குழந்தை வளர்ப்பு Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/child-care-tips/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 05 Nov 2024 16:15:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 குழந்தை வளர்ப்பு Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/child-care-tips/ 32 32 201197430 தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனது! https://koodal.com/women/2024/11/05/diwali-firecrackers-burst-and-four-children-lost-their-sight/ Tue, 05 Nov 2024 16:15:10 +0000 https://koodal.com/?p=69319 மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை…

The post தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வழக்கம் போல பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியும் மக்கள் தீபாவளி பண்டிகையை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து வான வேடிக்கைகள், சரவெடிகள் உள்ளிட்ட வெடிகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு நேரங்களில் இரவை பகலாக்குவது போல வான வேடிக்கைகளால் தமிழகம் முழுவதும் ஜொலித்தது. இந்த நிலையில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் உரிய நடைமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விபத்துக்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சிறுசிறு பட்டாசு விபத்துகளில் 304 பேர் காயம் அடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தது. தீபாவளி அன்று மட்டும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து 128 அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் பட்டாசு விபத்து காரணமாக தீப்பிடித்தது என 97 அழைப்புகள் வந்திருக்கிறது. பட்டாசுகள் இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் நடந்து இருக்கிறது. மேலும் பிற விபத்துகளில் மொத்தம் 544 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில்,”வெடி விபத்து பற்றிய விழிப்புணர்வு பல வகைகளில், பலரால் கொடுக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் விபத்துகள் தொடர்கிறது. தீபாவளி அன்று வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கை 104. அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear) ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் நான்கு பேருக்கு, முற்றிலும் கண் பார்வை பாதிக்கப்பட்டு, கண்கள் எடுக்கப்பட்டது (Enucleation). அந்த நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி, பார்வையிழப்பை தடுப்போம் என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் மதுரையில் ஒரு மருத்துவமனையில் மட்டுமே நடந்தது என்பதை கவனிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான கண் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் இதே போன்று பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே வரும் காலங்களில் பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பெற்றோர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை மிக அருகில் அழைத்துச் செல்வது, அவர்களை வெடிக்க அனுமதிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும், புஸ்வானம் உள்ளிட்டவற்றை கொளுத்தும் போது கூட அவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி அணிவிப்பது அவசியம்.

The post தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
69319
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி? https://koodal.com/women/2022/09/26/memory-improvement-tips-for-children-child-care-tips-and-informations-in-tamil/ Mon, 26 Sep 2022 10:41:10 +0000 https://koodal.com/?p=13382 ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள். ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும். ஞாபகம் குறித்து சில தகவல்கள்: நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும்,…

The post குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள். ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.

ஞாபகம் குறித்து சில தகவல்கள்:

நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும்.

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும். எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு: ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.

மேலும் நாள் பட்ட ஞாபகம்கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.

நினைவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்:

மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்.

யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமரி

முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது – ஷார்ட் டெர்ம் மெமரி

தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டெர்ம் explicit மெமரி

தயவே இல்லாமல் ஓட்டுவது – லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது)

இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:

* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.

* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.

* முழு கவனம் மிக அவசியம்.

* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.

உதாரணம்: news – north, east, west, south

* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்

* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.

* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.

* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.

* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.

– டாக்டர். ராஜ்மோகன்

The post குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
13382
குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக..! https://koodal.com/women/2022/09/26/play-an-active-role-in-your-childs-education-child-care-tips-and-informations-in-tamil/ Mon, 26 Sep 2022 10:26:40 +0000 https://koodal.com/?p=13379 ஹோம் ஒர்க் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடி ஒளியும் குழந்தைகள்தான் அதிகம்! அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியர்கள், அவர்களை தண்டிக்கிறார்கள். இதனால் அவர்கள் மெள்ள மெள்ள படிப்பில் பின் தங்கி விடுகின்றனர். ஹோம் ஒர்க் பற்றி விபரங்களை தினமும் அறிந்து கொள்வது…

The post குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக..! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஹோம் ஒர்க் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடி ஒளியும் குழந்தைகள்தான் அதிகம்! அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியர்கள், அவர்களை தண்டிக்கிறார்கள். இதனால் அவர்கள் மெள்ள மெள்ள படிப்பில் பின் தங்கி விடுகின்றனர்.

