tamilnadu news Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/tamilnadu-news/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 28 Dec 2021 03:45:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 tamilnadu news Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/tamilnadu-news/ 32 32 201197430 குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் தடை விலக்கப்பட்டது https://koodal.com/news/2021/12/28/conoor-helicopter-crash-restrictions-lifted/ Tue, 28 Dec 2021 03:45:28 +0000 https://koodal.com/?p=79 18 நாட்களாக ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடை விலக்கப்பட்டது, இயல்பு நிலைக்கு திரும்பியது. முன்னதாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி…

The post குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் தடை விலக்கப்பட்டது appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
18 நாட்களாக ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடை விலக்கப்பட்டது, இயல்பு நிலைக்கு திரும்பியது.

முன்னதாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை ராணுவத்தினரும் போலீசாரும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதியில் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர். தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

The post குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் தடை விலக்கப்பட்டது appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
79
சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் https://koodal.com/news/2021/12/25/admit-all-covid-patients-for-14-days-chennai-corporation-to-private-hospital/ Sat, 25 Dec 2021 16:18:26 +0000 https://koodal.com/?p=41 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக் காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது. அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு. ஒருவர்…

The post சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்

எக் காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது.

அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு.

ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருப்பதா, கோவிட் சிகிச்சை மையத்தில் இருப்பதா, வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
41
தமிழ்நாடு அரசு உத்தரவு: https://koodal.com/news/2021/12/25/hrce-commissioner-directed-to-purchase-aavin-products-for-temples/ Sat, 25 Dec 2021 15:06:45 +0000 https://koodal.com/?p=36 இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவில்கள் தயாரிக்கும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நெய் வெண்ணெய்…

The post தமிழ்நாடு அரசு உத்தரவு: appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோவில்கள் தயாரிக்கும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நெய் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் தயாரிப்புகளான வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்ய இந்த முறை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும்  மற்றும் 15 மில்லி லிட்டர் அளவு கொண்ட பேக்கிலிருந்து  20 கிலோ கிராம் வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை ஆவின்  நிறுவனங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு உத்தரவு: appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
36
பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி https://koodal.com/news/2021/12/25/premalatha-vijayakanth-on-tamilnadu-ullatchi-election/ Sat, 25 Dec 2021 14:52:57 +0000 https://koodal.com/?p=33 சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை பொதுக்குழுவில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார். மீண்டும் சினிமாவில் கேப்டன்  விஜயகாந்த் நடிக்க உள்ளதாக…

The post பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை பொதுக்குழுவில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார்.

மீண்டும் சினிமாவில் கேப்டன்  விஜயகாந்த் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது.

– தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி

The post பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
33
வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு https://koodal.com/news/2021/12/25/mild-earthquake-near-vellore/ Sat, 25 Dec 2021 14:40:27 +0000 https://koodal.com/?p=31 பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு. வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக தகவல். இதுதொடர்பாக வருவாய் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் இரண்டு…

The post வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு.

வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக தகவல்.

இதுதொடர்பாக வருவாய் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் இரண்டு முறை நில அதர்வு உணரப்பட்டதாகவும், சுமார் 3 விநாடிகள் வரை நில அதர்வு நீடித்ததாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. முன்னதாக கடந்த 23-ம் தேதி வேலூரில் இருந்து 50 கி.மீ மேற்கு வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.5 புள்ளிகளாக பதிவானது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னதாக கடந்த மாதம் 29-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் இதேபோன்றதொரு நில அதிர்வை உணர்ந்துள்ளனர். கடந்த 21-ம் தேதி இதே பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தைச் சுற்றி ஏற்பட்டு வரும் நில அதர்வு சம்பவங்கள் அப்பகுதி மக்களை அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருவாய் துறையினர் முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
31
சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று https://koodal.com/news/2021/12/25/26-confirmed-omicron-cases-in-chennai/ Sat, 25 Dec 2021 14:34:58 +0000 https://www.koodal.com/?p=29 சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது. விடுதிகளில்…

The post சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.

வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது.

விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும்.

கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும்.

The post சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
29
கிறிஸ்துமஸ் வாழ்த்து – வைகோ https://koodal.com/news/2021/12/25/vaiko-christmas-wishes-religious-harmony-and-social-unity/ Sat, 25 Dec 2021 08:17:00 +0000 https://koodal.com/?p=21 மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நன்னாள், மனித குமாரனாக மண்ணில் மாட்டுத்…

The post கிறிஸ்துமஸ் வாழ்த்து – வைகோ appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நன்னாள், மனித குமாரனாக மண்ணில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த புனித குமாரனின் வருகையைப் போற்றி உலகமே கொண்டாடும் திருநாள்.

நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று ஆறுதல் கூறி துன்பத்தில் துடித்தோரை அரவணைத்தவர் ஏசுபெருமான்.

ஒருவனின் தாய் மகனைத் தேற்றுவதைப் போல நான் உன்னைத் தேற்றுவேன் என்று பேசியவர், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்று உடைந்த உள்ளங்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர் ஏசுபெருமான்.

கிறித்தவப் பாதிரியார்களும், பெருமக்களும் செந்தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றினர். திராவிட மொழிகளின் மூல மொழி தமிழ் என்பதை ஆதாரங்களோடு கால்டுவெல் நிலைநாட்டினார். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை அரவணைத்துக்கொண்டு ஆறுதல் வழங்கினார்கள்.

இரட்சகர் ஏசுபெருமான் மலைமேல் நின்று அமுதமொழிகளாகப் பொழிந்த கருத்துக்கள் மோதல்களும், அக்கிரமங்களும், சுயநலப் பேராசையும், அலைக்கழிப்பும் கொண்ட இன்றைய உலகத்துக்கு நல்வழி காட்டுகின்றன. சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாக சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ வேண்டும் என்றும், அப்படி வாழ்கின்றவர்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கலவரங்களும், இரத்தக் களறிகளும் மனித சமுதாயத்திற்குப் பேராபாயமாக அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கு ஏசுநாதரின் அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், அன்பின் சிகரமாகவே திகழ்ந்தார்.

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, கிறித்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
24.12.2021

The post கிறிஸ்துமஸ் வாழ்த்து – வைகோ appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
21