கூடல் | Tamil Koodal https://koodal.com/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 27 Apr 2024 05:35:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 கூடல் | Tamil Koodal https://koodal.com/ 32 32 201197430 காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்! https://koodal.com/news/2024/04/27/land-sinking-in-jks-ramban-60-houses-damaged/ Sat, 27 Apr 2024 05:35:38 +0000 https://koodal.com/?p=54720 ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் இருந்து 5 கி.மீ. பகுதியில் பெர்நோட் கிராமத்தில் நேற்று மாலை 5…

The post காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் இருந்து 5 கி.மீ. பகுதியில் பெர்நோட் கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலப்பகுதி மூழ்க தொடங்கியுள்ளது. இதனால், சாலைகள் சேதமடைந்தன. 50 வீடுகள் பாதிக்கப்பட்டன. சாலைகளில் அடுத்தடுத்து விரிசல்கள் ஏற்பட்டன. இதனால், ஆயிரம் மீட்டர் முதல் 1,200 மீட்டர் வரை சாலை பாதிக்கப்பட்டது. இந்த விரிசலானது தொடர்ந்து கொண்டிருந்தது என பொறியியல் அந்தஸ்திலான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில இடங்களில் 10 முதல் 12 மீட்டர்கள் வரை சாலைகளும் மூழ்கின. இது தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், மறுசீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். நிலப்பகுதி மூழ்கியதில் பயிர்களும் பாதிப்படைந்து உள்ளன என கிராமத்தினர் கூறியுள்ளனர்.

அந்த கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான கலாஷா தேவி கூறும்போது, இரவு 7 மணியளவில், சாலைகளில் முதலில் வெடிப்புகள் ஏற்பட்டன. இரவு 10 முதல் 11 மணி வரையில் ஓரடி வரை சாலை மூழ்கியது. எங்கள் முன்னாலேயே இது நடந்தது. இதில், 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன என வருத்தத்துடன் கூறினார்.

The post காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54720
தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்! https://koodal.com/news/2024/04/27/tamil-nadu-government-should-take-steps-to-alleviate-water-shortage-g-k-vasan/ Sat, 27 Apr 2024 05:34:36 +0000 https://koodal.com/?p=54718 கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசு, தற்போதைய கோடைக் காலத்தில்…

The post தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசு, தற்போதைய கோடைக் காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டை விட இப்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வரண்டு காணப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கோடைக்காலத்தில் மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும்.

எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாரலாம், கைப்பம்புகளை அமைக்கலாம், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்யலாம், நீர்த்தொட்டிகளை அமைக்கலாம், குடிநீர் குழாய்களைப் பராமரிக்கலாம். இப்படி தண்ணீர் கிடைப்பதற்கு உரிய பணிகளை உடனடியாக மேற்கொண்டால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு விவசாயிகளின் ஆலோசனையை, கோரிக்கையை கேட்கலாம். எனவே தமிழக அரசு, இந்த கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54718
தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்! https://koodal.com/news/2024/04/27/there-is-no-modi-wave-in-the-election-the-poison-is-spreading-jairam-ramesh/ Sat, 27 Apr 2024 05:33:38 +0000 https://koodal.com/?p=54716 தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்…

The post தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி, நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதனிடையே, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‘காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை வாக்கு அரசியலுக்காக திசைதிருப்பமாட்டேன். இதுதான் மோடியின் உத்தரவாதம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் முத்திரையை கொண்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்த தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை. மோடியால் பரப்பப்பட்ட விஷம்தான் உள்ளது. நாட்டு மக்கள் சந்தித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், பொருளாதார பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப மோடி முயற்சிக்கிறார். ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது முதல் ஜனநாயகத்திற்கு ஆபத்தான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54716
ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய அங்கித் திவாரி மனு தள்ளுபடி! https://koodal.com/news/2024/04/27/ankit-tiwaris-plea-to-relax-bail-conditions-dismissed/ Sat, 27 Apr 2024 05:32:33 +0000 https://koodal.com/?p=54714 அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற…

The post ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய அங்கித் திவாரி மனு தள்ளுபடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. எனினும், உச்சநீதிமன்றம் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த மார்ச் 20ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்லக் கூடாது, நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து தளர்வு கோரி அங்கித் திவாரி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். அங்கித் திவாரிக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனுவை தள்ளுபடி செய்தது திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனா உத்தரவிட்டுள்ளார்.

The post ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய அங்கித் திவாரி மனு தள்ளுபடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54714
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! https://koodal.com/news/2024/04/27/4-crore-seized-case-transfer-to-cbcid/ Sat, 27 Apr 2024 05:31:35 +0000 https://koodal.com/?p=54712 சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த ஏப்.6-ம்தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலை தாம்பரம்…

The post ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த ஏப்.6-ம்தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதில் எஸ் 7 பெட்டியில் சென்னை கொளத்தூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் பயணம் செய்தனர்.

