பெண்கள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sun, 08 Jun 2025 05:41:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 பெண்கள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/ 32 32 201197430 17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து செனாப் ரயில்பாலத்தை கட்டிய பெண் இன்ஜினீயர்! https://koodal.com/women/2025/06/08/the-female-engineer-who-dedicated-17-years-of-her-life-to-building-the-chenab-railway-bridge/ Sun, 08 Jun 2025 05:41:41 +0000 https://koodal.com/?p=87155 ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு…

The post 17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து செனாப் ரயில்பாலத்தை கட்டிய பெண் இன்ஜினீயர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், இன்ஜினீயரிங் அதிசயம் என்று போற்றப்படுகிறது. செனாப் பாலம் உருவான பின்னணி கதை தற்போது வெளியாகி இருக்கிறது.

செனாப் நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிமென்ட் தூண்களால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியை மாதவி லதாவின் உதவி கோரப்பட்டது.

பாறை கட்டுமானத் துறை நிபுணரான அவர், செனாப் நதி பகுதிக்கு தனது குழுவினருடன் சென்று விரிவான ஆய்வு நடத்தினார். அங்குள்ள பாறைகளின் தன்மையை ஆய்வு செய்த மாதவி இரும்பு தூண்களால் பாலத்தை கட்ட பரிந்துரை செய்தார். பாறைகளின் இடுக்குகள், பிளவுகளை அஸ்திவாரமாக பயன்படுத்தி கட்டுமான வரைபடத்தை அவர் தயார் செய்தார். இதன்படி பாறைகளின் இடுக்குகளில் பிரம்மாண்ட இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு பிரத்யேக சிமென்ட் கலவையால் மூடப்பட்டன. சில இடங்களில் பாறைகள் மிக ஆழமாக துளையிடப்பட்டு இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டன. இதன்காரணமாக உலகின் மிகவும் வலுவான பாலங்களில் ஒன்றாக செனாப் ரயில் பாலம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால்கூட பாலத்துக்கு சிறுசேதம்கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட தகர்க்க முடியாது. பாலத்தின் சில தூண்கள் சேதமடைந்தாலும் பாலம் உடையாது. 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த பாலம் 120 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்று தரச்சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான அப்கான்ஸ், பெண் இன்ஜினீயர் மாதவி லதாவின் கட்டுமான வரைபடம், தொழில்நுட்பங்களைப் பின்பற்றி செனாப் பாலத்தை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளது. இந்த பாலத்துக்காக மாதவி லதா தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார். இதற்காக இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளது.

ஐஐஎஸ்சி நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “செனாப் பாலத்தை கட்ட மாதவி லதாவும் அவரது குழுவினரும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். மிகவும் சவாலான மலைப் பகுதிகளில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. சரிவான மலைகளில் பாறைகளையே அஸ்திவாரமாக பயன்படுத்தி பிரம்மாண்ட இரும்பு பாலத்தை கட்டி உள்ளனர். மாதவி லதா, அவரது குழுவினரின் சாதனைக்காக பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், ஏடுகுண்டலபாடு என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் மாதவி லதா பிறந்தார். அங்குள்ள அரசு பள்ளியில் அவர் கல்வி பயின்றார். மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் போதிய பண வசதி இல்லாததால் பெற்றோரின் அறிவுரைப்படி இன்ஜினீயரிங் துறையை அவர் தேர்வு செய்தார். ஆந்திராவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அவர் பிடெக் படித்தார். பின்னர் வாரங்கலில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்டெக் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பாறை பொறியியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியையாக மாதவி லதா பணியாற்றி வருகிறார். உலகின் மிக உயரமான, வலுவான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் அவர் திரும்ப வைத்துள்ளார்.

