கட்டுரைகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/articles/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 04 Jan 2022 00:04:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 கட்டுரைகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/articles/ 32 32 201197430 கடவுளும் கடவுள் தூதுவனும்! https://koodal.com/articles/stories/2022/01/04/kadavulum-thoothuvanum/ Tue, 04 Jan 2022 00:04:03 +0000 https://koodal.com/?p=331 ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான். “எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். “தேவலோகத்திலிருந்து வருகிறேன்” என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள். “உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?” “கடவுள்தான் அனுப்பி வைத்தார்.” கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு. புத்தி சரியில்லாதவன் என்பதாகப்…

The post கடவுளும் கடவுள் தூதுவனும்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

“எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

“தேவலோகத்திலிருந்து வருகிறேன்” என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

“உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?”

“கடவுள்தான் அனுப்பி வைத்தார்.”

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.

இப்போது அவன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!”

“எப்படி எல்லாம் நடக்கும் என்று?”

“உன்னைக் கட்டிப் போடுவார்கள்… கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?”

மக்கள் யோசித்தார்கள்.

“சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”

“நம்புங்கள்… நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.”

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

“நீ ஏன் சிரிக்கிறாய்?”

“நீ பொய் சொல்கிறாய்… அதனால் சிரிக்கிறேன்!”

“எது பொய் என்கிறாய்?”

“கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!”

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக… “நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.”

நண்பர்களே! ‘நானே கடவுளின் தூதன்’ என்கிறார்கள் சிலர். ‘நானே கடவுள்’ என்கிறார்கள் சிலர்.

உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான்.

”நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!” என்றான். அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார். இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ”அவனை ஏன் அறைந்தீர்கள்?”

”அவன் ஒரு பைத்தியக்காரன்!”

”அப்படியா?”

”ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!”

– தென்கச்சி சுவாமிநாதன்

The post கடவுளும் கடவுள் தூதுவனும்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
331
சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/sundaramurti-nayanar-cuntarar/ Sat, 25 Dec 2021 15:19:24 +0000 https://koodal.com/?p=39 ஆதிக் கயிலைவாசி இவர். உமையம்மையின் சேடியரை விரும்பியதால் மானுட அனுக்கிரஹம் பெற்றுப் பூமிக்கு வந்தவர். திருவாவலூரில் சடையனார் இசைஞானியார் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் எனும் சிற்றரசரின் செல்வராக – சுந்தரராக – வளர்ந்து வாலிபம் கண்டவர். இவரது திருமண நாளிலே,…

The post சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆதிக் கயிலைவாசி இவர். உமையம்மையின் சேடியரை விரும்பியதால் மானுட அனுக்கிரஹம் பெற்றுப் பூமிக்கு வந்தவர்.

திருவாவலூரில் சடையனார் இசைஞானியார் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் எனும் சிற்றரசரின் செல்வராக – சுந்தரராக – வளர்ந்து வாலிபம் கண்டவர். இவரது திருமண நாளிலே, முதியவராக வந்த முக்கண்ணர், இவரைத் தடுத்து ஆட்கொண்டார். அப்போது சுந்தரர் பாடிய ” பித்தாபிறைசூடி ” எனும்பதிகம் உலகெங்கும் ஒலிப்பதாகும்.

துறையூரிலே சைவத்தவநெறி பெற்றார். தில்லையிலே ” திருத்தொண்டர் தொகை ” நெல்லுக்கும், பொன்னுக்கும் பாடி. செல்வம் குவித்துச் சிவனடியாற்குச் செலவிட்ட அழகுப் பிரியர் சுந்தரர். பரவை நாச்சியர், சங்கிலியர் என இருமனைவியரை மணந்தவர். பெண்ணழகிற்காகப் பொய்சத்தியம் செய்து, ஒரு கண்ணையிழந்து தெய்வத்தமிழ்ப் பதிகத் திறனால் ஈசனருளால், மீண்டும் விழிவரப் பெற்றவர். படைத்தவனாகிய ஸ்ரீ பரமேஸ்வரனையே காதலுக்குத் தூதனுப்பிய தமிழ்க் கொடை வள்ளல் இவர்.

