வர்த்தகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/business/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 19 May 2022 09:46:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 வர்த்தகம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/business/ 32 32 201197430 இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை! https://koodal.com/news/2022/05/19/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af/ Thu, 19 May 2022 09:46:50 +0000 https://koodal.com/?p=3572 இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் கடந்த் 2020-ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன. இந்த…

The post இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் கடந்த் 2020-ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் வங்காளதேச ரெயில்வே ரேக் மூலம் டாக்காவிலிருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் இந்திய ரெயில்வே ரேக் மூலம் கொல்கத்தாவிலிருந்து கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் வருகிற மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் என்.ஜே.பி-டாக்கா மிடாலி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வருகிற ஜூன் 1 அன்று ரெயில் பவனில் இருந்து இந்தியா மற்றும் வங்காளதேச ரெயில்வே மந்திரிகளால் கொடியசைத்து தொடங்கப்படும். அப்போது வங்காளதேச ரெயில்வே மந்திரி இந்தியாவில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
3572
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் https://koodal.com/news/2022/05/17/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81/ Tue, 17 May 2022 08:54:00 +0000 https://koodal.com/?p=3290 மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை…

The post மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரத்து செய்ததன் மூலம் இந்தியன் ரெயில்வேக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் இந்த விவரம் தெரிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

2020 மார்ச் 20-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இதில் 4.46 கோடியில் 60 வயதுடைய ஆண்களும், 2.84 கோடியில் 58 வயதுடைய பெண்களும், 8310 திருநங்கைகளும் பயணம் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் மூலம் ரெயில்வேக்கு 3464 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் கட்டண சலுகையை ரத்து செய்ததன் மூலம் 1500 கோடி ரூபாய் ரெயில்வேக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

The post மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைப்பு: ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
3290
சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்! https://koodal.com/news/2022/05/06/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82-150-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf/ Fri, 06 May 2022 09:00:39 +0000 https://koodal.com/?p=2093 சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச…

The post சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர், கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். உலகளவில் 11 ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை பைசர் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்நிலையில், 12வது ஆய்வு மையத்தை சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்காவில் அமைக்கிறது. ஆசியாவில் பைசர் அமைக்கும் முதல் ஆய்வு மையம் இதுவாகும். சென்னை ஐஐடியில் ரூ.150 கோடி செலவில், 61 ஆயிரம் சதுர அடியில் ஆய்வு மையம் அமைக்கப்படுவதாக பைசர் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மையத்தில் 250 ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவார்கள் என பைசர் தெரிவித்துள்ளது. சர்வதேச விற்பனை, புதிய மருந்து உருவாக்கத்துக்கு இந்த மையம் பங்களிப்பை வழங்கும் எனவும் பைசர் நிறுவனம் கூறியுள்ளது.

The post சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2093
பரபரப்பாக இயங்கிய சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லிக்கு 2-வது இடம் https://koodal.com/news/2022/05/05/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87/ Thu, 05 May 2022 11:11:50 +0000 https://koodal.com/?p=1937 பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்களின் பட்டியல் டெல்லி விமான நிலையம் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமான சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிக பரபரப்பான 10 விமான நிலையங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு…

The post பரபரப்பாக இயங்கிய சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லிக்கு 2-வது இடம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்களின் பட்டியல் டெல்லி விமான நிலையம் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமான சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிக பரபரப்பான 10 விமான நிலையங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம், 2-வது இடத்தில் துபாய் விமான நிலையம் ஆகியவை இருந்தன.

இந்த நிலையில் 2022 மார்ச் மாத நிலவரப்படி இந்த பட்டியலில் துபாய் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் டெல்லி விமான நிலையம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், அட்லாண்டா விமான நிலையத்தில் 44.22 லட்சம் பயணிகளும், டெல்லி விமான நிலையத்தில் 36.11 லட்சம் பயணிகளும், துபாய் விமான நிலையத்தில் 35.54 லட்சம் பயணிகளும் பயணித்துள்ளனர்.

2019-ல் உலக அளவில் 23-வது இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம், 2022 ஆம் ஆண்டில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2021-ல் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 3.16 கோடி உள்நாட்டு பயணிகளும், 54.9 லட்சம் சர்வதேச பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

The post பரபரப்பாக இயங்கிய சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லிக்கு 2-வது இடம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1937
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி https://koodal.com/news/2022/05/04/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/ Wed, 04 May 2022 16:23:30 +0000 https://koodal.com/?p=1900 குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:- உக்ரைனில்…

The post குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-

உக்ரைனில் நடந்து வரும் யுத்தம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில், நிதிக்கொள்கை குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வட்டி விகிதம் உயருகிறது.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

The post குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1900
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்! https://koodal.com/news/2022/05/04/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d/ Wed, 04 May 2022 07:50:26 +0000 https://koodal.com/?p=1857 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. இன்று தொடங்கி…

The post பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. இன்று தொடங்கி மே 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த பங்கு விற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1857
டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்கின் https://koodal.com/news/2022/05/04/%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/ Wed, 04 May 2022 07:41:43 +0000 https://koodal.com/?p=1840 டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம்…

The post டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்கின் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

டுவிட்டர் எலான் மஸ்க் வசம் ஆனதில் இருந்து தொடர்ந்து டுவிட்டரை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியுமா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் , “சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் ” என பதிவிட்டுள்ளார்.