The post 17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து செனாப் ரயில்பாலத்தை கட்டிய பெண் இன்ஜினீயர்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
87155
அர்ஜுனா விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: துளசிமதி! https://koodal.com/women/2025/01/02/i-dedicate-the-arjuna-award-to-my-father-thulasimathi/ Thu, 02 Jan 2025 16:35:07 +0000 https://koodal.com/?p=74206 “அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என அர்ஜுனா விருதுக்கு தேர்வான நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவியும், பேட்மின்டன் வீராங்கனையுமான துளசிமதி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மின்டன் வீராங்கணை எம்.துளசிமதி. இவர் நாமக்கல்…

The post அர்ஜுனா விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: துளசிமதி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என அர்ஜுனா விருதுக்கு தேர்வான நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவியும், பேட்மின்டன் வீராங்கனையுமான துளசிமதி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மின்டன் வீராங்கணை எம்.துளசிமதி. இவர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி) 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறை உரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி துளசிமதி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். சிறுவயது முதல் எந்த ஒரு அகாடமிக்கும் சென்று பயிற்சி பெற்றது கிடையாது. முழுக்க முழுக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே பயிற்சி பெற்றேன். பேட்மின்டன் போன்ற விளையாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக விளையாட பயிற்சி அளித்து வெற்றி பெற வைத்ததவர் என் அப்பா. இந்த தருணத்தில் என அப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பாரிஸில் ஒலிப்பிக்கில் பங்கேற்க அனைத்து விதத்தில் உதவிகரமாக இருந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு, மத்திய அரசுக்கும் நன்றி தெிரிவித்துக் கொள்கிறேன். உயரிய விருதான அர்ஜுனா விருது அறிவித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே அர்ஜுனா விருதுக்கு தேர்வான மாணவி துளசிமதிக்கு கல்லூரி நிர்வாகம், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post அர்ஜுனா விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: துளசிமதி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
74206
மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்! https://koodal.com/women/2024/12/24/the-first-tamil-woman-muthamizh-selvi-to-climb-mount-vinson/ Tue, 24 Dec 2024 16:16:36 +0000 https://koodal.com/?p=73470 மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:- எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய…

The post மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ளார். அவர் இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள்!

இந்திய ஒன்றியத்தின் முன்னோடி மாநிலமாக எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கிட, பெரும் பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , துணை முதலமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
73470
கேரம் உலக சாம்பியன்: தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு! https://koodal.com/women/2024/12/18/carrom-world-champion-tamil-nadu-player-kasima-wins-rs-1-crore-prize/ Wed, 18 Dec 2024 16:54:57 +0000 https://koodal.com/?p=72957 அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்த்த எம்.காசிமா, வி.மித்ரா, கே.நாகஜோதி ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.2 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.…

The post கேரம் உலக சாம்பியன்: தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்த்த எம்.காசிமா, வி.மித்ரா, கே.நாகஜோதி ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.2 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெகபூப் பாஷா என்பவரின் மகள் எம்.காசிமா. இவர் தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். தனது தந்தையின் வருமானத்தில் கேரம் விளையாட்டில் ஆர்வத்துடன் மாநில மற்றும் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த 2024 நவம்பர் மாதம் 11 முதல் 17 வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி கோரி தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையில் விண்ணப்பித்து இருந்தார். இவருடன் மேலும் 2 வீராங்கனைகள் ஒரு பயிற்சியாளருடன் அமெரிக்கா செல்ல நிதியுதவி கோரி விண்ணப்பித்து இருந்தார்கள்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள 3 வீராங்கனைகள் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1,50,000/- வீதம் மொத்தம் ரூ.6,00,000/- க்கான நிதியுதவியை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் வழங்கியிருந்தார். இந்த நிதியின் மூலம் அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை தமிழ்நாட்டு வீராங்கனைகள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்கள்.