அவினாசியிலே முதலையிடமிருந்து தமிழைப்பாடி மதலையை மீட்டவர். தலந்தோறும் வலம்வந்து மாந்தரின் இளமை நலம்வாழப் பாடி பக்தியை வளர்த்த சத்தியச் சைவர் ஸ்ரீ சுந்தரர்.

சேரமான் பெருமானுக்கு இவர் தந்த பொன் பொருளை சிவகணங்கள் பறிமுதல் செய்துவிட, திருமுருகன் பூண்டியிலே ” கொடுகுவெஞ்சிலை” ” வருகவேடுவா” எனும் பதிகம் பாடி இறையருளால் அனைத்துப் பொருளையும் மீட்டவர்.

சிற்றின்பச் சைவராய் வாழ்ந்து, பேரின்ப ஞானியாய் திருவஞ்சைக் களத்திலே … விண்ணிலிருந்து வந்த வெள்ளையானை மேல் ஏறி, மீண்டும் கயிலையைச் சேர்ந்தார் சுந்தர மூர்த்தி நாயனார்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
– சுந்தரர் தேவாரம்.

The post சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
39
திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/appar-thirunavukkarasar/ Sat, 25 Dec 2021 08:40:52 +0000 https://koodal.com/?p=27 திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார். இளமையில் சமண சமயத் தீவிரபக்தர் ! தமக்கையின் வேண்டுதலால் … (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும்…

The post திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார்.

இளமையில் சமண சமயத் தீவிரபக்தர் ! தமக்கையின் வேண்டுதலால் … (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும் சைவஞானியானவர்.
” கூற்றாயினவாறு விலக்க கிலீர்” எனும் திருப்பதிகத்தை இவர் பாடியதும், கேட்டு மகிழ்ந்த திருவதிகை வீரட்டானேசுவரர். இவருக்கு
” திருநாவுக்கரசர் ” எனும் புகழ்ப் பெயர் கொடுத்தார்.

மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை – மதம் மாறியதற்காக – பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். ” நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ” என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.

” மாசில்வீணையும் ” ; ” சொற்றுணை வேதியன் ” முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின ” ஜூஸ் ” ஆகும்.

சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.

திருஞான சம்பந்தர் குழந்தை, இவர் முதியவர் இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். சம்பந்தர் இவரை அழைத்ததுதான் ” அப்பர் ” எனும் திருப்பெயர்.

திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் – ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார்.

” சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.”

– அப்பர் தேவாரம்

The post திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
27
திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/thirugnana-sambanthar/ Sat, 25 Dec 2021 08:24:44 +0000 https://koodal.com/?p=24 சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர். மூன்று வயதிலேயே… ஈசனருள் பெற்று… சிர்காழிக் குளக்கரையிலே ஞானப்பால் பருகிய திருவருட்செல்வர். திருக்கோலக் காவில் பொற்றாளம் (ஈசனிடம்) பெற்றவர். திரு நீலகண்டப்பதிகம்பாடி, அடியவர்க்கு வந்த…

The post திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர்.

மூன்று வயதிலேயே… ஈசனருள் பெற்று… சிர்காழிக் குளக்கரையிலே ஞானப்பால் பருகிய திருவருட்செல்வர்.

திருக்கோலக் காவில் பொற்றாளம் (ஈசனிடம்) பெற்றவர். திரு நீலகண்டப்பதிகம்பாடி, அடியவர்க்கு வந்த கடுமையான நளிர் சுர நோயைத்தீர்த்தவர்.

திருக்நெல்வாயில் சிவனருளால் முத்துச்சிவிகையும், பட்டீஸ்வரத்திலே முத்துப் பந்தரும் பெற்றவர்.

பதிகங்களைப்பாடி, பாம்பு கடித்து மாண்ட வணிகனைக் காத்தது, சிவனிடமே படிக்காசு பெற்றது, மக்களின் பஞ்ச வறுமைகளைப் போக்கியது… திருமறைக் காட்டிலே (வேதாரண்யம்) கோயில் கதவு அற்புதம், மதுரையிலே அனல் வாதம், புனல் வாதம் புரிந்து ” மந்திரமாவதுநீறு” பாடி பாண்டியனின் வெப்பு நோயையும், பலமதத்தவரின் விதண்டாவாதங்களையும் வென்றவர்.