ஹோம் ஒர்க் பற்றி விபரங்களை தினமும் அறிந்து கொள்வது பெற்றோரின் கடமையாகும். நீங்களும் குழந்தைகளோடு அமர்ந்து, அவர்களை ஹோம் ஒர்க் செய்ய வைக்கவும். அவர்கள் ஹோம் ஒர்க் செய்யும்போது அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகம் படிக்கவும். அல்லது ஹோம் ஒர்க்கில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்காக ஒரு டைம் டேபிள் போட்டு, அதில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்கவும். விளையாடும் நேரத்தில், அவர்களை விளையாட விடவும். படிக்க வேண்டிய நேரத்தில், அவர்களை படிக்கச் செய்யுங்கள். ஹோம் ஒர்க் செய்யும் நேரத்தில் டி.வி., ரேடியோ போன்றவற்றை போடாதீர்கள். குழந்தைகளின் கவனம் படிப்பின்மேல் செல்லாமல் திசை திரும்பக்கூடும்.

குழந்தைகளுக்காக ஒரு நோட்புக் தயார் செய்து அதில் அவர்கள் செய்த ஹோம் ஒர்க்கைப் பற்றி எழுதி வைக்கவும். அவர்கள் செய்யாத வேலை பற்றியும் குறித்து வைக்கவும். அடிக்கடி குழந்தைகளின் பள்ளிக்கு சென்று அவர்களைப் பற்றி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் படிப்பின் முன்னேற்றத்தை பற்றி தகவல் அறியுங்கள்.

உங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் வீக்காக உள்ளதோ, அதற்கு தனியே ட்யூஷன் வைக்கலாம். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னர் அந்தப் பாடத்தில் அக்குழந்தையால் முன்னேற்றம் அடைய முடியாது.

நாளை உங்கள் குழந்தை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால், இன்றே அதற்கு அஸ்திவாரம் போடவும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்!

The post குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக..! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
13379
குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து..! https://koodal.com/women/2022/09/26/crying-too-long-dangerous-for-baby-brains-child-care-tips-and-informations-in-tamil/ Mon, 26 Sep 2022 10:15:26 +0000 https://koodal.com/?p=13376 குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின்…

The post குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து..! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கும்:

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும்தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கற்றுக்கொள்ளும் திறன்:

இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

சத்தமில்லாத மரணம்:

இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து:

இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில்தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.

குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்:

குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும்கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அரவணைப்பு முக்கியம்:

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.

The post குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து..! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
13376
குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்! https://koodal.com/women/2022/09/15/dont-postpone-childbirth-child-care-tips-and-informations-in-tamil/ Thu, 15 Sep 2022 09:44:45 +0000 https://koodal.com/?p=12737 நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக…

The post குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். ‘பருவத்தே பயிர் செய்’ என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும்.

இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு உடனடியாக குழந்தை பெற விரும்பாமல், கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற விரும்பும் காலத்தில் அவற்றை நீக்கிக் கொண்டால் உடனடியாக கருத்தரிக்கலாம் என திட்டம் தீட்டுகின்றனர். அது அவ்வளவு சுலபம் அல்ல. இவர்கள் இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் தேவைகள் பூர்த்தியாகி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அவ்வளவு சுலபமாக கருத்தரிக்க இயலாது.

நீங்கள் ஏன் என்று கேள்வி கேட்கலாம்.

உடலில் மற்ற உறுப்புகளை விட பெண் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு முற்றுப் பெறுதல் வந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.

பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல், மேலும் அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

பெண்ணின் வயதைப் பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல் ரீதியாகக் கருப்பை முதிர்ந்துவிடும் நிலை கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முட்டை உருவாவது முக்கிய இடத்தை வகிக்கிறது. முட்டை வெளிப்படுவது, வயது முதிர்ந்த நிலையில் தன் கணவர் வெளிப்படுத்தும் குறைபாடுள்ள விந்தணுவோடு அது சேர முடியாமல் சிதைவது என பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது.

30 முதல் 35 வயதுக்கிடையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதற்கு முன்னதாக கருத்தரிப்பதில் இருக்கும் வாய்ப்பை விட இருமடங்கு தள்ளிப்போகிறது. 30 வயதை தாண்டினாலே பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஹார்மோன் சார்ந்த காரணிகள், மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன.