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டியில் தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற எம்.காசிமாவுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.1 கோடியும், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற வி.மித்ரா அவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50 லட்சமும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50 லட்சமும் என சிறப்பு உயரிய ஊக்க தொகையாக மொத்தம் ரூ. 2 கோடிக்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.12.2024) வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கேரம் உலக சாம்பியன்: தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
72957
தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனது! https://koodal.com/women/2024/11/05/diwali-firecrackers-burst-and-four-children-lost-their-sight/ Tue, 05 Nov 2024 16:15:10 +0000 https://koodal.com/?p=69319 மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை…

The post தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வழக்கம் போல பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியும் மக்கள் தீபாவளி பண்டிகையை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து வான வேடிக்கைகள், சரவெடிகள் உள்ளிட்ட வெடிகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு நேரங்களில் இரவை பகலாக்குவது போல வான வேடிக்கைகளால் தமிழகம் முழுவதும் ஜொலித்தது. இந்த நிலையில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் உரிய நடைமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விபத்துக்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சிறுசிறு பட்டாசு விபத்துகளில் 304 பேர் காயம் அடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தது. தீபாவளி அன்று மட்டும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து 128 அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் பட்டாசு விபத்து காரணமாக தீப்பிடித்தது என 97 அழைப்புகள் வந்திருக்கிறது. பட்டாசுகள் இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் நடந்து இருக்கிறது. மேலும் பிற விபத்துகளில் மொத்தம் 544 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில்,”வெடி விபத்து பற்றிய விழிப்புணர்வு பல வகைகளில், பலரால் கொடுக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் விபத்துகள் தொடர்கிறது. தீபாவளி அன்று வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கை 104. அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear) ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் நான்கு பேருக்கு, முற்றிலும் கண் பார்வை பாதிக்கப்பட்டு, கண்கள் எடுக்கப்பட்டது (Enucleation). அந்த நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி, பார்வையிழப்பை தடுப்போம் என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் மதுரையில் ஒரு மருத்துவமனையில் மட்டுமே நடந்தது என்பதை கவனிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான கண் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் இதே போன்று பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே வரும் காலங்களில் பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பெற்றோர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை மிக அருகில் அழைத்துச் செல்வது, அவர்களை வெடிக்க அனுமதிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும், புஸ்வானம் உள்ளிட்டவற்றை கொளுத்தும் போது கூட அவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி அணிவிப்பது அவசியம்.

The post தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
69319
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்! https://koodal.com/news/2024/09/28/padma-shri-awardee-papammal-bhatti-passes-away-leaders-mourn/ Sat, 28 Sep 2024 04:29:15 +0000 https://koodal.com/?p=66211 பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும்…

The post பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இயற்கை விவசாயத்தில் இளம் தலைமுறையினருக்கு முன்னோடியாக இவர் இருந்திருக்கிறார். விவசாயத்தில் இவரது பங்களிப்புக்காக, கடந்த 2021ம் ஆண்டு பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில்

பாப்பம்மாள் பாட்டி மறைவு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “பாப்பம்மாள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்துள்ளார். பாப்பம்மாளின் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை போற்றினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

கழக முன்னோடியும் – கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர். 1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள் அவர்கள். பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!” என்று அவரை வாழ்த்தினேன். கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்” என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி கூறியுள்ளதாவது:-

கழகம் தொடங்கிய காலத்திலேயே உறுப்பினராகி, கழக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்ற கோவை தேக்கம்பட்டியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடி பாப்பம்மாள் பாட்டி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம். கழகத்தின் 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி அனைத்து போராட்டங்களிலும் களம் கண்டவர். நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