சென்னைத் திருமயிலையிலே மாண்டு போன சிவநேசச்செட்டியார் மகளின் எலும்புகளை ” மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை ” எனும் பதிகம் பாடி ” பூம்பாவைப் ” பெண்ணாக்கி ” மகளே!” என்றழைத்த மாசில்லாத் தவசிலர்.

ஆச்சாபுரத்திலே திருமணம் செய்து கொண்டு, ” காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ” எனும் பதிகத்தைப் பாடி முடித்து மணப்பந்தலிலேயே ஒளிச்சுடராய் மாறி, இறைவனோடு இரண்டறக் கலந்தவர் திருஞான சம்பந்தமூர்த்தி.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

– சம்பந்தர் தேவாரம்.

The post திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
24
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/dr-chithambaranatha-chettiyar/ Sat, 25 Dec 2021 08:09:08 +0000 https://koodal.com/?p=18 கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர்…

The post டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, ஆங்கில – தமிழ் அகராதி யொன்றை மிக விரிவான முறையில் தொகுத்தார். இறுதியாக மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.

” தொழுது உண்ணுஞ் சுவை நிரம்பிய பொருளை விட, உழுது உண்ணும் சுவை இல்லாத பொருளும் இனியது என்பது தமிழர் கொள்கை. சிறிதயவு கூழே பெறினும், அவரவரது முயற்சியாலும் அவரவரது உழைப்பாலும் பெற்றால், தன் முயற்சியின்றிக் கிடைக்கும் அமிழ்தத்தினும் அது சிறந்தது என்பது தொன்று தொட்டு வரும் தமிழர் கருத்து.

” தெண்ணீர் அடுபுற்கை யாயினும்தாள் தந்தது
உண்டலி னூங்கினியது இல்”

என்றார் திருவள்ளுவர். உழுது உண்டு வாழ்கின்றவரே “வாழ்பவர்” எனச் சிறப்பித்துச் சொல்லத்தக்கவரென்பது அவர் கருத்து.”
(தமிழ் காட்டும் உலகு)

The post டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
18
டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/m-rajamanickam/ Sat, 25 Dec 2021 08:04:29 +0000 https://koodal.com/?p=16 பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின் படிப்படியாக உயர்ந்து இறுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ் பேராசிரியராக அமர்ந்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழ் இலக்கியம்,…

The post டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின் படிப்படியாக உயர்ந்து இறுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ் பேராசிரியராக அமர்ந்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதிக் குவித்தவர்.

” கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும், அரசன் வாழ்ந்த அரண்மனையையும் குறித்தது. இதனால் அரசன் வாழ்ந்த அரண்மனையும், கோவிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன, என்று கொள்ளுதல் பொருந்தும். இரண்டும் சுற்று மதில்களை யுடையவை. வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை. வாயில்களுக்குத் துருப்பிடியாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சாந்து பூசப் பெற்ற மாடங்கள் உயரமாகக் கட்டப்பட்டிருந்தன.”

மேலும் படிக்க

The post டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16
பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி https://koodal.com/articles/2021/12/25/padmanabha-temple-a-swiss-bank-of-indian-emperors/ Sat, 25 Dec 2021 07:56:44 +0000 https://koodal.com/?p=11 ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு…

The post பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.

சில நாட்களுக்கு முன்பு மறைந்த பணக்கார சாமியரான சாயிபாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில், அவருடைய பிரத்யேக அறையான யஜூர் வேத மந்திர் திறக்கப்பட்டபோது மக்கள் அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள், கிலோ கிலோவாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கின. ஆனால் அந்த அதிர்ச்சியை ஒன்றுமில்லாமல் மறக்கடிக்கச் செய்துள்ளது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். மிகப்பழமையான திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தற்போது புதிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் மீடியாக்களின் கவனம் இப்போது இந்தக் கோயிலின் மீதே குவிந்துள்ளது. வைணவர்கள் போற்றும் நூற்றியெட்டு திவ்விய தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலின் பாதாள அறைகளில் தற்போது அள்ள அள்ளத் தங்கமும், வைரமும் கொட்டுகின்றன. இது போன்ற புதையல் அதிசயங்களை இதுவரை “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” போன்ற திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த நம் மக்கள் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.