இவர்கள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. அப்போது அவர்கள் வைத்திருந்த 6 பைகளை பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் முறையான ஆவணமின்றி சுமார் ரூ.4 கோடி ரொக்கம் (ரூ.3 கோடியே 98 லட்சத்து 91,500) இருந்தது தெரியவந்தது. இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதன்தொடர்ச்சியாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல், சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி சென்னையைச் சேர்ந்த கோவர்த்தனன் உட்பட 8 பேருக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணையில் ஆஜராவதற்கு 10 நாட்கள் அவகாசம் தரும்படி நயினார் நாகேந்திரன் கடந்த 22-ம் தேதி கோரினார்.

இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அந்த பரிந்துரையை ஏற்ற டிஜிபி, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் மாநகர காவல்துறையிடமிருந்து ஓரிரு நாட்களில் சிபிசிஐடி போலீஸார் பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. அதன்பின் சிபிசிஐடி விசாரணையை தொடங்கும்.

முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54712
வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கே.ஆர்.பெரியகருப்பன்! https://koodal.com/news/2024/04/27/co-op-elections-will-be-held-after-counting-of-votes-kr-periyakaruppan/ Sat, 27 Apr 2024 05:30:33 +0000 https://koodal.com/?p=54708 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:- மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர், கூட்டுறவு சங்கங்களுக்கான…

The post வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கே.ஆர்.பெரியகருப்பன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக சிலர் விமர்சிக்கலாம். ஆனால், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பிறகுதான், தேர்தலை நடத்த முடியும்.

பொதுவாக கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது இயல்பு. எனினும், தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும்சிறு தொழில்முனைவோருக்கான கடன் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கே.ஆர்.பெரியகருப்பன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54708
கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! https://koodal.com/news/2024/04/27/charge-sheet-filed-against-accused-in-coimbatore-car-explosion-case/ Sat, 27 Apr 2024 05:28:38 +0000 https://koodal.com/?p=54706 கோவை கார் வெடிப்பு வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு…

The post கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோவை கார் வெடிப்பு வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமீஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் முதலில் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிறகு இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபின் வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய என்ஐஏ, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை கைது செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இப்போது வரை பல நபர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீரை கடந்த நவம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14-வது குற்றவாளியாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரை, பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர் மீதான குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

The post கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54706
விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்! https://koodal.com/news/2024/04/27/attack-on-vao-officer-in-villupuram-annamalai-condemns-stalin/ Sat, 27 Apr 2024 05:27:28 +0000 https://koodal.com/?p=54704 விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஆ. கூடலூர் கிராமத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் திமுக…

The post விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த ஆ. கூடலூர் கிராமத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி மது போதையில் தகராறில் ஈடுப்பட்டார். மேலும் அவரை தாக்கி செல்போனையும் பறித்து சென்ற வழக்கில் ஒருவரை காணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி திருமதி சாந்தி அவர்களை, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாகச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம் என்றும் அண்ணாமலை தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54704
செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு! https://koodal.com/news/2024/04/27/the-central-government-has-ordered-to-explain-the-supply-of-concentrated-rice/ Sat, 27 Apr 2024 05:26:23 +0000 https://koodal.com/?p=54702 எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களுக்கான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த…

The post செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்களுக்கான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் முன்னோடித் திட்டமாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரேஷன் கடைகளிலும், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் மாவட்டம் முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், செறிவூட்டப்பட்ட அரிசி உடல்நலனுக்குப் பாதிப்பைஏற்படுத்தும். தலசீமியா, அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்புச் சத்து அதிகம் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்டால், நோய் பாதிப்பு இன்னும் அதிகமாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல, தலசீமியா, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இந்த அரிசியை உண்ண வேண்டும் என்று அரிசிப் பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறவில்லை என்று கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இது தொடர்பாக ரேஷன் கடைகளின் முன் எச்சரிக்கை வாசகங்களுடன் கூடிய அறிவிப்புப் பலகை வைக்கப்படுவதால், அரிசிப் பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை என்றார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டம் பாராட்டுக்குரியது என்றாலும், எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி அமல்படுத்தப்படும், இந்த அரிசியை யார், யார் உண்ணக்கூடாது என்பதை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54702
தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை! https://koodal.com/news/2024/04/27/chief-secretary-advice-on-uninterrupted-power-supply/ Sat, 27 Apr 2024 05:25:17 +0000 https://koodal.com/?p=54699 தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில்,மே 2-ம் தேதி…

The post தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில்,மே 2-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே இறுதி வரையிலான இக்காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் மின்தேவையும் அதிகரிக்கும். தமிழகத்தில் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், விநியோகத்தில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழகத்தில் அனைத்து மின் உற்பத்திநிலையங்களிலும் தற்போதைய உற்பத்தி அளவு, முறையாக பராமரிப்புப் பணி நடைபெறுகிறதா, வெளியில் இருந்து வாங்கப்படும் மின்சாரம் சரியான அளவு கிடைக்கிறதா? மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதேபோல், மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும்பட்சத்தில், அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தடையின்றியும், சரியான அழுத்தத்துடனும் மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலர் அறிவுறுத்தியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தடையற்ற மின் விநியோகம் தொடர்பாக தலைமை செயலர் ஆலோசனை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
54699