வேளாண் துறையில் முன்னோடியாக விளங்கிய, மதிப்புக்குரிய பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பம்மாள் பாட்டி அவர்கள் ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தமது 108 வயது வரை தொடர்ந்து விவசாயப் பணிகள் மேற்கொண்ட பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு, பத்மஶ்ரீ விருது அளித்துப் பெருமைப்படுத்தியதோடு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசியும் பெற்றது குறிப்பிடத்தக்கது. பாப்பம்மாள் பாட்டி அவர்களின் வாழ்க்கை, இளைய தலைமுறையினருக்கு பெரும் எடுத்துக்காட்டாகும். அவரது புகழ் தொடர்ந்து நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 110 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார். இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும். பாப்பம்மாள் பாட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
66211
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டு! https://koodal.com/women/2024/07/29/olympics-bronze-medalist-manu-bhagar-praised-in-lok-sabha/ Mon, 29 Jul 2024 10:09:25 +0000 https://koodal.com/?p=61931 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம்…

The post ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை மக்களவை கூடியதும் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “மனு பாகர் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளார். அவரது வெற்றி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.” என்று பாராட்டு தெரிவித்தார். சபாநாயகர் அவ்வாறு கூறியதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி கரவொலி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள மற்ற வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, “இந்திய வீரர்களின் செயல்பாடு நாட்டுக்கான மரியாதையை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

The post ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
61931
பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியாகி இளம் பெண் சாதனை! https://koodal.com/women/2024/07/27/the-youngest-woman-became-an-ias-officer-at-the-age-of-22-without-going-to-a-training-center/ Sat, 27 Jul 2024 08:26:11 +0000 https://koodal.com/?p=61796 பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில்பட்டப்படிப்பு மேற்கொண்டார். கல்லூரியில்…

The post பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியாகி இளம் பெண் சாதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில்பட்டப்படிப்பு மேற்கொண்டார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டுபடிக்கும்போதே குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு சுயமாகத் தயாரானார். பயிற்சி மையத்துக்கு செல்லாமலே கடினமாக உழைத்து யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொள்ள ஆயத்தமானார்.

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அவரது தந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையைப் பராமரித்துக் கொண்டே குடிமைப்பணி தேர்வுக்கும் படித்து வந்தார். முதல் முயற்சியில் வெற்றி கை நழுவிப்போனது. 2019-ல் இரண்டாம் முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வாகை சூடினார். தனது 22-ம் வயதில் தேசிய அளவில் 88-வது இடத்தை பிடித்து இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் வெற்றிகரமாக இடம்பிடித்தார். ஆனால், ஐஏஎஸ் பயிற்சி காலத்தில் உடல் நலிவடைந்த தனது தாய்-தந்தை இருவரையும் பறிகொடுத்தார். தற்போது இமாச்சல பிரதேசம் பங்கி பகுதியில் பிராந்திய ஆணையராக பணிபுரிந்துவருகிறார்.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தது குறித்து ரித்திகா ஜிண்டல் கூறியதாவது:-

எனது தந்தை புற்றுநோயை எதிர்த்து உயிர் வாழ நடத்திய போராட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பு நாட்களில் நான் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. அதுவே ஒருவிதத்தில், வலிமையுடன் கடின உழைப்பை செலுத்தித் தேர்வுக்குத் தயாராக என்னை உந்தித்தள்ளியது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியாகி இளம் பெண் சாதனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
61796
இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது! https://koodal.com/women/2024/05/30/indian-army-officer-major-radhika-sen-was-awarded-un-award/ Thu, 30 May 2024 04:32:57 +0000 https://koodal.com/?p=56837 இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது. ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும்…

The post இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது.

ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா சென்னுக்கு நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் விருது வழங்கி கவுரவிப்பார்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராதிகா சென் மும்பை ஐஐடியில் பயோடெக் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஐஐடியில் படிக்கும்போது ராணுவத்தில் இணைய முடிவெடுத்தார். 2016-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்திய ரேப்பிட் டெப்லாய்மென்ட் ஆயுதப்படை பிரிவு தளபதியாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024வரை பணியாற்றினார்.

இந்நிலையில், ஐநாவின் மதிப்புமிக்க ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது பெறும் இரண்டாவது இந்தியர் இவரே. முன்னதாக மேஜர் சுமன் கவானிக்கு கடந்த 2019-ல் இந்த விருது வழங்கப்பட்டது.