அனந்தன் எனும் பாம்பின் மீது திருமால் பள்ளி கொண்டிருப்பதாலேயே திருவனந்தபுரம் எனும் பெயர் பெற்ற இந்த தலத்தில் பழம்பெரும் சேரர் குலத்தைச் சேர்ந்த சேரமான் பெருமான் எனும் மன்னன்தான் இந்தக் கோயிலை முதன்முதலாக எழுப்பியதாக வரலாறு சொல்கிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துகளையும் நிர்வாகத்தையும் “எட்டு வீட்டில் பிள்ளைமார்” எனும் உயர் சாதியைச் சேர்ந்த அதிகாரம் மிக்க ஜமீன்தார்கள்தான் தங்கள் கைகளில் வைத்துள்ளனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரான ராஜா மார்த்தாண்ட வர்மா, இந்தப் பிள்ளைமார்களின் வம்சத்தைப் போர் மூலம் தோற்கடித்து தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன் கோயிலையும் புதுப்பித்தார். கடைசியில் மார்த்தாண்ட வர்மா தன்னுடைய அரச பதவியை பத்மநாபசுவாமியிடம்(?) ஒப்படைத்து இறைப்பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அரச பரம்பரையின் வசமே இருந்து வந்துள்ளன.

இக்கோயிலின் கணக்கில்லாத சொத்துகளை இஸ்லாமியர் உள்ளிட்ட அன்னியப் படையெடுப்பாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக கோயிலில் ஆறு பாதாள அறைகளை உண்டாக்கி அவற்றில் இச்செல்வங்களை வைத்துப் பராமரித்துள்ளனர். குறிப்பாக திப்பு சுல்தானிடமிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச பரம்பரையினர் கூறுகின்றனர். கோயிலின் மூலவரான அனந்த பத்மநாபரின் சிலையே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒவ்வொன்றும் (பூணுல் உட்பட) தங்கத்தால் ஆனவையே. காட்டுச் சர்க்கரை யோகம் எனும் வெளிப்பூச்சை சிலையின் மீது பூசி இஸ்லாமியரின் பார்வையிலிருந்து அது மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோயிலுக்குச் சொந்தமான இன்னும் ஏராளமான செல்வங்கள் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு பாதாள அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கும் மேலாகத் திறக்கப்படாமல் இருந்து வந்த அந்தப் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் இருப்பவற்றை உலகறியச் செய்ய வேண்டுமென்று டி.பி.சுந்தரராஜன் எனும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த வழக்கை எதிர்த்து மனு செய்தனர். ஆனால் அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் அந்த அறைகளை ஒரு குழு அமைத்துத் திறக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜூன் 27ம் தேதி தன்னுடைய ஆய்வைத் தொடங்கியது.

இந்தக் குழுவினரின் நடவடிக்கைப்படி கோயிலின் பாதாள அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு அவற்றிலிருந்த விலை மதிப்பில்லாத சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இந்தக் கணக்கு விபரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கின்றன. தங்கத்தாலான பெருமாள் சிலை, பெரும் மதிப்புள்ள வைர, வைடூரிய நகைகள், கிலோ கணக்கில் தூய தங்கத்தாலான நகைகள், தங்க நாணயங்கள் என ஒரு பெரும் புதையலே சிக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளில் கிடைத்துள்ள செல்வங்களின் மதிப்பு மட்டும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. கோயிலைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள ஆறாவது அறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த அறை திறக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அறையைத் திறப்பது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி அதைத் தடுக்கும் முயற்சியில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்படுவதை எதிர்த்து மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்பட்டால் அங்கு புதைந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு மேலும் சில புதிய அதிர்ச்சிகளை அளிக்க வாய்ப்புள்ளது. ஆறு அறைகளில் கடைசி இரண்டு அறைகள் கடந்த 136 ஆண்டுகளாகத் திறக்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலின் குளத்திலும் பெரும் புதையல் மறைந்திருக்கலாம் என்று கேரளாவைச் சேர்ந்த வரலாற்றறிஞர் பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார். இக்கோயிலில் மொத்தம் ஒன்பது ரகசிய அறைகள் இருப்பதாகவும், தற்போது தெரியவந்துள்ள ஆறு அறைகள் தவிர, மேலும் மூன்று அறைகள் குளத்துக்குள் கிணறு வடிவில் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா ஆற்றிலிருந்து சாலகிராம் எனும் ஆயிரக்கணக்கான புனிதகற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கொண்டு பத்மநாபசுவாமி அனந்த சயனத்தில் இருப்பது போன்ற போன்ற மூலவர் சிலை செய்யப்பட்டது. பின்னர் எஞ்சியிருந்த கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள கிணறுகளில் போடப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு நாடு ஆளாக வேண்டியிருக்கும்.