வயது ஆக ஆக உடலின் ஆற்றல் குறைய ஆரம்பிக்கிறது. மேலும் உடலில் ஹார்மோன்களால் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல்திறன் குறைதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது மாதவிலக்கு குறைபாடுகளாகும். ஹார்மோன் குறைவின் காரணமாக ஒழுங்கற்ற உதிரப்போக்கு அதாவது விட்டு விட்டு வருதல், சினைப்பையால் கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.

கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுபவராக இருந்தால் அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மூன்று மாத இடை வெளியில் உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் முப்பது வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவுகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன.

இளம் வயதில் கருவைச் சுமக்கும் தாயைப் போல் அல்லாமல் முதிய வயதில் கருவைச் சுமக்கும்போது சோர்வு, படபடப்பு போன்ற பிரச்சினைகள் அதிகமாகத் தோன்றுகின்றன.

முதிர் வயதுப் பெண்கள் பிரசவிக்கும்போது இடுப்புக்கூட்டுப் பகுதியிலுள்ள எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை வெகுவாக குறைந்துவிடுவதால் சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால் சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தகுதியான வயதில் தாய்மை அடையாததால் பெண்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே மருத்துவர்கள் தகுதியான வயதில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்றனர். ஆகவே தாய்மையை விரும்பும் பெண்கள் அதற்காகத் திட்டமிட சரியான வயது, தாய்மையை முழுமையாக அனுபவிக்கச் சிறந்த வயது இருபது முதல் முப்பது வயது வரைதான். அதற்கு அப்பால் வரும் ஒவ்வொரு வயதிலும் கருத்தரிப்பது என்பது சிக்கல் மிகுந்தாக உள்ளது.

இதனால்தான் நம் முன்னோர்கள் ‘பருவத்தே பயிர் செய்’ என்றார்கள். இதை கருத்தில் கொண்டு ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தால் தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.

வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.

காய்ச்சல்

குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

உடலில் அக்கி உண்டானால்

குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

வயிற்றுப் பொருமல்

குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

காமாலை

குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

விக்கல்

மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

நாக்கில் பாதிப்பு

உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

மூலம்

மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும். மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.

தொண்டைப் பிடிப்பு

இலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

காது பாதிப்பு

கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

கழுத்தில் பாதிப்பு

குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

வாயில் பாதிப்பு

அதிக உமிழ்நீர் சுரக்கும். தாய்ப்பால் குடிக்காது. மூச்சு விட திணறும்.

வயிற்றுவலி

குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

The post குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12737
பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது? https://koodal.com/women/2022/09/15/should-children-sleep-with-their-parents-child-care-tips-and-informations-in-tamil/ Thu, 15 Sep 2022 09:18:52 +0000 https://koodal.com/?p=12734 பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை…

The post பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.

தொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட ‘வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.

சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.

சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்.. இதோ வரேன்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.

இதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.

அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.

இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.

நாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.

7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை ‘இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்’ என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.

The post பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12734
குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா.. கவனிக்கவும்! https://koodal.com/women/2022/09/06/be-cautious-while-using-diapers-for-children-child-care-tips-and-informations-in-tamil/ Tue, 06 Sep 2022 09:46:57 +0000 https://koodal.com/?p=12150 குழந்தைகள் பிறந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, அவர்களுக்கு, ‘டயாபர்’ அணிவிக்கப்படுகிறது. ஆனால், ‘டயாபர்’கள் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெரும்பாலான பெற்றோர் அறிந்திருப்பதில்லை. அதோடு, சுற்றுச்சூழலுக்கும் மாசும் ஏற்படுகிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு துணியினாலான, ‘டயாபர்’களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி…

The post குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா.. கவனிக்கவும்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குழந்தைகள் பிறந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, அவர்களுக்கு, ‘டயாபர்’ அணிவிக்கப்படுகிறது. ஆனால், ‘டயாபர்’கள் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெரும்பாலான பெற்றோர் அறிந்திருப்பதில்லை. அதோடு, சுற்றுச்சூழலுக்கும் மாசும் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு துணியினாலான, ‘டயாபர்’களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், ‘டயாபர்’கள் வரத் துவங்கின. இதன் பிரபலத்தால், துணி, ‘டயாபர்’களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது. ஆனால், துணி ‘டயாபர்’களால், பல்வேறு நன்மைகள் உள்ளன.