The post இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56837
வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி? https://koodal.com/women/2024/05/28/how-to-make-vegetable-cutlet/ Tue, 28 May 2024 10:50:14 +0000 https://koodal.com/?p=56692 மாலை நேரத்தில் நாம் ருசிக்க வெஜிடபிள் கட்லட்டை எப்படி தயார் செய்வது என்பது குறித்துப் பார்ப்போம். நாம் மாலை நேரத்தில், நாம் சுவைக்க ஏற்ற ஒரு ரெசிபி தான், வெஜிடபிள் கட்லட். இந்த வெஜிடபிள் கட்லட்டை தயார் செய்வது எப்படி என்பது…

The post வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாலை நேரத்தில் நாம் ருசிக்க வெஜிடபிள் கட்லட்டை எப்படி தயார் செய்வது என்பது குறித்துப் பார்ப்போம்.

நாம் மாலை நேரத்தில், நாம் சுவைக்க ஏற்ற ஒரு ரெசிபி தான், வெஜிடபிள் கட்லட். இந்த வெஜிடபிள் கட்லட்டை தயார் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,

பல்லாரி வெங்காயம் – ஒன்று,

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,

கேரட் – ஒன்று,

பீன்ஸ் – ஏழு,

பச்சை பட்டாணி – அரை கப்,

நீர் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு,

மசித்த உருளைக்கிழங்கு – மூன்று,

கொத்தமல்லித்தழை – சிறிதளவு,

மைதா – அரை கப்

பிரட் கிரப்ஸ் – ஒரு கப்,

செய்முறை: ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். ஒரு நறுக்கிய பல்லாரி வெங்காயத்தைப்போடவும். இதனை ஒரு நிமிடம் நன்கு வதக்கிக்கொள்ளவும். பின் அதன்மேல், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு வதக்கிக்கொள்ளவும். அதில் ஒரு முழு கேரட்டை நன்கு நறுக்கி, அதுனுள் சேர்த்துக் கொள்ளவும். ஏழு பீன்ஸை அதில் நறுக்கிப் போடவும். பின் அதன் மேல் அரை கப் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இதை நன்கு கிளறிக்கொண்டு மூன்று நிமிடங்கள் வரை வேக வைக்கவும். அதனுடன், காய் வேகும் அளவிலான நீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக அதில் தேவையான அளவு உப்பினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் அதில் மசித்து வைக்கப்பட்ட 3 உருளைக் கிழங்கினை சேர்த்துக் கொள்ளவும். அதனைத்தொடர்ந்து அதனை நன்கு கிளறிக்கொள்ளவும். பின், ஒரு டம்ளரின் பின் பகுதியை வைத்து, பாத்திரத்தில் உள்ள பட்டாணியை நசுக்கி விடவும். இந்த கலவையில் நீர் அதிகமாக இருப்பதுபோல் உணர்ந்தீர்கள் என்றால் ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதன்மேல் கூடவே, கொத்தமல்லித்தழை, கால் டீஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டு நன்கு கிளறலாம்.

அதன்பின் அரை கப் மைதா மாவினை எடுத்துக்கொண்டு, அதில் நீர் சேர்த்துக் கொள்ளவும். அதேபோல், 1 கப் பிரட் கிரப்ஸ்(Bread Crumbs) எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது, மேலே தயார் செய்யப்பட்ட பட்டாணி, உருளைக்கிழங்கு கலந்த கலவையினை உருண்டையாகப் பிடித்து அதனை மைதா மாவு கரைசலில் தோய்த்துவிட்டு, பின் பிரட் கிரம்ப்ஸ் மீது உருட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது கட்லட் பொரிப்பதற்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுவிட்டது. பின், அதனை நல்லெண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும். தற்போது மாலை நேரத்தில் ருசிக்க சுவையான வெஜிடபிள் கட்லட் தயார்.

The post வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56692