காட்டின் ராஜா. அந்த சிங்கம் வேட்டைக்குப் போனாலும் ‘சிங்கிளாக’ தான். தன்னைவிட பெரிய விலங்கைதான் வேட்டையாடும். அதுதான் நம் நிலைப்பாடு.

சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தவெகவின் அரசியல் உண்மையானது, உணர்வுப்பூர்மானது, நல்லவர்களுக்கானது, நாட்டு மக்களுக்கானது, நல்லதை மட்டுமே செய்யும் அரசியல்.

விக்கிரவாண்டி மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தையே மாற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல் ஒற்றைக் குரல் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். இந்தக் குரல் மாநில உரிமைக்காக, பெண்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக, சம உரிமைக்காக ஒலிக்கும் குரல். இதற்கு எதிராக எத்தனை கூக்குரல் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஓயாது.

நான் கட்சியை ஆரம்பிக்கும் முன்னர் அத்தனை விமர்சனங்கள் எழுந்தன. அவரே ஆரம்பிக்கவில்லை, இவரா ஆரம்பிக்கப்போகிறார் என்றார்கள். அப்புறம் கட்சியை அறிவித்தவுடன். கட்சிதானே ஆரம்பித்திருக்கிறார் என்றார்கள். அப்புறம் மாநாடு நடத்தினேன். இப்போது இரண்டாவது மாநாடு நடக்கிறது. இப்போது கட்சி ஆரம்பித்தால், மாநாடு நடத்தினால் மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஆட்சியைப் பிடிப்பது ஈஸி இல்ல. ஷூட்டிங்கில் இருந்து வந்து ஆட்சியப் பிடிப்பாரா? என்றுசொல்கிறார்கள். இந்தக் கூட்டம் எப்படி ஓட்டா மாறும் என்று இன்னொரு பக்கம் விமர்சனம்,

என்னைப் பற்றிப் பேசும் அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். இந்தக் கூட்டம் ஆட்சியாளர்களுக்கு வேட்டா, நம்மள கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா மாறும். நான் அரசியலுக்கு வந்தது பெண்கள், பெண்குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றோர், மூன்றாம் பாலினத்தவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எல்லோருக்கும் நல்லது செய்யவே.

நமது ஒரே கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக தான். நமக்கு, யாருக்காகவும் எதற்காகவும் எந்த பயமும் இல்லை. நாம் கூட்டணி வைத்து ஏமாற்றும் கட்சி கிடையாது. பாசிச பாஜகவுடன் உறவு வச்சுக்க நாமென்ன உலக மகா ஊழல் கட்சியா? நாம யார் தெரியுமா? இந்தியாவின் மாபெரும் சக்தி கொண்ட மகத்தான வெகுஜன மக்கள் படை.

நாம் எந்த அடிமைக் கூட்டணியிலும் சேர வேண்டிய அவசியமில்லை. ஒருபுறம் ஆர்எஸ்எஸ்-ஸிடம் அடிபணிந்து கொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணி அமைப்பதெல்லாம் நாம் செய்வதில்லை. கூட்டணி பற்றி சஸ்பென்ஸ்லேயே சஞ்சாரம் செய்யுங்கள். 2026 தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி. அதனால், அலையன்ஸ வச்சு தப்பிச்சுடலாம்னு நினைக்குறவங்க கனவு ஒரு நாளும் மெய்ப்படாது. பாசிச பாஜக, பாய்சன் திமுகவுக்கு எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுத்துள்ளோம்.

மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களே, 3-வது முறையாக நீங்கள் தான் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள்? நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை.. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்கள் நலனுக்காக, அவர்களின் சார்பில் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். அது போதும். செய்வீர்களா?

இல்லை, மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் 2029 வரை சொகுசுப் பயணம் போகலாம் என்று திட்டம் போடுகிறீர்களா?. நீங்கள் என்ன தான் திட்டம் போட்டாலும், தாமரை இலையில் தண்ணி ஒட்டாது, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை. ஆனால், கீழடி வரலாற்றை மறைத்து எங்கள் நாகரிகத்தை அழிக்க உள்ளடி வேலை செய்யலாம்னு நினைக்குறீங்க. உங்கள் எண்ணெமெல்லாம் ஈடேறாது

தமிழகத்தில் எம்ஜிஆர் ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். அதனால், என்ன வேஷம் போட்டுக் கொண்டு வந்தாலும் பாஜகவின் வித்தை இங்கே வேலைக்கு ஆகாது.