திருவனந்தபுரம் கோயிலைப் போன்றே திருவரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் பெரும் புதையல் இருக்கலாம் என்று திருச்சியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தெரிவித்துள்ளார். திருவரங்கக் கோயிலின் சொத்துகள், பிரெஞ்சு காரர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கோயிலில் உள்ள கருடன் சன்னதிக்கு பின்புறம் ரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் போன்றவற்றிலும் இது போன்ற பெரும் புதையல் அன்னியர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் கிளம்பிவிட்டன. இந்தியாவின் பணக்கார சாமியான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் இது போன்ற பெரும் புதையல் மறைந்திருக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.

திருவனந்தபுரம் கோயிலில் தற்போது கிடைத்துள்ள சொத்துக்களுக்குப் போட்டியும் கிளம்பிவிட்டது. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நகைகளும் இதில் அடங்கியிருப்பதாக அந்தக் கோயில் நிர்வாகம் கூறிவருகிறது.

அன்னியப் படையெடுப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மறைத்து வைத்துக் காப்பாற்றியதற்காக மன்னர் பரம்பரையினரைப் பாராட்டும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால் இவ்வளவு செல்வம் கோயிலுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி யாரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். இதெல்லாம் அந்த மன்னர் பரம்பரை உழைத்துச் சேர்த்த செல்வங்களாவோ அல்லது மக்கள் பக்தியுடன் கோயிலுக்கு அளித்த நன்கொடைகளாகவோ இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றின் வெளிச்சத்துக்கு வராத மன்னராட்சிக் காலத்தில் மக்களின் உழைப்பைச் சுரண்டி ஆளும் வர்க்கம் சேர்த்த செல்வங்களாகத்தான் இவை இருக்க முடியும். பத்மநாப சுவாமியை அலங்கரித்த ஒவ்வொரு ஆபரணத்துக்கும் பின்னால் எத்தனை ஏழை மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது. இந்தியாவில் மக்களின் உழைப்பைச் சுரண்டி முறைகேடாகச் சேர்த்த பணம் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்படுவதைப் போல அந்தக் காலத்தில் சேர்க்கப்பட்ட செல்வங்கள் கோயில்களில் குவிக்கப்பட்டுள்ளன.

மக்களாட்சிக் காலத்தில் சுவிஸ் வங்கிகளில் சேர்ந்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே போல் மன்னராட்சிக் காலத்தில் கோயில்களில் சேர்க்கப்பட்டுள்ள இது போன்ற “கருப்புச் செல்வங்களை”யும் கைப்பற்றி மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.

கோயில்கள், ஆசிரமங்கள் போன்ற மத நிறுவனங்களின் சொத்துக்கள் வரைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது சிக்கியுள்ள செல்வங்களையும் இனி சிக்கப் போகும் சொத்துக்களையும் அரசின் கருவூலத்துக்குப் போய்ச் சேரும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கணக்கில் வராத கருப்பு பணம் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நகைகளாகக் குவிவது இன்னும் பெருகும்.

ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாமல் கல்யாணக் கனவுகளைத் தள்ளிவைத்துக் காத்திருக்கும் ஏராளமான பேரிளம் பெண்களைக் கொண்ட நாட்டில் பத்மநாபசுவாமி சிலைக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இந்த செல்வங்கள் முழுவதும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. ஒரு கோயிலுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.

நன்றி: கீற்று

The post பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
11