‘டிஸ்போசபிள்’ டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆனால், துணி டயாபர்கள் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது:

‘டிஸ்போசபிள்’ டயாபர்களின் மேலுறை, தண்ணீ­ர் புகாத, பாலிபுரபலீன் என்ற ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது. பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒரு மரத்தை உருவாக்க, உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ­ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும் டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகை டயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ரீயூசபிள் டயாபர்’கள் சிதைவடைய, ஆறு மாத காலமே ஆகின்றன.

பணம் சேமிப்பு:

‘டிஸ்போசபிள்’ டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், ‘ரீயூசபிள் டயாபர்’கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, ‘டிஸ்போசபிள்’ டயாபர்களுடன் ஒப்பிடும் போது, ‘ரீயூசபிள்’ டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது.

பேஷன் டயாபர்கள்:

குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில், பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. இப்போது குழந்தைகளுக்கு எந்த டயாபரை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் அல்லவா?

The post குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா.. கவனிக்கவும்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12150
குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா? https://koodal.com/women/2022/09/06/can-children-drink-tea-or-coffee-child-care-tips-and-informations-in-tamil/ Tue, 06 Sep 2022 09:38:07 +0000 https://koodal.com/?p=12147 டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீ தூளில் உள்ள மூல பொருள்கள்: 6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3%…

The post குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது.

டீ தூளில் உள்ள மூல பொருள்கள்:

6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3% pectic acid and pictine, 17% tannic acid, 4% chlorophyll and raisin, 26% cellulose and 7% salt.

டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.

டீயில் 2% கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் (addictive) பொருள் ஆகும்.

நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும்.

கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலை வலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம் (withdrawl symptoms)

டீ ஒரு diuretic அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும்.

டீ நேரடியாகவும், மறைமுகவாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.

டீயில் உள்ள alkaloid பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் iron deficiency என்ற வகை ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது.

(சமீபத்தில் குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது.)

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும். இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும்.

– டாக்டர் ராஜ்மோகன்

The post குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12147
ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? https://koodal.com/women/2022/09/06/constipation-in-infants-child-care-tips-and-informations-in-tamil/ Tue, 06 Sep 2022 09:30:41 +0000 https://koodal.com/?p=12144 ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.. இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான். எடுத்ததும் ஆப்பிலும் கேரட்டும்தான் வேக வைத்து கொடுப்போம். இது போல் நம்பர் 2 போக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஆப்பில், கேரட்டை…

The post ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.. இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான். எடுத்ததும் ஆப்பிலும் கேரட்டும்தான் வேக வைத்து கொடுப்போம். இது போல் நம்பர் 2 போக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஆப்பில், கேரட்டை கொஞ்சமாக கொடுப்பது நல்லது. ஆப்பிலும் கேரட்டும் மோஷன் அதிகமாக போவதை கட்டுப்படுத்தும்.

குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்ததும். அடிக்கடி தண்­ணீர் அதிகமாக குடிக்க கொடுக்கனும். ரொம்ப கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஹார்டாக கடித்து முழுங்கும் உணவுகளை தவிர்க்கவும். முதலில் வாழைப்பழம் சாப்பிட பழக்குங்கள். இல்லை வாழைப்பழத்தை ஹல்வா போல் (அ) மில்க் ஷேக் போன்று தேங்காய் பால் சேர்த்து மிக்சியில் அடித்து கொடுக்கவும். இதை தேங்காய் பாலில்தான் தயாரிக்கணும் என்றில்லை காய்ச்சி ஆறிய பாலில் செய்தாலும் நல்ல இருக்கும். பால், பழம், வாழை சேர்த்த மில்க் ஷேக்குகள் செய்த்தும் உடனே குடிக்கணும் இல்லை என்றால் கறுத்து போய்விடும். வெயில் காலங்களில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தும் தயாரிக்கலாம்

பால் சாப்பாடு சாப்பிடும் குழந்தையாய் இருந்தால் பால் வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்ர்த்து பிசைந்து ஊட்டி விடவும். ராகி (கேழ்வரகு) கூழாகவோ (அ) பானமாகவோ தயாரித்து கொடுக்கவும். இந்த உணவும் குழந்தைகள் மோஷன் பிரியாக போக உதவும்.