அதேபோல், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறது. ஆட்சியில் இல்லாவிட்டால் போங்க மோடிங்குறது. ஆட்சிக்கு வந்துவிட்டால் வாங்க மோடிங்குறது. தவிர, டெல்லியில் சீக்ரெட் மீட்டிங் நடத்துறது. ‘ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்.’ ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அதை செய்தது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் கேள்வி கேட்பேன். நீங்கள் நேர்மையான, நியாயமான ஆட்சி நடத்துகிறீர்களா? பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துட்டா போதுமா. அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றார்கள். சொன்னதெல்லாம் செஞ்சாங்களா?

இங்கே இல்லை என்று மக்கள் முழங்குகிறார்கள். அது உங்களுக்கு கேட்கிறதா? இது வெறும் சாதாரணமான முழக்கம்தான். கூடிய சீக்கிரம் மக்களை சந்திப்பேன். அது இடி முழக்கமாக மாறும். அது போர் முழக்கமாக மாறும். நான் மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் அரசியலுக்கு வந்துள்ளேன். அதுமட்டுமல்ல நான் நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 30 வருடங்களுக்கு மேலாக என்னை நீங்கள் தான் தாங்கிப் பிடிக்கிறீர்கள்.உங்களுக்காக வருகிறேன். நான் உங்களை மறக்க மாட்டேன்.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பின்னர்தான் கட்சியே ஆரம்பித்தேன். 2026-ல் கபட நாடக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன். வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நான் அறிவிக்கிறேன். மதுரை கிழக்கு விஜய், மதுரை மேற்கு விஜய், சோழவந்தான் விஜய், உசிலம்படி விஜய். என்னடா, எல்லா தொகுதிகளிலும் என் பெயரையே சொல்கிறேன் என நினைக்கிறீர்களா? ஆம், 234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தவெகவின் வேட்பாளருக்கு வாக்களித்தால் அது எனக்கு வாக்களிப்பதாகும்.

நான் மக்களுக்காக உழைப்பதற்காக வந்துள்ளேன், எனக்கு இனி வேறு வேலை இல்லை. என் கடன் இனி மக்களுக்கு பணி செய்வதே. மக்களை நேசிக்கும் நான், மக்களுக்காக வருகிறேன். ஒரு அரசியல் தலைவன் உண்மையானவனாக இருக்க வேண்டும். நான் உண்மையான அரசியல்வாதியாக உங்களுக்காக வருகிறேன்.

என்னை சினிமாக்காரன் என்று சொல்கிறார்கள். எல்லா சினிமாக்காரனும் முட்டாள் கிடையாது , எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது. இங்கே, அம்பேத்கரை, நல்லகண்ணுவை, காமராஜரை தோற்கடித்தது அரசியல்வாதிதான், சினிமாக்காரன் அல்ல. நான் மக்களுக்கான நல்ல அரசியல்வாதி. இவ்வாறு விஜய் பேசினார்.

பேச்சின் ஊடே விஜய் ஒரு குட்டிக் கதை சொன்னார். “ஒரு ராஜா தனக்கு ஒரு உண்மையான தளபதி வேண்டுமென்று நினைத்தார். அதற்காக ஒரு போட்டி வைத்தார். அதில் 10 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதை நெல்லை கொடுத்த ராஜா, இதை வளர்த்துக் கொண்டு வாருங்கள் என்றார். சில நாட்களுக்குப் பின்னர் ஒருவர் ஆள் உயரம், ஒருவர் தோள் உயரம் என அதை வளர்த்துக் கொண்டு வந்தார்கள்.

9 பேரும் அப்படி வளர்த்துக் கொண்டு வர, 10-வது நபர் மட்டும் வெறும் தொட்டியைக் கொண்டு வந்தார். கூடவே அழுது கொண்டிருந்தார். இதை எவ்வளவு முயற்சித்தும் என்னால் வளர்க்க முடியவில்லை என்று அழுது கொண்டே சொன்னார். அந்த நபரை கட்டியணைத்த மன்னர், நீ தான் என் தளபதி என்றார். ஏனெனில் அவர் கொடுத்தது அவித்த நெல். 9 பேரும் பொய் சொல்ல மன்னருக்கு ஒரு உண்மையான தளபதி கிடைத்தார். நீங்கள் எல்லோரும் தான் அந்த ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் தளபதி யார்?” என்று குட்டிக் கதையை விஜய் சொல்லி முடித்தார்.