The post டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்கின் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1840
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு! https://koodal.com/news/india/2022/05/01/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/ Sun, 01 May 2022 07:33:36 +0000 https://koodal.com/?p=1552 வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில்…

The post வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 253 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2253ல் இருந்து ரூ.2355.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 655 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1552
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கி உள்ளார்! https://koodal.com/news/world/2022/04/26/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b8/ Tue, 26 Apr 2022 12:00:57 +0000 https://koodal.com/?p=1273 டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்ர்கவிட்டரை சொந்தமாக்கி உள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எப்போதும் ஊடகத்திற்கு ஹாட் டாப்பிக்காகத்தான் வலம் வருவார். சமீபத்தில், பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை குறித்து சரமாரியான விமர்சனங்களை எலான்…

The post டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கி உள்ளார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்ர்கவிட்டரை சொந்தமாக்கி உள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எப்போதும் ஊடகத்திற்கு ஹாட் டாப்பிக்காகத்தான் வலம் வருவார். சமீபத்தில், பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை குறித்து சரமாரியான விமர்சனங்களை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்திலேயே முன்வைத்தார். இதற்கு சிலர் பதிலளிக்க, புதிய சமூக வலைத்தளத்தை எலான் மஸ்க் தொடங்கப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டது. ஒருபுறம் அனைவரும் மஸ்கின் புதிய சமூக வலைத்தளத்தின் சுவையை அறிய காத்திருந்த வேளையில், கணிசமான ட்விட்டர் பங்குகளை வாங்கி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் டெஸ்லா நிறுவனர். புதிய தொடக்கம் குறித்து எந்த தயக்கமும் இல்லாமல் அகண்ட கால் வைக்கும் மஸ்க், இந்த விஷயத்தில் யாரும் எதிர்பார்த்திராத முடிவுகளை எடுத்தார். இப்போது, மொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் சொந்தமாக்கி உள்ளார்.

ஏப்ரல் 25, 2022 அன்று ட்விட்டர் தலைமை, எலான் மஸ்க் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை உறுதிப்படுத்தியது. உலகின் மிகப் பெரிய பணக்காரர் அடிப்படையில் ட்விட்டரை $44 பில்லியன் டாலர் எனும் அதிகத் தொகைக் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ளார். இந்திய மதிப்பில் சொல்லப்போனால், 33 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கொடுத்து ட்விட்டர் நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது. டெக் துறையில் சமீப காலங்களில் நடந்த மிகப்பெரிய பரிமாற்றம் இது என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க் அடிப்படையில் ட்விட்டரின் ஒவ்வொரு பங்குக்கும் $54.20 டாலர் எனும் ஈர்க்கக்கூடிய தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில், ஊழியர்கள் கையில் இருக்கும் ஒரு பங்கிற்கு ரூ.4,149 அளிக்கப்படும். ஆனால், அவர்கள் தொடர்ந்து பணியாற்றினால், பங்குகள் அவர்கள் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

ட்விட்டரை வாங்கிய 33 லட்சம் கோடி ரூபாயில் பாதியை கடனாக பெற்று எலான் மஸ்க் வழங்குவதாகக் கூறப்படுகிறது. மீதமிருக்கும் தொகையை தனது சொந்த மூலதனத்தின் மூலம் அவர் செலுத்துவார் என்று தெரிகிறது. சொந்த மூலதனம் என்பது, எலான் மஸ்க் என்ற தனிநபர் பெயரில் இருக்கும் பணமோ அல்லது சொத்துகளோ என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். மேற்கூறியபடி, ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன், நிறுவனம் அதன் பங்குகளை பங்குச் சந்தையில் வழங்காது. இனி இந்த சமூக ஊடகங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க எலான் மஸ்க் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்.

“புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலம் மக்களிடத்தில் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். ஸ்பாம்போட்களை களை எடுப்பதன் மூலமும், ஓபன் சோர்ஸ் அல்காரிதங்களை உருவாக்குவதன் வாயிலாகவும் ட்விட்டரை மேம்படுத்த விரும்புகிறேன்” என தனது அறிக்கையில் டெஸ்லா தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த விவரங்களின்படி, பங்குதாரர்கள் ஒவ்வொரு பங்கிற்கும் சுமார் $54.20 டாலர் பணத்தைப் பெறுவார்கள். அது அடிப்படையில் ஏப்ரல் 1 அன்று ட்விட்டரின் மதிப்பை விட 38% விழுக்காடு கூடுதல் தொகையாகும். அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ட்விட்டரின் பங்குகள் 6% விழுக்காடு அளவு வர்த்தகத்தில் உயர்ந்தன.

இந்த நிலையில் ட்விட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசியுள்ளார். ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

The post டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கி உள்ளார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
1273
பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்கள் மூடல்! https://koodal.com/news/world/2022/04/17/colombo-stock-exchange-closes-for-5-days-due-to-economic-crisis/ Sun, 17 Apr 2022 11:26:13 +0000 https://koodal.com/?p=866 இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை அரசு அந்நிய செலாவணிக்காக பெரும்பாலும் சுற்றுலாத்துறையையே நம்பியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் எல்லையை…

The post பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்கள் மூடல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை அரசு அந்நிய செலாவணிக்காக பெரும்பாலும் சுற்றுலாத்துறையையே நம்பியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் எல்லையை மூடியதால் உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனாவை பல்வேறு நாடுகள் திறமையாக கையாண்ட நிலையில், இலங்கை ஆளும் ராஜபக்ச குடும்பம் அதில் கோட்டை விட்டதாக இலங்கை பொது மக்கள் கூறியுள்ளனர். ராஜபக்ச குடும்பம் இலங்கை பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதை கூறி அவர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக பாதித்து வருகிறது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு நாடு முழுவதும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை(18-04-2022) முதல் வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக அந்நாட்டு பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொருளாதார நிலைமைகள் குறித்து தெளிவு மற்றும் புரிதலைப் பெற உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

The post பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்கள் மூடல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
866