ஆரஞ்சும், பாலும் சேர்த்து ஜூஸாக அல்லது சுளைகளாக பிரித்து அதில் லேசாக சர்க்கரை தூவி கொடுக்கலாம். இப்படி கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட முடியாமல், குமட்டி கொண்டு வரும்.
எப்போதும் காய்ச்சி ஆறிய வெந்நீரை அடிக்கடி கொடுத்து கொண்டே இருக்கவும்.

விளக்கெண்ணையை வயிற்றில் வட்ட வடிவத்தில் நன்கு தேய்த்து விட்டு வெந்நீர் அருந்த கொடுக்கவும். குழந்தைகளுக்கு மோஷன் போகும் இடத்திலும் கொஞ்சம் தடவி விடணும். ரெயிஸின்ஸ் (கிஸ்மிஸ் பழம்) பழத்தை நன்கு தண்­ணீரில் ஊறவைத்து ஜூஸாக அடித்து கொடுத்தால் உடனே மோஷன் ஆகும். இதை தினமும் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்­ணீரை பிழிந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையும் கட்டுப்படும்.

ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுக்கவும். ரசத்தில் இஞ்சி ரசம் செய்து குழைவாக சாதத்தில் போட்டு பிசைந்து ஊட்டி விடவும்.

சோம்பை கருகாமல் வருத்து ஒரு டம்ளர் தண்­ணீரில் கொதிக்கவிட்டு கால் டம்ளராக்கி குடிக்க கொடுக்கவும்.

புரூன்ஸ் பழம், அத்தி பழம் இதையும் தொடர்ந்து கொடுக்கலாம்.

மெயினாக நிறைய பழம் காக்டெயில் ஜூஸ் வகைகள் அதிகமாக கொடுக்கவும், மாம்பழ சீசனில் தேங்காய் பாலுடன் மாம்பழ மில்க் ஷேக்கும் கொடுக்கலாம்.

The post ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
12144
குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது? https://koodal.com/women/2022/08/12/dont-give-cough-syrups-to-children-child-care-tips-and-informations-in-tamil/ Fri, 12 Aug 2022 11:10:39 +0000 https://koodal.com/?p=10886 இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும். ஏனெனில் இது நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற தூசு, கிருமிகள், நச்சு நுழைவதை தடுக்கிறது. இருமலின் அடிப்படை: காற்று உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கப்படுகிறது.…

The post குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும். ஏனெனில் இது நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற தூசு, கிருமிகள், நச்சு நுழைவதை தடுக்கிறது.

இருமலின் அடிப்படை:

காற்று உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கப்படுகிறது. இதனால் நுரையீரல் உள்ளே தூசு, நச்சு செல்லாமல் தடுக்கப்படுகிறது.

சுரத்தை போலவே இருமலும் நமக்கு நன்மையையே செய்கிறது. எனவே அளவான இருமல் நல்லது, இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை. இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம், தூக்கம் இல்லாமை, தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய syrup எடுத்துகொள்ளவேண்டும்.

சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது. ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும். இருமலை நிறுத்தினால் அவை நுரையீரலில் சென்று atelectasis என்ற நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும்.

இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு. அதனால்தான் காது குடையும் போது இருமல் வருகிறது.

மருத்துவம்:

குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுப்படுத்தக் கூடாது.

எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து அதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்.

வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்.

தூக்கம் இல்லாமல் இருமுதல், பால் குடிக்க முடியாமல் இருமல், இருமலின் முடிவில் வாந்தி – ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்

மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல, மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும். (postnasal drip) இதற்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.

சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர், சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும்.

வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்.

மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்.

வெந்நீரில் ஆவி பிடிக்கவேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்:

சளி மஞ்சளாகவோ, பச்சையாகவோ, கெட்டியாகவோ மாறும்போதும், மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் – இது வயதிற்கு ஏற்ப மாறும்.

பிறப்பு முதல் 2 மாதம் வரை – 60 / ஒரு நிமிடம்

2 மாதம் முதல் ஒரு வயது வரை – 50 / ஒரு நிமிடம்

ஒரு வயது மேல் 5 வயது வரை – 40 / ஒரு நிமிடம்

குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம்.

The post குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
10886