The post தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக: விஜய்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
93002
இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தி வைப்பு! https://koodal.com/news/2025/08/21/stop-the-repatriation-of-sri-lankan-tamils-to-their-home-country/ Thu, 21 Aug 2025 10:08:55 +0000 https://koodal.com/?p=92978 இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 1980-களில் தொடங்கிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். குறிப்பாக 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு…

The post இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தி வைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையில் 1980-களில் தொடங்கிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். குறிப்பாக 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் இந்திய அரசின் மூலமாக 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் மட்டும் 20 ஆயிரம் இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசிக்கின்றனர். ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள முகாமில் 60 இலங்கை தமிழர்கள் உள்ளனர்.

மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு 320-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவர்கள் மண்டபத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள், குடியேற்ற சட்டத்தின் விதிகளை மீறியதாகக் கூறி, கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட வெல்வவந்தரம் (54) என்பவர் 2025 ஆகஸ்ட் 12-ம் தேதி கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார். அவர், நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஒரு இலங்கை தமிழ் தம்பதி கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி 1996-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்திலிருந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின உயர் ஆணையம் மூலம் அனுப்பப்படும் அகதிகள் இலங்கையில் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் தற்போது இலங்கைக்கு அகதிகளை திருப்பி அனுப்புவதை ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனிடையே இலங்கை அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், ‘இலங்கை திரும்பும் அகதிகள் மீது குற்றவியல் வழக்கு நிலுவையில் இல்லாவிட்டால் கைது நடவடிக்கை இருக்காது. உள்நாட்டுப் போரின்போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று பயந்து அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் தற்போது நாடு திரும்பினால் அவர்கள் குடியேற்றச் சட்டங்களை மீறியது மன்னிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தி வைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92978
ஊழல் தான் ‘இந்தியா’ கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு: அண்ணாமலை! https://koodal.com/news/2025/08/21/corruption-is-the-only-constitution-that-is-actually-followed-by-the-india-coalition-annamalai/ Thu, 21 Aug 2025 04:32:15 +0000 https://koodal.com/?p=92947 குற்ற வழக்குகளில் சிக்கும் முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம்…

The post ஊழல் தான் ‘இந்தியா’ கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு: அண்ணாமலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குற்ற வழக்குகளில் சிக்கும் முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார்.

30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “போட்டியாளர்களை கைது செய்து அவர்களை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தன்னிடம் வைத்துக்கொள்வதே சர்வாதிகார வளர்ச்சியின் முதல் படி. இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது” எனத் தெரிவித்து, இது ஒரு கருப்பு நாள் என்றும், இது ஒரு கருப்பு மசோதா என்றும் இது சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்றும் விமர்சித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை, இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைத்துக் கொண்ட உங்களின் வெட்கமில்லாத அரசை விட, கருப்பான அல்லது அவமானகரமானது வேறு எதுவும் இல்லை. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, உங்களின் வெட்கமில்லாத அரசு, செந்தில் பாலாஜியை மீண்டும் அவர் முன்னர் வகித்த அதே அமைச்சர் பொறுப்பை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்துதான் அந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் விசாரணையில், உங்கள் அரசின் தாமதப்படுத்தும் முயற்சிகள் குறித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியதை நாங்கள் மீண்டும் சொல்ல வேண்டுமா?

இந்தியா கூட்டணியின் இன்னொரு ஊழல் வீரர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டிருந்தும், பல மாதங்களாக முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) ஐ உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த போது, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தண்டனை பெற உள்ள தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க, அவசரத்தில் ஒரு ஆணையை கொண்டு வந்தது. இன்று கூட்டணியின் பெயர் மாறிவிட்டது, ஆனால் அதன் குறிக்கோள் அப்படியே உள்ளது. 130வது அரசியலமைப்புத் திருத்தத்தை நீங்கள் எதிர்ப்பது எங்களுக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படுத்தவில்லை. ஊழல் தான் உங்கள் கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஊழல் தான் ‘இந்தியா’ கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு: அண்ணாமலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
92947